ஜப்பானில் பூகம்பம்!

” நீ உயிர் பிழைத்து விட்டால், நான் உன்னை நேசிக்கின்றேன் என்பதைக் கட்டாயம் மறக்கக் கூடாது”
——————————- 

image

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் (2011) முடிந்தவுடன், மீட்ப்புபடையினர் இடிந்து கிடந்த ஒரு இளம் பெண்ணின் வீட்டைத் தோண்டும்போது, இடிபாடுகளுக்கிடையே அந்த இளம் பெண்ணின் உடலைக் கண்டனர். அந்தப் பெண்ணின் உடல் கிடந்த முறை மிகவும் வித்தியாசமாக, தொழுவதைப் போல் மண்டியிட்ட நிலையில் அவளுடைய கைகள் ஏதோ ஒன்றை அரவணைத்து இருந்தது. அந்தப் பெண்ணின் தலையிலும், முதுகிலும் வீடு இடிந்து விழுந்து இருந்ததற்கான அறிகுறி தென்பட்டது.
கடுமையான போராட்டாத்திர்க்குப் பின், மீட்புப் படையின் தலைவர், தனது கையை சுவரில் உள்ள குறுகிய இடைவெளி வழியாக, அந்தப் பெண்ணின் உடலைத் தொட்டப்போது, அவர் இறந்தது விட்டதை உணர்ந்தார். அப்படியே விட்டு விட்டு, அடுத்த வீட்டிற்க்குச் சென்றனர். ஆனாலும், அவரின் உள்ளத்தில் மீண்டும் அங்கே சென்று பார்க்கும்படி மீண்டும் மீண்டும் தோன்றியதால், மறுபடியும் அங்கே சென்று இன்னும் ஆழமாகத் தோன்றினர். அந்தப் பெண்ணின் கைகளுக்கு இடையில் கையை விட்டுப் பார்த்தவுடன், மிகுந்த ஆச்சரியத்தால் “குழந்தை, குழந்தை” என்று கத்தினார். ஆம், உயிரோடு ஒரு அழகிய மூன்று மாத ஆண் குழந்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பூக்களால் நிரப்பப்பட்ட ஒரு கூடையில், போர்வையால் போர்த்தப்பட்டு இருந்தது. அதைத் தான் அந்த தாய், எந்த விதப் பாதிப்பும் ஏற்படாதவாறு தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றி இருந்தார்.
மருத்துவர்கள் வந்து அந்தக் குழந்தையை பரிசோதிக்கும் போது, அந்தக் கூடைக்குள் ஒரு செல் போனும் அதிலே ஒரு டெக்ஸ்ட் டைப் செய்யப்பட்டு இருந்தது..
” நீ உயிர் பிழைத்து விட்டால், நான் உன்னை நேசிக்கின்றேன் என்பதைக் கட்டாயம் மறக்கக் கூடாது”
அந்த செல் போன், அங்கிருந்த மீட்ப்படையினர் அனைவரிடமும் சென்றது… படித்துவிட்டு, அனைவரும் அழுதனர்.
—————
பல வருடங்கள் கழித்து படிக்கும் நாமும் அழுகின்றோம்… என்ன தூய்மையான அன்பு! உலகில் தாய் அன்பிற்கு ஈடு ஏதும் இல்லை.
தாயோடு நல்ல உறவு இல்லாதவர்கள், தயவு செய்து பு்துப்பித்துக் கொள்ளுங்கள்… நாம் உலகில் இன்று வாழ்வதற்கு அவர்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு எதுவுமே ஈடாகாது.
“தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள்.” [திருக்குர்ஆன் 46:15]
நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s