குர்ஆனை கண்டு வியந்து போனஉலகம்!!

விஞ்ஞானிகளே வியந்துப்போன இரண்டு குர்ஆன் வசனம்!
************************************************** *****************************

image

குர்ஆன் பல மதங்கள் வாழும் காலத்தில் அருளப்பட்டது என்றாலும்கூட அதன் உண்மை தன்மைக்கோ அல்லது அதன் விஞ்ஞான தன்மைக்கோ இழுக்கு ஏற்பட வில்லை டார்க் ஏஜஸ் (உலகத்தில் எந்த கண்டுபிடிப்பும் இல்லாத கருப்பு ஆண்டு)
என்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் கூறும் காலத்தில் தான் இஸ்லாமிய விஞ்ஞான வளர்ச்சி மிகவும் அபாரமாக வளர்ந்து வந்தது …
அவர்கள் அது டார்க் ஏஜ்ங்க அப்போது எந்த கண்டுபிடிப்புக்கும் சாத்தியம் இல்லை என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார் ஆனால் அந்த காலத்தில் முஸ்லீம்கள் கண்டுபிடித்த மூளக்கருவை வைத்து பின்னாளில் பெயர் வாங்கி கொண்டவர்கள் ஏராளம் உதாரணத்திற்கு ஒன்று ஒன்று சொல்லலாம்.
அப்பாஸ் அல் ஜஹ்ராவி
இவர் தான் விமானத்தின் மூலக்கரு நமக்கு ரைட் சகோதர்களை தெரியும் ஆனால் அப்பாஸ் அல் ஜஹ்ராவியை தெரியாது.இவர் மரண தருவாயில் சொன்ன ஒரே வார்த்தை இந்த உலகில் உள்ள மனிதன் நிச்சயம் ஒரு நாள் வானத்தில் பறப்பான். .ஆக இவ்வளவு விஞ்ஞானத்தை இவர்களுக்கு ஊக்குவிக்க நிச்சயம் ஒரு இறைவாக்கு இருந்தது அதுதான் அல் குர்ஆன் அந்த வகையில் வரும் இரண்டு வசனங்களை பாருங்கள்.
பார்க்கவில்லையா நீர்? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது “(அல் குஆன் 39:21)
இரண்டாவது வசனம்.
“மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்” (அல் குஆன் 23:18)
இதைப் பற்றி, “பைபிள், Qura’n மற்றும் அறிவியல்” என்ற உலகப்புகழ் பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குஆனும்) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (டாக்டர் மாரிஸ் Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, qura’n மற்றும் நவீன அறிவியல் (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்: –
நீரின் சுழற்சி என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.குர்ஆனில் கூறப்படுகின்ற நீரின் சுழற்சி பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது.
நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர்.
உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம்.
பார்க்கவில்லையா நீர்? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் (அல் குஆன் 39:21)
இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாக தெரிகிறது என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது.
இந்த நீர் சுழற்சி கோட்பாட்டை பெர்னார்ட் Palissy என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார்.
16 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவ வாதியின் கருத்துக்களான கடல் நீர் காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுக்களாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டெக்கார்ட் போன்ற சிறந்த சிந்தனையாளாகள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவ மேதை என போற்றப்படுகின்ற அஸ்டாட்டிலின் கோட்பாடான மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள ஊற்றுக்களில் நீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது என்று நம்பி வந்தனர்.
ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்பதைக் கூறுகின்றது.
இன்றைய காலக்கட்டத்தில் கண்டுபடிக்கப்பட்ட இந்த நவீன அறிவியல் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்துள்ளது ….
நன்றி :Jamialim.News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s