நீங்களும் மருத்துவர் ஆகலாம்….1

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!

முதல் பகுதி

image

.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

வாசகர்களே, இந்தப் புத்தகத்தின் நோக்கம் ஆங்கில மருத்துவம் என்பது ஒரு பாமரத்தனமான மருத்துவம். சுய புத்திக்கு நேர் விரோதமானது. அம்மருத்துவத்தில் எந்தவிதமான அறிவுக்குப் பொருத்தமான கல்வியும் இல்லை. எனவே, ஒவ்வொரு சுய அறிவைக் கொண்டுள்ள மனிதரும் ஆங்கில மருத்துவத்தைப் படிக்க ஆரம்பித்துவிட்டால், இது ஒரு அறிவற்ற மருத்துவம். ஆங்கிலேயர்களின் சுயஅறிவு இவ்வளவு மட்டமானதா? என்பதை தெளிவாக உணர்ந்துகொள்வார்கள்.
.

சுய புத்திக்கு எதிரி – பள்ளிப் படிப்பு

‘நீங்களும் ஆங்கில மருத்துவராகுங்கள்!’ என்ற இந்தப் புத்தகம் சுய சிந்தனையுள்ள ஒவ்வொருவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கூட படிப்பறிவை படிக்கும் ஆர்வம ஏற்படுவதற்கு முன்புவரைதான் சுய அறிவு நம்மில் தழைத்து நிற்கிறது. பள்ளிப்படிப்பான ஏட்டுப்படிப்பைக் கற்பதில் எப்போது ஆர்வம காட்டுகிறோமோ, அப்போது நாம் நம் சுய புத்தியை இழந்து விட்டோம் என்பது பொருள். எந்தக் குழந்தைக்கு ஏட்டுப் படிப்பு ஏறவில்லையோ, ஏட்டுப்படிப்பில் ஆர்வம காட்ட முடியவில்லையோ, பள்ளிப்படிப்பு வெறுப்பை ஏற்படுதுகிறதோ, அந்தக் குழந்தையே மேலான ஞானமுடைய குழந்தையாகும்.
.

நீங்களே மருத்துவ மேதைகள்

நீங்கள் மருத்துவர்கள் ஆவதற்கு, அதாவது ஆங்கிலேயர்களின் உருப்படாத ஏட்டுச் சுரைக்காய் மருத்துவத்தைக் கரைத்துக் குடித்த, மாமேதைகள் ஆவதற்கு சுயபுத்தி ஒன்று மட்டுமே அவசியம். பள்ளிப் படிப்பு நீங்கள் படிக்காதவர்களாக இருந்தால், நிச்சயமாக நீங்களே ஆங்கில மருத்துவத்தைக் கற்க மிகவும் தகுதியானவர்கள்.

ஆங்கில மருத்துவ மாமேதைகள் நீங்களே! வாருங்கள் அடாவடி ஆங்கில மருத்துவத்தை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் பந்தாடுவோம்.
.

மருத்துவப் படிப்பைப் பற்றி…

இதற்கு முன்பாக, எங்கள் மருத்துவப் படிப்பின் இறுதியாண்டில் எங்களுக்கு ஏற்பட்ட சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் ஆங்கிலேயர்களின் இந்த நவீன மருத்துவம் ஒரு ‘டென்ஷன்’ இல்லாத ஊரை ஏமாற்றி, பாமர மக்களின் பொருளாதாரத்தை சூறையாடும் மருத்துவம் என்பது புரியும்.
.

எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு. காலை 7 மணி அளவில் ஒரு நோயாளியை நாங்கள் பரிசோதனை செய்து முடித்தோம். 7.30 மணி அளவில் பெரிய Chief Doctor, ப்ரொஃபசர் வருவார். அவரிடம் அந்த நோயாளியைப் பற்றி விவாதிக்க வேண்டும். அந்த நோயாளிக்கு இருதய படபடப்பு, கால் வீக்கம், நடந்தால் மேல் மூச்சு வாங்குதல், மற்றும் வேலை செய்தால் நெஞ்சுப் பகுதியில் இடது பாகத்தில் வலி. எனவே, இவர் ஒரு இருதய நோயாளி என்று டயக்னோசிஸ் செய்தோம். இவ்வாறே ப்ரொஃபசரிடம் அந்த நோயாளியைப் பற்றிய ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைத்தோம்.

இப்போது, சீப் டாக்டர் அந்த நோயாளியைப் பரிசோதித்தார். பின்னர் மிகவும் திருப்தியடைந்தவராக என் பக்கம் திரும்பி, இனி நான் இந்த நோயாளியைப் பற்றிய வைத்திய முறைகள் என்ன என்பதைப் பற்றிய கேள்விகளை கேட்கப் போகிறேன். யோசித்து நிதானமாக பதில் சொல்! என்றார். நானும் ரெடியானேன். சீப் டாக்டர், ப்ரொஃபசர் கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அவர் கேட்ட கேள்விகளும், நான் அவருக்கு அளித்த பதில்களும் என்ன என்பதை நீங்களும் படியுங்கள். எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வுக்கு முன்பாக இந்த கேள்வி – பதில் அதாவது, ப்ரொஃபசருக்கும், மாணவனுக்கும் இடையே நடந்த இந்த விவாதத்தை நீங்கள் ரசித்துப் படிப்பீர்களானால், அந்த அளவுக்கு நீங்கள் புரிந்து கொண்டு படிக்கிறீர்கள் என்பது பொருள். நீங்களும் என்னுடன் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படிப்பைப் புரிந்து கொள்ளும் நிலையிலிருக்கிறீர்கள் என்பதுவே பொருளாகும். வாருங்கள், ப்ரொஃபசருக்கும்,இறுதியாண்டு மாணவனாகிய இனிக்கும் நடந்த சம்பாஷணையின் பகுதிகள் இதோ;
.

ப்ரொஃபசர்: இப்பொழுது இந்த பேஷன்ட் என்னென்ன கஷ்டத்திலிருக்கிறார்?

நான்: நெஞ்சு வலி, மூச்சு விட முடியாமை, அதிகப்படியான வியர்வை போன்ற கஷ்டங்களில் இருக்கிறார், கால்களில் வீக்கம் இருக்கிறது.
.

ப்ரொஃபசர்: எப்படி வைத்தியம் ஆரம்பிப்பாய்?

நான்: மூச்சு விடக் கஷ்டப்படுகிறார். ஆகவே ஆக்ஸிஜன் (பிராண வாயு) கொடுப்பேன்.
.

ப்ரொஃபசர்: வெரிகுட்!

நான்: அடுத்து வியர்வை அதிகமாக இருக்கிறது. எனவே சலைன் தண்ணீர் ஏற்றலாம்.
.

ப்ரொஃபசர்: ஆஹா! அப்புறம்

நான்: நெஞ்சு வலிக்கிறது என்கிறார். வலி மரத்துப் போகும் மருந்தை நேரடியாக ட்ரிப் லைன் (ஸலைன் தண்ணீர் போகும் ஊசியின்) மூலமாக நேரடியாக இரத்தத்தில் கலந்து விட்டால் அது இருதயத்தை அடைந்து வலி மரத்துப் போகப் செய்துவிடும்.
.

ப்ரொஃபசர்: பிறகு?

நான்: கொஞ்சம் தூக்க மாத்திரையும் கொடுத்துத் தூங்கப் பண்ணலாம். அதனால் இனி வலி என்று வாய் திறந்து கூற மாட்டார்.

கால்களில் நீர் கோர்த்து வேகமாக இருக்கிறது. எனவே ‘யூரின்’ (சிறுநீர்) அதிகமாகப் போக்கும் மாத்திரைகளைக் கொடுத்தால் சிறுநீர் அதிகமாகப் பிரியும்போது கால்களின் வீக்கமும் குறைந்து விடும்.
.

ப்ரொஃபசர்: நிச்சயமாக எம்.பி.பி.எஸ். இறுதியாண்டில் நீ பாசாகி விடுவாய். இன்னும் ஒரு முக்கியமான வைத்தியம் என்ன?

நான்: ஒரு நோயாளியை நாம் குணமாக்க எந்த வழியும் அறியாதபோது கொடுப்போமே CORTISONE அதைக் கொடுக்கணும். ஒவ்வொரு நோயாளிக்கும் நம் இறுதியாகக் கொடுக்கும் மருந்து இதுதானே? கார்டிஸோன் தான் நோயயளிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் மருந்தும் கூட!
.

ப்ரொஃபசர்: கார்டிஸோன் மருந்துக்கு இப்படி ஒரு வியாக்கியானம் வெச்சிருக்கியா? வெளியில் நோயாளிகளிடம் இப்படிப் பேசிவிடாதே! நம் பிழைப்பு அதோ கதியாகி விடும்.

நான்: அதுதானே உண்மை?
.

ப்ரொஃபசர்: உன்னை எம்.பி.பி.எஸ். இறுதியாண்டில் பெயில் ஆக்கி இன்னும் இரண்டாண்டுகளுக்கு உட்கார வைத்தால், தானே உன் பேச்சு அடங்கி விடும்.
.

வாசகர்களே! இது ஒரு சிறு நிகழ்ச்சிதான். இது போன்று எத்தனையோ வாக்குவாதங்கள்! பலரும் உனக்கு சீட் கொடுத்தார்களே அவர்களைச் சொல்லணும். வேறு யாருக்காவது கொடுத்திருந்தால் அவர்களாவது உருப்படியாகப் படித்திருப்பார்கள்! என்பது தவிர வாக்குவாதத்தின் இறுதியில் சொல்ல, அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்களுக்கு நானும் பதிலளிப்பேன். ‘நான் எம்.பி.பி.எஸ். ல் சேர்ந்தால்தான், இன்னொருவன் இந்த அநியாயத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்தான்.
.

வாசகர்களே! ஒரு வழியாக எம்.பி.பி.எஸ். பாஸ் செய்து விட்டேன். இனி பயிற்சி டாக்டராக (House surgeon) ஒரு வருடம் பணியாற்ற வேண்டும். O.P. (Out Patient) பார்க்கும் இடத்தில் முதல் உதவி சிகிச்சைப் பிரிவில் அமர்தப்பட்டோம்.எங்களுக்கு நோயாளிகளைப் பார்க்க உதவி செய்ய ஒரு சீனியர் டாக்டர் கூடவே இருப்பார். ஒவ்வொரு நோயாளிகளாக நாங்கள் பார்த்து மருந்து எழுதிக் கொடுக்க வேண்டும். எங்கள் ரூமுக்கு வெளியே நூற்றுக்கணக்கான நோயாளிகள் கையும் ஓடலை. காலும் ஓடலை. ஐந்து வருடங்களாகப் படித்தது அவ்வளவும் ஒரு நொடிப் பொழுதில் அப்படியே மறந்து போய் விட்டது. ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தேன். நானும் என் கூட இன்னொரு ‘ஹவுஸ் சர்ஜன்’ (பயிற்சி டாக்டர்)ம் இருந்தார். சீனியர் டாக்டரும் வந்து அமர்ந்ததும் நோயாளிகள் மூன்று பேர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். எங்கள் மூவருக்கும் ஆளுக்கொரு நோயாளி.

சீனியர் டாக்டர் 10 நோயயாளிகளைப் பார்த்திருப்பார். நாங்கள் இருவரும் ஒரே நோயாளியை வைத்துக் கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தோம். என்ன மருந்து எழுதுவது என்று ஒன்றும் ஓடவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நர்ஸ்கள் எங்களைப் பார்த்துச் சிரிப்பதும், ஜாடையாக கேலி செய்து அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். நாங்கள் முதல் நாள் முழி பிதுங்கி உட்கார்ந்திருந்தது அவர்களுக்கு பெரும் வேடிக்கையாக இருந்தது.

சீனியர் டாக்டர், எங்களைப் பார்த்து, ‘என்னப்பா! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் நிலையில்தான் நானும் இருந்தேன். இப்போது நான் சொல்லிக் கொடுக்கும் பிரகாரம் மருந்து எழுதுங்கள்!’ என்று தூரத்தில் இருந்தவாறே மருந்தைச் சொன்னார். நாங்களும் எழுதிக் கொடுத்தோம். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது சீனியர் டாக்டர் என்றால், சீனியர் டாக்டர்தான்! தூரத்தில் இருந்தவாறே நோயாளிக்கு, என்ன என்றும் கண்டுபிடித்து அங்கிருந்தவாறே மருந்தையும் சொல்கிறாரே!’ என்று அதிசயமாக இருந்தது.

அடுத்த பேஷன்ட் வந்தார். இரண்டு நிமிடங்களாக நாங்கள் விழித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, அங்கிருந்த அவர் மீண்டும் மாத்திரைப் பெயரைச் சொன்னார். ஆச்சரியம்! அதே மருந்து. ஆனால் வேறு பேஷன்ட். அடுத்தடுத்த பேஷன்ட்களுக்கும் அதே மருந்து.

அடுத்த நாள், நாங்கள் நோயாளிகளைப் பார்பதற்கு முன்பாக ஒரு சிறிய விளக்கம் கொடுத்தார். எங்கள் Casualty சீனியர் டாக்டர். இங்கு இரண்டு மருந்துகள்தாம் உண்டு. ஒன்று SDT; இது சளி, இருமல், புண்கள், காயங்கள் என்று எது இருந்தாலும் கொடுத்துவிடுங்கள். அடுத்து, APC, இது வலி, ஜுரம் நிவாரணி. ஆகவே, SDT, APC என்று கண்ணை மூடிக் கொண்டு கொடுங்கள்.

அடுத்து யாரேனும் வயிற்று வலி என்று சொன்னால்,

Gelusil என்று வயிற்று வலி மாத்திரை உண்டு. இது அல்சர் தொந்தரவுகளுக்காக உள்ள மருந்து.

மூச்சிரைப்பு, ஆஸ்துமா என்று சிலர் வருவார்கள். அவர்களுக்கு, T. Deriphyline t.d.s அதாவது டெரிஃபில்லின் என்ற மாத்திரை மூன்று வேலைகளுக்கு என்று எழுதிக் கொடுங்கள் என்று சொல்லிக் கொடுத்து 5 வருட எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நான்கே நிமிடத்தில் முற்றுப்புள்ளி வைத்தார்.

அன்று,நான் மட்டும் அரை மணி நேரத்தில் 50 நோயாளிகளைப் பார்த்தேன். மின்னல் வேகம். என்னுடைய நண்பரோ என்னை விட படு வேகம். எங்கள் வேகத்தைப் பார்த்த சீனியர் டாக்டருக்கோ ஏக குஷி. “பசங்க நாம சொல்லிக் கொடுத்ததைக் கொண்டு நல்லா தேறீட்டாங்கன்னு.”

வாசகர்களே, “இதைச் செய்வதற்கு 5 வருடங்களா படிக்க வேண்டும்?” என்று மனதில் அன்று முதலே புயலாகக் கேள்வி எழுந்தது. 5- ம் கிளாஸ் படித்த ஒரு பையனுக்குக் கூட இது எளிதானதாயிற்றே? நாம் டாக்டர்கள்தானா? SDT, APC, Gelusil, Deriphylline இவ்வளவுதானா எம்.பி.பி.எஸ். அப்படியானால் இதை ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் சொல்லிக் கொடுத்து ஒவ்வொருவர் வீட்டுக்கும் மாதாமாதம் ரேஷன் போன்று மாத்திரைகளைக் கொடுத்து விடலாமே! இப்படிப் பலவாறான எண்ணங்கள்! ஒரு வழியாக பயிற்சி டாக்டர் (House Surgeon) வேலை முடிந்து டாக்டராக வெளியேறினேன்.

கிளினிக் தொடங்கி 4 மாதங்கள் ஆகியிருக்கும். எனக்கு உதவிக்காக ஒரு கம்பவுண்டர் வைத்திருந்தேன். நியாயமான அளவுக்கு ஒரு நாளைக்கு ஏழெட்டு நோயாளிகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஜுரம் காரணமாக அன்று மதியம் கிளினிக்கிற்குச் செல்ல முடியவில்லை. என் கம்பவுண்டர் பையனிடம், “ யாரும் நோயாளிகள் வந்தால் நாளை வரச் சொல்” என்று சொல்லி சென்று விட்டேன்.

மறுநாள் காலை கிளினிக்கிற்கு சீக்கிரமாகவே வந்து விட்டேன். அப்போது முந்திய நாள் மாலை வந்த சில பேஷண்டுகள் வந்தார்கள். அந்நோயாளிகளில் சிலர் “நேற்று ரொம்ப முடியாமல் வந்தேன். உங்கள் உதவியாளர் எங்களை நாளை வரும்படி சொன்னார். ஆனால் மிகவும் முடியவில்லை என்று சொன்னதால் இரண்டு மாத்திரைகளைக் கொடுத்தார். 3 நாட்களாக இருந்த ஜுரம் சுத்தமாக குறைந்து விட்டது என்றனர். மூன்று நாட்களாக என்னிடம் பார்த்துக் குறையாத ஜுரம் குறைந்து விட்டதா? சற்று நேரம் கழித்து கிளினிக்கிற்கு வந்த என் உதவியாளர் முதலில்தான் மருந்த கொடுத்த சில நோயாளிகளைப் பற்றிச் சொல்லி, அவர்கள் வற்புறுத்திக் கேட்டதால் தான் கொடுத்ததாகவும் சொல்லி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

எனக்கு இந்நிகழ்ச்சி ஒரு பேரிடி! எவ்வளவு எளிதாகவும், திறமையாகவும் கற்றுக் கொள்கிறார்கள் இந்த பாமர மக்கள். இதற்கு ஏன் 5 வருடங்கள். அனைத்து மக்களுக்கும் இந்த எம்.பி.பி.எஸ். படிப்பை நான்கு மாதங்களில் கற்றுக் கொடுத்து விட முடியுமே? பிளஸ் 2 படிப்புக்களில் வீணாய்ப் போன பௌதிகம், இரசாயனம், விலங்கியல், தாவரவியல், பூகோளம், சரித்திரம் போன்ற தரித்திரப் பாடங்களுக்குப் பதிலாக இந்த எம்.பி.பி.எஸ். படிப்பை வைத்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும்? ஒவ்வொரு பிளஸ் 2 முடிக்கும் மாணவனும் கை தேர்ந்த ஆங்கிலேய மருத்துவனாக ஆகி விடுவானோ? மருத்துவச் செலவு மிச்சம்! என்று யோசிக்கலானேன். இதை நம் வாழ்வில் ஏதாவதொரு கால கட்டத்தில் செய்தே தீர வேண்டும். என்றும் உறுதி கொண்டேன்.

அதன் விளைவு? இன்று நான் இப்புத்தகத்தின் மூலமாக உங்களுக்கு ஆரம்பிக்க இருக்கும், “நீங்களும் ஆங்கில மருத்துவர்களாகுங்கள்!” இதைப் படிக்கும் நீங்கள் ஆங்கில மருத்துவம் ஒரு நாசகார மருத்துவம் என்பதைத் தெளிவாக அறிவீர்கள். அம்மருத்துவதை ஒரு போதும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டீர்கள். ஆங்கிலேய மருந்துகளைச் சாப்பிடாத வரையில்தான் உங்களுக்கு சுகமான வாழ்வு என்பதையும், எப்போது ஆங்கில மருந்துகளை உட்கொள்ள ஆரம்பிக்கிறீர்களோ, அன்று முதல் அந்த குறிப்பிட்ட நோயைக் கொண்ட மரணம் ஏற்படுமே தவிர அதுவரை மரண வேதனை தான் என்பதையும் உணர்ந்து கொள்வீர்கள்!

அடுத்த அத்தியாயம் முதலாக, ‘ஆங்கில மருத்துவத்தை ஏன் தீண்டக்கூடாது?’ என்பதற்கான முழுமையான ஞானத்தைக் கொண்ட முதல் தர ஆங்கில மருத்துவ மேதைகளாக ஆக இருக்கிறீர்கள்.

.
தொடரும்…
.

இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நன்றி: Jamialim. News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s