வீட்டுகுறிப்பு 2

அஞ்சறைப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் அருமருந்துகள்!

வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! – பாகம் 02

நன்றி – விகடன் மற்றும் சித்த மருத்துவர் பத்மப்ரியா.

.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

முதல் பாகத்தை வாசிக்க

https://www.facebook.com/ReghaHealthCare/photos/a.308654389217808.69688.308640462552534/995459577203949/?type=3
.

மஞ்சள் முதல் அதிமதுரம் வரை நாம் சமையலில் பயன்படுத்தும் மணமூட்டிகள், சுவையூட்டிகள், மசாலா பொருட்களின் பலன்களைச் சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.
.

கடுகு

# கடுகு, உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். சமையலில் கடுகைப் பயன்படுத்தும்போது வெடிக்கும். கடுகு வெடித்தால்தான், அதில் உள்ள நறுமண எண்ணெய்கள் வெளியே வந்து, உணவு வாசனையாக மாறும்.

# கடுகு ஒரு சிறந்த எண்ணெய் வித்து. கடுகு எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

# கடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் வலி நீங்கும். குறிப்பாக, தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும்.

# உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து, எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

# எண்ணெயில் வதக்கும் பொருட்களோடு கடுகைச் சேர்ப்பது சுவைக்காக மட்டும் அல்ல, இதனால் உடலும் வலுப்பெறும்.
.

சோம்பு

# சோம்புக்கு, பெருஞ்சீரகம் என்ற பெயரும் உண்டு.

# சோம்பை வறுத்து, தண்ணீர் சேர்த்துக் குடிப்பது நல்லது.

# மாதவிடாய் ஆரம்பித்த இளம்பெண்கள் சோம்பு நீர் அருந்துவது மிகவும் நல்லது.

# சோம்பு, செரியாமைக்கு மிகவும் சிறந்த தீர்வு. சிறுநீரைப் பெருக்கி, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும்.

# சோம்பை அப்படியே மென்று சாப்பிடலாம். பிரியாணி போன்றவற்றைச் சாப்பிடும்போது, அதில் சேர்க்கப்பட்டு இருக்கும் எண்ணெய்கள் காரணமாக, வயிற்றில் வலி ஏற்படும். இதைத் தவிர்க்கவே, பிரியாணி சாப்பிட்ட பின்னர் சோம்பைச் சாப்பிடுகிறார்கள்.

# 10 மி.லி சோம்புத் தீநீருடன் (சித்த மருந்துக் கடையில் கிடைக்கும்) ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்தினால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
.

தனியா

# தனியாவை, மல்லி, கொத்தமல்லி விதை என்றும் அழைப்பார்கள்.

# தனியா, கெட்ட பாக்டீரியாவை அழிக்கும். எனவே, இது ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் ஆகும்.

# பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டைப்பாய்டு காய்ச்சல் இருக்கும்போது, தனியாவைப் பொடி செய்து, நீரில் கலந்து குடிக்கலாம்.

# வாயில் கெட்ட நாற்றம் வீசினால், சிறிது அளவு தனியாவை எடுத்து, நன்றாக மென்று, வாய் கொப்பளித்தால், துர்நாற்றம் நீங்கும்.

# வியர்வையை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.

# கர்ப்பகாலங்களில் பல பெண்களுக்குத் தலைசுற்றல் பிரச்னை இருக்கும். கொத்தமல்லி விதையுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, விழுதுபோல (பேஸ்ட்) ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த விழுதுடன், ஒரு டம்ளர் தண்ணீர், தேன் சேர்த்துக் கலந்து குடித்துவந்தால், தலைசுற்றல் நீங்கும்.
.

சுக்கு

# இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படுவதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.

# சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.

# பசியின்மையைச் சரிசெய்யும். உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது.

# கெட்ட நீரை அகற்றும்.

# தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.

# சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உறைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

# செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.
.

ஏலக்காய்

# ஏலக்காயைப் பொதுவாக, இனிப்புகள் செய்யும்போது பயன்படுத்துவார்கள். இனிப்புப் பண்டங்களைச் செரிமானம் அடையச் செய்யும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.

# ஏலக்காய் நல்ல நறுமணம் மிகுந்தது. நறுமணமூட்டியாக பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

# ஏலாதித் தைலம், ஏலாதி சூரணம் போன்றவற்றைச் சாப்பிட்டுவர, வயிற்று எரிச்சல் குணமாகும்.

# கபத்தைக் குறைக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு.

# பைநீன், சபிநீன் (Sabinene) போன்ற பல்வேறு விதமான நறுமண எண்ணெய்கள் ஏலக்காயில் இருந்து எடுக்கப்படுகின்றன.

# ஏலக்காயில் இரும்புச்சத்து, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற சத்துக்கள் மிக அதிக அளவு உள்ளன.

# ஏலக்காயைத் தினமும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக கலோரி நிறைந்த இனிப்புகள், பிரியாணி போன்றவற்றில் ஏலக்காயைச் சேர்த்து, சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
.

பூண்டு

# பூண்டு, பிசுபிசுப்பும் காரத்தன்மையும் கொண்டது. இது, வெப்பத்தை திசுக்களுக்குள் கடத்த வல்லது.

# கபம், வாதம் போன்றவை அதிகரிக்கும்போது பூண்டு சாப்பிடுவது நல்லது.

# பூண்டு சாப்பிட்டுவந்தால், ஆண்மை சக்தி பெருகும்.

# பார்வையைத் தெளிவாக்கும், நல்ல குரல் வளம் கிடைக்க உதவும்.

# கொலஸ்ட்ராலைக் கரைக்கும்.

# ரத்தக் குழாய் அடைப்பைக் சரிசெய்யும்.

# கந்தகச்சத்து நிறைந்தது. பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

# வாயுப் பிரச்னை கொண்டவர்கள், அரை டம்ளர் பாலில், ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, இரண்டு மூன்று பூண்டுப் பற்களைச் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளர் பாலாகச் சுண்டியதும் குடிக்கவும்.

# பாக்டீரியா தொற்றால், தொண்டை கட்டிக்கொண்டால், பூண்டை நசுக்கி, ஒரு துணியில் வைத்துக் கட்டி, அனலில் காட்டினால், பூண்டு எண்ணெய் வெளிவரும். இதனுடன், தேன் கலந்து தொண்டையில் ஒற்றி எடுக்கலாம்.
.

இஞ்சி

# வாந்திக்கு, இஞ்சி சிறந்த நிவாரணி.

# பசியின்மை, ஏப்பம் போன்றவற்றையும் சரிசெய்யும்.

# இஞ்சியில் ‘ஜிஞ்சரால்’ எனும் சத்து இருக்கிறது. இது, செரிமான மணடலத்தைச் சீர் செய்கிறது.

# மைக்ரேன் (ஒற்றை தலைவலி) தலைவலியைப் போக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.

# இஞ்சியில் வைட்டமின் இ, மக்னீசியம் நிறைந்துள்ளது. தினமும் ஏதாவது ஒருவகையில் இஞ்சியைச் சமையலில் சேர்த்துவருவது நல்லது.

# இஞ்சி டீ அருந்தலாம்.

# பசியின்மைப் பிரச்னை இருப்பவர்கள், 100 கிராம் சீரகத்துடன், இஞ்சித் தூறலை நெய்யில் வதக்கி, நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட, பிரச்னை சரியாகும்.

# புற்றுநோயை அழிக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.

# ஜூஸ்கள் தயாரிக்கும்போது, இஞ்சியைச் சிறிதளவு சேர்த்து அரைத்துப் பருகலாம்.
.

வெந்தயம்

# வெந்தயம் இரும்புச்சத்து நிறைந்தது. ரத்த சோகையைக் குணப்படுத்தும்.

# வெந்தயத்தில் நார்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. ரத்தக்கழிச்சல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்றவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு.

# வெந்தயத்தை வறுத்துப் பொடிசெய்து, வைத்துக்கொள்ளவும். தினமும் ஐந்து கிராம் வெந்தயப் பொடியைத் தண்ணீரில் கலந்து குடிக்க, கெட்ட கொழுப்பு நீங்கி, உடல் எடை குறையும்.

# பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பைக் கட்டுக்குள் வைக்கும், தாய்ப்பால் அதிகரிக்க வழிவகுக்கும். வெந்தயக்களி செய்து சாப்பிடலாம்.

# மோரில் வெந்தயத்தைப் போட்டு அருந்தலாம், வெந்தயத்தில், லெனோலைக் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
.

ஓமம்

# வீட்டில் எப்போதும் இருக்க வேண்டிய பொருட்களில் ஓமத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு.

# வயிறு வலி, அஜீரணக் கோளாறுகள், இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் போன்ற பிரச்னைகளைச் சரி செய்யும் ஆற்றல், ஓமத்துக்கு உண்டு.

# ஓமத்தை வறுத்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்தால், வயிற்று வலி நீங்கும்.

# பல்வலியைப் போக்கும் ஆற்றல் ஓமத்துக்கு உண்டு. சளி, இருமல் போன்ற பிரச்னைகளையும் சரிசெய்யும்.

# வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். மலச்சிக்கல் பிரச்னையைச் சரிசெய்யும்.

# ஓமத்தில் இருந்துதான், தைமால் (Thymol) என்ற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது, பூஞ்சைத் தொற்று, பாக்டீரியா தொற்று போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.
.

கிராம்பு

# கிராம்பு, இனிப்புச் சுவையும் காரச்சுவையும் ஒருங்கே கொண்டது. சுருசுரு என இருக்கும் இது, பூஞ்சைத் தொற்றுக்களை அழிக்கும்.

# கிராம்பு, பற்பசைகளில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புத் தைலமும் பல்வலிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

# வாந்தி வரும் உணர்வு இருந்தால், தண்ணீரில் சிறிது அளவு கிராம்பு போட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்தால், வாந்தி உணர்வு மறையும்.

# பல்வலி முதலான பற்கள் மற்றும் ஈறுகளின் பிரச்னைக்கு, கிராம்பை நன்றாகப் பொடித்து, வலி ஏற்படும் இடத்தில் வைத்தால் வலி குறையும்.

# கிராம்பு சிறந்த மசாலா பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

# கிராம்பில் துத்தநாகம் மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது.

# வைட்டமின் கே சத்து உள்ளது.

# கிராம்பில் இருந்து எடுக்கப்படும் பல்வேறு எண்ணெய்களும், உடலுக்கு நன்மை தரும். எனினும், கிராம்பை மிகக் குறைவாக சமையலில் பயன்படுத்தினால் போதுமானது.
.

லவங்கப் பட்டை

# மசாலா பொருட்களிலேயே மிகமிக அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது லவங்கப் பட்டைதான்.

# லவங்கப் பட்டைக்கு, நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.

# உடலில் உள்ள கெட்ட கொழுப்பான டிரைகிளிசரைடு அளவை, இயற்கையானமுறையில் குறைக்க லவங்கப் பட்டை உதவும்.

# பி.சி.ஓ.டி பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், லவங்கப் பட்டையைச் சாப்பிட்டு வந்தால், மெள்ள மெள்ள பிரச்னை சரியாகும்.

# லவங்கப் பட்டையில் மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

# பிரியாணியில் லவங்கப் பட்டை சேர்ப்பதால், எண்ணெய் காரணமாக ஏற்படும் வயிற்றுப் பிரச்னைகள் தடுக்கப்படும்.
.

தொடரும்…
.

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

http://reghahealthcare.blogspot.in/
https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/groups/reghahealthcare
https://www.facebook.com/groups/811220052306876
.

குறிப்பு:
.

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.
.

ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
.

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ /வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.
.

குறிப்பு :

தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மட்டும் தொடர்ப கொள்ளவும்

சுயநலமாக சிந்திப்போர் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s