நீங்களும் மருத்துவர் ஆகலாம்…9

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!

ஒன்பதாம் பகுதி

இயக்க சக்தியும், ஜீரண சக்தியும் ஜுரம் என்ற நோய் எதிர்ப்பு சக்தியாக மாறும் செயல்முறை!
.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.
.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தி இந்த பதிவை புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

image

உடல் சக்தியை பெரும் வழிகளாவன:

# நாம் உண்ணும் உணவின் மூலமும்,

# சுவாசிக்கும் காற்றின் மூலமும்,

# குடிக்கும் நீரின் மூலமும்,

# எடுக்கும் ஓய்வின் மூலமும்,

# உடல் உழைப்பின் மூலமும்

பெறப்படும் சக்தியானது மூன்று பிரிவுகளாகப் பிரிந்து நம் உடலை பராமரிக்கிறது. அவை

1. இயக்க சக்தி (Functional Energy)

2. ஜீரண சக்தி (Digestive Energy)

3. நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)

பொதுவாக இந்த சக்திகள் நமது உடலில் சரிசமமாக இருக்கும். நம் உடலின் தேவைக்கேற்ப ஒரு சக்தியானது மற்றொரு சக்தியை தற்காலிகமாக பெற்றுக்கொள்ளும்.

உதாரணமாக நாம் தேவைக்கு அதிகமாக உணவை உட்கொண்டோமானால் அதை ஜீரணிக்க தேவையான சக்தி இல்லாத பட்சத்தில் நம் இயக்க சக்தியையும் எதிர்ப்பு சக்தியையும் நமது ஜீரண சக்தியானது தற்காலிகமாக பெற்றுக்கொள்ளும்.

எனவே யாரெல்லாம் உணவை உண்டவுடன் உறங்கி விடுகிறார்களோ அவர்கள் உண்ட உணவு முழுமையாக ஜீரணமாகிவிடும். நன்கு ஜீரணமான உணவை நம் உடல் வீணாக்காமல் தன்னுள் சேமித்து வைத்துக்கொள்ளும். அதனால் தான் நாம் உடல் பருமனாக இருப்பவர்களை பார்த்து “நல்லா திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குனா ஏன் குண்டாக மாட்டாய்” என்று நம்மை அறியாமலே வேடிக்கையாக கூறுவோம்.

இந்த செயல்முறை Process முடிவு பெற்ற பின் பழையபடி இயக்க சக்தியும் எதிர்ப்பு சக்தியும் இயல்புநிலைக்கு திரும்பி அதனதன் வேலையே ஆரம்பித்துவிடும்.
.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

உங்கள் குழந்தைகளுக்கு ஜுரம் ஏற்பட்டு விட்டால் முதலில் நீங்கள் உணர வேண்டியது, அது நம் உடலுக்கு நன்மையே என்பதாகும். அதாவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. உடலில் உள்ள நோய்களை எதிர்த்து அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. மற்றும் உடலின் பொதுவான இயக்க சக்திகளில் உடல் உறுப்புக்களான கை, கால்கள், வயிறு போன்றவற்றை இயக்கும் சக்தியிலிருந்தும் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தியாகத் திருப்பப்பட்டு விட்டது.
.

பசியும் ஜீரணமும் குறையும்

எனவே, சுரத்தின் போது உடல் உறுப்புக்களின் இயக்க சக்திகள் குறைவாக உள்ள நிலையில்

# வயிற்றின் இயக்கம் குறைவாக இருக்கும். இதன் காரணமாக ஜீரண சக்தி இல்லாமல் இருக்கும்.

# பசி எடுக்காது.

# தாகம் மிகக் குறைவாகவே இருக்கும்.

# நோய் எதிர்ப்பு சக்தியாக மாற்றப்பட்டுள்ள ஜீரண சக்தி, நோயை எதிர்த்து உடல் இயக்க சக்தியாக மாறி திரும்பும் வரையில் ஜீரணம் மிகவும் பலவீனமாக இருக்கும்.
.

ஜுரம் இரண்டே நாட்கள்தாம்

எந்த ஜுரம் ஏற்பட்டாலும் சரி, அதன் காலம் 2 நாட்களுக்கு மேல் கிடையாது. அந்த இரண்டே நாட்களில் நீங்கள் எவ்விதம் அந்த ஜுரத்தை – நோய் எதிர்ப்புச் சக்தியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இங்கு தருகிறோம்.

ஜுரம் ஏற்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே அதன் அறிகுறிகள் தெரியும். அவை என்ன? என்பதைப் பின்னர் பார்ப்போம். இப்போது ஜுரம் ஏற்பட்டதும் தோன்றும் அறிகுறிகள் என்ன? ஏன்? என்பதையும் அந்த வேளையில் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் பார்ப்போம்.
.

உடல், கை, கால்களில் உளைச்சல் அல்லது அசதி

சாதாரணமான நிலையில் இயக்க சக்தியானது இவ்வுருப்புக்களிலிருந்து கழிவுகளை நீக்கியும், புத்துயிர்ச் சக்தியைக் கொடுத்துக் கொண்டுமிருக்கும். எனவே வலிகளோ, அயர்ச்சியோ, உளைச்சலோ இருக்காது. ஆனால், உடலில் எங்கோ ஏற்பட்டு விட்ட நோயின் காரணமாக இயக்க சக்தி உடல் உறுப்புகளிலிருந்து திருப்பப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியாக மாற்றப்படும் போது கை, கால்களில் சோர்வும், உளைச்சலும் ஏற்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியின் ஆரம்ப நிலை.

சோர்வின் காரணமாக படுக்கவே தோன்றும். நோய் எதிர்ப்பு சக்தி நோயை எதிர்த்து அழிக்கும். அதாவது, தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தன் வேலையை முடித்துக் கொண்டு, உடல் இயக்க சக்தியாக கை, கால்களை உடலை இயக்கி, வழக்கமான வேலைகளைச் செய்ய முடியாது.

இப்போதைய தேவை ஓய்வு ஆகும். உடல் இயற்கை உங்கள் பாதுகாப்புக்காக நோயை எதிர்த்து இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதற்கு மதிப்பு அளிப்பது, ஓய்வு மேற்கொள்வது அவசியமாகும். ஒரே ஒரு வேளை, அல்லது இரண்டு வேலைகளுக்கு, ஓய்வு மேற்கொண்டால் போதுமானது. மிகவும் சுகமான ஓய்வு எடுங்கள்.

உங்கள் வேலைகளை மனதிலிருந்தும் நீக்கி விடுங்கள். ஏனெனில் உள்ளத்திலும் மன உளைச்சல் வேண்டாம். காரணம் உங்களுக்காக இறைவன் ஏற்படுத்திய இயற்கை எவராலும் செய்ய முடியாத ஒரு உதவியை உங்களுக்கு செய்து கொண்டிருக்கிறது. இந்த ஓய்வு உங்கள் மாதச் சம்பளம் டாக்டர்களின் கைகளுக்குள் சிக்கிக் கொண்டு விடாமல் காப்பாற்றும். ஓரிரு நாட்கள் சம்பளம் போனால் போகட்டும். நீங்கள் காப்பாற்றிக் கொள்ளும். உங்கள் உடல் நலமும், மன வளமும் உங்களை முதலாளிகளாக்கக் கூடிய மேன்மையான வழிகளைக் கற்றுத் தரும்.
.

தாகம் எடுக்காது

சிறுநீரகங்களும், நுரையீரல்களும், குடல்களும், வியர்வைச் சுரப்பிகளும் இயங்காது. எனவே தாகமும் எடுக்காது. ஜூரத்தின் போது தாகமும், பசியும் குறைந்து விடும். தண்ணீர் கூட ஜீரணம் ஆகாது. சிறுநீரகங்கள் இயங்க ஆரம்பிக்காமல் தண்ணீர் தாகம் எடுக்காது.

எனவே ஜுரம் ஆரம்பித்ததும் அடங்கிவிடும் தண்ணீர் தாகம் மீண்டும் தானாக ஆரம்பமாகும் வரையிலும் தண்ணீர் அருந்தக் கொடுக்காதீகள். ஜுரம் ஆரம்பமாகி அதிகபட்சம் 12 மணி நேரத்திற்குள் தண்ணீர் தாகம் லேசாக ஆரம்பிக்கும். தண்ணீர் தாகம் தோன்றும் அந்தத் தருணம் நோய் முறியடிக்கப்பட்டு விட்டது என்பதை உணர்த்துகிறது. இனி, நோய் எதிர்ப்பு சக்தியான ஜுரம் படிப்படியாக உடல் இயல்பான இயக்கங்களுக்குத் தேவையான இயக்க சக்தியாக மாறும். சிறுநீரகங்கள் இயங்க ஆரம்பிக்கும். சிறுநீரகங்கள் இயங்க ஆரம்பிக்கும் இந்தத் தருணம்தான் தாகம் ஆரம்பிக்கும் நேரம் ஆகும்.

‘தாகம்’ எடுக்க ஆரம்பித்ததும், தாகம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கே தான் தண்ணீர் குடிக்க வேண்டும். உதாரணமாக, தாகம் எடுக்கும்; ஆனால் ஒரு வாய் தண்ணீர் குடித்தவுடனேயே வாய்க்குப் பிடிக்காது. போதும் என்று தோன்றும். இன்னும் குடி என்று வற்புறுத்தக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து விட்டாலும், எடுத்ததற்காக தண்ணீரை முழுவதுமாகக் குடித்து விடாதீர்கள். ‘தண்ணீர் போதும்’ என்று மனது சொல்லும் பொழுது விட்டு விடுங்கள்.

இந்த நிலை தாகத்தைத் தொடர்ந்து சிறு சிறு வாய்க்கு அடிக்கடி தண்ணீர் தாகம் இடைவிடாது எடுக்கும். தண்ணீர் தாகம் தொடங்கி சுமார் 6 மணி நேரத்திற்குள்ளாக தண்ணீர் தாகம் முழுமையாகவும் நிறையவும் எடுக்கும். இந்த நேரம்தான் பசி ஆரம்பமாகும் நேரம்.
.

பசி எடுக்காது

ஜூரத்தின் போது, அடங்கிப் போன தாகம், மேற்கூறியவாறு மீண்டும் உயிர் பெரும் வரை உணவு என்ற பேச்சே கூடாது. பால், டீ காபி, பிரட், கஞ்சி என்று எதுவும் கொடுத்து விடாதீர்கள். இது ஜுரத்தை அதிகமாகி விடும். மற்றும் ஹார்லிக்ஸ், வீவா, காம்ப்ளான் என்று ஜுரத்தின் போதும் சரி, உடல் நலமடைந்த பின்னரும் சரி, ஒருக்காலும் கொடுத்து விடாதீர்கள். இவை ஊட்டச் சத்துக்கள் அல்ல; அவ்வளவும் இரசாயனங்கள். வியாதிகள் இரசாயனங்களுடன் கலந்து ஒவ்வொரு நோயும் பன்மடங்கு வீரியம் கொண்டு மீண்டு மீண்டும் வாழ்நாள் முழுமையும் தொடரும்.

ஜுரம் அடங்கி விட்டது என்பதன் முன்னறிவிப்பாக தாகம் முதலில் தொடங்கும். தாகம் முழுமையாகவும், இயல்பாகவும் திரும்பும் வரை உண்மையான ஜீரணம் இருக்காது. ஆகவே உணவு கூடாது. தண்ணீர் தவிர மாற்ற அனைத்தும் உணவுதான். ஆம்! பால் உட்பட கூடாது.
.

பசி நன்றாக எடுக்கும் வரை

தாகம் முழுமையடைந்த பிறகு தொடரும் பசிதான் வயிற்றுக்கு உணவை ஜீரணிக்கும் திறன் கிடைத்து விட்டது என்பதை உணர்த்துகிறது. பசி எடுக்க ஆரம்பித்ததும் அந்த வேளை உணவு தவிர்த்து விடுங்கள். மதிய வேளையில் பசி ஆரம்பமாகிறதென்றால், மதிய உணவு வேளையைத் தவிர்த்து இரவில் உணவு வேளையின் போது சாப்பிடக் கொடுங்கள். முதல் உணவு தண்ணீர் கலந்த சாதம் ஆகும். அதாவது கஞ்சி மட்டுமே. மறுவேளையிலிருந்து இயல்பான இயற்கையான உணவு சாப்பிடலாம்.

பசி எடுத்து சாப்பிட ஆரம்பித்து நாலைந்து நாட்களுக்கு, பால், டீ, காபி, ஹார்லிக்ஸ் போன்றவற்றைக் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. அதன் பின்னரும் தவிர்த்துக் கொண்டால் உடல் நலனுக்கு நல்லது.
.

இந்த முறையை பிறந்த குழந்தை முதலாக, பெரியவர்கள் வரை ஜுரத்தின் போது கடைப்பிடியுங்கள். உங்கள் வாழ்நாளில் நோய்கள் என்ற பேச்சே இருக்காது.

குறிப்பு:

1. ஜுரத்தின் போது வெப்பம் மிகவும் அதிகமாக இருக்குமானால், நெற்றியிலும், அக்குளிலும் லேசான ஈரத் துணியை வையுங்கள்.

2. தாகம் எடுக்கும் வரை ஒரு வாய் தண்ணீர் கூடக் கொடுக்க வேண்டாம். உதடு காயும்போது தண்ணீரைக் கொண்டு நனைத்து விட்டால் போதுமானது.

3. தாகம் தொடங்கும்போது எந்த அளவுக்கு போதும் என்கிறதோ அந்த அளவுக்குத்தான் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

4. தாகம் முழுமையாக எடுக்கும் வரை உணவு கூடாது; பால், டீ, காபி, ஹார்லிக்ஸ், பிரட் போன்றவை கூடாது.

5. தாகம் முழுமையாக அமையும்போது பசி உணர்வு வரும்.

பசி உணர்வு ஏற்பட்ட மறுவேளையிலிருந்து முறையாக உண்ணுங்கள்…

.

தொடரும்…
.

இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
.

முந்தைய பகுதியை வாசிக்க
https://www.facebook.com/ReghaHealthCare/photos/a.308654389217808.69688.308640462552534/1002785713138002/?type=3
.

குறிப்பு:
.

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.
.

ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
.

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ /வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு : தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.)

நன்றி: Jamialim. News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s