மொபைல் பதிவேற்றங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே….
புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

image

கணவன் மனைவி…”மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களை, பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.” (திருக்குர்ஆன், 4:1)
”நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பெண்ணே நீ உன்னுடைய கணவனுக்குச் செய்யும் கடமைகளில் ) என்னிலையில் இருக்கின்றாய் என்பதைக் கவனித்துக் கொள். நிச்சயமாக அவர் ஒன்று உன்னுடைய சொர்க்கமாக இருப்பார். அல்லது நரகமாகஇருப்பார். நூல் : அஹ்மத் (18233)நல்ல மனைவியே மேலான செல்வம்
”இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச்
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911
இஸ்லாமிய பெண்களில் சிறந்தோர் .
1. ஃபிர்அவனின் மனைவி ஆசியா, 2.மர்யம்
இப்னத் இம்ரான் 3. கதீஜா பின்த் குவைலித் 4 பாத்திமா பின்த் முஹம்மது ‘என
நபி பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் -அன்னை ஆசியா.
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு பிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக
கூறுகிறான். அவர் ”இறைவா! எனக்காக உன்னிடத்தில் சுவனத்தில் ஓர் வீட்டைக்
கட்டித்தருவாயாக இன்னும்பிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும்
என்னைக் காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும்
என்னைக் காப்பாற்றுவாயாகஎன்று (பிரார்த்தித்துக்) கூறினார் (66-11)
அன்னை மரியம் (அலை)
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்னையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்.
அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை
ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த
மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு
இருப்பதைக் கண்டார், “மர்யமே இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?”
என்று அவர் கேட்டார். ” இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக
அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்
பதில் கூறினாள் திருக்குர்ஆன் 3:37
அன்னை கதீஜா (ரலி)பெண்களுக்கு அன்னை கதிஜா (ரலி) அவர்களிடம் நிறைய படிப்பினை இருக்கின்றது.
ஒரு பெண் எவ்வாறு தன் கணவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இந்த
அம்மையாரை மிஞ்சக்கூடியவர்கய் யார்இருக்கின்றனர். செல்வச் செழிப்பில்
தழைத்து விளங்கிய இந்த அம்மையார் தன்னிடம் வேலை பார்த்து வந்த முஹம்மது
என்ற அந்த அழகிய நற்குணம்கொண்ட மனிதரை திருமணம் முடித்துக்கொண்டார்.
தான் கைம்பெண்ணாக இருந்த நிலையிலும் அழகான குணம் கொண்டவர்தான் தனக்கு
கணவனாக வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். இந்த நற்குணம் கொண்ட
அம்மையாரின் அழகிய எண்ணத்திற்கு தகுந்தவாறுமுஹம்மது என்ற நல்ல மனிதர்
முஹம்மது நபி என்ற அழகிய பட்டத்தை பெற்றாரே இது ஒருவகையில் அல்லாஹ்வின்
அருள் என்பது புரிகிறது.
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
(96:1)
மனிதனை (அட்டை பூச்சி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரத்த
கட்டியிலிருந்து) அவன் படைத்தான். (96:2)
என்ற இறைவசனத்தை வஹீ மூலம் வந்தது நபி(ஸல்) பயந்து
விறைந்தவராக வீட்டுக்கு வந்து கதிஜா(ரலி)யிடம் என்னைப் போர்த்துங்கள்
என்னைப் போர்த்துங்கள் எனக்கூற கதிஜா(ரலி) அவர்கள் அல்லாஹ் உங்களை ஒரு
போதும் கைவிடமாட்டான். ஏனெனில் நீங்கள் உறவினர்களை ஆதரிக்கிறீர்கள்,
வறியோர்க்கும் தேவையுடையோர்க்கும் உதவுகிறீர்கள், விருந்தினரை
உபசரிக்கிறீர்கள் நலிந்தோரின் சுமைகளை சுமக்கிறீர்கள் என ஆறுதலும்
தேறுதலும் கூறி தம் உறவினரான வரகா பின் நவ்ஃபல் என்ற கிறிஸ்தவ அறிஞரிடம்
அழைத்துச் சென்று நபிகளுக்கு நேர்ந்ததை கூற அவர் நபிகளை நோக்கி ‘அல்லாஹ்
மூஸா(அலை)அவர்களிடம் அனுப்பிய அதே ஜிப்ரீல் (அலை) அவர்களைத்தான்
உம்மிடமும் அனுப்பியிருக்கிறான்’. நீர் அல்லாஹ்வின் தூதரே! என
உறுதிப்படுத்தினார்.ஒருமுறை நபிகள் (ஸல்) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல்(அலை)அவர்கள்
வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில்
குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து
கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின்
தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு
சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை
ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.
புஹாரி : 3820 அபூஹூரைரா (ரலி)
இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார்.
(தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். புஹாரி: 3432 அலீ (ரலி).
அன்னை ஆயிஷா (ரலி)
ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில்
ஃபிர்அவ்னின் துணைவியார்ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர
வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு
எல்லா வகை உணவுகளை விடவும் ‘ஸரீத்’ உணவுக்குள்ள சிறப்பைப்
போன்றதாகும்.”என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். புஹாரி:3411 அபூ மூஸா
(ரலி).
நல்ல தந்தைக்கு உதாரணம் நபிகளார் (ஸல்)
என் மகள் பாத்திமா என்னில் ஒரு பகுதியாவார்.அவரை
வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை
மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப் படுத்துவதாகும் என்று
சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரழி) நூல்: ஸஹீஹ்
முஸ்லிம் (4839)
கணவன் மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்ஹய்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான்நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன?என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் (உங்கள் மனைவிமார்கள்) உங்கள் விளைநிலங்கள் உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்றுகொள்ளுங்கள். (அவளைகண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே அவளை அசிங்கமாகத் திட்டாதே நீ உண்ணும் போதுஅவளையும் உண்ணச் செய் நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு. வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம்வெறுப்பைக் காட்டாதே. , நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில்அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள். (நூல் : அஹ்மத் (19190)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மக்களே) பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து கொள்வது பற்றி (என்னுடைய) உபதேசங்களை கவனத்தில் கொள்ளுங்கள். நிச்சயமாக (பெண்களாகிய) அவர்கள் உங்களுடைய பொறுப்பில் இருக்கின்றார்கள். இதைத்தவிர அவர்களிடமிருந்து நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேடான காரியங்களைச் செய்தாலே தவிர. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களை படுக்கையறைகளில் காயம் ஏற்படாதவாறு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன.உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாகிறது நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகிறது அவர்களுக்குஅழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும். நூல்திர்மிதி (1083)
மனைவியை வெறுப்பது கூடாதுமனைவியை வெறுப்பது கூடாது
அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள்அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான் (அல் குர்ஆன் 4 : 19 )
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கை கொண்ட ஒரு ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கொண்டு திருப்திகொள்ளட்டும். நூல் : முஸ்லிம் 2915
மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
நபி (ஸல்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள் ஒரு மனிதனுடைய பொக்கிஷங்களில் சிறந்ததைநான் உனக்கு அறிவிக்கவா ? (அதுதான் நல்ல மனைவியாவாள்) நல்ல மனைவியென்பவள் (கணவன் ) அவளை நோக்கும் போது அவனை சந்தோஷப்படுத்துவாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவைகளை) பாதுகாத்துக் கொள்வாள். நூல் அபூதாவூத் ( 1417 )நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிடுபவனாக இருந்தால் மனைவி தன்னுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பேன். (ஏனென்றால் அந்த அளவிற்குஅவள் தன்னுடைய கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. ஆனால் அல்லாஹ்வுக்கே தவிர யாரும் யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது) நூல் : திர்மிதி (1079)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான்நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ஒரு பெண் மனிதர்களில் யாருக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறாள் ? எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் அவளுடைய கணவனுக்கு என்று கூறினார்கள் நூல் : ஹாகிம் (7244)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். நூல் : புகாரி( 2554)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஒட்டகத்தில் பயணம் செய்யும் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்களாவர். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக்காப்பவர்கள் ஆவர். நூல் : புகாரி (5365)
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் எனக்கு நரகம் காட்டப்பட்டது . அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள் உதவிகளை நிராகரிக்கிறார்கள் . அவர்களில் ஒருத்திக்குக்காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து. பின்னர் (அவளுக்கு பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானாள் உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை. என்று பேசிவிடுவாள். என்றார்கள் நூல் : புகாரி (29)
நஊது பில்லாஹ் அல்லாஹ் காப்பாற்றுவானாக..
கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்தை நபியவர்களின்
பொன்மொழிகள் நமக்கு ஒரு பாடமாகவும், சுவர்க்கம் நுழைய
எளிதான வழிமுறைகலையும் நமக்கு காட்டி இருக்கின்றார்கள்.
எனவே நமது குடும்ப வாழ்க்கையில் குறிப்பாக கணவன்,மனைவி
என்ற ஸ்தானத்தை மிக முக்கியமாக கவனம் செலுத்துவது ஒவ்வொரு
கணவனின்,மனைவியின் பொறுப்பாகும்..
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும்அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக……..
நன்றி :jamialim.NEWS

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s