கண்மனி நாயகம்,,!!

*நமது கண்மணி நாயகம் முஹம்மது
முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்களின் திரு சமூகத்தின் முன் நடந்த ஓர் சம்பவ நிகழ்வு ….
”அண்ணலார் அன்னவர்கள் திருவாய் மொழிந்த ”சுவனத்துப்பெண் ”
*******************************************************

image

******************************************
*இப்னு அப்பாஸ் ரலியல்லாஹுத்தாலா அன்ஹு அன்னவர்கள் சஹ தோழர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்த சமயம் ..ஒரு கருத்த பெண்மணி ஒருவர் சென்றுகொண்டிருந்தார்கள் .
அவர்களை சுட்டிக்காட்டி உலகத்தில் சுவர்க்கத்தின் பெண்ணை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் அங்கு சென்று கொண்டிருக்கும் அந்த கருத்த பெண்மணியை பார்த்துக்கொள்ளுங்கள் .
என்று கூறிவிட்டு ,
பின்னர்
நவின்றார்கள் , இந்த பெண்மணி ஒருநாள் நம் பெருமானார் அன்னவர்களின் திரு சமூகத்திற்கு வந்தார்கள் ,,அண்ணலார் அன்னவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு , யா …ரசூலுல்லாஹ் ..!
எனக்கு நோய் ஏற்பட்டு திடீரென்று மயக்கமிட்டு கீழே விழுந்து விடுகிறேன் -கீழே கிடக்கும் போது என்னுடைய ஆடைகள் என் மேனியை விட்டு விலகி விடுகிறது .
யா…ரசூலுல்லாஹ் …! எனக்காக துஆ செய்யுங்கள் என்றார்கள்

நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு வ அலைஹி வ ஸல்லம் அன்னவர்கள் அப்பெண்மணியை பார்த்து கூறினார்கள் ….நீ இந்த நோயை பொறுத்துக்கொண்டாள் உனக்கு சுவர்க்கம் கிடைக்கும் .நீவிரும்பினால் சொல் உனக்காக பிராத்திக்கின்றேன் .இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து சொல் என்றார்கள் .
அந்த பெண்மணி சொன்னார் .

.யா….ரசூலுல்லாஹ்…! நான் நோயை பொறுத்துக்கொள்கிறேன் ,எனக்கு சொர்க்கம் கிடைக்கட்டும் . ஆனால் நான் மயக்கமுற்று விழும் நேரத்தில் ஆடைகள் விலகிவிடுகிறது சில சமயம் எனக்கு அவமானப்படும் நிலை ஏற்பட்டு விடுகிறது அதிலிருந்து நான் விடுபட தாங்கள் துஆ ‘செய்யுங்கள் என்றார்கள் .
அண்ணல் பெருமானார் அன்னவர்கள் அப்பெண்மணிக்காக ”துஆ ”செய்தார்கள் ,அன்றுமுதல் அந்த பெண்மணிக்கு மயக்கமிட்டு விழுந்தாலும் சரியே ,ஆடை மேனியைவிட்டு அகலாமல் காக்கப்பட்டுள்ளார் .”சுப்ஹானல்லாஹ் ”.

அந்த பெண்மணி நோயுற்று கீழே விழும் பச்சத்திலும் தன் ”அவுரத்தைப் பேணி மானம் காக்கப்படவேண்டுமென்ற விசயத்தில் ”இஸ்த்திகாமத்”தாக இருந்துள்ளார்கள் .தற்போது நம் குல பெண்களின் முக்காடு விசயத்தில் அவர்களின் நிலையை ”ஒன்றும் சொல்வதற்கில்லை” ”யாரையோ எவரையோ திருப்தி படுத்த வேண்டி மகரமற்ற துணையுடனும் ,
(சில கூட்டத்தார்கள் பெண்களை பார்த்து ”துடைப்பத்தை தூக்கிக்கொள்ளுங்கள் என்றால் கூட அதையும் கையில் பிடித்துக்கொண்டும்)
ஆர்ப்பாட்ட களத்திலும் ,போராட்டக்களத்திலும்
வளம் வருகிறார்கள்.

அவர்கள் பெருமானார் அன்னவர்களின் காலத்துப் பெண்மணி குறித்து கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா.?
{குறிப்பாக நான் யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை} இவ்விசயத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் .அல்லாஹ் நம் குலபெண்களுக்கு பாதுகாப்பை தந்து மானக்கேடான செயல்களைவிட்டு தடுத்து .முறையுடன் ”ஹிஜாப்” பேணிய சாலிஹாண பெண்மணிகளாக ஆக்கி அருள்புரிவானாகவும் ..ஆமீன் ..!!!*
நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s