Siddha சித்தா

ஒற்றை தலைவலிக்கு
மருந்துகள்

image

# இஞ்சிச் சாறு , பால் ,
நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம
அளவு கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்குத்
தேய்த்துக் குளிக்கலாம் .
# அகத்தி இலைச் சாறு எடுத்து நெற்றியில்
தடவிவரலாம் .
# சுக்குத் தூள் , சீந்தில் கொடி, தேன் சர்க்கரை
ஆகியவற்றை வகைக்குக் கொஞ்சம் எடுத்துத்
துணியில் முடித்து மூக்கில் முகர்ந்து வரலாம் .
# குளிர்ந்த நீரைத் துண்டில் நனைத்துத் தலையிலும்
கழுத்திலும் கட்டவும் . பின் கைகளையும் கால்களையும்
சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல
பலன் தரும் .
# தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது
பட்டையையோ கட்டிக்கொள்ள வேண்டும் .
# நொச்சி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு
எடுத்து அந்தச் சாறை , இரண்டு பக்க நெற்றிப்
பொட்டுகளிலும் நன்கு பூசினால் தலைவலி
குறையும் .
# பத்து கிராம்பையும் , ஒரு கடுக்காயின் தோலையும்
நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர்
விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ,
தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஓரளவு சூட்டில்
குடிக்கலாம்.
# ஜாதிக்காய் உறையைக் கல்லில் உரைத்து அதை
எடுத்து இரு பக்க நெற்றிப்
பொட்டிலும் கனமாகப் பற்றுப்
போடலாம்.
# நிழலில் உலர்த்திய மகிழம்பூவை இடித்துத்
தூளாக்கிச் சிட்டிகை அளவு எடுத்து நாசியில் வைத்து
முகரத் துர்நீர் பாய்ந்து வந்து தலைவலியைப் போக்கும்.
# வில்வ இலைகளை அம்மியில் அரைத்துத் தினமும்
சுண்டைக்காய் அளவு 20 நாட்கள்
சாப்பிடலாம்.
# இரண்டு துளி வெற்றிலைச் சாறு மூக்கில்
விடலாம்.
# மருதோன்றி இலையை மை போல அரைத்து, இரு பக்க
நெற்றிப் பொட்டுகளிலும்
கனமாகப் பற்று போட்டால் உடனே தலைவலி
நின்றுவிடும் . இது கை கண்ட அனுபவ முறை .
# வெள்ளை எள்ளை , எருமைப் பால் சேர்த்து
அரைத்தெடுத்து அதிகாலையில் முன்
நெற்றியில் பற்று போட்டு உதயசூரியன் ஒளியில்
லேசாகக் காட்டிவரலாம்.
நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s