Jamialim.NEWs

* வெங்காயம் நறுக்கும் பொழுது, சுயிங் கம் மென்றால் கண்களில் நீர் வருவதை தவிர்க்கலாம்.

* ரொட்டிகளில் (bread) ,மனித முடி உள்ளது. L-cysteine எனப்படும் அமினோ-அமிலம் பேக்கிங் தொழிற்சாலைகளில் மாவைப் பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. இது மனித ரோமங்களில் அதிகமாக காணப்படுவதால், அதிக அளவில் ரோமங்களிலிருந்தே எடுக்கப்படுகிறது.

* ஒரு கோப்பை கேழ்வரகு (கேப்பை) கூழ் தயாரிக்க ஆகும் செலவு அதிக பட்சம் ரூபாய் பத்து. இது நம் இதயத்தைப் பாதுகாக்கவும், இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைத்து தொடர்ந்து கட்டுப்படுத்தவும், மேலும் பல சமநிலைகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

* பச்சை வெங்காயத்தை உண்பதினால் உடல் உறுதி (stamina) அதிகரிக்கிறது.

* மிளகு பலவிதமான விஷங்களை முறிக்கும் ஆற்றலுடையது.

* பாதி வேக வைத்த உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு முக்கியத் தேவையான பல தனிமங்கள் உள்ளது.

* தக்காளியில் வைட்டமின் B6 உள்ளது. பச்சைத் (சமைக்காத) தக்காளிப் பழங்களைக் காலையில் உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* உலகிலேயே வெப்பமான கோடை காலத்தை உடைய நாடுகளில் ஒன்றாக இருந்தும் கூட, ஐஸ் க்ரீம் (பனிக்கூழ்) சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவான நாடாக இந்தியா உள்ளது, ஆச்சரியத்தக்கது என்று கருதுகின்றனர்.

* ஆப்பிள் தண்ணீரில் மிதக்கும். ஏனெனில் அதில் 25 சதவிகிதம் காற்று உள்ளது.

* 7500க்கும் அதிகமான ஆப்பிள் வகைகள் உலகில் பயிர் செய்யப் படுகின்றன. தினமும் ஒரு ஆப்பிள் வகையாக உண்டு சோதித்தால், மொத்த வகையையும் உண்ண உங்களுக்கு 20 ஆண்டுகள் தேவைப்படும்.

* உலகிலேயே மிக விலை அதிகமான பழம், ஜப்பானின் “யுபாரி கேண்டலோப்” ( Yubari
cantaloupe) ஆகும். ஒரு முறை, இரண்டு பழங்கள் சேர்த்து 23,500 டாலருக்கு ஏலத்தில் விலை போனதாம்.

* உலகில் தினமும் உற்பத்தி செய்யப்படும் உணவில் பாதி அளவு வீணாக்கப் படுகிறது.

* கெட்டுப் போகாத ஒரே உணவு தேன் தான். 3000 வருடங்களுக்கும் மேல் கெடாமல் இருக்கும். (தேன் என்பது தேனீக்கள் எடுக்கும் வாந்தியே)

* உலகில் இதுவரை அதிகம் திருடப்பட்ட உணவு பாலாடை.

* ஆதியில் கேரட்டின் நிறம் ஊதாவாக இருந்தது.

* பீநட் பட்டர் (peanut butter) என்று அழைக்கப்படும், வேர்க்கடலையிலிருந்து எடுக்கப்படும் வெண்ணையை வைத்து விஞ்ஞானிகளால் வைரங்களை உருவாக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

* டைனமைட்டுகள், வேர்க்கடலைகளை வைத்து தயாரிக்கப்படுகின்றன.

* ஆகாய விமானத்தில் உணவு அவ்வளவாக உசிக்காது. காரணம், நம் நுகர்வு சக்தியும், சுவைக்கும் சக்தியும், 20 முதல் 50 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது.

* நெருக்கடியான நேரத்தில் ( உடலில் நீழப்பை சமன் செய்ய ) இளநீரை நேரடியாக நாளங்கள் மூலம் ரத்தத்தில் செலுத்தலாம். இளநீர் அவ்வளவு தூய்மையானது. விபத்தில் விழுந்த பற்களை உடனடியாக இளநீரில் போட்டு வைத்தால், அவற்றை மீண்டும் பொருத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். ஏனெனில், இளநீரில் அவ்வளவு சுலபமாக பாக்டீரியா அண்டாது.

* வாழைப்பழங்கள், இப்பொழுதுள்ளவை போலல்லாமல், முன்பு, குட்டையாகவும், நிறைய விதைகளுள்ளவையாகவும், அதிக ஈரப்பதமில்லாதவையாகவும் இருந்துள்ளன. (படத்தினைப் பார்க்கவும்)

image

image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s