விசித்திர எந்திரம்,, சிகிட்சைபற்றி!!!

விசித்திர எந்திரம் வென்ட்டிலேட்டர் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

சர்ச்சை தொழில்நுட்பம்

image

சம்பவம் – 1

அவருக்கு மூக்கில் ரத்தம் வடிந்துகொண்டே இருக்கும் பிரச்னை. நிலைமை சிக்கலாக இருப்பதாகத் தெரிந்ததும் தானே சென்று மருத்துவமனையில் அட்மிட்டாகியிருக்கிறார். மருத்துவத்துறை விற்பனைப் பிரதிநிதி என்பதால் வென்ட்டிலேட்டர் சிகிச்சை பற்றி அவருக்குத் தெரியும். அதனால், ‘வென்ட்டிலேட்டர் வைக்க வேண்டும் என்று சொன்னால் வீட்டுக்குக் கூட்டி வந்துவிடுங்கள்’ என்று வீட்டில் சொல்லிவிட்டே சென்றிருக்கிறார்.

ஆனால், மருத்துவமனையில் அவரால் எதிர்க்க இயலாத நிலையில் வென்ட்டிலேட்டர் வைத்திருக்கிறார்கள். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்த அன்று மருத்துவமனையில் முக்கியமான ஒரு விழா. அன்றைய தினம் எந்த மரணச் செய்தியும் வெளியில் தெரியக் கூடாது என்று நிர்வாகம் கூறியதால் அன்று முழுவதும் அவருக்கு சிகிச்சை அளிப்பது போலவே காட்டிவிட்டு, அடுத்த நாள் இறந்துவிட்டதாகக் கூறி உடலை ஒப்படைத்திருக்கிறார்கள்.
.

சம்பவம் – 2

மீடியாவை சேர்ந்த அவருக்கும் வென்ட்டிலேட்டர் சிகிச்சை கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். சீரியஸாக இருக்கிறார் என்று தெரிந்ததும் பல பிரபலங்கள் அவரைப் பார்க்க வந்து சென்று கொண்டிருந்தார்கள்.

‘கொஞ்சம் செல்வாக்குள்ள மனிதர் போல் இருக்கிறது’ என எச்சரிக்கையான மருத்துவமனை, ஏற்கனவே இறந்து போய் வென்ட்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தவரை வேறு வழியின்றி இறந்ததாக அறிவித்தது.

சில வருடங்களுக்கு முன்பு ‘ரமணா’ திரைப்படத்தில், பணத்துக்காக இறந்த உடலுக்கு சிகிச்சை அளிப்பது போல் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது மீண்டும் இது போன்ற சர்ச்சைகள் எழுந்துகொண்டிருப்பதால் அவசர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவரான தவப்பழனியிடம் வென்ட்டிலேட்டர் பற்றி பேசினோம்…
.

‘‘உயிர் இருப்பதன் அடையாளமே சுவாசம்தான். அதனால்தான் பிராணனைக் காக்கும் வாயு என்ற அர்த்தத்தில் பிராணவாயு என்று ஆக்சிஜனைச் சொல்கிறோம். இயற்கையாக நாம் சுவாசித்துக் கொண்டிருக்கும் பணி, சில உடல்ரீதியிலான பிரச்னைகளால் முடியாமல் போய்விடும். அந்த இக்கட்டான நேரத்தில் ஒருவரை சுவாசிக்க வைக்க உதவும் கருவிதான் மெடிக்கல் வென்ட்டிலேட்டர் (Medical ventilator). வீட்டுக்குக் காற்றோட்ட வசதியைத் தரும் கருவியையும் இதனால்தான் வென்ட்டிலேட்டர் என்கிறோம்’’ என்று அறிமுகம் கொடுப்பவர், எப்போது ஒரு நோயாளிக்கு வென்ட்டிலேட்டர் வைக்க வேண்டியிருக்கும் என்பதைத் தொடர்கிறார்.
.

வென்ட்டிலேட்டர் சுவாசம் இப்படித்தான் நடக்கிறது!

இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக்கிறது என்பதை அறிவோம். அதேபோல, சுவாசம் நிமிடத்துக்கு சராசரியாக 12 முதல் 18 வரை இருக்கிறது. குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த அளவு சற்று மாறும். ஓய்வாக இருக்கிறார்களா, உடல்நிலைக் குறைவு இருக்கிறதா போன்ற பல காரணிகளைப் பொறுத்தும் இந்த சுவாசத்தின் அளவு மாறும். சாதாரணமாக நாம் சுவாசிக்கும் காற்று, மூக்கின் வழியாக சென்றதும் அது தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குச் செல்கிறது. இந்தக் காற்று இரண்டு நுரையீரல்களுக்கும் செல்கிறது. நுரையீரல்களில் காற்று அறைகள் இந்தக் காற்றை உள்வாங்கிக் கொள்கின்றன.

நிமிடத்துக்கு இத்தனை முறை சுவாசிக்கிறோம் என்பதை ரெஸ்பிரேஷன் ரேட் (Respiration rate) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ரெஸ்பிரேஷன் ரேட்டுக்கு இன்னொரு பெயர்தான் வென்ட்டிலேஷன் ரேட் (Ventilation rate). செயற்கையாக சுவாசம் அளிக்கும் எந்திரம் என்பதால் மெக்கானிக்கல் வென்ட்டிலேட்டர் என்றும் சொல்கிறார்கள்.
.

‘‘தலையில் அடிபடுவது, பக்கவாதம், மூளையில் தீவிரமான வேறு பாதிப்புகள் ஏற்படும்போது சுவாசம் சீராக இல்லாமல் இருந்தால் வென்ட்டிலேட்டர் வைக்க வேண்டியிருக்கும். இதேபோல, மூச்சுக்குழாயில் நீர் கோர்த்திருக்கும்போதும், நுரையீரல் அடிபட்டிருக்கும்போதும் சுவாசிக்க முடியாது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை வென்ட்டிலேட்டரில் வைத்துக் காப்பாற்ற வேண்டியிருக்கும். அதற்காக, வென்ட்டிலேட்டரில் வைத்தாலே ஆபத்து என்று நினைத்துவிடக் கூடாது’’ என்கிறார்.
.

வென்ட்டிலேட்டரை மருத்துவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதா?

‘‘நுரையீரலில் நீர் கோர்த்திருந்தால் மருந்து, மாத்திரை கொடுத்தே சரி செய்ய முடியும் அல்லது சுருங்கியிருக்கும் நுரையீரலை நெபுலைஸர் கொடுத்து விரிவுபடுத்தலாம். ஆனால், மருந்துகளாலோ, மாத்திரைகளாலோ, நெபுலைஸராலோ சரி பண்ண முடியவில்லை என்றால்தான் வென்ட்டிலேட்டரில் வைப்பார்கள்.

பொதுவாக, எல்லா மருத்துவ சிகிச்சைகளுக்குமே பக்கவிளைவுகள் இருக்கின்றன. அதேபோல வென்ட்டிலேட்டருக்கும் சாதகமான, பாதகமான விஷயங்கள் நடக்கலாம். நாம் எல்லோருமே சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி ஒரு செயல் நடப்பதையே நாம் உணர்வதில்லை. இப்படி ஓர் இயல்பான வேலையை என்னதான் எந்திரத்தை வைத்து செய்தாலும், இயற்கையாக நடப்பதற்கு இணையாக இருக்காது. அதனால் எல்லா சிகிச்சைகளுக்கும் போல வென்ட்டிலேட்டரிலும் பிரச்னைகள் இருக்கின்றன. நோய்த்தொற்றுகள் ஏற்படலாம், காற்றின் அழுத்தம் அதிகமாகி நுரையீரலில் ஓட்டை கூட விழலாம்.

வென்ட்டிலேட்டர் சிகிச்சைக்கு சட்டதிட்டங்கள் எதுவும் இல்லை.
ஆனால், சில நியாய, தர்மங்கள் இருக்கிறது. ஆனால், ஒருவர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு என்கிற நிலையில் வைக்காமல் இருப்பதே நல்லது. 85 வயதான ஒருவருக்கு மூச்சுத்திணறல் இருக்கிறது என்றால் வென்ட்டிலேட்டர் வைத்து அவரைக் காப்பாற்றும் வாய்ப்பு குறைவுதான். வேறு ஏதேனும் மருத்துவ ரீதியிலான பிரச்னைகளும் அவருக்கு இருக்கும் பட்சத்தில் ரிஸ்க் இன்னும் அதிகமாகும். கடினமான வென்ட்டிலேட்டர் சிகிச்சையை எதிர்த்து, அவர் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்குமா என்பதையும் பரிசீலித்துத்தான் வென்ட்டிலேட்டர் வைக்க வேண்டும்.

வென்ட்டிலேட்டர் வைப்பதன் சாதகம், பாதகத்தை நோயாளியின் உறவினர்களிடம் சொல்ல வேண்டும். முக்கியமாக, நோயாளி நினைவுடன் இருக்கும் பட்சத்தில் அவரிடம் கேட்டுவிட்டுத்தான் வென்ட்டிலேட்டர் வைக்க வேண்டும். பணம் கட்டுகிறவர்கள் அனுமதி கொடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது.

வென்ட்டிலேட்டர் சிகிச்சையில் தொண்டையில் டியூப் போடுவது என்பது மிகவும் வலி மிகுந்த ஒரு சிகிச்சை. வென்ட்டிலேட்டரில் வெளிவந்த பிறகும் அதன் பக்க விளைவாக உடல் பலவீனமாகும், தொண்டையில் எரிச்சல் இருக்கும், சாப்பிட முடியாது. சில நாட்களுக்குப் பிறகுதான் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். அதனால் சிரமத்தை அனுபவிக்கப் போகும் நோயாளியின் கருத்து மிகவும் முக்கியமானது.

இதையெல்லாம் கூறி அவர்கள் ஒப்புக் கொண்ட பிறகே வென்ட்டிலேட்டர் வைக்க வேண்டும். இது மருத்துவத்தில் முக்கியமான, அதிக கவனம் தேவைப்படும் சிகிச்சை. கிரிட்டிகல் கேர் நர்ஸ், மருத்துவர்கள் குழு எப்போதும் உடன் இருக்க வேண்டும். சுற்றுப்புறச் சூழலை மிகவும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மருந்துகள், விலை உயர்ந்த உபகரணங்கள் என்று பல செலவுகள் இருக்கிறது. அதனால்தான் இது காஸ்ட்லியான ட்ரீட்மென்டாகவும் இருக்கிறது.’’சிலர் மாதக்கணக்கில் கோமாவில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோமே?

‘‘வென்ட்டிலேட்டர் என்ன காரணத்துக்காக வைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்துசில மணிநேரங்களோ மாதங்களோ கூட வைக்கப்பட்டிருக்கலாம். பணம் ஒரு பிரச்னை இல்லை. பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களால் ஆன முயற்சிகளை எங்கள் மன திருப்திக்காக செய்ய விரும்புகிறோம் என்று நோயாளியின் உறவினர்கள் சொல்லும்பட்சத்தில் மருத்துவர்கள் தடுக்க மாட்டார்கள். சிலர் மாதக்கணக்கில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது இதனால்தான்.’’
.

உறவினர்களுக்கும் விழிப்புணர்வு தேவை!

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் (சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச்செயலாளர்)‘‘எந்த தொழில்நுட்பத்தையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதைப் போலவே, தவறான வழியில் பயன்படுத்தவும் வாய்ப்பு உண்டு. ஏகபோகம் கொண்டதாகத் தனியார் மருத்துவமனைகளும், கார்ப்பரேட் மருத்துவமனைகளும் அதிகமாகிவரும் நிலையில், வென்ட்டிலேட்டர் போன்ற காஸ்ட்லியான சிகிச்சையைத் தங்களது ஆதாயத்துக்காகப் பயன்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏற்கெனவே ஐ.சி.யுவில் இருக்கிறவர்களைப் பார்க்க முடிவதில்லை என்று மக்கள் புகார் கூறிக் கொண்டிருக்கிறார்கள். உறவினர்களை அனுமதிக்க மறுப்பதால் நோயாளி சுயநினைவோடு இருக்கிறாரா, பேசுகிறாரா, முன்னேற்றம் இருக்கிறதா என்பதைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஐ.சி.யு என்பது ரகசிய அறையாகவே இருக்கிறது. அதனால், சந்தேகம் ஏற்படாத வகையில் இதில் வெளிப்படைத்தன்மை வர வேண்டும். நோயாளியின் பிரைவசியை பாதிக்காமல், அவரது நிலைமையை வீடியோவில் தெரிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யலாம்.

நோயாளியின் உரிமையைப் போலவே நோயாளியின் உறவினர்களின் உரிமையையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சில வழிமுறைகளை சட்ட ரீதியாக செய்ய
வேண்டும். ஐ.சி.யு எப்படி இயங்க வேண்டும் என்பது பற்றி பல வழிமுறைகள் ஏற்கெனவே இருக்கின்றன. இந்த சட்டங்களை வலுப்படுத்தி, இன்னும் முறையாக செயல்படுத்த வேண்டும். Clinical Estabilishment Act சில மாநிலங்களில் அமலில் இருக்கிறது.

இந்த சட்டம் எல்லா மாநிலங்களிலும் நடைமுறைக்கு வரும்போது வென்ட்டிலேட்டர் உட்பட பல மருத்துவ முறைகேடுகளை தடுக்க முடியும். மருத்துவமனைகளும்
பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயாளிகளின் உறவினர்கள் இதுபற்றி விழிப்புணர்வோடு இருந்தால் போதும்!’’

Clinical Estabilishment Act சில மாநிலங்களில் அமலில் இருக்கிறது. இந்த சட்டம் எல்லா மாநிலங்களிலும் நடைமுறைக்கு வரும்போது வென்ட்டிலேட்டர் உட்பட பல மருத்துவ முறைகேடுகளை தடுக்க முடியும்.

மருத்துவமனைகளும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.வென்ட்டிலேட்டர் வைப்பதன் சாதகம், பாதகத்தை நோயாளியின் உறவினர்களிடம் சொல்ல வேண்டும். முக்கியமாக, நோயாளி நினைவுடன் இருக்கும் பட்சத்தில் அவரிடம் கேட்டுவிட்டுத்தான் வென்ட்டிலேட்டர் வைக்க வேண்டும். பணம் கட்டுகிறவர்கள் அனுமதி கொடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது.
.

நன்றி

– மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இந்த பதிவை வெளியிட்ட குங்குமம் டாக்டர் இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
.

சில சினிமாக்களில் காண்பிப்பதுபோல் வென்ட்டிலேட்டர் வைத்து பணம் சம்பாதிக்க முடியும் என்பதும் சாத்தியமே!

.

குறிப்பு:
.

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது. சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.
.

ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
.

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ / வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு : தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் ஆங்கில மருந்துக்கள், டீ, காப்பி, கஞ்சா உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை, பாக்கு, மூக்குப்பொடி போன்ற போதை பழக்கத்தை விடுவதற்கு தயாராக உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

நான் முழுமையான விபரங்கள் இல்லாமல் வரும் இமெயில்கள் / Commentகள் மற்றும் போதிய விபரங்கள் இல்லாமல் ஒரே வரியில் கேள்வி கேட்கும் நபர்களுக்கு பதில் கூற விரும்புவதில்லை.)
.

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:
.

http://reghahealthcare.blogspot.in/
https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/groups/reghahealthcare
https://www.facebook.com/groups/811220052306876

நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s