சுகபிரசவம் ????

தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்துவரும் சிசேரியன்கள்
‪#‎சுகாதாரத்துறை_எச்சரிக்கையை_பகிர்ந்து_பரப்புவீர்களா_தோழர்களே‬!

image

இந்த பதிவை மக்களின் விழிப்புணர்வுக்காக பதிவதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்,ஏனெனில் என்னுடன் பிறந்த சகோதரிகள் இருவருக்கும் கடந்தவருடம் அரசு மருத்துவமனையிலேயே பிரசவம் நடந்தது.அதுவும் சுகப்பிரசமாக நடந்தது.தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் ஆவதற்கு வழி இருந்தும் தேவையில்லாமல் செய்யப்படும் சிசேரியனால் தாய்க்கும், குழந்தைக் கும் பாதிப்பு ஏற்படும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித் துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு மையம் நடத்திய கணக்கெடுப்பில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 89.8 சதவீதத்தில் இருந்து 99 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 48.1 சதவீதத்தில் இருந்து 66.7 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வீடுகளில் குழந்தை பிறப்பது 2.9 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாக குறைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பது 50 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பது அதிகரித்துள்ளது. இது அரசு மருத்துவமனைகளின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வந்திருப்பதை காட்டுகிறது. அரசு மருத்துவமனைகளில் முடிந்தவரை சுகப்பிரசவத்துக்குதான் முயற்சி செய்யப்படும். முடியாத பட்சத்தில் சிசேரியன் செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது. சுகப்பிரசவத்தில்தான் அதிக அளவில் குழந்தைகள் பிறக்கின்றன.
தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீதத்துக்கும் மேல் சிசேரியன்தான் நடக்கிறது. சுகப்பிரசவம் என்பது மிகவும் குறைவு. தற்போதுள்ள பெண்களும் வலி இல்லாமல் குழந்தையை பெற்றுக் கொள்ள சிசேரியனை விரும்புகின்றனர். டாக்டர்களும் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் அதிகரித்துள்ளது.
‪#‎சுகப்பிரசவம்_சிறந்தது‬
சுகப்பிரசவம் ஆவதற்கு வழியே இல்லை. சிசேரியன் செய்தால்தான் தாயையும், குழந்தையும் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் சிசேரியன் செய்வது தவறில்லை. ஆனால் சுகப்பிரசவம் ஆவதற்கு வழி இருந்தும் சிசேரியன் செய்வது தவறு. சிசேரியன் என்பது சாதாரண விஷயம் இல்லை. அதிகப்படியான மயக்க மருந்து கொடுத்து செய்யப்படும் பெரிய அறுவைச் சிகிச்சையாகும். தேவையில்லாமல் சிசேரியன் செய்வதால் அது தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான் அரசு மருத்துவமனைகளில் முடிந்தவரை சிசேரியனை தவிர்த்து சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்கிறோம். கர்ப்பிணிகள் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
‪#‎தாய்மார்களின்_கவனத்திற்கு‬

நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s