என் இனிய இஸ்லாம்

image

நோய்களை தீர்க்கும் ஈச்சுர மூலிகை
இந்த நவீன அவசர காலத்தில் அதிக மக்கள் சருமநோய் கரும்படை, கிரந்தி, வெண்படை, கரப்பான், அரிப்பு, செதில் படை, அலர்ஜி, தடிப்பு, வெடிப்பு நீர் வடிதல் இது போன்ற பலவித சரும நோய்களில் மக்கள் பாதித்து அவதிகளுக்கு உள்ளாகிறார்கள். இயற்கைக்கு மாறாக நாம் அவசரகால வாழ்க்கையில் இருப்பதும் நமக்கு நோய்கள் வருவதற்கு ஓர் காரணம்.
pavi
சுகாதார சீர் கேடுகள், தூய்மையான நிலத்தடி நீர் இல்லை. மாசுபடிந்த காற்று, கழிவு நீர் தேக்கம், நவீன உணவு, உறக்கம் இன்மை, உடல் உழைப்பு இன்மை, மலச்சிக்கல் இப்படி பல பாதிப்புகளில் நாம் நோய்களுக்கு ஆளாகிறோம். அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் மிகவும் சவுகரியமான வாழ்க்கை வாழ்ந்தனர். இயற்கையான காய்கறிகள், தூய்மையான காற்று, கிணற்று நீர், ஆற்று நீர், குளத்து நீர் இவைகளை குடித்து மக்கள் சுகமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
அக்காலகட்டத்தில் பகலில் உழைப்பு இரவில் உறக்கம், அதிகாலையில் எழுந்து அவர்கள் பணிகள் செய்து சூரியன் மறைவுக்கு பிறகு வேலைகளை முடிந்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு 8 மணி அல்லது 9 மணிக்குள் உறங்கி விடுவார்கள். அப்போது போதுமான அளவுக்கு நல்ல உறக்கத்தில் உடல் வெப்பம் அடையாமல் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். நாம் இந்த நவீன காலத்தில் உணவு, உறக்கம், எல்லாம் நேரம் கடந்தும், இரவு உறக்கம் இல்லாமல் பகலில் உறங்குவதால் நமது உடல் வெப்பம் அடைகிறது. இயற்கைக்கு மாறுதலாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல், 6 மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்துகள் சாப்பிடுவார்கள். வீட்டில் இருக்கும் பாட்டிகள் வயிற்றை சுத்தம் செய்ய அண்டவாயு என்னும் கீரையை சமைத்து தருவார்கள். சகலவாயுகளையும் வெளியேற்றும் வகையில் நன்கு பேதியாகும். அல்லது விளக்கெண்ணை உள்ளுக்கு தருவார்கள் அதன் மூலமும் நன்கு பேதியாகும். இப்படி மூதாதையர்களும் நமது பாட்டிகளும் உடலை சுத்தம் செய்து முறையாக வாழ்ந்தார்கள். மாதம் ஒரு முறை மூலிகை குழம்பு வைப்பார்கள். கலாங்கீரை என்று பலவித கீரை கலந்து மசியல் செய்து தருவார்கள்.
இப்படி எல்லாம் நோய்வராமல் பாதுகாத்து இயற்கையுடன் ஒன்றி இருந்தார்கள். பாட்டி வைத்தியம் என்றால் அந்த காலத்தில் சிறப்பாக இருக்கும். ஈச்சுர மூலியால் விஷ சோபை, வீக்கம், சந்திபல விஷங்கள், உடல்வெளுப்பு, புண்ரீக குஷ்டம், இருதய ரோகம் பித்த சோபம், இருமல், சுரரோகம், சரீரக்குத்தல், வாத தோஷம், நமைக்கிரந்தி, மேகப்படை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் இம்மூலிகை மிகவும் அற்புதமானது. இறைவன் நமக்காக இயற்கையில் படைத்த அற்புத மூலிகை ஆகும் இது அதற்குதான் இம்மூலிகை சித்தர்கள் பெருமந்து என்று இம்மூலிகையை மட்டும்தான் கூறியுள்ளார்கள்.
இம்மூலிகை பயன்: இதன் சமூலம் என்று சொல்லப்படும் இலை, வேர், காய், பூ ஆகிய அனைத்தும் பூவின் அமைப்பு பாம்பின் நான்கு, போன்ற அமைப்பு ஆகும். இதனை சூரணம் செய்து மிளகு உடன் கூட்டி மருந்தாக பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாகும். சரும வியாதிகளுக்கு மேல் பூசாக மஞ்சளுடன் அரைத்து பூசு அரிப்பு படைகள் குணமாகும். சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெயில் காய்ச்சி இதனுடன், தும்பை, அவுரி, ஊசிதகரை, வண்டு கொல்லி, மருதாணி, பூலான்கிழங்கு, கார்போக அரிசி, கோரைகிழங்கு, கலப்பை கிழங்கு, வெட்டி வேர், வேப்ப வித்து, திரிபலா இலைகளை எண்ணையில் இட்டு காய்ச்சி மேல் பூசாக தடவி வர சரும நோய்கள் தீரும்.
விஷக்கடிகளுக்கு ஈச்சுர மூலி, மிளகு, தும்பை, நீலி இலை இவைகளை சூரணம் செய்து வீட்டில் வைத்து கொள்ள வேண்டும் இம்மருந்து உயிர்காக்கும் ஓர் அற்புத மருந்தாகும். திடீர் என பாம்பு தேள் போன்ற விஷக்கடி கடித்தவர்களுக்கு பெரியவர்களுக்கு 1 ஸ்பூன் சிறியவர்களுக்கு, டீஸ்பூன் வீதம் மருந்தை சுடுநீரில் கலந்து தர சலக விஷக்கடிகளில் இருந்து மக்களை காப்பாற்றி விடலாம் கடிவாய்ப்பட்ட இடத்திலும் இம்மருந்தை சுடுநீரில் குழைத்து பற்றாக பூசவும். விஷநீர்களை எடுத்துவிடும்

image

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s