நீங்களும் மருத்துவர் ஆகலாம்…..7

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!

ஏழாம் பகுதி

image

குழந்தைகளுக்கு ஜூர மாத்திரை கொடுக்காவிட்டால் வலிப்பு வராது!
.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

குழந்தைகளுக்கு ஜூர மாத்திரை கொடுக்காவிட்டால் வலிப்பு வந்து விடுமா..?

இல்லை!

இது ஆங்கில மருத்துவத்தின் பூச்சாண்டித்தனம்..!
.

வலிப்பு நோய்க்குக் காரணம் என்ன?

Febrile Fits என்பது, ஜுரம் காரணமாக வரும் கை, கால் வலிப்பு நோய் ஆகும். இந்த நோய்க்கான காரணம் என்ன என்பது ஆங்கில மருத்துவத்திற்கு இன்று வரை தெரியாது. ஆனாலும் காரணம் கண்டுபிடிப்போம் என்று E.E.G. (Electro Encephalo Gram) என்ற டெஸ்ட் செய்வார்கள். இந்த டெஸ்ட் எதற்காக என்றால் மூளையில் மின் அணுச் சமிக்ஞைகளும், அதிவலைகளும் கை கால்களை இயக்கும் பாகத்தில் எந்த அளவுக்கு செயல்படுகின்றன; தூண்டப்பட்ட நிலையில் இருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்காகவேயாகும்.
.

E.E.G. க்குப் பிறகு…?

இந்த E.E.G. Report – ஐப் பார்த்து பின் அதைப் பற்றி என்ன செய்வது? ஒன்று; மூளை நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் விஷ மருந்துகளைக் கொடுக்க வேண்டும். அல்லது, அறுவை சிகிச்சை மூலமாக கை, கால்களை இயக்கக் கூடிய மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை சிதைத்து விடுகிறது. இது இரண்டைத் தவிர எங்களிடம் வைத்தியம் இல்லை.
.

வலிப்புக்குக் காரணம்?

மூளையின் சம்மந்தப்பட்ட நரம்புப் பகுதிகள் ஏன் தூண்டப்பட்டுள்ளன? என்பதன் காரணம் எங்களுக்குத் தெரியாது. ஜூரத்தின் போது எவ்வாறு தூண்டப்படுகின்றன? உண்மையிலேயே ஜுரத்திற்கும், கை, கால்கள் வலிப்பிற்கும் சம்பந்தம் உண்டா? இது குறித்து ‘ இல்லை’ என்றும், ‘ஆம்’ என்றும் எங்களுக்குள்ளேயே முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் ஜுரத்துர்க்கும் வலிப்பு நோய்க்கும் சம்பந்தம் உண்டு என்ற கருத்தைப் பரப்பிவிடுவது தான் எங்கள் வருமானத்திற்குச் சிறந்தது என்பதில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நீங்கள் அதையே அப்படியே நம்பி ஜுரம், என்றதும் ஜன்னி வந்து விடுமோ என்ற அச்சத்துடன் ஜுரத்தைக் குறைப்பதற்காக, எங்களிடம் தூக்கிக் கொண்டு ஓடி வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
.

மருந்து மாத்திரைகளே காரணம்!

வாசகர்களே! ஜுரத்திற்கும் வலிப்பு ஏற்படுவதற்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை, ஜுரம் மாத்திரைகளும், வலிப்பு நோய் மாத்திரை மருந்துகளும்தான் வலிப்பு ஏற்படக் காரணம் என்பதையும் இப்போழுது நீங்கள் அறிந்து கொள்ள இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் கற்கப் போகும் விஷயம் ஆங்கில மருத்துவப் படிப்பு அறியாத, முற்றிலும் புதிய கோணம் ஆகும்.
.

98.4’ F

மூளையில் இருக்கும் பகுதிகளில் கை, கால்கள், தசைகளை இயக்கும் பகுதிகளும் இருக்கின்றன. ஒரு உறுப்பின், அதன் தசைகளின் இயக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பம் தேவையாக இருக்கிறது. அதன் அளவு 98.4’ F ஆகும். வயிறு, இருதயம், கல்லீரல், குடல்கள், கை, கால்கள், மூளை என்று உடலின் அனைத்து உறுப்புக்களும் இயங்க வேண்டுமெனில் அதற்கு இந்தக் குறிப்பிட்ட அளவு வெப்பம் அத்தியாவசியமாகும்.
.

ஜுரம் – நோய் எதிர்ப்பு சக்தி ஆகும்

சில சந்தர்ப்பங்களில், உடலின் உறுப்புக்கள் எதிலாவது ஏதேனும் நோய் ஏற்படும்போது அதை எதிர்க்கும் சக்தி, சாதாரணமாக இயங்கும் திறனிலிருந்து அதிகரிக்க வேண்டும். இதுவே நோய் எதிர்ப்பு சக்தியாகும். இந்தத் தீவிரமான எதிர்ப்பு சக்திக்கும், அதன் இயக்கத்திற்கும், சாதாரண இயக்கத்திற்குரிய வெப்ப (98.4) நிலையைக் காட்டிலும் அதிகமான வெப்பம் தேவைப்படுகிறது. ஆகவே, 99.F, 100.F, 101.F என்று உயருகிறது. இதனையே நாம் ஜுரம் என்கிறோம்.
.

ஜுரம்: உடல் முழுவதும் சீராக…

இந்த ஜுரமானது, உடல் முழுமையையும், மயிர்க்கால்கள் முதலாக, விரல் நுனி நகம் வரையில் பரவி நிற்கும்: இன்னும் தோல் முதல் உடல் உறுப்புக்கள் முழுமையையும் எலும்புகள் வரை ஜுரம் என்ற அந்த வெப்ப சக்தி வியாபித்திருக்கும். இது அறிவிப்பது என்னவெனில், ஜுரம் என்பது நோய் எதிர்ப்பு சக்தியாகும். ஜுரம் அடிக்கும்போது அது உடல் முழுவதும் வெப்ப சக்தி சுற்றுவதன் காரணம். நோய் உடல் முழுமையிலும் பரவியிருக்கிறது என்பதேயாகும். எனவே தொண்டையில் டான்ஸில்ஸ் காரணமாகச் சிறியதொரு புண் ஏற்பட்டாலும் அந்த நோயின் சக்தியானது உடல் முழுமையும் பதித்து விட்டது என்பதே அதன் பொருளாகும்.

எந்த ஒரு நோயும், உடலின் எந்த ஒரு மூலையில் ஏற்பட்டாலும் சரியே! அது உடல் முழுமையும் பாதிக்கிறது! எனவே ஜுரம் ஏற்படும்போது (நோய் எதிர்ப்பு சக்தி) உடல் முழுமையும் பாதிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
.

ஜுரம்: சீராக இல்லையெனில்…

உங்கள் குழந்தைகளுக்கு ஜுரம் ஏற்பட்டால் உடலில் எங்கு தொட்டாலும் சீரான வெப்பம் தெரிய வேண்டும். ஆனால் சில, பல சமயங்களில் நாம் அறிந்திருப்போம். சில குழந்தைகளுக்கு கைகளில் அல்லது உள்ளங்கைகளில் சூடு இருக்கும். கால்கள் ஜில்லென்று இருக்கும். நெஞ்சு பாகம் மட்டும் சுடும்; அல்லது முதுகுப் புறத்தில் மட்டும் சூடு இருக்கும்; சிலருக்கு நெற்றியிலும், முகத்திலும் சூடு இருக்கும். மாற்ற பாகங்களில் நார்மலாக இருக்கும். இன்னும் சிலருக்கு உள்ளுக்குள் ஜுரமாக உணருவார்கள். ஆனால் ஜுரம் வெளியில் தெரியாது. சுரத்தின் வெப்பமானது ஒரே சீராக இல்லாமல் ஆங்காங்கே வெப்பமாக இருப்பதும், பிற பாகங்களில் குளிர்ந்து அல்லது நார்மலாக இருப்பதும் உடல் நலச் சீர்கேட்டை அறிவிக்கிறது.
.

ஜூரத்தின் போது சில பாகங்கள் ஜில் என்று…

எந்த ஒரு நோயும் உடல் முழுமையும் பரவி விடுகிறது என்பதை நாம் அறிவோம். எனவே ஜுரமும் – நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் முழுமையும் பரவ வேண்டும். அப்போதுதான் நோயானது ஒட்டு மொத்தமாக எதிர்க்கப்படுகிறது என்பது பொருள். ஆகவே உடல் முழுவதும் ஜுரத்தின் போது அதன் வெப்பம் எங்கு தொட்டுப் பார்த்தாலும் ஒரே அளவாக இருக்க வேண்டும். அவ்வாறின்றி சில பகுதிகளில் அதிக வெப்பமும், சில பகுதிகளில் குறைவாகவும் இருக்குமேயானால் எந்தெந்த பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு நோய் முற்றிலுமாக நீக்கப்படும். எந்தப் பகுதிகளில் ஜுரத்தின் போது ஜில்லென்று இருக்கிறதோ அங்கு நோய் தங்கி விட்டது – காரணம், நோய் எதிர்ப்பு சக்தி (வெப்பம்) அங்கு போய்ச் சேரவில்லை என்பது பற்றி இன்று நாம் தெளிவாக்கிக் கொள்வோமாக, உடல் முழுமையிலும் வெப்ப சக்தியை (இயக்க சக்தியை) சுற்றிப் பரவச் செய்யும் சக்தி நாளங்களில் பல இடங்களில் தடை ஏற்பட்டுள்ளது என்பதனையும் அது அறிவிக்கிறது.
.

எந்தெந்த இடத்தில் ‘ஜில்’ என்றிருக்கிறதோ…

உடலின் எந்தப் பாகங்களில் ஜுரத்தின் போது சில்லிட்டு காணப்படுகிறதோ, அந்த பாகங்களிலும் அது தொடர்புடைய உல் உறுப்புக்களிலும் நோயின் தீவிரம் அப்படியே இருக்கின்றன. அவற்றிலிருந்து மீண்டும் அதே பழைய நோய்கள் உருவெடுக்கும் என்பதையும் சந்தேகமில்லாமல் அறிந்து கொள்ளுங்கள். வெப்ப சக்தி நாளங்களில் ஏற்பட்டுள்ள இந்த அடைப்புக்கள் திறக்கப்படாத வரையில் ஒவ்வொரு நோயும் வாழ்நாள் முழுக்க, தொடரும். உதாரணமாக கை, கால், இடுப்பு, முதுகு, கழுத்து, மூட்டு வலிகள், கான்சர், சைனஸ் தலைவலி, போன்று இன்னும் உடலில் தோன்றும் எந்த ஒரு வியாதியும் அது சிறிதோ, பெரிதோ சாகும் வரை அதனுடனேயே போராடி அந்தந்த நோய்களுடனேயே இறக்கவும் நேரிடும்….
.

ஆணவம், அறியாமையே ஆங்கில மருத்துவம்..!

வெப்ப சக்தி நாளங்களில், ஜுரத்தின் போது நோய் எதிர்ப்பு சக்தியானது சுற்றுப் பெற விடாமல் அதன் பாதைகளில் தடை ஏன் ஏற்பட்டது?

இங்குதான் ஆங்கில மருத்துவம் பெரும் குற்றவாளியாக நிற்கிறது. மனித குலத்தின் உடல் நலத்தையே சீரழித்து, தன் மருந்துகளால் கொடுமையான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த ஆங்கிலேயர்களின் மருத்துவத்தின் அறியாமையையும், ஆணவத்தையும் இந்த மருத்துவம், மருத்துவம் என்ற நிலைக்கே எவ்விதம் அடிப்படைத் தகுதியுமற்றது என்பதையும் இப்போது பார்ப்போம்.
.

ஜுரம் என்றால் என்ன? என்று கூட தெரியாது ஆங்கில மருத்துவத்துக்கு!

ஜுரம் என்பது நோய் எதிர்ப்பு சக்தி என்பதைச் சற்றும் அறியாததுதான் ஆங்கிலேய மருத்துவம். ஜூரத்தின் வெப்பம் சுற்றும் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆங்கில மருத்துவர்கள் ஜுரம் என்ற வெப்பத்தை நோய் எதிர்ப்பு சக்தியை தணிக்கும் அல்லது சீர் குலைக்கும் மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள்.
.

ஜுரம் மாத்திரைகளே வலிப்புக்கு…

ஜுரம் தணிக்கும் மருந்துகளின் காரணமாக வெப்பமும் நோய் எதிர்ப்பு சக்தியும் சிதைக்கப்பட்டு உடல் உஷ்ணம் குளிரும் போது, உஷ்ணத்தை உடல் முழுமையிலும் சுற்றுப் பெற உதவும் சக்தி நாளங்கள் சுருங்குகின்றன. இதன் காரணமாக வெப்பம் – அதாவது ஜுரம் என்ற நிலை உடலின் பல பாகங்களில் தேக்கம் கொண்டு, அளவுக்கு மீறி அதிகமாகி விடுகின்றன. வெப்ப சக்தி உடல் முழுமையிலும் கண்ணுக்குத் தெரியாத சக்தி நாளங்களின் வழியாக சுற்றுப் பெற்று ஒவ்வொரு உறுப்பிலும் ஊடுருவிப் பரவுகிறது. ஜுரம் மாத்திரை, மருந்துகள் அனைத்தும் இந்த சக்தி நாளங்களை சுருங்கச் செய்து விடுகின்றன.

உதாரணமாக வயிற்றைச் சுற்றி சக்தி நாளங்கள் ஜுரம் மாத்திரைகள் காரணமாக குளிர்ந்து சுருங்கி விடுமானால் வயிற்றுக்குள் வெப்ப சக்தி தேக்கம் கொண்டு விடுகிறது. இனி இந்த வெப்ப சக்தி சுற்றுப் பெறாத காரணத்தால் கெட்ட சக்தியாகி கெட்ட வாயுக்களாக வாய் வழியாகவும், குடல்கள் வழியாகவும் பிரிய ஆரம்பிக்கின்றன. சுற்றுப் பெறாமல் கெட்டு விட்ட இந்த வெப்ப சக்தி வயிற்றை பதம் பார்க்க ஆரம்பிக்கிறது. வயிற்றில் ஜீரண சுரப்பி நீர்களை அதிகப்படுத்துகிறது. அதே சமயம் அச்சக்தி வயிற்றின் இயக்கத்திற்கு உதவாது.
.

ஜுரம் தணிக்கும் மாத்திரைகளின் கேடுகள்!

இந்த நிலையில்தான் ஜுரம் மாத்திரைகளின் காரணமாக ‘காஸ்ட்ரைட்டிஸ்’ வயிற்று மந்தம், அகீரணக் கோளாறு, பசியின்மை, இன்னும் மோசமாகப் பொய்யான பசி, வயிற்று எரிச்சல், வயிற்று வலி, வயிற்று அல்சர், கான்சர் வரை அனைத்து நோய்களும் வயிற்றில் உருவாகிறது. இவ்விதமே சிறுநீரகங்களில் அவற்றின் உள்ளேயும், வெளியேயும் செல்லும் வெப்ப சக்தி நாளங்கள் ஜுரம் தணிக்கும் மாத்திரைகளின் மூலமாக குளிர்ச்சியடைந்து சுருங்கி விடுவதனால், சிறுநீரகங்களில் வெப்ப சக்தி தென்பட ஆரம்பிக்கிறது. சுற்றுப் பெறாமல் தேங்கி விடும் எந்தவொரு பொருளும் விஷமாகி விடும். இவ்விதம் சிறுநீரகங்களில் தேங்கிவிடும் வெப்ப சக்தி விஷ சக்தியாக மாறி விடுகிறது. ஆகவே, சிறுநீரகங்கள் விஷத் தன்மையடைந்து அது உடல் சுகாதார ரீதியான செயல்களில் இருந்து மாறுபடுகிறது. நாளடைவில் சிறுநீரகங்கள் பழுதடைகின்றன.
.

சிறுநீரகங்கள் செயலிழப்பு ஏன்?

இவ்விதமே, மூளைக்குள் பரவி பின்னர் அதனின்றும் வெளியேறும் வெப்ப சக்தி நாளங்கள் ஜுரம் நாளங்கள் ஜுரம் தணிக்கும் மாத்திரைகளால் சுருங்கிவிடும்பொழுது மூளையில் இருந்து இயக்கம் கொள்ளும் அனைத்து செயல்களும், விஷத்தன்மை கொண்ட வெப்ப சக்தியிலிருந்து வெளிப்படுகிறது.

உதாரணமாக கை, கால்களை இயக்கும் தூண்டுதல்கள் மூளையின் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் இருந்து பிறக்கிறது. மூளையின் அந்த குறிப்பிட்ட பாகத்தில் இந்த தேக்கம் கொண்ட வெப்பம் விஷ சக்தியாக மாறும்போது மூளையின் அந்த பகுதி உடலுக்கு கேடான துரிதமான தூண்டுதல்களில் வெளிப்படுகிறது. இதன் காரணமாக கை, கால்களில் வலிப்பு ஏற்பட்டு துடிக்கின்றன. மூச்சும், பேச்சும் கை, கால் வலிப்பின் போது தடைப்படுகின்றது. அவர் சுயநினைவையும், இழக்கின்றார். இதுவே கை கால் வலிப்பு நோயின் தோற்றமாகும்.
.

ஜுரத்துக்கு மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது

இந்த நோயிலிருந்து விடுபட வேண்டுமானால் நாம் மீண்டும் அறிந்து கொள்ள வேண்டும்: “ ஜுரம் தணிக்கும் மாத்திரைகளால் வந்த பெரும் வினையாகும் இது! ” என்பதை, என்று நாம் முதன் முறையாக குழந்தைகளுக்கு ஜுரம் ஏற்ப்பட்டு விட்டது என்று டாக்டர்களிடம் அழைத்துச் சென்று ஜுரம் தணிக்கும் மாத்திரையை கொடுத்தோமோ அன்று உருவான நிலைதான் உடல் சம்பந்தமான அனைத்துக் கேடுகளும் அதில் உள்ள ஒவ்வொரு மாத்திரைகளால் உருவானதேயாகும் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளுங்கள். இனி ஜுரம் தணிக்கும் மாத்திரைகளை ஒருபோதும் குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.
.

அடுத்த போஸ்டில் :

மருந்து மாத்திரைகள் இல்லாமல் ஜுரத்தை இரண்டே நாட்களில் எவ்வாறு குணப்படுத்துவது?,

ஜுரமும், வலியும் தான் நோய்களைக் குணமாக்குகின்றன…?

என்பதை பார்ப்போம்.
.

தொடரும்…
.

இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நன்றி: Jamialim. News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s