விஞ்ஞானம் பற்றி,….

விஞ்ஞானப் பேராசிரியரும் ஒரு மாணவனும்
அல்லாஹ் பற்றிய ஓர் உரையாடல்
ஒரு நாத்திக விஞ்ஞானத்துறைப் பேராசிரியர், தமது வகுப்பில் புதிதாக சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவனுடன் உரையாட விரும்பி, அந்த மாணவனை எழுப்பினார்.
Professor : நீங்கள் ஒரு முஸ்லிம், இல்லையா ?
Student : ஆம், ஸேர்.
Professor : அப்படியென்றால், உங்களுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கை இருக்கிறது ?
Student : நிச்சயமாக, ஸேர்.
Professor : அல்லாஹ் நல்லவனா ?
Student : நிச்சயமாக.
Professor : அல்லாஹ் மிக சக்தி வாய்ந்தவனா ?
Student : ஆம்.
Professor : எனது சகோதரன் ‘கான்சர்’ நோயினால் இறந்தார். அவரது நோயைக் குணமாக்கும் படி அவர் அல்லாஹ்விடம் பல முறை மன்றாடியும் குணமாகவில்லை. எங்களில் பலர் நோயுற்றோருக்கு உதவ விரும்புவார்கள். ஆனால், அல்லாஹ் அவ்வாறு செய்யவில்லை. அப்படியிருக்கும் போது அல்லாஹ் எப்படி நல்லவனாக இருக்க முடியும் ? ஹு……ம் ?
Student : (அமைதி)
Professor : உங்களால் பதில் கூற முடியாது, அல்லவா ? நாங்கள் மீண்டும் தொடர்வோம். அல்லாஹ் நல்லவனா ?
Student : ஆம்.
Professor : சாத்தான் நல்லவனா ?
Student : இல்லை.
Professor : அவனைப் படைத்தது யார் ?
Student : அல்லாஹ்….. . . . .
Professor : அது மிகவும் சரியானது. உலகில் பாவச்செயல்கள் உள்ளனவா ?
Student : ஆம்.
Professor : பாவச்செயல்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன, அல்லவா ?அத்துடன்…. எல்லாவற்றையும் படைத்ததும் அவன்தான், அல்லவா ?
Student : ஆம்.
Professor : அப்படியென்றால், பாவச்செயல்களைப் படைத்தது யார் ?
Student : (அமைதி)
Professor : நோய், கஷ்டம், துன்பம், குரோதம், அசுத்தம்…. இவையெல்லாம் இந்த உலகில் தாண்டவமாடுகின்றன, இல்லையா ?
Student : ஆம், ஸேர்.
Professor : எனவே, இவற்றைப் படைத்தது யார் ?
Student : (அமைதி)
Professor : உலகில் உங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அவதானித்து, புரிந்து கொள்வதற்காக 5 புலன்கள் இருப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது. சொல்லுங்கள்….நீங்கள் எப்போதாவது அல்லாஹ்வைக் கண்டிருக்கிறீர்களா ?
Student : இல்லை.
Professor : நீங்கள் எப்போதாவது அல்லாஹ் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா ?
Student : இல்லை.
Professor : எப்போதாவது அல்லாஹ்வை தொட்டு உணர்ந்திருக்கிறீர்களா ? அவனது சுவையை ருசித்திருக்கிறீர்களா ? அவனது வாசத்தைத்தான் நுகர்ந்திருக்கிறீர்களா ?
Student : வருந்துகிறேன், ஸேர். அப்படி எதுவுமே இல்லை.
Professor : இருந்தும் நீங்கள் அவனை நம்புகிறீர்கள் ?
Student : ஆம்.
Professor : பரிசோதனை ரீதியாக ஆய்வு செய்து, நிரூபிக்கக் கூடிய முறைகளின் படி, நீங்கள் சொல்லும் அல்லாஹ் இல்லை என்றே விஞ்ஞானம் கூறுகிறது. அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
Student : ஒன்றுமில்லை. எனது நம்பிக்கை மட்டுமே இருக்கிறது.
Professor : ஆம். நம்பிக்கை. அதுதான் அறிவியல் காணும் பெரிய பிரச்சினை.
Student : பேராசிரியரே, வெப்பம் என்று ஏதாவது உண்டா ?
Professor : ஆம்.
Student : குளிர் என்று ஏதாவது இருக்கிறதா ?
Professor : ஆம்.
Student : இல்லை. அப்படி ஒன்றுமில்லை.
(வகுப்பறையில் ஒரே நிசப்தம்)
Student : ஸேர், அதிக வெப்பம் இருக்கலாம், அதைவிட அதிக வெப்பம், சூப்பர் வெப்பம், மெகா வெப்பம், குறைந்த வெப்பம், வெப்பமின்மை…….என்று பல படித்தரங்கள் இருக்கலாம். அனால்………….. குளிர் என்று ஒன்று இல்லை. பூச்சியத்துக்குக் கிழே 458 பாகை வரை நாம் நோக்கலாம். அதுதான் மிகக் குறைந்த வெப்பம். குளிர் என்று ஒன்று இல்லை. வெப்பத்தின் குறை நிலையை வர்ணிக்கும் ஒரு சொல்தான் குளிர். குளிரை எம்மால் அளக்க முடியாது. வெப்பம் என்பது சக்தியின் ஒரு வடிவம். குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப் பதமல்ல. மாறாக, வெப்பமின்மையே குளிராகும்.
( வகுப்பறையில் இப்போது மயான அமைதி )
Student : இருட்டு என்று ஏதாவது உண்டா, பேராசிரியர் அவர்களே ?
Professor : ஆம். இருட்டு இருப்பதால்தானே இரவு வருகிறது ?
Student : ஸேர், நீங்கள் மீண்டும் பிழை விடுகிறீர்கள். இருட்டு என்பது ஏதோ ஒன்றின் குறைவாகும். குறைவான ஒளி, சாதாரண ஒளி, பிரகாசமான ஒளி, கண்ணைப் பறிக்கும் ஒளி என பல படித்தரங்கள் இருக்கலாம். ஒளி இல்லாத போது ஒன்றுமே தென்படாது. அந்த நிலையைத்தான் நாம் இருட்டு என்கிறோம், இல்லையா? உண்மையில் இருட்டு என்று ஒன்றுமேயில்லை. அப்படி இருந்தால், இருட்டை, அதை விட இருட்டாக்க முடிந்திருக்க வேண்டும். முடிந்ததா ?
Professor : அதனால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ?
Student : ஸேர், உங்களுடைய தத்துவத்தின் அடிப்படை பிழையானது.
Professor : பிழையானது ? விளக்க முடியுமா ?
Student : ஸேர், இருவகைத் தன்மை கொண்ட ஒரு சூழலில் நீங்கள் பணி செய்கிறீர்கள்.
வாழ்வையும் மரணத்தையும் பற்றி நீங்கள் சிந்திப்பது போலவே, நல்ல கடவுள், கெட்ட கடவுள் என்றும் பேசுகிறீர்கள்.
அல்லாஹ் என்ற எண்ணக்கருவை, அளவிடக்கூடிய முடிவுப் பொருளாக நீங்கள் நோக்குகிறீர்கள்.
ஸேர், அறிவியல், ஓர் எண்ணக்கருவைக் கூட விளக்கிட முடியாதது. உதாரணமாக, மின்னியல், காந்தவியல் போன்ற சொற்களை அது பயன்படுத்துகிறது. அவற்றை யாரும் கண்டதே இல்லை. அவற்றின் தன்மைகளைப் பூரணமாகப் புரிந்து கொள்ளவுமில்லை.
மரணத்தை வாழ்வின் எதிர்ப் பொருளாக நோக்குவது மடமையாகும். ஏனெனில், மரணம் என்பது புரிந்து உணரக்கூடிய ஒரு விடயமல்ல.
மரணம் என்பது வாழ்வின் எதிர்ப் பதம் அல்ல. மாறாக, அது வாழ்வின் முடிவைக் குறிப்பதாகும்.
பேராசிரியர் அவர்களே, இப்போது எனக்குச் சொல்லுங்கள்; உங்கள் மாணவர்களுக்கு, அவர்கள் குரங்கின் பரிணாமம் என்று நீங்கள் போதிக்கிறீர்களா ?
Professor: நீங்கள் குறிப்பிடுவது இயற்கையான பரிணாமப் படிமுறை எனின், ஆம் நான் கற்பிக்கிறேன்.
Student : நீங்கள் எப்போதாவது பரிணாமப் படிமுறை வளர்ச்சியை உங்கள் கண்களால் கண்டிருக்கிறீர்களா ?
( பேராசிரியர் புன்முறுவலுடன் தலையை ஆட்டுகிறார், இந்த விவாதத்தின் போக்கைப் புரிய ஆரம்பித்தவராக )
Student : பரிணாமப் படிமுறையின் செயற்பாட்டைக் கண்டவர் எவரும் இல்லை என்பதால், அது தொடர்ந்தும் நடைபெறக்கூடிய ஒரு விடயம் என யாராலும் நிறுவ முடியாது. இந்தக்கருத்தை நீங்கள் மாணவர்களுக்குச் சொல்லியிருக்கிறீர்களா ? இல்லையென்றால், நீங்கள் ஒரு போதகரேயன்றி ஒரு விஞ்ஞானியாக, தத்துவ மேதையாக இருக்க முடியாது.
( வகுப்பில் சலசலப்பு )
Student : இந்த வகுப்பில், பேராசிரியரின் மூளையைப் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா ?
( வகுப்பில் எல்லோரும் சிரிக்கிறார்கள் )
Student : அதன் சப்தத்தைக் கேட்டவர்கள், தொட்டவர்கள், அதன் வாசத்தை உணர்ந்தவர்கள் யாராவது இங்கு இருக்கிறீர்களா ? . . .
அப்படி யாரும் இங்கும் இல்லை, எங்கும் இல்லை…
எனவே, ஏற்றுக்கொள்ளப்பட்ட விஞ்ஞான பரிசோதனை முறைகளின் படி, உங்களுக்கு மூளையே இல்லை என்று நான் கூறலாம்.
இப்போது சொல்லுங்கள் ஸேர், உங்களுடைய விரிவுரையை நாங்கள் எப்படி நம்புவது ?
( வகுப்பறையில் பூரண அமைதி. பேராசிரியர் குறித்த மாணவனை முறைக்கிறார் )
Professor : நான் நினைக்கிறேன், இவை எல்லாமே நம்பிக்கை சார்ந்தவை.
Student : இதைத்தான் நானும் சொல்கிறேன் . . .
மனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள தொடர்பும் இந்த நம்பிக்கைதான்.
இந்த நம்பிக்கைதான் உயிரோட்டமுள்ளது, அதுதான் உலகை ஓட்டுகிறது.
இந்த மாணவன்தான் Dr. Zakir Naik.

image

நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s