Jamialim

தற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப்பெட்டி இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் குளிர்சாதனப்பெட்டியில் சமைத்த உணவுகளை வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்கு தீங்கு ஏற்படும்.

அதேப் போல் நாம் வாங்கும் முட்டையையும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப் போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப் போல் திரிந்து விடுகிறதாம்.

ஐரோப்பிய முட்டை சந்தை ஒழுங்கு விதிகளின்படி, முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரித்து, பின் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும்போது, முட்டையின் மேல் அதிகம் வியர்த்து, முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே செல்லுமாம்.

எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிட்டு விட வேண்டும் அல்லத

image

ு அறை வெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.

நீங்கள் வாங்கிய முட்டை நன்றாக உள்ளதா அல்லது கெட்டுப் போயுள்ளதா என்பதை அறிய, ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் முட்டையைப் போடுங்கள். முட்டை மிதந்தால் அது கெட்டுப் போய்விட்டது என்றும் அதுவே மூழ்கியிருந்தால் அது நல்ல முட்டை என்று அர்த்தம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s