புனித இறைஇல்லம் வாருங்கள் போகலாம்,, உங்கள் என்னம் அது என்றால் அல்லாஹ் நாட்டம் அமைக்யட்டும்,,ஆமீன் jamialim,

இன்னும் ஏன் தாமதம்? புறப்படுவோமா புனித இறையில்லம் நோக்கி….?

வசதி, வாய்ப்பு உள்ளவர்களே விரைவாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்….

மேலதிக விபரங்களுக்கு….

http://www.hajcommittee.gov.in/
http://hajjtn.in/

ஹஜ் எனும் புனித பயணம்!

உலகம் முழுவதும் ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றிட புனித கஅபாவை நோக்கி இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பயணித்து வரும் நிலையில் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ‘ஹஜ்’ குறித்து சில விஷயங்ளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கிழக்கே சீனா முதல் மேற்கே அமெரிக்கா வரை உலகிலுள்ள எல்லா நாடுகளில் இருந்தும் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த எல்லா மனிதர்களும் நிறம், இனம், தோற்றம், பணம், பதவி போன்ற பாகுபாடுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட இடத்தில் , குறிப்பிட்ட நாட்களில் ஒன்று கூடி, தங்களின் ஒரே இறைவனை ஒரே உடையில் மிகவும் எளிய தோற்றத்தில் வணங்கிடும் அமல் தான் ஹஜ்ஜுடைய அமலாகும்.

“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி

“ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773

(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092)

“நன்மையான ஹஜ்ஜுக்கு சுவனம் தான் கூலியாகும்”. என நபி {ஸல்} அவர்கள் அருளியதாக ஆதரப்பூர்வமான ஆறு கிரந்தங்களின் இமாம்களும் பதிவு செய்திருக்கின்றார்கள்.

நரகில் வேதனை செய்யப்படுகின்ற சில பாவிகளான முஃமின்களைப் பார்க்கும் சுவனத்து முஃமின்கள் அல்லாஹ்விடத்தில் “யா அல்லாஹ்! இவர்கள் எங்களோடு தொழுதார்கள். எங்களோடு நோன்பும் பிடித்தார்கள். மேலும், ஹஜ்ஜும் செய்தார்கள்” எனக் கூறுவார்களாம். அப்போது, அல்லாஹ் உங்களுக்கு அறிமுகமான அவர்களை அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறுவான். என மாநபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜு செய்ய வருகை தந்திருக்கும் ஹாஜிகள் மீது அல்லாஹ் ஒவ்வொரு நாளும் 120 வகையான அருளை இறக்குகின்றான். கஅபாவை தவாஃப் செய்பவர்கள் மீது 60 ரஹ்மத்தும், கஅபாவில் தொழுபவர் மீது 40 வகை ரஹ்மத்தும், கஅபாவை பார்த்துக் கொண்டிருப்பவர் மீது 20 வகை ரஹ்மத்தையும் இறக்குகின்றான்.”

”ஹஜ்ஜையும், உம்ராவையும் தொடர்ச்சியாக செய்யுங்கள். ஏனெனில், அது கொல்லனின் நெருப்பு தங்கம், வெள்ளியில் இருக்கும் அழுக்கை அழிப்பது போன்று, வறுமையையும், பாவத்தையும் அழித்து விடும்.” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது நபி {ஸல்} அவர்கள் “அம்ரே! ஒருவர் முஸ்லிமாகி விட்டால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஒருவர் ஹிஜ்ரத் செய்தால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. ஒருவர் ஹஜ் செய்தால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என்று கூறினார்கள்.

ஹஜ் நிறைவேற்றாத மக்கள் குறித்து:

எவர் ஹஜ்ஜை நிறைவேற்றத் தேவையான அளவு பொருளை அல்லது வாகனத்தை பெற்றிருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லையோ அவர் ஒரு யூதனாக அல்லது கிருஸ்துவனாக மரணிக்கட்டும்.

ஹஜ் தாமதம் – ஒரு பெரும் அபாயம் யார் அறிவார் அடுத்த ஹஜ் வரை நாம் இருப்போம் என்று. பொருளாதாரம் இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ், உடலில் வலிமையும் இருக்கிறது அல்ஹம்து லில்லாஹ், வாகன வசதியும் இருக்கிறது அல்ஹம்து லில்லாஹ், ஆனால் இன்னும் 40-50-வயது கூட ஆகவில்லை அதற்குள் எதற்கு ஹஜ்ஜெல்லாம் என்றுபலரும் சொல்கிறார்கள். மரணம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது மார்க்கத்தைப் பொறுத்த வரை வயசு வரணும் என்றால் பருவம் அடைவது மட்டும் தான். அறுபது, எழுபதைத் தொடுகிற வயசு அல்ல. இந்த உம்மத்துக்கு சராசரி வயதே அறுபது தான். அதற்குள் மரணம்.பிறகு எங்கே ஹஜ் செய்வது?

அல்லாஹ் மன்னிப்பானாக! மனிதர்களிடம் சாக்குப்போக்கு சொல்லலாம். அல்லாஹ்விடம் சொல்ல முடியுமா? தொழுகை – தினசரி கடமை. நோன்பும், ஸகாத்தும் வருடாந்திர கடமை. ஹஜ், ஆயுளில் ஒரே ஒரு தடவை கடமை. கட்டாயக் கடமை. பூமியில் முதலில் கட்டப்பட்ட மஸ்ஜிது கஃபத்துல்லாஹ்வை வலம் வந்து வணக்கங்கள் புரிய மக்கா நகரம் செல்வது ஒரு முஸ்லிமின் அடிப்படை கடமை. இஸ்லாமின் தூண்களில் ஒன்று இது.

“எவர்கள் அங்கு சென்று அந்த கடமையை செய்ய சக்தியுடையவர்களாக உள்ளார்களோ, அப்படிப்பட்ட மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் அப்போது (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. காரணம்) நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.” (அல்குர்ஆன் 3:97)

கடமையான ஹஜ்ஜை விரைவாக நிறைவேற்றிவிடுங்கள். ஏனெனில், உங்களில் ஒருவருக்கு என்ன தடை நேரும் என்பதை அவர் அறியமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு (ரலி), நூல் : அஹ்மத்)

மற்றொரு அறிவிப்பில், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் வசதி உள்ளவர்களாக இருந்தால் தனது சார்பாக ஒருவரை நியமித்து ஹஜ் செய்வது கடமையாகும் என்பதை கீழ் வரும் ஹதில் மூலமாக அறியலாம்.

ஒரு பெண் பெருமானார் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள், என்னுடைய தந்தை மீது ஹஜ் கடமையாகிவிட்டது. ஆனால் வாகனத்தில் மீது அமர இயலாது. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? நபி(ஸல்) கூறினார்கள், ஆம் (ஹஜ் செய்யுங்கள்). நூல் : புகாரி

இந்த நகரங்களுக்கு சிலரை அனுப்பி, பொருளாதார வசதியுள்ள அனைவரையும் கண்டறிந்து, அதில் ஹஜ் செய்யாதவர் மீது ஜிஸ்யா வரி விதிக்கலாம் என நினைக்கின்றேன். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்கள் இல்லை! அவர்கள் முஸ்லிம்கள் இல்லை! என்று கோபப்படுகிறார்கள் உமர்(ரலி) அவர்கள்.

சக்தி பெற்றிருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாது விட்டவன் யூதனாகவோ கிறித்தவனாகவோ மரணிப்பதில் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அலீ (ரலி) அவர்கள்.

ரப்புல் ஆலமீன் அவனது அளப்பெரும் கிருபையால் இவ்வருடம் ஹஜ் செய்கிற எல்லா ஹாஜிகளின் ஹஜ்ஜையும் மக்பூலான மப்ரூரான ஹஜ்ஜாக ஆக்குவானாக.

“ஹஜ்ஜின் மாண்புகள்” என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகள் – முழுமையான கட்டுரைக்கு…. http://www.warasathulanbiya.com/2015/08/blog-post_27.html

ஹஜ் பற்றிய மேல் ஆதிக்க தகவல்களுக்கு…

அதிரை எக்ஸ்பிரஸ்: ஹஜ் எனும் அரும்பேறு அல்லது அருட்பேறு! http://www.adiraixpress.in/2012/10/blog-post_8649.html?m=1

ஹஜ்ஜின்

ஹஜ் « சுவனப்பாதை http://www.suvanam.com/portal/?tag=ஹஜ்

கான் பாகவி: 10/01/2011 – 11/01/2011 http://khanbaqavi.blogspot.in/2011_10_01_archive.html?m=1

அதிரை எக்ஸ்பிரஸ்: ஹஜ்ஜின் சிறப்புகள் http://www.adiraixpress.in/2009/11/blog-post_22.html?m=1

(ஹஜ்)உன்னை தேடி வந்துவிட்டேன் இறைவா…!! | தூய வழி http://www.thuuyavali.com/2013/10/blog-post_1.html?m=1

ஹஜ் பயணம் ஒரு சுற்றுலா அல்ல… http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=1458%3Ahajj-journy-is-not-a-tour&catid=83%3Aworld&Itemid=200

அதிரை ஆலிம்: ஹஜ் செய்வது எப்படி http://adirai-aalim.blogspot.com/2010/10/blog-post_17.html?m=1

நபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி http://chittarkottai.com/haj/haj1.html

தியாகத்தின் பயணம் | Kulasai – குலசை https://kulasaisulthan.wordpress.com/2013/09/24/தியாகத்தின்-பயணம்/

தியாகத்தின் மறுபெயர் ஹஜ் | இஸ்லாம்கல்வி.காம் http://www.islamkalvi.com/?p=5118

————————————–

குவைத்திலிருந்து…
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s