என் இனிய இஸ்லாம்

பைஅத்தின் அவசியம்

ஆக்கம்: முஹம்மத் ரஹ்மான்

வல்ல ரஹ்மான் வான்மறை குர்ஆன் ஷரீபில், “இறை விசுவாசிகளே இறைவனைப் பயந்து கொள்ளுங்கள் மேலும் அவனளவில் சேர்த்து வைக்கின்ற உதவி சாதனத்தை தேடிக்கொள்ளுங்கள் மேலும் அவன் வழியில் மனப் போராட்டம் செய்யுங்கள் நீங்கள் வெற்றியடைவீர்கள்!…” (ஸூரத்துல் மாயிதா: 35)
என்று கூறுகிறான்.

இந்த ஆயத்தில் நான்கு அம்சங்களைக் கடைபிடிக்குமாறு கூறுகிறான்.

முதலாவதாக ஈமான்கொள்வதன் மூலம் குப்ரு என்ற இருளை நீக்கி கொள்ளுமாறும், இரண்டாவதாக தக்வா என்ற இறை அச்சத்தின் மூலம் பாவங்களை போக்கிக் கொள்ளுமாறும், மூன்றாவதாக வஸீலா என்ற உதவி சாதனத்தின் மூலம் நாஸூத்து என்ற மனித நிலையை லாஹூத் என்ற இறைநிலையில் அழித்து அகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி உள்ளத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் நான்காவதாக மனதில் எழுகின்ற நான் என்ற அகங்காரத்தை அடக்கி ஒடுக்குவதற்காக மனப் போராட்டம் நடத்துமாறும் கூறுகிறான்.

இறைவனளவில் சேர்த்து வைக்கின்ற உதவிச்சாதனம் என்பது அகமிய ஞானங்களை அறிந்த உலமாக்களும் தரீக்காவைச் சேர்ந்த ஷைகுமார்களுமாகும் என்று தப்ஸீர் ரூஹுல் பயானில் (பாகம் 2 பக்கம் 388) குறிப்பிடப்பட்டுள்ளது.

விசுவாசிகளே இறை! இறைவனை பயந்து கொள்ளுங்கள். மேலும் உண்மையானவர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் ஸூரதுத் தவ்பா: 119)
என்று கூறுகிறான்.

அதாவது ஈமான் கொண்டு ஷரீஅத்துடைய சட்டதிட்டங்களை பேணிக் கொள்வதுடன் நின்று விடாமல் “உலாமாவுல் ஹகீகத்” என்ற ஷைகுமார்களுடைய சகவாஸத்தில் இருந்து வருமாறும் உபதேசிக்கிறான்.

மேலும் அதற்கு உவமானம் வைத்தாற் போல் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களை தேடிக்கண்டு பிடித்து அகமிய ஞானம் பெறுமாறு மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உத்தரவிட்டதைப் பற்றியும் மேலும் அவ்விருவருக்கும் மத்தியில் நடைப்பெற்ற நிகழ்வுகளையும் கஹ்பு ஸூராவில் (60-82) தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறி ஒரு சிஷ்யன் தன் குருவிடம் எந்த அளவுக்கு அடக்க நெறிகளை ஒழுக்க முறைகளை கடைபிடித்து நடக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக அறிவுறுத்துகிறான். (ரூஹுல் பயான் பாகம் 05 பக்கம் 274)

மேலும் இல்முஷ்ஷரீஅத் என்ற வெளிரங்க ஞானங்களை வழங்கப்பட்ட நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அகமிய ஞானங்களைப் படித்துக்கொள்வதற்காக ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று நான் உங்களைப்பின்பற்றி வரட்டுமா? என்று கேட்டதே ஒரு ஞானாசிரியரை (ஷைகை) அண்மித்து அகமிய ஞானங்களைத் தேடுவது கட்டாயமாகும் என்பதற்கு வலுப்பமான ஆதாரமாகும் என்று தபகாதுஷ் ஷஃரானி பாகம் 01 பக்கம் 05 ல் கூறப்பட்டுள்ளது. http://www.mailofislam.com/baiyathin_avasiyam.html#.dpuf: பார்க்கவும் –
நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s