0

Jamialim.NEWs

image

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான்.
ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும்.
தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும் போதும் பேசும் போதும் வலி அதிகமாகும்.
கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.
யாருக்கு வரும்?
குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம்.
அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம். தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம்.
எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.
காரணம் என்ன?
———————–
நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும்.
இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும்.
இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.
ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம்.
காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் இவர்களுக்கு வாய்ப்புண் வருகிறது. அடுத்து, இவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன. வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான்.
உணவு ஒவ்வாமை – குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் – மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம்.
அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும்.
உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது.
வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும்.
இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும்.
அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.
கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம்.
பல் துலக்கும்போது பிரஷ் குத்துவதால் புண் உண்டாகலாம்.
செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால், அடிக்கடி வாய்ப்புண் வரும். மிகச் சூடாக காபி/டீ குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள்.
இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.
கிருமிகளின் தாக்குதல்.
பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் கிரந்தி நோய், வின்சன்ட் நோய், சின்னம்மை, தட்டம்மை, வாயம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது வாயில் புண் வருவது வழக்கம்.
‘கான்டிடா ஆல்பிகன்ஸ்’ (Candida albicans) எனும் பூஞ்சைக் கிருமிகளின் பாதிப்பால் நாக்கில் ‘கட்டித் தயிர்’ போல வெண்படலம் உருவாகிப் புண் ஏற்படும். அடிக்கடி ‘ஆன்ட்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும், இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும்.
பல் ஈறு கோளாறுகள், சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவதுண்டு.
என்ன சிகிச்சை?
———————–
பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும். அதேநேரத்தில், வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும்.
ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.
லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும்.
அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.
தடுப்பது எப்படி?
———————-
வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்
கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். செயற்கைப் பல்செட்டால் பிரச்சினை வருகிறது என்றால், அதை மாற்றிவிடுவது நல்லது.
‘சோடியம் லாரில் சல்பேட்’(Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.
எந்த உணவு முக்கியம்?
———————————
பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.

0

Jamialim.NEWs,,

நம்முடைய அண்ட்ராய்ட் மொவைலில் பேஸ்புக் பார்ப்பதும் அதே இடத்தில் விடியேவை மிகவும் சிறந்த முறையில் பதிவிறக்கம் செய்ய மற்றும் விடியே லின்க் எடுப்பது மற்றும் விடியே பதிவிறக்கம் செய்யாமல் Share செய்யலாம் இப்படி பல்வேறு விசேஶம் உள்ள ஒரே அப்பிளிகேஷனை download செய்ய கீழே👇👇 உள்ள லின்கை கிளிக்👇👇 செய்யும்🍸👇👇
——————————————————
Download Link 👉 http://sh.st/m5FGH
——————————————————jamialim.NEWs

image

0

Jamialim.NEWs,

image

பேஸ்புக் விடியே பற்றிய தகவல்
————————————————–
நம்முடைய அண்ட்ராய்ட் மொவைலில் பேஸ்புக் பார்ப்பதும் அதே இடத்தில் விடியேவை மிகவும் சிறந்த முறையில் பதிவிறக்கம் செய்ய மற்றும் விடியே லின்க் எடுப்பது மற்றும் விடியே பதிவிறக்கம் செய்யாமல் Share செய்யலாம் இப்படி பல்வேறு விசேஶம் உள்ள ஒரே அப்பிளிகேஷனை download செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யும்
——————————————————
Download Link https://plus.google.com/113888440720418104939/posts/eAnHoYkAvZj
——————————————————jamialim.NEWs

0

Jamialim.NEWs

image

கடலை மிட்டாய் கலாச்சாரத்தை
கடைபிடிப்போம் !
=====================
50 ஆண்டுகளுக்கு முன் சிறுவர்கள் கடைகளில் வாங்கிச் சாப்பிடும்
முதன்மையான தின்பண்டம் கடலை மிட்டாய்.
வேர்க்கடலையை வறுத்து,
அதை வெல்லப்பாகில் கலந்து, உருண்டை பிடித்து விற்கப்படுவதே கடலை மிட்டாய்.
இன்றைக்கு உலகில் விற்கப்படும் அத்தனை நவீனத் தின்பண்டங்களையும் ஒரு பக்கம் வைத்து, கடலை உருண்டையை மறுபக்கம் வைத்து சத்துக்களைப் பட்டியல் இட்டாலும், உடலுக்குக் கேடில்லா நன்மையைப் பட்டியலிட்டாலும் முதலிடம் கடலை மிட்டாய்க்குத்தான்! யாராவது மறுக்க முடியுமா?
வேர்க்கடலை உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பை உள்ளடக்கியது. வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டால்
இரத்தச்சோகை வராது. உடல் வளமாக நலமாக இருக்கும்.
கொழுக்கட்டை:
அரிசிமாவை அரைத்துப் பிசைந்து, அதை பூவரசு இலையிலே மெல்லியதாய் பரப்பி, அதிலே வேகவைத்த பருப்பில் வெல்லம் சேர்த்துப் பிசைந்த பூர்ணத்தை உருட்டி வைத்து இலையை மூடி அதை இட்டலி குண்டானில் வைத்து வேக வைத்து எடுத்தால் அதற்குப் பெயர் கொழுக்கட்டை.
பூவரசு இலையை நீக்கிவிட்டுச் சாப்பிட்டால் சுவையோ சுவை. இதற்கு இணையான ஒரு நவீன
தின்பண்டத்தைக் காட்ட முடியுமா?
பூவரசு இலையுடன் வேக வைக்கப்படுவதால் இலையின் மருத்துவப்
பயனும் அந்த உணவுடன் சேர்கிறது. அதிலுள்ள மாவு நீராவியில் வேகுவதால் அதிக ஊட்டம் பெறுகிறது. பருப்பு, வெல்லம் சேர்ந்த பூர்ணம் உடலுக்குச் சத்துத் தரக்கூடியது. சுவையும் அதிகம்.
இப்படிப்பட்ட ஒரு உணவுப் பொருளை உலகில் எங்கும் காட்ட முடியாது!
பொரிவிளங்காய் உருண்டை:
பொரித்த அரிசிமாவுடன் சிறுசிறு துண்டாக்கி வறுத்த தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய் என்று
பலவற்றைச் சேர்த்து, வெல்லப் பாகில் அவற்றைக் கொட்டிக் கிளறி உருண்டைப் பிடித்தால் அது பொரிவிளங்காய் உருண்டை.
அதன் சுவையும், சத்தும் அது தரும் உடல் நலமும் அவ்வளவு சிறப்புக்குரியது.
அதிரசம்:
வெல்லப் பாகில் அரிசி மாவைக் கலந்து மூன்று நாள் புளிக்க வைத்து, அதை வடைபோல் தட்டி கொதிக்கும் எண்ணெயில்
போட்டு வெந்தபின் எடுத்து,
கிண்ணத்தால் அமுக்கித் (எண்ணெயை வெளியேற்றி) தட்டையாக்கினால் அதுதான் அதிரசம்.
எண்ணெய் பண்டங்களில் கேடு பயக்காத தின்பண்டம். மென்மையும், இனிமையும், சிறப்பான சுவையும் உடைய இப்பண்டத்தைப் போன்று உலகில்
எவரும் செய்ததில்லை.
இட்டலி:
அரிசி மாவும், உளுந்து மாவும் அரைத்துக் கலந்து புளிக்க வைத்து, இட்டலிப் பானையில் வேக வைத்து எடுத்தால் அதுதான் இட்டலி. உலக உணவு ஆய்வுகளே, இதற்கு இணையான சத்தான நல்லுணவு உலகில் வேறு எதுவும் இல்லை என்று கண்டறிந்துள்ளன.
முடக்கற்றான் தோசை:
இட்டலி மாவுடன் முடக்கற்றான் கீரையை அரைத்துக் கலந்து புளிக்க வைத்து, மறுநாள் காலை தோசையாக வார்த்துச் சாப்பிட்டால் உடலில் வாத நோய்கள் வராது. தின்னத் தின்ன சுவையாக இருக்கும்.
சுண்டைக்காய் சாம்பார்:
காய்தான் சிறியது. ஆனால், அதன் மருத்துவக் குணமோ மிகப் பெரியது. சுண்டைக்காய் சாம்பார் சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
வயிற்றுப் பூச்சி அகற்றும், உடல் வலிவு பெறும், நோய்கள் அணுகாது. நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
முருங்கை:
முருங்கையினுடைய கீரை, காய், பிசின், பூ அனைத்தும் உயர்வான மருத்துவக் குணம் உடையவை.
முருங்கைக் கீரையில் எல்லாச் சத்துக்களும் அதிகம் உள்ளன. கீரையைப் பருப்பிட்டு வேக வைத்துச் சாப்பிடலாம்.
வெங்காயம் தேங்காய்த் துருவல் போட்டு, வதக்கிச் சாப்பிடச் சுவையாய் இருக்கும். இதை மட்டுமே தனியே சாப்பிடலாம்.
கண்ணுக்கு நலம் தரும் கரோட்டினாய்டுகளை அதிகம் கொண்டுள்ளது. இரத்தக் கொதிப்பைக் குறைக்கும். முருங்கைக் காய் நரம்பைப்
பலப்படுத்தும். இதில் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்கள் உள்ளன.
ஆண்களுக்குப் பாலுறவு ஆற்றலை அளிக்கும். பெண்களுக்கும் வலிமை
தரும். இதைச் சாம்பார், புளிக் குழம்பில் போட்டு சாப்பிடுவதோடு, பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதைத் தினம் உணவில் சேர்த்தால் உடல் பலப்படும்; நலம் பெறும்.
பொன்னாங்கண்ணி:
கண்ணிற்கு மிகவும் குளிர்ச்சியூட்டி. பார்வையைக் கூர்மையாக்கும். சத்துக்கள் நிறைய உள்ள உயர்தரக் கீரை இது. இதை வாரம் மூன்று நாள்கள் உணவில் சேர்த்தால் உடலில் நோய் அண்டாது.
பருப்பிட்டுக் கடைந்துச் சாப்பிடச் சுவையாய் இருக்கும். எல்லாக் கீரைகளும் உடலுக்கு நலம்
தரக்கூடியவை. மலிவானவை.
கேரட்டில் உள்ளதைவிடக் கீரையில் சத்து அதிகம். கீரையில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராது.
தூதுவளை:
வேலியில் படரும் முள் நிறைந்த செடி. இதன் கீரை, பூ, பழம் எல்லாம் பயனுள்ளவை. மார்பில் உள்ளச் சளியை முற்றாக நீக்கும் ஆற்றல் தூதுவளைக் கீரைக்கு உண்டு.
ஆண்களுக்குப் பாலுறவு ஆற்றல் அளிக்கும். வாரம் இருமுறை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மணத்தக்காளி:
உடல் சூட்டைத் தணித்து வேக்காடு வராமல் காக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீக்கும்.
மாதுளை:
பழங்களில் முதன்மையானது. இதை நாள்தோறும் சாப்பிட்டால் நலவாழ்வு நிச்சயம். வயிற்றுப் பிரச்சினை எதுவும் வராமல்
இது பார்த்துக்கொள்ளும். வெள்ளை முத்துக்களை உடைய மாதுளை
மிகவும் சிறந்தது.
பப்பாளி:
இது கண்ணுக்கு முதன்மையான பொருள். மலச்சிக்கல் அறவே வராது. ஆண்களுக்குப் பாலுறவு ஆற்றல் அளிக்கும். மாதுளையும் பப்பாளியும் நாள்தோறும் சாப்பிட வேண்டும். இந்த இரண்டையும் சாப்பிடுகின்றவர்களின் உடல் நலத்திற்கு உத்திரவாதம் உண்டு.
கேழ்வரகு:
கேழ்வரகு மாவு + முருங்கைக் கீரை கலந்து அடைசெய்து சாப்பிட்டால் உடலுக்கு வலு உண்டாகும்.
கீழாநெல்லிக்கீரை:
வாரம் ஒருமுறை கீழாநெல்லிக் கீரையைக் கூட்டு செய்து இரண்டு உருண்டைச் சோற்றில் அதைப் பிசைந்து சாப்பிட்டால் கல்லீரல்
கோளாறு வராது.
வெள்ளரிப்பிஞ்சு:
வெள்ளரிப்பிஞ்சை நறுக்கி மோரில் போட்டுக் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறு வரவே வராது. சிறுநீரகப் பிரச்சினை இருந்தால் நீங்கும். அறுவை சிகிச்சை செய்யும் நிலைகூட தவிர்க்கப்படும்.
முள்ளங்கி:
வெள்ளை முள்ளங்கியுடன்
வெல்லம் சேர்த்துப் பச்சையாகச் சாப்பிட்டால் சிறுநீர்க் கழிக்கும் போது ஏற்படும் கடுப்பு நீங்கும்.
வாழைப்பூ:
வாழைப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். வாழைப்பூ வடை சாப்பிடச் சுவையாய் இருக்கும். உடலுக்கு நல்லது.
வாழைத்தண்டு:
பொரியல் செய்து சாப்பிட்டால் சிறுநீரகப் பாதைச் சீர்படும். கொழுப்பு அடைப்பு நீங்கும்.
வாழைப்பழம்:
தினம் இரு பழம். (பூவம்பழம் சிறந்தது) சாப்பிட்டால்
மலச்சிக்கல் அகலும். இரத்த அழுத்தம் குறையும்.
வெந்தயம்:
இரவு ஒரு தேக்கரண்டி நீரில் ஊற வைத்து காலையில் அதை
அப்படியே மென்றுச் சாப்பிட்டு, அந்நீரையும் பருகினால் உடல்
குளிர்ச்சியடையும், சர்க்கரை நோய் வராது.
மஞ்சள்தூள்:
காலை மாலை ஒரு டம்ளர்
பாலில் மஞ்சள் தூள் கலந்து
சாப்பிட்டால் நோய் எதிர்ப்பாற்றல்
கிடைக்கும். புற்றுநோய் வராது.
மிளகு நீர்:
மிளகு + பனைவெல்லம் + தண்ணீர் கலந்து காய்ச்சி அரை டம்ளர் வாரம் இருமுறைப் பருகினால் உடல் நஞ்சு நீங்கும். நோய்கள் எளிதில்
தாக்காது. பூச்சிக்கடி பாதிப்புகள் நீங்கும்.
வேம்பு மஞ்சள் நீர்:
வேப்பிலை + மஞ்சள் தூள் + நீர் கலந்து அரை பங்காகக் சுண்டக் காய்ச்சி அந்த நீரை வடிகட்டி கால் டம்ளர் வாரம் இருமுறை பருகினால், அம்மை நோய் வராது. சர்க்கரை நோய் வராது, சுரம் வராது; உடலுக்கு நோய்
எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
அத்திப்பழம்:
தினம் ஐந்து அத்திப்பழம் குறிப்பாக பெண்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.
சோற்றுக்கற்றாழை:
இதன் சோற்றை எடுத்து ஏழு முறை அலசி அதனுடன் தேன் கலந்துச் சாப்பிட்டால் உடல்நலம் பெறும், குளிர்ச்சி பெறும். மூலநோய்
வராது. வீட்டில் தொட்டிகளில் வளர்த்து தினம் பயன்படுத்தலாம். அச்சோற்றை முகம் மற்றும் உடல் முழுக்கப் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
எதையெதைச் சாப்பிட வேண்டும் என்று அறிந்துகொள்வது போலவே
எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பதிலும் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
பாக்கட் உணவுகள்:
இவை அனைத்துமே இரசாயனம் கலந்தவை. உடலுக்குத் தீங்கு
செய்யக் கூடியவை. எனவே, கடையில் விற்கும் பாக்கட் உணவுகளை முற்றாக ஒதுக்க வேண்டும்.
குளிர்பானங்கள்:
பாட்டிலில், டப்பாக்களில் அடைக்கப்பட்ட அனைத்துக் குளிர்பானங்களும் உடலுக்குக் கேடு செய்யக் கூடியவை. எலும்புச்
சிதைவை உருவாக்கக் கூடியவை.
பிராய்லர் கோழி:
ஸ்டிராய்டு ஊசி போட்டு வளர்க்கப்படும் இக் கோழிக்கறி உடலுக்கு, உடல் நலத்திற்கு எதிரானது, கேடானது. எனவே இதைத் தவிர்க்க வேண்டும். நாட்டுக் கோழி சாப்பிடலாம்.
துரித உணவுகள்:
உணவு விடுதிகளில் செய்துத் தரப்படும் துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். உணவே மருந்து என்று வாழ்ந்த நம் மக்கள் மத்தியில், நஞ்சே உணவு, உணவே நஞ்சு என்ற நிலை வந்துவிட்டது.
இவற்றை நாகரிகமாகக் கருதிப் பிள்ளைகள் சாப்பிடுவதால் உடலில்
பல்வேறு நோய்கள் வருகின்றன!

0

Jamialim.NEWs

image

image

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா?

“உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்”

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

0

Jamialim.NEWs

image

ஆஸ்துமா. மற்றும் சுவாசப்பிரச்சனையை தீர்க்கும் முசுமுசுக்கை.!
முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.
ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.
முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.
கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.
அமைதியின்மை போக்கும்
இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.
ஆஸ்துமா குணமாகும்
முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.
முசுமுசுக்கை தைலம்
முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.
மூச்சிரைப்பு குறைய
பரட்டைக் கீரை , தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும்.
இருமல் குணமாக
முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.