நாவை பேணுங்கள்,

நாவைப் பேணுங்கள்

image

மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது எது என்றால் நாக்கு என்று சொல்லலாம். ஒருவடம் தன்னடக்கம் இருக்க வேண்டுமென்றால் அவனிடம் நாவடக்கம் இருக்க வேண்டும். இந்த நாவை எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதன்படியே முடிவு இருக்கும்.
இந்த நாக்கில் நல்ல பெயர் கிடைத்து சிறந்த பெயரை வாங்கி மறுமையிலும் சிறப்பிடத்தைப் பெறுகின்றார்கள். சிலர் இந்த நாவால் தான் முறையற்ற வழியில் பேசி, மனிதர்களில் மட்டமான பட்டியலில் இடம் பெறுவது மட்டும் அல்லாமல், மறுமையில் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்றார்கள். இப்படிப்பட்ட நாவைப் பற்றி அல்லாஹ் திருமறையிலும் நபி மொழியிலும் இவ்வாறு கூறியுள்ளார்கள்.

எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான ஞானமில்லையோ அதைச் செய்யத் தொடர வேண்டாம். நிச்சயமாக மறுமையில் செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே அதனதன் செயல் பற்றிக் கேள்வி கேட்கப்படும். (17:36)

எந்த ஒரு விஷயம் நமக்கு தெளிவாகத் தெரியவில்லையோ அதைப் பற்றிப் பேசக் கூடாது. அதுபோல் பேசுவது பல வழியிலும் மற்றவர்களுக்குத் துன்பம் தருவது மட்டுமல்லாமல், எவ்வளவு பெரிய தவறாகி விடுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்).

ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப் பற்றி நல்லதா அல்லது கெட்டதா என்று சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் அளவிற்கு நரகத்தின் அடிப்பாகத்தில் வீழ்ந்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபு ஹுரைரா (ரலி) ஆதாரம் : புகாரி)

மனிதர்கள் எல்லாம் ஒரு இடத்தில் சந்தித்தால் அந்த இடத்தில் புறம் பேசி விடுவார்கள். இதில் அதிகமாக ஆண்களை விட பெண்கள் தான் முதலில் இருப்பார்கள். வீட்டு வேலை முடிந்து விட்டதா? உடனே அடுத்த வீட்டுக்குச் சென்று அடுத்தவர் கதையை பேசுவதே வாடிக்கையாகி விட்டது. அவர்களிடம் ஏன் இப்படி புறம் பேசுகின்றீர்கள் என்று கேட்டால், என்ன சொல்வார்கள் தெரியுமா? நாங்கள் என்ன புறமா? பேசுகிறோம். இல்லாததையா பேசுகிறோம் என்று கேட்கின்றார்கள்.

எந்த அளவுக்கு இந்த புறம் பேசுவதை நபி (ஸல்) அவர்கள் ஹதீஸில் சொல்லியுள்ளார்கள். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தொpயுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிந்தவர்கள் என்று பதிலளித்தோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுதலைப் பற்றிக் கூறினார்கள் :
உனது சகோதரன் எதை வெறுப்பானோ அதை அவன் இல்லாத போது கூறுவதாகும். அப்போது நான் கூறுவது எனது சகோதரனிடத்தில் இருந்தாலுமா என்று கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ சொல்வது உன்னுடைய சகோதரனித்தில் இருந்தால் அவதூறு என்று கூறினார்கள். (முஸ்லிம்)
புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரிலே, அவர்கள் யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்). மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பாளர் அனஸ் (ரலி) ஆதாரம் : அஹ்மது)

புறம் நாம் பேசாமல் இருக்க வேண்டும். அடுத்தவர் பேசும் பொழுது அதை நாம் தடுத்து விட வேண்டும். அல்லது அந்த இடத்தை விட்டுச் சென்று விட வேண்டும். புறம் பேசுவதைத் தவிர்ப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழிகளை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட பொழுது, எவர்களுடைய நாவினாலும் கரத்தினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பைப் பெறுகின்றார்களோ அவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

image

.
நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s