0

why women need health Insurance policy? | பெண்களுக்கு ஹெல்த் பாலிசி ஏன் மிக அவசியம்…?

தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் நலனிலும், பாதுகாப்பிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் பெண்கள் பலரும், தங்களுடைய பாதுகாப்பு குறித்து யோசிப்பது இல்லை.

image

பாதுகாப்பு என்பது வீட்டுக்கு கிரில் கேட் போடுவதில் மட்டும் இல்லை. பெண்களின் உடலில் மருத்துவ ரீதியாக ஏதாவது பிரச்னை ஏற்படும்போது சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான உண்மையான பாதுகாப்பு வேண்டும். அதாவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது மிகவும் அவசியம்.

ஏன் ஹெல்த் பாலிசி?

வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி – கட்டாயம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வேண்டும். ஏனெனில், ஆண்களைவிட அதிகமான நோய்த் தொற்று, உடல் ரீதியான பாதிப்புகள் பெண்களுக்கே வருகின்றன. மேலும், ஆண்களின் ஆயுட்காலத்தைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம்.

மாறி வரும் உணவுப் பழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு போன்றவற்றின் காரணமாக பல பிரச்னைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது. அதாவது மூட்டு வலி, சிறுநீரகப் பிரச்னை, கண் பார்வைப் பிரச்னை மற்றும் பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்குதல், கர்ப்பப் பையில் ஏற்படும் பிரச்னை போற்றவற்றின் காரணமாக மருத்துவமனை சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புள்ளன. மேலும் உடல் ரீதியான பிரச்னைகளும் பெண்களுக்குச் சற்று அதிகம். இந்தக் காரணங்களால், பெண்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது மிகவும் அவசியமான ஒன்று.

குரூப் பாலிசி போதாது!

வேலைக்குப் போகும் பெண்களுக்கு அலுவலகத்தில் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருந்தாலும், தனியாக ஹெல்த் பாலிசி வைத்திருப்பது அவசியம். ஏனெனில், பெரும்பாலான அலுவலகங்களில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் கவரேஜுக்குத்தான் பாலிசி எடுக்கிறார்கள். மேலும் இடையில் வேலையை விட்டு விலகும்போது, ஏதாவது மருத்துவத் தேவையின் காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த நேரங்களில் பாலிசியைப் பயன்படுத்த முடியாது. மேலும், பெண்களுக்கு உடல் சார்ந்த சில பிரச்னைகள் அதிக செலவு வைக்கும். அப்போது மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான பெரும்தொகை கையில் இருக்க வேண்டும். இல்லையெனில் சிக்கல்தான். எனவே, குறைந்தபட்சம் ரூ. 3-5 லட்சம் வரை கவரேஜ் உள்ள பாலிசிகளை வைத்திருப்பது நல்லது.

தெரிந்துகொள்ள வேண்டியவை!

பாலிசி எடுக்கும்போது எந்தெந்த நோய்களுக்கு க்ளெய்ம் கிடைக்கும், எந்த நோய்களுக்குக் காத்திருப்புக் காலம் இருக்கிறது என்பது பாலிசி பத்திரத்தில் இருக்கும். அதைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
குழந்தையின்மை சிகிச்சை, பிரசவம் போன்றவற்றுக்கு ஹெல்த் பாலிசியில் க்ளெய்ம் செய்ய முடியாது. ஆனால், சில நிறுவனங்கள் வழங்கும் குரூப் பாலிசியில் இதற்கு க்ளெய்ம் கிடைக்கும். ஒரு முக்கியமான விஷயம் – குரூப் பாலிசியை அலுவலகங்களில் மட்டும்தான் எடுக்க முடியும்.

பாலிசியை இளமைக் காலத்திலே எடுப்பது அவசியம். அதிக வயதில் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் அதிகரிப்பதோடு, ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு க்ளெய்ம் செய்வதில் சிக்கல் உருவாகும்.

‘நமக்கு எதுக்கு தனியா இன்ஷூரன்ஸ் பாலிசி’ என நினைக்காமல், உடனே பாலிசியை எடுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதுதான் உங்களின் குடும்பமும் சிறப்பாக இருக்கும்.

நன்றி :Jamialim.News

0

தயவு செய்து கூகுளில் இதெல்லாம் தேடாதீங்க… அப்புறம் பயந்துடுவீங்க – Tamil News Paper

தயவு செய்து கூகுளில் இதெல்லாம் தேடாதீங்க… அப்புறம் பயந்துடுவீங்க
May 10, 2016 தொழில்நுட்ப செய்திகள்

image

முன்பெல்லாம் ஏதேனும் ஒரு சந்தேகம் என்றால் பல நூலகங்களுக்குச் சென்று பல புத்தகங்களைப் படித்து ஆராய்ந்து தெரிந்து கொள்வோம். ஆனால் தற்போது இன்டர்நெட் என்ற ஒன்று வந்த பின்னர், அனைத்தையும் உட்கார்ந்த இடத்திலேயே கணினி அல்லது லேப்டாப்பில், தகவல்களைத் தேட பயன்படும் தேடல் இயந்திரமான கூகுள் உதவியுடன் தெரிந்து கொள்கிறோம்.

உலகில் உள்ள அருவெறுக்கத்தக்க மற்றும் விசித்திரமான அருங்காட்சியகங்கள்!

அப்படி நீங்கள் கூகுளை அதிகம் பயன்படுத்துவோராயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வார்த்தைகளை மட்டும் கூகுள் படங்களில் பார்க்காதீர்கள். ஏனெனில் இந்த வார்த்தைகளுக்கான படங்கள் மிகவும் மோசமாகவும், சில நேரங்களில் நம்மை மெய்சிலிர்க்கவும் செய்யும் வகையில் இருக்கும்.

இதுவரை நீங்கள் உண்மை என தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் சில விஷயங்கள்!

Clock Spider

உங்களுக்கு சிலந்திகள் என்றால் பயம் என்றால், இந்த சொல்லை மட்டும் கூகுள் படத்தில் பார்க்காதீர்கள். ஏனெனில் இதனால் உலகில் உள்ள பல அருவெறுக்கத்தக்க சிலந்திகளைக் காண நேரிடும்.

Any Medical Symptom

தயவு செய்து இதை கூகுள் படத்தில் தேடினால், நிச்சயம் நீங்கள் மனம் தளர்ந்துவிடுவீர்கள். ஏனெனில் அந்த அளவில் படுமோசமான வெறும் புற்றுநோய்க்கான அறிகுறிகளைத் தான் காண்பீர்கள். எனவே, இதையும் தேடி பார்க்க வேண்டாம்.

Wet Koala

இந்த சொல் ஒரு பயங்கரமான மிருகத்தின் பெயர். இது நம்மை அச்சுறுத்தும் வகையில் படு பயங்கரமாக இருக்கும். ஆனால் இது ஒரு போட்டோஷாப் படம் தான். நல்ல வேளை இம்மாதிரியான மிருகம் உண்மையில் இருந்தால் எப்படி இருக்கும்! அம்மாடியோவ்வ்வ்வ்….

Peanut Dog

நாய் விரும்பிகள், இந்த நாயைக் கண்டதும் நிச்சயம் அஞ்சக்கூடும். ஏனெனில் உலகிலேயே மிகவும் அசிங்கமான மற்றும் பயமுறுத்தும் வகையில் இருக்கும் நாய் தான் இது. நாங்கள் அந்த நாயின் படத்தைக் கொடுக்கவில்லை. வேண்டுமானால் கூகுள் படத்தில் தேடிப் பாருங்கள்.

Bedbugs On Mattress

உங்களுக்கு தைரியம் இருந்தால், இதை கூகுள் படத்தில் பாருங்கள். நிச்சயம், இனிமேல் உங்கள் படுக்கையில் படுப்பதற்கு அஞ்சுவீர்கள்.

Skin Condition

இதை கூகுள் படத்தில் பார்த்தால், இம்மாதிரியான நிலை தன் வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என்று நிச்சயம் நீங்கள் நினைப்பீர்கள். ஏனெனில் அந்த அளவில் படு மோசமான சரும பிரச்சனைகளை நீங்கள் காண்பீர்கள்

Trypophobia

இந்த சொல்லை கூகுள் படத்தில் தேடினால், பலரும் மெய்சிலிர்ப்பார்கள். சொல்லப்போனால், இந்த சொல்லின் படத்தை இரவில் படுக்கும் முன் கூகுள் படத்தில் கண்டால், இரவில் தூக்கத்தையே தொலைத்துவிடுவீர்கள்.

நன்றி :Jamialim.News

0

உங்களுடைய விசா பெர்மிட் சோதித்துகொள்ள???

கணினி உதவியுடன் விசா உண்மை தன்மையை சோதித்து அறிய பயனுள்ள லிங்க் மதுரைமனோ BE (Mech) 7305917223 உங்களுக்காக வழங்குகிறார்.

மற்ற தமிழருக்கு உதவிடும் மனம் இருந்தால் நீங்களும் ஷேர் செய்யலாம்.

image

1. DUBAI VISA CHECK LINK
————————–
http://ednrd.ae/portal/pls/portal/INIMM_DB.DBPK_VISAVALIDITY.Query_VisaValidity

2. SAUDI IQAMA VISA CHECK LINk
—————————
https://visa.mofa.gov.sa/visaServices/PrintVisa

https://www.eserve.com.sa/VVSWeb/_jsp/cvv.jsp

https://enjazit.com.sa/Enjaz/GetVisaInformation/Person
toturial

http://qsaudi.com/check-family-visa-status-online/

3. QATAR VISA CHECK ONLINE
————————-
https://www.moi.gov.qa/VsaWeb/Actions

4. OMAN VISA CHECK ONLINE
————————–
http://www.rop.gov.om/english/onlineservices_visastatus.asp

5. BAHRAIN VISA ONLINE CHECK
————————–
http://lmra.bh/portal/en/home

6. MALAYSIA VISA ONLINE CHECK
————————–
https://eservices.imi.gov.my/myimms/enqApplSts

7. SINGAPORE VISA ONLINE CHECK
VISIT VISA CHECK :-
——————————————
https://save.ica.gov.sg/save-public/index.xhtml;jsessionid=pNgbWJ1QYhBG54lc2r9rLhrCgNKnSP6nf32LWDyC6cQytL01ZhTb!-727631320

WORK PERMIT CHECK
——————————
:-https://wponline.mom.gov.sg/WPOLLoginController?action=WPOLLoginAction&actionType=WPOLNonLogin

EPASS SPASS CHECK:-
—————————–
https://eponline.mom.gov.sg/epol/PEPOLUAMT012DisplayAction.do

நன்றி :Jamialim.News