0

தொழுகையும் தடைகளும்,,

தொழுகையும் தடைகளும்
+++++++++++++++++++

image

சுபஹ்
——-
சுருண்டு படுக்க
சுகம் வரும்.
கூதல்
மோதல் செய்யும்.
எப்போதோ சுகமான
ஏதோவொரு நோய்
இப்ப ஞாபகம் வந்து
எழும்பாதே என்று சொல்லும்.
இலேசான மழை
இருக்கிற பத்வாவை
எடுத்துக் காட்டும்.
எல்லாவற்றையும்
எடுத்தெறிந்து
எழுபவனே
ஈமான்தாரி.

லுஹர்
+++++++
சூட்டுச் சூரியன்
சோதிக்கும்.
பார்த்த செய்தி
பாதியில் இருக்கும்.
வியர்வை அலுப்பு
வேண்டாம் என்று சொல்லும்.
லெப்பைமார் சிலரே
லேட்டாகித் தொழுவது
லேசாக ஞாபகம் வரும்.
உள்ள பிரச்சினையை
ஓரமாக்கி வைத்து விட்டு
பள்ளிக்குச் செல்பவனே
பக்குவ முஸ்லிம்.

அஸர்.
+++++
லுஹர் பின் உண்டது
லொள்ளு பண்ணும்.
கண்றாவித் தூக்கம்
கண்களைத் தாக்கும்.
கிளைமாக்ஸ் சீன்
கிக்காகப் போகும்.
மொபைல் போன் கோல்
மொக்கை போடும்.
அத்தனையும் ஒதுக்கி விட்டு
அஸருக்குப் பள்ளி செல்.
ஈமான் வளரும்
இதயம் மலரும்.

மக்ரிப்
++++++
உழைத்த களைப்பு
ஓய்வெடுக்கச் சொல்லும்.
விளையாட்டில் இருப்போர்க்கு
விறுவிறுப்பு ஏறும்.
அடுத்த தொழுகையும்
அவசரமாய் வருவதால்
இரண்டு தரம் போக
ஏலா என்று தோன்றும்.
கூடுகின்ற கூட்டங்களில்
கூடும் சுவாரஸ்யம்.
அடுப்பில் டீ கொதிக்கிறது
அம்மணியின் குரல் கேட்கும்.
இடுப்பில் உள்ள பிள்ளை
இறங்க ஏலா என்று சொல்லும்.
இத்தனையும் தாண்டி
எழுந்து மக்ரிப் செல்
சுத்தமான ஈமான்
சுரக்கத் தொடங்கும்.

இஷா
++++++
இப்பதானே போய் வந்த
என்று மனம் சொல்லும்.
அப்பாடா என்று சொல்லி
ஆறுதலாய் இருக்கச் சொல்லும்.
கொப்பியைக் கொண்டு வந்து
குழந்தை படம் காட்டும்.
சில்லறைக் கடை வாசலிலே
சிலர்க்கு பிஸியாகும்.
சீரியல் நாடக்த்தில்
சிந்தனை லயித்திருக்கும்.
ஊர்பலாய் கழுவுதலில்
உற்சாகம் பீறிடும்.
இததனையும் ஒதுக்கி
இஷாத் தொழச் சென்றால்
மற்றப் பாவமெல்லாம்
மறையத் தொடங்கும்.💐💐

நன்றி:Jamialim.News

0

நீண்ட நேரம் உறவு கொள்ள ஆசையா? இதை பின்பற்றுங்க – Indru Oru Thagaval No.1 Famous Tamil Thagaval l World News l etc.

[நீண்ட நேரம் உறவு கொள்ள ஆசையா? இதை பின்பற்றுங்க – Indru Oru Thagaval No.1 Famous Tamil Thagaval l World News l etc.] is good,have a look at it! http://www.todayindias.info/2016/05/blog-post85Nintaneramuravukolla.html?m=1

நன்றி:Jamialim.News

0

International People’s Forum | சர்வ தேச மக்கள் நல மன்றம் இல் பேராசிரியர் கே. பீர் முஹம்மது இடுகையிட்ட படங்கள்

எந்த செலவுமின்றி இலவசமாக M.B.B.S. கற்க வேண்டுமா? *****[MUST READ & SHARE]
இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக M.B.B.S!
நாட்டிலுள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும். கட்டணம் எதுவும் இல்லாலும், கல்லூரி விடுமுறையில் ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் சொந்த ஊருக்குச் சென்று வரவும், புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.12 ஆயிரம், யூனிபார்ம் வாங்குவதற்காக முதல் ஆண்டில் ரூ.6 ஆயிரம், அடுத்த ஆண்டு உடைகள் பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.1,250, முடி வெட்ட மாதம் ரூ.100 வழங்கப்படும். இதுபோன்று மாணவர்களுக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

image

இங்கு பயிலும் மாணவர்களுக்கு படிப்பு முடித்த பின்பு இந்திய ராணுவத்தில் நிரந்தரம் அல்லது குறுகியகாலப் பணியில் மருத்துவராக பணியாற்றலாம்.
மகாராஷ்ட்ரா யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இந்தக் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 130 இடங்களில் 105 மாணவர்களும், 25 மாணவிகளும் சேர்க்கப்படுவார்கள். இந்திய குடிமக்கள் மட்டுமே இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க முடியும்.

இந்தக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கா அகில இந்திய அளவில் மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) நடத்தும் (AIPMT) நுழைவுத் தேர்வை எழுதி இருக்க வேண்டியது அவசியம். மேலும் ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் விண்ணப்பித்து, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வையும் எழுதியுள்ள மாணவர்களில் தகுதியுடைய மாணவர்கள், மற்றொரு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

எந்தவிதச் செலவுமின்றி இலவசமாக எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்கள், அதாவது ஏற்கனவே அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதியுள்ள மாணவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2016. விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.afmc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

நன்றி :jamialim.News