0

எங்கள் நாயகத்தின் வாக்கு மெய்யானது

jamialim-20151221_230629.jpg.jpegதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது – ஏன் தெரியுமா?
தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம்.
இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள்.
1 – இரைப்பை குடல் பாதை பாதிப்பு நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.
2 – சிறுநீரக பாதிப்பு தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.
3 – ஆர்த்ரிடிஸ் சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.
4 – நரம்புகள் டென்சன் ஆகும் பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
5 – குறிப்பு உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். * காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். * மதிய உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிது குடிக்க வேண்டும். –

Posted from WordPress for Android

0

Jamialim

6232212931683145650.jpgநபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!

உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது!

சொர்க்கம் நரகம் உண்டா …. ???

மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படுவானா … ???

1400 …. ஆண்டுகளுக்கு முன்பு … முகமது நபிகளுக்கு யார் சொல்லிக் கொடுத்தது

எழுத படிக்கத்தெரியாதமுகமது நபி இறைவனிடம் இருந்து … தனக்கு செய்திவருவதாக சொன்னார்கள்

அப்படி வந்த செய்திகள் தான் திரு குர்ஆன்

அதுமட்டுமின்றி மக்களுக்கு அவ்வப்போது சில ரகசியங்களையும் சொல்லியுள்ளார்கள்

அப்படி அவர்கள்சொன்ன …. பல உண்மையான ரகசியங்களில் இதுவும் ஒன்று

மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு … [உள்வால்எலும்பு] (#coccyx_bone)
முதுகுத் தண்டின் வேர் பகுதி] அழியாது …. இதை அழிக்கவும் முடியாது என்று முகமது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

இதை ஆராய்ச்சி செய்ய நினைத்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி

“ஹான்ஸ் ஸ்பீமேன்”

இதை தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும் பல அமிலங்களை கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார் முடிவில் அவர்க்கு கிடைத்தது தோல்வியே முடிவில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாக்கு உண்மையே.
என்பதை இந்த உலகுக்கு தன்னுடைய சோதனையின் மூலம் நிரூபித்தார்.

இதைத்தான் …. 1400 வருடங்களுக்கு முன்பே … அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ் எவ்வாறு உயிர்க்கொடுப்பான் என்பதை பின்வரும்நபிமொழி கூறி உள்ளார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப்பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின்
(#coccyx_bone)
நுனியைத்தவிர! …. அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன்முதலாக) படைக்கப்பட்டான்

அதிலிருந்தே அவன் …
(மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
5661
பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான் … உடனே இ (றந்துபோன) வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள்

மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்; ஒரே ஒரு …
தவிர எலும்பைத்! அது (அவனது முதுகு தண்டின்வேர்ப்பகுதியிலிருக்கும்)
(#coccyx_bone)
உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும்

அதைவைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும் “என்று சொன்னார்கள்

(ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: 5660 முஸ்லிம் நன்றி

இது குறித்து இன்னும் மிக விரிவாக மற்றும் இயற்கை பற்றிய விஷயங்களுக்கு குர்ஆன், நபி மொழிகள் பெரிதும் தூண்டுதலாகவே இருந்து வருகிறது

இதனை ஆராய்ச்சி செய்வதன் மூலம் பல உண்மைகளை துல்லியமாகவே கண்டறிந்து குர்ஆன் இறைவேதம் தான் என்பதையும் ஒப்புக் கொண்டு வருகிறார்கள் …

(இதை அதிகம் மாற்று கருத்து சகோதரர்களுக்கு கொண்டு செல்லுங்கள்)

அல்லாஹு அக்பர்

Posted from WordPress for Android