நீங்களும் மருத்துவர் ஆகலாம்…..10

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!

பகுதி 10

ஜுரம் – வலி மாத்திரைகள் ஒவ்வொன்றும் உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் உயிரைக் குடிக்கும்!
.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.
.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)

image

.

குழந்தைகள் மட்டுமல்ல, எவர் இந்த ஜுரம் – வலி மாத்திரைகளைச் சாப்பிடுகிரார்களோ, அவர்கள் இன்றே இறந்து விட்டதற்குச் சமம். ஆம்! இனி அவர்கள் நியாயமான உடல் நலத்துடன் வாழ முடியாது.
.

மருந்துகள் – விஷங்கள்

# Paracetamol,

# Analgin,

# Aspirin,

# Iburprofen,

# Idicin (Indomethacin)

# Nimesulide (Nulide, Nice)

போன்ற அனைத்து ஜுரம் – வலி மாத்திரைகள் ஒவ்வொன்றும் உடல் நலத்தில் ஏற்படுத்தும் பாதகங்கள் ஒன்றல்ல; இரண்டல்ல. ஒவ்வொரு செல் அணுவிலும், ஒவ்வொரு உறுப்பிலும் விஷத்தைப் பாய்ச்சுகின்றன.
.

மருந்துகள் – நோய்களை உருவாக்கும்

ஜுரம் – வலி மாத்திரைகளை ஒரு நாள் சாப்பிட்டாலும் சரிதான். அதன் நச்சு உடலினுள் பாய்ச்சப்பட்டது கொஞ்சம் கொஞ்சமாக உயிரையே குடிக்கும். எந்த வலிக்காக, ஜுரத்திற்க்காக மாத்திரைகளை உட்கொண்டோமோ, அவற்றை சில காலத்திற்குப் பின்னர் இந்த மாத்திரைகளே உருவாக்குகிறது.
.

ஜூர மாத்திரைகள் – ஜுரத்தைத் தோற்றுவிக்கும்

உதாரணமாக, ஆங்கில மருந்துகள் ஒவ்வொன்றும் நோய்களைப் புதிது புதிதாக உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. ஜுரதிற்காக கொடுக்கப்படும் மாத்திரைகளே ஜுரதைத் தோற்றுவிக்கும். ஒருமுறை ஜுரத்திற்காக மாத்திரைகள் சாப்பிட்டபின், மீண்டும் ஜுரம் ஏற்பட்டால் அது ஜுர மாத்திரைகளால் ஏற்பட்ட ஜுரம் என்பதை எவ்வாறு நீங்கள் அறிவீர்கள். டாக்டர்களே கூட ஜுரம் மாத்திரைகளால் ஏற்பட்ட ஜுரம் என்பதை அறிய மாட்டார்கள். பெரும்பாலான மருத்துவர்கள் இந்த உண்மைகளை அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
.

ஆங்கில மருத்துவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்

உங்களுக்கும், ஆங்கில மருத்துவர்களுக்கும் இந்தக் கட்டுரை கற்பிக்கப்படுகிறது. எனவே, சற்று கவனமாகப் படியுங்கள். ஆங்கில மருத்துவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

கல்லீரலும், சிறுநீரகங்களும் நமது உடல் உறுப்புக்களிலிருந்தும், செல்களிலிருந்தும், இரத்தத்திலிருந்தும் விஷங்களையும், நச்சுக்களையும் முறியடிக்கும் வேலையையும், பின்னர் சிறுநீரகங்கள் வழியாக உடலை விட்டும் வெளியேற்றும் வேலையையும் செய்கின்றன.

மருந்துகள் அனைத்தும் விஷம் என்கிறோம். ஏனெனில் அவை ஒவ்வொன்றும் நம் உடல் நலனில் கேடுகளை விளைவிக்கின்றன. உடல் சுகம் நோய். இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை நாம் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
.

SCAN – நோயின் இறுதி நிலையைத்தான் அறிவிக்கும்!

உடல் சுகம் முதலில் குறைந்து பொதுவான களைப்பையும், சோர்வையும் ஏற்படுத்துகிறது. பின்னர் வலிகளையும், ஜுரத்தையும் ஏற்படுத்துகிறது. பின்னர் உறுப்புகளை சேதப்படுத்துகிறது. இறுதியான சேதம் விளைவிக்கும் நிலையைத்தான் ஆங்கில மருத்துவர்கள் நோய் ஏற்படுத்துகிறது என்று ஸ்கேன் மூலம் அறிகிறார்கள். இது நோயின் கடைசி நிலையாக இருக்க, ஆங்கில மருத்துவர்கள் சேதத்தைப் பார்த்த பிறகுதான் நோயைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள்! ஆங்கில மருத்துவம் எந்த அளவுக்குத் தன் அறியாமையின் பாதாளத்தில் இருக்கிறது என்பதைப் பாருங்கள்.
.

இப்போது நோய்யின் நிலைகளை மீண்டும் அறிந்து கொள்வோம்!
.

1. களைப்பும், சோர்வும் – நோயின் ஆரம்பம்

களைப்பும், சோர்வும் ஆரம்ப அறிகுறிகள். இந்த சூட்சுமத்தை சாதாரணமாக மனிதர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொது அறிவே உறுதியாக அறிவிக்கும். உங்கள் குழந்தைகள் சோர்வாக இருந்தால் நீங்கள் கவலையாக இருக்கிறீர்கள்; ஒருவேளை சாப்பிடாவிட்டால், உடம்பு என்னத்துக்கு ஆகும்’ என்று உங்கள் குழந்தைகளைக் கண்டிக்கவும் செய்கிறீர்கள்.
.

‘ஒன்றுமில்லை’ – ஆனாலும் மருந்து

ஆனால், ஆங்கில மருத்துவம் டெஸ்ட் செய்து ரிப்போர்ட்டுகளைப் பார்த்துவிட்டு, ‘ஒரு குறையும் இல்லை; நன்றாக இருக்கிறான்’ என்று கூறி விடும். ‘ஒன்றுமில்லை’ என்று கூறிவிட்டு வைட்டமின் மருந்துகளை – விஷங்களைக் கொடுப்பார்கள். இந்த வைட்டமின்கள் உருவாக்கும் நோய்களையும், கேடுகளையும் பிரிதொரு சமயத்தில் முறையாக எழுத இருக்கிறோம்.
.

வைட்டமின் மாத்திரைகள் – பெரும் கேடு!

இது நாங்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிக்கும் காலத்தில் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததுதான். “உங்கள் மருத்துவத் தொழிலின்போது, நோயாளிக்கோ, குழந்தைகளுக்கோ, நோய் என்ன என்பதைப் புரியாத நிலையில் வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்து அனுப்புங்கள்.
“ஒன்றுமில்லை!” என்று அனுப்பி விட்டால், உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்ற எண்ணம் நோயாளிகளுக்கு வந்து விடாமல் நீங்கள் உங்கள் தொழிலைப் பாதுகாத்துக் கொள்ளலாம்”.

வைட்டமின்களும், சத்து மாத்திரைகளும் மிக மிகக் கேடானவையாகும். இம்மருந்துகள் கல்லீரலைப் பாதிக்கும். கல்லீரல் சோர்வடையும். இதன் காரணமாக பசியின்மை, மேலும் சோர்வு, அஜீரணம், கை, கால்கள், உடல் வலிகள் தோன்றும்.
.

2. உடல் வலிகள், ஜுரம்:

இது முழுமையாக நோய்கள் நிரந்தரமாக அமைந்து விடுவதற்கு முன்பான இரண்டாவது நிலையாகும். இன்னும் சேதங்களை ஏற்படுத்த ஆரம்பிக்கவில்லை. ஆனால் நிச்சயமாக நோயின் தீவிரம் முற்ற ஆரம்பித்து விட்டது. ஆங்கில மருத்துவம் டெஸ்டுகளைச் செய்து விட்டு, ‘உடலில் எந்தக் கோளாறும் இல்லை!” எனினும் மருந்துகளைத் தருகிறோம் என்று வலி மருந்துகளைக் கொடுப்பார்கள்.

அறிந்து கொள்ளுங்கள். வலிகளுக்கென கொடுக்கப்படும் மருந்துகள் உடல் வெப்பத்தையும் இயக்க சக்தியையும், சீர் குலைக்கும் ஜுரம் இல்லாதபோது ஜுரதைக் குறைக்கும் தன்மைகளையும் கொண்ட இந்த வலி மாத்திரைகள் என்னென்ன கேடுகளை விளைவிக்கும் என்பதை இந்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.
.

3. உடல் உறுப்புக்களில் சேதம்:

வயிறு அல்லது பிற உறுப்புக்களில் நோயின் இறுதி நிலையாக, புண்கள், வீக்கங்கள், கட்டிகள் உருவாகும். இந்த நிலையில், ஆங்கில மருத்துவர்கள் ‘டெஸ்ட்டுகள்’ அனைத்தும் செய்து விட்டு நோயை கண்டுபிடித்துவிட்டோம்” கட்டி இருக்கிறது; புண் இருக்கிறது; வீக்கம் உள்ளது!” என்று மருந்துகளைக் கொடுப்பார்கள்.

பெரும்பாலான மருத்துவர்களுக்கு நோயின் முதல் இரண்டு ஆரம்ப நிலைகளிலேயே தங்கள் அறியாமையினால்; புரியாமல் செய்த வைத்தியத்தின் காரணமாகத்தான் இந்த இறுதியான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதையும் உணராதவர்களாக, மிக மும்முரமாக வைத்தியம் செய்ய ஆரம்பிப்பார்கள்.

இது எங்கு கொண்டு போய் முடியும்? இவற்றின் அனைத்தின் தீமைகளும் தான் இன்று பரவலாக இருக்கும் AIDS, Sars, TB, Cancer போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் என்பதையும் இந்தத் தொடர் கட்டுரையின் பின்னர் வரவிருக்கும் அத்யாயங்களில் அறிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

இப்போது நோயின் முதல் நிலையைச் சுருக்கமாக அறிந்து கொண்டு, பின்னர் நோயின் இரண்டாம் நிலையின் போது கொடுக்கப்படும் ஜுரம் – வலி’ மாத்திரைகளுக்கு வருவோம்….

.

தொடரும்…
.

இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நன்றி: Jamialim.NEWs

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s