எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வின் அற்புதம்

அஸ்ஸலாமு அலைக்கும்

image

அல்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயமாகிய அல் அலக் எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஓதுவீராக! ஏன்று கூறிவிட்டு மனிதன் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றிக் கூறுகின்றான்.

(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன் 96:1,2

image

மனிதனைப் படைத்த இறைவன் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சட்ட திட்டத்தை தன் தூதராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கும்போது மனிதனை தான் எவ்வாறு படைத்தான் என்ற உண்மையை முதன் முதலில் தெரியப்படுத்துகின்றான். அலக் என்ற அரபுப் பதத்தின் அர்த்தம் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது. அதாவது கருவுற்ற சினை முட்டை என்பது ஆணிணது விந்தும், பெண்ணினது சினை முட்டையும் கருக்கட்டப்பட்டு ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்ட நிலையாகும்.

மனிதனது உருவாக்கத்திற்கு ஆணின் விந்தும், பெண்ணின் சினை முட்டையும் தான் காரணம் என்பதை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அவனது அல்குர்ஆனில் மேற்குறிப்பிட்ட வசனத்தின் மூலம் விவரிக்கின்றான்.

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். (அல்குர்ஆன் 23: 12)

அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான். (அல்குர்ஆன்32: 7)

இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், சில விஞ்ஞானிகளும் கூட மனிதன் குரங்கிலிருந்து தான் பரிணாமமடைந்துள்ளான் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கையின் அடிப்படையில் குருட்டு நம்பிக்கையில் உள்ளனர்.சார்ள்ஸ் டார்வினின் கொள்கையானது அவரது ஊகமே தவிர நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல.

விஞ்ஞானத்தைப் பொருத்தமட்டில் ஒரு விஷயம் கண்காணிக்கப்படுவதன் (Observation) மூலமே நிரூபனமாகும். டார்வினின் கொள்கை உண்மையாக இருந்தால் ஏன் தற்போதும் குரங்குகள் பரிணாமம் அடைவதில்லை? இந்த சிறு உண்மையைக் கூட இக் கொள்கையில் குருட்டு நம்பிக்கையுடையவர்கள் ஏன் சிந்திக்கத் தலைப்படுவதில்லை?

தற்போது மனித உடலிலுள்ள மூலக்கூறுகளைப் பரிசோதனைப்படுத்தியபோது மண்ணிலுள்ள மூலக்கூறுகளும் மனித உடலிலுள்ள மூலக்கூறுகளும் ஒன்றுக்கொன்று ஒத்தவையாக இருப்பதை நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. மனித உடல் இழையங்களில் 95% மண்ணிலுள்ளது போல், காபன், ஹைட்ரிஜன், ஆக்ஸிஜன், நைட்ரிஜன்,பாஸ்பரஸ்,சல்பர் உட்பட மேலும் மொத்தம் வித்தியாசமான 26மூலக்கூறுகளும் அடங்கியுள்ளன.

1809 – 1882 காலப்பகுதியல் வாழ்ந்த விஞ்ஞானியான சார்ள்ஸ் டார்வினுக்குத் தெரியாத உண்மை எப்படி 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்று தெரிந்திருக்க முடியும்? நிச்சயமாக இது அல்லாஹ்வின் கூற்றே தவிர வேறில்லை.

பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 23: 13)

23:12,13 குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் மனிதனை மண்ணால் படைத்ததாகக் கூறியது மட்டுமல்லாது அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம் என்றும் கூறுகின்றான். அதாவது மனிதனின் அடிப்படை உருவாக்கம் விந்திலிருந்தே ஆரம்பம் என அல்லாஹ் தெளிவாகக் கூறுகின்றான்.

மனித உடலிலுள்ள அத்தனை உயிர் கலங்களிலும் DNA, புரதங்களினால் ஆன 23 சோடி நிறமூர்த்தங்கள் காணப்படுகின்றன. இவை ஆண்களில் XYநிறமூர்த்தங்களாகவும், பெண்களில் XXநிறமூர்த்தங்களாகவும் காணப்படுகின்றன. Edmund Beecher Wilson, Nettie Stevens ஆகிய விஞ்ஞானிகளே1905ம் ஆண்டில் இவ்வுண்மையை விஞ்ஞான ஆய்வுகள் மூலம் கண்டறிந்தனர் கருக்கட்டலின் போது சினை முட்டையை சந்திக்கின்ற விந்திலுள்ள 23 சோடி XY நிறமூர்த்தங்களிலுள்ள Xநிறமூர்த்தம் ஆதிக்கம் செலுத்தினால் கிடைக்கக்கூடிய குழந்தை பெண்ணாகவும், Y நிறமூர்த்தம் ஆதிக்கம் செலுத்தினால் கிடைக்கக்கூடிய குழந்தை ஆணாகவும் அமையும். எனவே ஆணிண் விந்திலுள்ள நிறமூர்த்தங்களே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கின்றது.

இவ்வுண்மை 1990ம் ஆண்டில்testis-determining factor (TDF) என்ற ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. (அல்குர்ஆன் 86: 5,6,7)

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம் .(அல்குர்ஆன் 76: 2)

விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு (விதியை) நிர்ணயித்தான் .(அல்குர்ஆன் 80:19)

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். (அல்குர்ஆன் 49:13)

இவ்வுண்மையை திருக் குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே‘களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.‘ என்ற வசனத்தின் மூலம் விந்துத் துளியே மனிதனின் துவக்க நிலையாக உள்ளது என்ற அறிவியல் உண்மையை அல்லாஹ் தெளிவாக்குகின்றான்.

மேலே குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனங்களான (86: 5,6,7), (76: 2), (80:19) ஆகிய வசனங்களும் இதையே உணர்த்துகின்றன. எனவே, அல்குர்ஆன் இறைவேதம் என்பது இதன் மூலமும் ஆணித்தரமாக முடிவாகின்றது.

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும், முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம்.

பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்.பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். (அல்குர்ஆன் 22:5)

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். ,,(அல்குர்ஆன் 23: )

image

image

நன்றி:Jamialim.NEWS

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s