0

முகம்மது நபி – தமிழ் விக்கிப்பீடியா

முகம்மது நபி
முகம்மது
இசுலாத்தின் தீர்க்கதரிசி

பொது எழுத்தணி முறையில் முகம்மதுவின் பெயர்
பிறப்பு முகம்மது இப்னு அபுது அல்லா
அண். 570
மக்கா
(இன்றைய சவூதி அரேபியாவில்)
இறப்பு ஜூன் 8, 632 (அகவை 62)
மதீனா, அரேபியா (இன்றைய மதீனா, எஜாசு, சவூதி அரேபியா)
கல்லறை அல்-மஸ்ஜித் அந்-நபவி, மதீனா, சவூதி அரேபியா
மற்ற பெயர்கள்
அபு அல்-காசிம் (குன்யா)
ரசூல் (“இறைதூதர்”)
“தீர்க்கதரிசி”
(முகமதின் பிற பெயர்கள் மற்றும் பட்டங்கள் பார்க்கவும்)
இனம் அரபு
செயல்பட்ட ஆண்டுகள்
கிபி 583–609 வியாபாரியாக
கிபி 609–632 மத தலைவராக
பின் வந்தவர்
அபூபக்கர் (ரலி) (சுன்னி உம்மாவின் தலைவராக)
அலீ (சியா இமாமாக)
மஹதி (“இசுலாத்தை மீட்டேடுப்பவராக”)
எதிரி(கள்) அபு ஜால்
அபு லஹப்
உம் ஜமில்
சமயம் இசுலாம்
பெற்றோர் தந்தை: அப்து அல்லா இப்னு அப்து அல்-முத்தாலிப்
தாய்: அமீனா பிந்த் வாகுப்
வாழ்க்கைத் துணை
மனைவி திருமணமாகியவர்
கதீஜா பின்த் குவைலித் 595–619
சவுதா பின்த் சம்மா 619–632
ஆயிஷா பின்த் அபி பக்கர் 619–632
ஹஃபசா பின்த் உமர் 624–632
ஜைனப் பின்த் குசைமா 625–627
ஹிந்த் பின்த் அபி உமைய்யா 629–632
ஜைனப் பின்த் ஜஹ்ஷ் 627–632
ஜுவரியா பின்த் அல்-ஹரித் 628–632
ரம்லா பின்த் அபி சுஃபியான் 628–632
ரைஹானா பின்த் சையது 629–631
சஃபியா பின்த் ஹுயை 629–632
மைமுனா பின்த் அல்-ஹரித் 630–632
மரியா அல்-கிப்தியா 630–632
பிள்ளைகள்
மகன்கள்
காசிம் அப்து-அல்லாஹ் இப்ராகிம்
மகள்கள்
ஜைனப் ருக்கைய்யா உம் குல்தூம் பாத்திமா சஹ்ரா
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, (அரபு மொழி: محمد; அண். 570 – 8 சூன் 632[1]), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தாலிப் இப்னு ஆசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم), மக்கா நகரைச் சேர்ந்தவர். இவரே அராபியத் தீபகற்பம் முழுமையும் இசுலாம் என்ற ஒரே மதத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல், பாபிஸ்துகள், மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்றும் இறைவாக்கினர் என்றும் போற்றப்படுகிறார். உலக அளவில் முசுலிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைவாக்கினர் என நம்புகின்றனர்.[2]

முகம்மது நபி கிபி 570 இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார்[3][4][5]. இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார்கள்.

வாழ்க்கை தொகு

மக்காவில் பிறந்த முகமது, தனது வாழ்நாளில் 52 வருடங்களை அங்கேயே கழித்தார். இந்த 52 வருடக்காலத்தை இரண்டு பாகங்களாக பிரிக்கின்றனர் – இறைதூது கிடைக்கும் முன் மற்றும் இறைதூதர் என தன்னை அறிவித்தப் பின்னர். (மெக்கா என்று சொல்வதை தவிர்ப்பது நன்று. மூலச் சொல் மக்கா என்றே உச்சரிக்கப்படுகின்றது.)

இறைத்தூது கிடைக்கும் முன் தொகு
முகமது அவர்கள் கி.பி. 570 ஆண்டு பிறந்தார். அவர் இசுலாமிய நாட்காட்டியின் முன்றாவது மாதமான ரபியுல் அவ்வல்[6] மாதத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. பனு ஹாஷிம் எனும் குலத்தை சேர்ந்த மக்காவின் மிகவும் பிரபலமான குடும்பத்தில் அவர் பிறந்தார்.[3][7] . குரைஷ் எனும் பழங்குடியின மக்களின் ஒரு இனமே இந்த பானு பனு ஹாஷிம். ஆபிரகா எனும் அக்குசுமைட் மன்னன் தனது யானை பலம் பொருந்திய படையுடன் மக்காவை தாக்க முயன்று தோல்வியுற்றதனால், கி.பி 570-ஆம் வருடத்தை யானை ஆண்டு என கூறி வந்தனர். அந்த வருடத்தில் முகமது பிறந்ததாக கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் வல்லூனர்கள் இந்த தோல்வியுற்ற யுத்தத்ததை ஓரிரு வருடங்கள் பின்தள்ளி வைக்கின்றனர்[8]. மேலும், சின்னம்மை தொற்றே அந்த அக்குசுமைட் படையின் தோல்விக்குக் காரணம் என்கின்றனர்[9].

திருகுர்ஆன் 105வது அத்தியாயத்தில்”(நபியே!) யானைப் படையினரை உங்களது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீங்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா?” (அல்குர்ஆன் 105:1). [10] என்று யானை படை அழிவைப் பற்றி கூறப்பட்டுள்ளது. [11][12]

முகமது அவர்களின் பிறப்பிற்கு ஆறு மாதங்கள் முன்னரே அவரது தந்தை அப்துல்லா இறந்துவிட்டார்.[13]. பாலைவனமே குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லது என கருதி, சிறுபிள்ளையான முகமதை பாலைவனத்தில் உள்ள ஓர் பெதாவுன் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தனர்.[14]செவிலித்தாய் ஹலிமா பின்த் அபு துயப் மற்றும் அவளது கணவரின் பாதுகாப்பில் இரண்டு வயது வரை வளர்ந்து வந்தார் முகமது. ஆனால், சில மேற்கத்திய இசுலாமிய வல்லுனர்கள் இதை மறுக்கின்றனர்.[14]ஆறு வயதில் தன்னைப் பெற்ற தாயான அமீனாவை பறிகொடுத்து அனாதையானர் முகமது நபி. அடுத்த இரண்டு வருடங்களுக்கு தனது தாத்தா அப்து அல்-முத்தலிப் அவர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார்[15][16] . தாத்தாவின் மரணத்திற்குப்பின் பனு ஹாஷிமின் புதிய தலைவரான தனது சிறிய தந்தை அபு தாலிப் அவர்களின் மேற்பார்வையில் வளர்ந்தார். ஆறாம் நூற்றாண்டு அரபு தேசத்தில், ஒரு குலத்தின் வலுவற்றவர்கள் நன்கு கவனிக்கப்படவில்லை என இசுலாமிய வரலாற்று எழுத்தாளரான வில்லியம் மோன்ட்கோமேரி வாட் கருதுகிறார். அவர் எழுதுகையில், ‘சிறுவனான முகமது சாகாமல் இருக்க மட்டுமே உணவு அளித்து வந்தனர் காப்பாளர்கள், ஏனெனில் அப்பொழுது பனு ஹாஷிம் குலம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது'[17].

பதினம் வயதில் முகம்மது அவர்கள், அவரது சிறிய தந்தையுடன் சிரியா தேசத்திற்கு வணிகம் செய்ய ஒத்தாசையாக சென்றுள்ளார்[15][17]. இசுலாமிய வல்லுநர்கள் இந்த நிகழ்வு முகம்மது அவர்களின் ஒன்பதாவது அல்லது பன்னிரெண்டாவது வயதில் நிகழ்ந்ததாக கருதுகின்றனர். மேலும், இது போன்ற ஓர் வணிக பயணத்தின் பொழுது, பஹிரா எனும் கிறிஸ்த்துவ துறவியை முகம்மது சந்தித்துள்ளார். அந்த துறவி முகமது இறைதூதராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்[18].

முகம்மது அவர்களின் இளைய வயதை பற்றி தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. மேலும், சில நிகழ்வுகள் வரலாறா அல்லது கதையா என முடிவு செய்ய இயலவில்லை[15][17]. முகமது அவர்கள் ஓர் வணிகராக பணிப்புரிந்துள்ளார். மெடிட்டரேனியன் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் இடையே நடந்த வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்[19]. அவரது நேர்மையை பாராட்டி, அவருக்கு அல்-அமீன் என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது[20]. முகமதுவை ‘பேதமற்ற நடுவர்’ என அக்காலத்தில் அவரை பலர் நாடியுள்ளனர்.[5][3][21]. அவரது இந்த புகழால் 595-ஆம் ஆண்டில் கதீஜா எனும் நாற்பது வயது விதவை பெண் அவரை திருமணம் செய்ய விரும்பினார். முகம்மது கதீஜா அவர்களை மணம் முடித்தார். அவர்களது திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததாக கூறப்படுகிறது[15][19].

வரலாற்றாசிரியர் இப்னு இஷாக் அவர்கள் விவரிக்கையில், கிபி 605 ஆம் ஆண்டு காபாவில் கல் பதிப்பு நிகழ்வில் முகம்மது அவர்களின் பங்கு இருப்பதாக கூறுகிறார். காபாவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பொருட்டு அதில் இருந்த புனித கருப்புக் கல் அகற்றப்பட்டது. ஆனால், அந்த கல்லை திரும்ப அதே இடத்தில் எந்த குலத்தை சேர்ந்தவர் நிறுவுவது என்பதில் மெக்காவின் தலைவர்கள் மத்தியில் சமரசம் எட்டப்படாமல் போனது. அவ்வழியே யார் அடுத்து வருகிறார்களோ, அவரே அத்திருப்பணியை செய்ய தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அப்பொழுது அவ்வழியே முகமது நபிகள் வந்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு துணியில் அந்த கருப்பு கல்லை தாங்கி, மற்றவர் உதவியுடன் அதனை காபாவிற்கு எடுத்து சென்று, முகமது அவர்கள் அக்கல்லை காபாவில் திரும்ப நிறுவினார்[22].

இறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள். தொகு

ஜபல் அல்-நூர் எனும் மலையில் அமைந்துள்ள ஹிரா எனும் குகையில் தான் முகமது அவர்களுக்கு குரான் ஓதப்பட்டதாக இசுலாமிய வரலாறு கூறுகிறது.
மக்காவில் உள்ள ஹிரா எனும் மலை குகையில், முகமது அவர்கள் வருடத்தின் பெரும் வாரங்களை, பிரார்த்தனை செய்து கழிப்பது வழக்கம்[23][24].கிபி 610-ஆம் வருடம், இதேப்போல் முகமது அவர்கள் அம்மலைக்கு சென்றபோது, காப்ரியல் எனும் இறைத்தூதர் அவருக்கு சில வாக்கியங்களை கூறி ஒப்பிக்க சொன்னதாகவும், பின் அதுவே குரானில் இடம்பெற்றதாகவும் இசுலாமிய வரலாறு கூறுகிறது[25] .காப்ரியல் முதலாவதாகத் தோன்றியப்பின், முகமது அவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார். வீடு திரும்பிய முகமதுவை அவரது மனைவி கதீஜா மற்றும் அவரது கிறிஸ்த்துவ நண்பரான வரக்கா இப்னு நஃபல்[26] இருவரும் ஆறுதல் படுத்தினர். காப்ரியல் தோன்றியதை கண்டு முகமது அவர்கள் அஞ்சவில்லை என்றும், மேலும் அவர் அந்த நிகழ்வை முன்பே அறிந்ததுபோல அந்த தூதரை வரவேற்றதாகவும் ஷியா வரலாறு கூறுகிறது[27]. கப்ரியலின் முதல் தோற்றத்திற்கு பின்பு மூன்று வருடங்களுக்கு மறுதோற்றம் நடக்கவில்லை, இந்த காலக்கட்டத்தை ஃபத்ரா என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் முகமது அவர்கள் தொழுதல் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுப்பட்டு வந்தார். காப்ரியலின் மறுதோன்றாலுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பினார் முகமது. கப்ரியல் அவரை பார்த்து “உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை[28][29][30].” எனக்கூறி மதபோதகம் செய்யச் சொல்லி தூதர் அறிவுறுத்தினார்.

“மணியடிப்பதுப்போல வாசகங்கள் தோன்றின” என முகமது கூறியதாக புகாரி ஹதீஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஒவ்வொரு தெய்வ வாசகம் தோன்றிய பிறகு, நபிகளின் நெற்றியில் வியர்வை துளிகள் தோன்றும்” என்று ஆயிஷா கூறுகிறார். தனது யோசனைகளையும் தெய்வ வாக்குகளையும் பிரிக்கும் திறன் தமக்கு இருந்ததாக முகமது அவர்களே நம்பிக்கைக் கொண்டார். குர்ஆனின்படி, உலகின் இறுதிகால தண்டனைகளை பற்றி இறைநம்பிக்கை இல்லாதவர்களுக்கு எடுத்து கூறவே முகமது நபிகளாக வந்ததாக கருதப்படுகிறது.சில இடங்களில், குரான் தீர்ப்பு நாளை பற்றி நேரடியாக சொல்லாதப்போழுதும், முன்னர் அங்கு இருந்த சமூகங்களின் அழிவை எடுத்துக்காட்டி, முகமது காலத்தில் வாழ்ந்தவர்களை எச்சரிக்கிறது. கடவுளின் வாசகங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை எச்சரிப்பதோடு நில்லாமல், தீயவைகளை துறப்பவர்களுக்கும், தெய்வீக வாசகங்களை கேட்பவர்களுக்கும், கடவுளுக்கு சேவகம் செய்பவர்களுக்கும் நற்செய்தி கூறினார்.ஓரிறைவாதமே முகமது அவர்களின் முக்கிய பணியாக கருதப்படுகிறது: அல்லாஹ்வின் பெயரை அறிவிக்கவும் மற்றும் புகழவும் மற்றும் சிலைகளை வழிப்படுதல் அல்லது வேறுக்கடவுளுடன் அல்லாஹ்வை ஒப்பிடுதளையும் தவிர்க்குமாறு குரான் முகமது அவர்களுக்கு கட்டளை இடுகிறது.

தன்னை படைத்தவரிடம் காட்டவேண்டிய பொறுப்புகள், இறந்தவர்களை உயிர்ப்பித்தல், இறைவனின் கடைசி தீர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து சொர்க்கம் மற்றும் நரகத்தை பற்றிய விரிவான விளக்கங்கள்; மற்றும் வாழ்க்கையின் அத்தனை கோணங்களிலும் கடவுளின் அறிகுறிகள் என பல்வேறு விஷயங்கள் குரானின் முதல் வரிகளில் அடங்கியுள்ளன. இறைநம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண்சிசுவதைக்கு தடை என இசுலாமியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.[3]

எதிர்ப்பு தொகு
இசுலாமிய வரலாற்றுப்படி, முகமது அவர்களை நபிகள் என அவரது மனைவி கதீஜா தான் முதலில் நம்பினார்[31]. கதீஜாவை தொடர்ந்து முகமது அவர்களின் சிறிய தந்தை மகன் அலி இப்னு அபி தலிப், நெருங்கிய நண்பரான அபு பக்கர் மற்றும் வளர்ப்பு மகன் சையித் அவரை நபிகளாக கருத ஆரம்பித்தனர்[31]. கிபி 613-ஆம் வருடத்தில், முகமது அவர்கள் பொதுமக்களுக்கு போதனை புரிய ஆரம்பித்தார்(Quran 26:214).[32]. மெக்காவை சேர்ந்த பலர் அவரை புறக்கணித்தனர் மற்றும் கேலி செய்தனர் எனினும், சிலர் அவரை பின்பற்ற ஆரம்பித்தனர். பெரிய வணிகர்களின் தம்பிகள் மற்றும் மகன்கள், குலத்தில் பெரும் பதவியை பறிகொடுத்தவர்கள் மற்றும் அடைய முடியாதோர் மற்றும் நலிந்த அயல்நாட்டினர் – என மூன்று வகையானவர்களே இசுலாத்தில் முதலில் இணைந்தனர்[33].

சிலை வழிபாடு மற்றும் பல்லிறைவாதம் பின்பற்றிய மக்காவின் முன்னோரை முகமது அவர்கள் கண்டித்ததை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதாக இப்னு சையிது கூறுகிறார்[34]. ஆயினும், அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்ததற்கான காரணம் அவரது பொது போதனை என குரானிய விளக்கங்களில் கூறப்படுகிறது[35].அந்நகரை ஆள்பவர்கள் மற்றும் குலங்களுக்கு, அவர்களின் பிடியில் இருந்த செல்வமதிப்புள்ள காபா மற்றும் அதனை சுற்றி அமைந்த முந்தைய மதத்தை, பலர் பின்பற்றும் முகமது அவர்கள் எதிர்க்கிறார் என்பது அச்சுறுத்தலாக தெரிந்தது.மெக்காவின் முந்தைய மதத்தை முகமது அவர்கள் கண்டிப்பதை, அவரது குலமான குரைஷ்க்கு பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் தான் காபாவின் காப்பாளர்களாக இருந்து வந்தவர்கள்[33].

முகமது மற்றும் அவரை பின்பற்றியவர்களை பலர் துன்புறுத்தியுள்ளனர். அபு ஜஹ்ல் எனும் மக்காவின் தலைவரின் அடிமையான சுமையா பின்த் கபாப் எனும் பெண் தான் இசுலாத்தின் முதல் தியாகி ஆவார்; இசுலாத்தை துறக்க கூறி அவளை ஈட்டியால் குத்தி கொன்றனர். இசுலாத்தில் இருந்து மதம் மாற வற்புறுத்தி வேறொரு அடிமையான பிலால் இப்னு ரிபாவின் மார்பில் கல்லை வைத்துக் கொன்றார் உமையா இப்னு கலப்.முகமது அவர்கள் பானு ஹஷிம் இனத்தை சேர்ந்ததனால், அவருக்கு யாரும் தீங்கு இழைக்கவில்லை

கிபி 615-ஆம் ஆண்டில் முகமது அவர்களை பின்பற்றிய சிலர் எத்தியோபியாவின் அக்குசுமைட் பேரரசிற்கு புலம்ப்ப்பெயர்ந்தனர். அங்கே, எத்தியோபியாவின் கிறிஸ்த்துவ பேரரசர் ஆஷாமா இப்னு அப்ஜர் அவர்களின் பாதுகாப்பில் ஓர் சிறிய குடியிருப்பை உருவாக்கினர். இவ்வாறு இருவேறு புலம்பெயர்தளை இப்னு சாத் கூறுகிறார்.அவர் கூறுகையில், ஹிஜ்ராவிற்கு முன்னாரே அதில் பல இசுலாமியர்கள் மக்காவிற்கு திரும்பியதாகவும், மற்றும் அடுத்த குழு இவர்களை மதினாவில் சேர்ந்தனர். எனினும், இப்னு ஹிஷாம் மற்றும் தபரி எத்தியோபியாவிற்கு ஒரே புலம்பெயர்தல் நடைபெற்றதாக கூறுகின்றனர். மக்காவில் இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே, தன்னை பின்பற்றுபவர்களை அபிசீனியாவில் உள்ள கிறிஸ்த்துவர்கள் மத்தியில் குடியேறும் முடிவை முகமது அவர்கள் எடுத்திருக்கலாம் என்பதும், இவர்களின் கூறுதல்களும் ஒற்று போகின்றன.

அல்-தபாரியில் பாதுகாக்கப்பட்ட ‘உர்வா அவர்களின் புகழ்பெற்ற கடிதத்தின்ப்படி, மக்காவில் உமர் மற்றும் ஹம்ஸா இஸ்லாத்திற்கு மதம் மாறியப்பின், பல இசுலாமியர்கள் தங்களின் சொந்த ஊரிற்கு திரும்ப தொடங்கினர். இருப்பினும், இசுலாமியர்கள் எதியோப்பியாவிலிருந்து மக்கா திரும்பியதற்கு வேறொரு காரணக்கதையும் இருக்கிறது. இந்த காரணக்கதையை அல்-வகிடி, இப்னு சாத் மற்றும் தபரி கூறுகின்றனர், ஆனால், இப்னு ஹிஷம் மற்றும் இப்னு இஷாக் கூறவில்லை[36]. தனது பிறப்பு குலத்துடன் ஒன்றிணைய முகமது அவர்கள், அல்லாவின் புதல்விகள் என கருதப்பட்ட மூன்று மக்காவின் பெண் கடவுள்களை பற்றிய வரிகளை கூறுகிறார். மறுநாளே, கப்ரியலின் வற்புறுத்தலின் காரணமாக, சாத்தான் அந்த வரியை தனக்கு ஓதியதாக கூறி, அந்த வரியை பின்வாங்குகிறார். [37][n 1][n 2] இந்த “நாரைகளின் கதை”(மொழிபெயர்ப்பு: قصة الغرانيق, Qissat al Gharaneeq) எனும் நிகழ்வு தான் “சாத்தானிக் வெர்சஸ்” என்று அறியப்படுகிறது. இந்த கதையின்ப்படி, இது முகமது மற்றும் மக்காவினர் மத்தியில் இணக்கம் ஏற்பட வழிவகுத்தது, மற்றும் அபிசீனியா சென்ற இசுலாமியர்கள் வீடு திரும்ப வழி வகுத்தது. அவர்கள் வீடு திரும்பிய சமயம், இந்த இரண்டு காராணிக் வரிகளும் அல்லா கூறியதல்ல என்றும், சாத்தானின் சதிவேலை என்றும் தேவதூதன் கப்ரியல் முகமது அவர்களுக்கு அறிவித்தார்.

குறிப்பிடத்தக்க சமகால அறிஞர்கள் இந்த கதை மற்றும் வரிகளை மறுத்துள்ளனர். [38][39][n 3]பின்னர், இந்த நிகழ்வுக்கு சில ஒப்புதல்கள் வரத்தொடங்கின, எனினும், 10ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு தொடர்கிறது. இந்த கதை மற்றும் வரிகளை எதிர்ப்பது மட்டுமே இசுலாமிய நிலை என கருதும் அளவிற்கு எதிர்ப்புகள் தொடர்கின்றன. [40]

617ஆம் ஆண்டு, மக்ஸும் மற்றும் பனு அப்து-ஷம்ஸ் எனும் இரு முக்கிய குரைஷ் குலத்தின் தலைவர்கள், தங்களது வணிகரீதியான எதிரியான பானு ஹஷிம் குலத்திற்கு எதிராக புறக்கணிப்பு நிகழ்த்தினர். முகமது அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை பானு ஹஷிம் திரும்ப பெறவே இந்த புறக்கணிப்பு நிகழ்ந்தது[41][42]. இந்த புறக்கணிப்பு மூன்று வருடங்கள் நீடித்தது, எனினும், இதன் கொள்கையில் வெற்றிபெறாமல் சரிந்தது. இந்த காலக்கட்டத்தில் முகமது அவர்கள் புனித பயண மாதங்களில் மட்டுமே அறவுரை கூற முடிந்தது. ஏனெனில், இந்த மாதங்களில் மட்டுமே அரேபியர்கள் மத்தியில் சண்டைகள் நிறுத்திவைக்க பட்டிருந்தன.[43]

இஸ்ரா மற்றும் மிராஜ் தொகு

முகமது அவர்கள் பயணித்த தூரத்து மசூதியாக கருதப்படும் இடத்தில், 705-ஆம் ஆண்டு, அல்-அக்ஸா மசூதி கட்டப்பட்டது. இது ஜெருசேலத்தில் உள்ள அல்-ஹரம் அஷ்-ஷரிப் வளாகத்தின் ஓர் பகுதியாகும். இசுலாமியர்களுக்கு உலகின் மூன்றாவது புனித தளமாக இந்த அல்-ஹரம் அஷ்-ஷரிப் கருதப்படுகிறது.[44]
இசுலாமிய வரலாற்றின்ப்படி, “இஸ்ரா மற்றும் மிராஜ்” என்றழைக்கப்பட்ட வியக்கத்தக்க நெடு-ராத்திரி பயணத்தை தேவதூதன் கப்ரியலுடன் முகமது அவர்கள் 620-ஆம் ஆண்டு நிகழ்த்தினார். அப்பயணத்தின் தொடக்கமான “இஸ்ரா”வில், “புராக்” எனும் இறக்கை முளைத்த போர்க்குதிரையில், முகமது அவர்கள் மக்காவிலிருந்து “தூரத்து மசூதிக்கு” (அரபு மொழியில் “மஸ்ஜிது அல்-அக்சா”) பறந்தார். பின்பு, மிராஜ் பயணத்தில், சொர்க்கம் மற்றும் நரகம் பயணித்தார் முகமது. மற்றும், முந்தைய இறைத்தூதர்களான ஆபிரகாம், மோசஸ், மற்றும் இயேசு ஆகியோருடன் உரையாடினார். [43][45] முகமது அவர்களின் முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இப்னு இஷாக், இந்த நிகழ்வை ஓர் ஆன்மீக அனுபவமாக வழங்கியுள்ளார். பின்வந்த அல்-தபரி மற்றும் இப்னு கதிர் போன்ற வரலாற்றாசிரியர்கள், இதனை ஓர் உடல்சார்ந்த அனுபவமாக வழங்கியுள்ளனர்[45].

மக்காவில் உள்ள ஓர் புனித இடத்திலிருந்து “அல்-பைது ல-மமூர்” எனும் காபாவின் வானுலக மாதிரிக்கு சென்ற பயணமே இஸ்ரா மற்றும் மிராஜ் என்கின்றனர் சில மேற்கத்திய அறிஞர்கள்; பின்பு வந்த அறிஞர்கள் இதனை மக்காவில் இருந்து ஜெருசேலம் சென்ற பயணம் என்றே குறிப்பிடுகின்றனர்.[46]

மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறல். தொகு

முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர் அவர்களுடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். யாராலும் கொல்ல முடியாத தலைவராக நபிகள் நாயகம் இருந்தார். அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. போர்க்களங்களிலும் பங்கெடுத்தார்.

முகமதுநபி(ஸல்) திருமணம் செய்த பெண்கள் தொகு

கதிஜா
சௌதா பிந்த் சமா
ஆயிஷா
ஹவ்சா பிந்த் உமர்
சைனாப் பிந்த் குசைமா
உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா
யுவேரியா பிந்த் ஹரித்
உம் ஹபிபா ரம்லா
சபியா பிந்த் ஹீயாய்
மைமுனா பிந்த் அல் ஹரித்
அறிஞர்களின் பார்வையில் தொகு

“ உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே. ”
M.H.Hart, ‘The 100! A ranking of the most influential persons in history’ New York, 1978, pp. 33)

“ உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் “முகம்மத்” உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன. ”
– அல்போன்சு டி லாமார்ட்டின் – Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276–277)

“ மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல. ”
– மகாத்மா காந்தி – (யங் இந்தியா – Young India)

“ சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்ச்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த- ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ ”
– Thomas_Carlyle, Heroes_and_Hero_Worship

“ அவர்கள் எந்த நபித்துவ அந்தஸ்த்து தமக்குரியது என்று முதன் முதலாக வாதிடத் தொடங்கினார்களோ அதே அந்தஸ்த்தைதான் தமது ஆயுட்காலத்தின் இறுதியிலும் அவர் உரிமை கொண்டாடினார். முகம்மதை உண்மையான இறை த்தூதர் என்கிற அவரது வாதத்தை ஏற்றிட ஒவ்வரு வரும் சம்மதிப்பார்கள் என்று தைரியமாக நான் நம்புகிறேன். ”
– போஸ்வெர்த் ஸ்மித், Benjamin_Bosworth_Smith

நபித்தோழர்கள் தொகு

அபூபக்கர் (ரலி)
உமர் (ரலி)
உதுமான் (ரலி)
அலீ (ரலி)
பிலால் (ரலி)
நூல்கள் தொகு

அர்ரஹீக்குல் மக்தூம் முஹம்மது(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நூல்
இவற்றையும் பார்க்க தொகு

முகம்மது நபியின் இறுதிப் பேருரை
மேற்கோள்கள் தொகு

↑ Elizabeth Goldman (1995), p. 63, பிறப்பு 8 சூன் 632 எனக் குறிப்பிடுகிறது.
↑ திருக்குர்ஆன் 33:40
↑ 3.0 3.1 3.2 3.3 “Muḥammad”. Encyclopaedia of Islam (2nd) 7. (1993). Brill Academic Publishers. 360–376. ISBN 90-04-09419-9.

Conrad, Lawrence I. (1987). “Abraha and Muhammad: some observations apropos of chronology and literary topoi in the early Arabic historical tradition1”. Bulletin of the School of Oriental and African Studies 50 (2): 225–240. doi:10.1017/S0041977X00049016.
Sherrard Beaumont Burnaby (1901). Elements of the Jewish and Muhammadan calendars: with rules and tables and explanatory notes on the Julian and Gregorian calendars. G. Bell. p. 465.
Hamidullah, Muhammad (February 1969). “The Nasi’, the Hijrah Calendar and the Need of Preparing a New Concordance for the Hijrah and Gregorian Eras: Why the Existing Western Concordances are Not to be Relied Upon”. The Islamic Review & Arab Affairs: 6–12.
↑ 5.0 5.1 Encyclopedia of World History (1998), p. 452
↑ Esposito, John L. (ed.) (2003). The Oxford Dictionary of Islam. p. 198. ISBN 978-0-19-512558-0. பார்த்த நாள்: 19 June 2012.
↑ See also திருக்குர்ஆன் 43:31 cited in EoI; Muhammad
↑ Watt (1974), p. 7.
↑ Marr JS, Hubbard E, Cathey JT. (2014): The Year of the Elephant. figshare. http://dx.doi.org/10.6084/m9.figshare.1186833
↑ திருக்குர்ஆன் 105:1
http://tanzil.net/#trans/ta.tamil/105:1
http://www.tamililquran.com/qurandispcmp.php?start=105
↑ Meri, Josef W. (2004). Medieval Islamic civilization. 1. Routledge. p. 525. ISBN 978-0-415-96690-0. பார்த்த நாள்: 3 January 2013.
↑ 14.0 14.1 Watt, “Halimah bint Abi Dhuayb”, Encyclopaedia of Islam.
↑ 15.0 15.1 15.2 15.3 An Introduction to the Quran (1895), p. 182
↑ Watt, Amina, Encyclopaedia of Islam
↑ 17.0 17.1 17.2 Watt (1974), p. 8.
↑ Armand Abel, Bahira, Encyclopaedia of Islam
↑ 19.0 19.1 Berkshire Encyclopedia of World History (2005), v.3, p. 1025
↑ Khan, Majid Ali (1998). Muhammad the final messenger (1998 ed.). India: Islamic Book Service. p. 332. ISBN 81-85738-25-4.
↑ Esposito (1998), p. 6
↑ Dairesi, Hırka-i Saadet; Aydın, Hilmi (2004). Uğurluel, Talha. ed. The sacred trusts: Pavilion of the Sacred Relics, Topkapı Palace Museum, Istanbul. Tughra Books. ISBN 978-1-932099-72-0.
↑ Emory C. Bogle (1998), p.6
↑ John Henry Haaren, Addison B. Poland (1904), p.83
↑ Brown (2003), pp. 72–73
↑ Esposito (2010), p.8
↑ பார்க்கவும்:* Emory C. Bogle (1998), p.7 * Razwy (1996), ch. 9 * Rodinson (2002), p. 71.
↑ திருக்குர்ஆன் 93:3
↑ Brown (2003), pp. 73–74
↑ Uri Rubin, Muhammad, Encyclopedia of the Quran
↑ 31.0 31.1 Watt (1953), p. 86
↑ Ramadan (2007), p. 37–9
↑ 33.0 33.1 Watt, The Cambridge History of Islam (1977), p. 36. பிழை காட்டு: Invalid tag; name “Cambridge_1977_36” defined multiple times with different content


↑ F. E. Peters (1994), p.169


↑ Uri Rubin, Quraysh, Encyclopaedia of the Qur’an


↑ “Muḥammad,” Encyclopaedia of Islam, Second Edition. Edited by P. J. Bearman, Th. Bianquis, C. E. Bosworth, E. van Donzel, W. P. Heinrichs et al. Brill Online, 2014


↑ The Cambridge companion to Muhammad (2010), p.35


↑ “Kuran” in the Encyclopaedia of Islam, 2nd Edition, Vol. 5 (1986), p. 404


↑ “Muḥammad,” Encyclopaedia of Islam, Second Edition. Edited by P. J. Bearman, Th. Bianquis, C. E. Bosworth, E. van Donzel, W. P. Heinrichs et al. Brill Online, 2014


↑ Shahab Ahmed, “Satanic Verses” in the Encyclopedia of the Qur’an.


↑ F. E. Peters (2003b), p. 96


↑ Moojan Momen (1985), p. 4


↑ 43.0 43.1 An Introduction to the Quran (1895), p.186


↑ Oleg Grabar (1 October 2006). The Dome of the Rock. Harvard University Press. p. 14. ISBN 978-0-674-02313-0. பார்த்த நாள்: 26 December 2011.


↑ 45.0 45.1 Encyclopedia of Islam and the Muslim World (2003), p. 482


↑ Sells, Michael. Ascension, Encyclopedia of the Quran.

பிழை காட்டு: tags exist for a group named “n”, but no corresponding
tag was found, or a closing
is missing

வேறொரு மொழியில் படிக்கவும்
Last edited 10 days ago by Kanags
விக்கிப்பீடியா® கைபேசிப் பதிப்புகணினி பதிப்பு
வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.
தகவல் பாதுகாப்பு

0

தூக்கத்தில் பேயா????

தூங்குறப்போ அடிக்கடி என்னைய பேய் அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்ல கேட்டுருப்போம்.. அவ்வளவு ஏன் நம்மில் பலருக்கு அந்த அனுபவம் இருக்கும்.. அது ஏன்? உண்மையிலயே பேய் தான் அமுக்குதா? பாப்போம்….

image

.
உறக்கத்தில் இரண்டு நிலை இருக்கு. ஒன்று விரைவான கண் இயக்கம் அல்லது RAPID EYE MOVEMENT(REM) மற்றொன்று அதற்கு எதிர்பதம் NonREM (NREM).
.
நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM. அடுத்து REM நிகழும். இப்படி இரண்டும் மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம். ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம். NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும். சுயநினைவும் முழுசா மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் உங்கள் இன்னும் உடல் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.
.
REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது அந்த சுழற்சி முடிவதற்குள் உங்களுக்கு சுயநினைவு தோன்றினால் உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது. மூளை விழித்திருக்கும். ஆனா மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்கும் நிலையில் இருக்காது(இரண்டாவது படம் பார்க்க). அப்போ தான் நமக்கு தோணும், “அய்யய்யோ நான் கைகால அசைக்க ட்ரை பண்றேன் என்னால முடியல. பேய் அமுக்குது போல”.
.
SLEEP PARALYSIS – இது தான் உங்களை அமுக்கிய பேய். உண்மையிலயே அது பேய் அல்ல. அது நம் உறக்கத்தில் தோன்றும் ஒரு நிலை. உலகமெங்கும் நிறைய மக்களுக்கு இந்த SLEEP PARALYSIS நிகழுது. பயப்பட தேவை இல்ல.

நன்றி :Jamialim.News

0

தொட்டாற்சுருங்கி…!!

தொட்டாற்சுருங்கி..!

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

image

1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.

‘நமஸ்காரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி’ என்றும் கூறுவர்.

இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும்.

தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.

சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.

இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்.
நன்றி :Jamialim.News

0

இலந்தைப்பழம்….!!

இலந்தைப் பழம்..!

சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.

image

பொதுவாக சீசனில் அதாவது பருவக் காலங்களில் விளையும் பழங்களை அவ்வப்போது உண்டு வந்தால் பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம்.

இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு.

இந்த இதழில் இலந்தைப் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்.

இலந்தைப் பழம் என்றதும் கவியரசர் கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வரும். அந்தப் பாடலில் அவர் கூறியதுபோல்

எல்லோரும் வாங்கும் பழம்..

இது ஏழைக்கின்னே பொறந்த பழம்.. என்பார்

இந்தப் பழத்தின் தன்மை இப்போது புரிகிறதா..

இன்று தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.

இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.

சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.

Tamil – Elandhai

English – Chinese date

Telugu – Regi pandu

Malayalam – Ilanta

Hindi – pitni-ber

Sanskrit – Kola

Botanical name – Ziziphus mauritiana

பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி

மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த

உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்

இலந்தை நெறுங்கனியை யெண்

– அகத்தியர் குணபாடம்

நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.

எலும்புகள் வலுப்பெற

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

பித்தத்தைக் குறைக்க

உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

வாந்தி குறைய

பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

உடல் வலியைப் போக்க

சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.
நன்றி :Jamialim.NEWS