நீங்களும் மருத்துவர் ஆகலாம்….6

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!

ஆறாம் பகுதி

image

ஜுரத்தை தணிப்பதற்க்கு மாத்திரைகள் கொடுக்க வேண்டாம்!
.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

ஜுரத்தை தணிப்பதற்க்கு மாத்திரைகள் கொடுக்க வேண்டாம்!

வாசகர்களே!, ‘ஜுரம்’ வந்து விட்டால், உடனே டாக்டரிடம் செல்கின்றோம். அவர் ஜுரம் குறைய மாத்திரைகள் கொடுக்கிறார். ஜுரம் குறைந்து விடுகிறது. டாக்டர் குணப்படுத்தி விட்டார் என்று நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால், அந்த ஜுரம் தணிப்பதற்கான மாத்திரைகளைக் கொடுத்து உங்களுக்கு மிகப் பெரும் பாதகத்தைச் செய்து விட்டார் அந்த டாக்டர் என்பதை இன்றுவரை நாம் அறியாதவர்களாகவே இருக்கின்றோம்.
.

எம்.பி.பி.எஸ். – எங்களிடம் மட்டும்தான் ஸ்பெஷலிஸ்டுகள்

நாங்கள் உண்மையான மருத்துவர்கள்! காரணம், எங்களிடம் ஸ்பெஷலிஸ்டு – சிறப்பு மருத்துவர்கள் என்ற தனித்தனியான துறைகளை நாங்கள் பங்கிட்டுக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு சிறப்பு மருத்துவத் துறையும் ஒவ்வொரு உறுப்பு – மனித உறுப்பைக் கவனித்து விடும். கடைசி வரையில்!
.

நல்ல ட்ரீட்மென்ட் – பணம் இருக்கும் வரை!

ஸ்பெஷலிஸ்டுகளாகிய எங்களிடம் நீங்கள் வந்து விட்டால் சாகும் வரை எங்களிடம்தான் இருப்பீர்கள். நாங்கள், நீங்கள் சாகும் வரை உங்களை கவனித்துக் கொள்வோம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். நீங்கள் பணக்காரரர்களாக இருக்க வேண்டும்! எங்களிடம் வரும் நோயாளிகளுக்கு ட்ரீட்மென்ட் (படுக்கை வசதிகளுடன் கவனிப்பது) இருக்கிறதே தவிர, ‘குணப்படுத்தி விடுவோம்’ என்று நாங்கள் சொல்வதில்லை. We only have treatment, we never calm we have cure for your diseases.
.

பணம் இருந்தால், எங்களிடம் மட்டும்தான்!

எங்களிடம் பணம் கொடுத்து உங்களால் முடியாமல், ஏழைகளாகி விடுவீர்களானால், எங்களிடம் ட்ரீட்மென்ட்டும் கிடையாது. வேறு ஏதாவது பார்த்துக் கொள்ளுங்கள். போலி டாக்டர்களிடம் செல்வீர்களோ, அல்லது வேறு யாரிடம் செல்வீர்களோ? அதுபற்றி எங்களுக்கு அக்கறையும் இல்லை. ஆனால் பணம் உங்களிடம் இருக்குமானால் எங்களைத் தவிர மாற்ற மருத்துவங்களுக்கு நீங்கள் செல்வதை நாங்கள் நிச்சயமாக விரும்ப மாட்டோம்.
.

மக்களின் மூட நம்பிக்கையே – எங்கள் சாதகமும், சாதனமும்

எங்களிடம் வரும் நோயாளி பிழைப்பார் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் எங்களுக்கு அந்த நோயாளி இறப்பார் என்பது நன்றாகத் தெரியும். எனினும் கடைசி நிமிடங்களில் தான் வேறு யாரையாவது அல்லது ஏதாவது வைத்தியம் பாருங்கள் என்று அனுப்புவோம். நீங்கள் யாவரும் எங்களுடைய கைப் பொம்மைகளாக இருக்கும் வரையில் எங்களை மூடத்தனமாக நம்பிக் கொண்டிருக்குக் வரையில் உங்களைப் போன்றவர்களை நாங்கள் முழுமையாக உபயோகித்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
.

MBBS – ஜுரத்திரத்திற்க்குக் காரணம் தெரியாது

வாசகர்களே! இன்று உலகில் இருக்கும் சிறிதோ அல்லது பெரிதோ பல்லாயிரக்கணக்கான நோய்களுக்கும் காரணம் இந்த ஆங்கில மருத்துவம்தான். ஒரு நோய் எவ்வாறு ஏற்ப்படுகிறது என்பதன் காரணமும் தெரியாது; அந்த நோய்க்கு அறிகுறியாக ஜுரம ஏன் ஏற்ப்படுகிறது எதுவும் தெரியாது. இதுவே ஆங்கில மருத்துவத்தின் உச்சகட்டமான மடத்தனம், அறிவீனமும்!

வாசகர்களே! இப்போது ஜுரம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள இருக்கிறீர்கள். இந்த கல்வி அறிவின் முக்கியத்துவம் என்னவென்றால் நீங்கள் இப்பொழுது கற்க இருக்கும் உண்மை 200 ஆண்டுகளாக இன்று வரை ஆங்கில மருத்துவதுத்துக்குத் தெரியாத உண்மையாகும்….
.

98.4’ F வெப்ப சக்தி

ஜுரம் என்பது வெப்ப சக்தியாகும். சக்தி என்பது இயக்கத் திறன் ஆகும். சாதாரணமான நிலையில் நம் உடலின் இயல்பான இயக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு வெப்ப சக்தி தேவை. இந்த வெப்ப சக்தி உடல் இயல்பு நிலையில் அதன் உள்ளுறுப்புக்களும், வெளியுறுப்புக்களும் இயற்கையாக இயக்கம் கொள்ள உதவி செய்கிறது.

இந்த வெப்ப சக்தியின் காரணமாக 5 புலன்களும் கண், காது, மூக்கு, வாய், தொடு உணர்வு போன்ற வெளி உருப்புக்களிக்கு உயிரோட்டம் அளிக்கும் வேலையையும்; வயிறு, குடல்கள், நுரையீரல், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, கல்லீரல், பித்த நீர்ப்பை, இருதயம் ஆகிய உள் உறுப்புக்களின் இயக்கங்களுக்கும், கைகள், கால்கள் ஆகியவற்றின் இயற்கையான இயக்கங்களுக்கும் இந்த வெப்ப சக்தி உதவுகிறது. இந்த வெப்ப சக்தியின் அளவு 98.4’ F.
.

ஜுரம் – Defense force

98.4’ F என்ற இந்த வெப்ப சக்தி அதிகமாகும் போது ஜுரம் என்ற பெயரைக் கொண்டு அழைக்கிறோம். ஜுரம் என்பது இயல்புக்கு அதிகமான வெப்ப சக்தியாகும். நமது உடலில் நோய்கள் ஏற்படும்பொழுது ‘நோய் எதிர்ப்பு சக்தி’ உருவாகிறது என்பதை நாம் அறிவோம். இனி இதனை எதிர்ப்பு சக்தி (Defence force) என்று அழைப்போம்.

நோயை எதிர்த்து உருவாகும் எதிர்ப்பு சக்தி இயல்பான இயக்கங்களை விட துரிதமானதும், வேகமானதும் ஆகும். இயல்பான இயக்கத்திற்கு 98.4’ F என்ற அளவுக்கு வெப்ப சக்தி தேவைப்படுகிறது என்றால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நோயுற்ற தன்மையில் அந்த பாதகமான நிலையை சீர்படுத்தவும், நோயை எதிர்த்து வெற்றி கொள்ளவும் இந்த இயக்கத்திற்குத் தேவையான வெப்ப சக்தி இயல்பு இயக்கத்திற்கானத் தேவையைக் காட்டிலும் அதிகரிக்கிறது. அதாவது ஜுரம் ஏற்படுகிறது.
.

ஜுரம் மிகவும் அத்தியாவசியம் ..?

இந்த அதிகமான வெப்ப சக்தி உடலின் நோய் எதிர்ப்புக்கு மிகவும் அவசியமானதாகும். இந்த நோய் எதிர்ப்பு சக்தி, அதாவது, வெப்ப சக்தி அதிகரிக்கவில்லையென்றால், ஜுரம் ஏற்ப்படவில்லை என்றால், நமது உடலில் எதிர்ப்பு சக்தி இல்லை என்பது பொருளாகும். இந்த நிலையில் நோயின் தீவிரம் அதிகரிக்கும்.
.

ஜுரம் நோய்களைத் தடுக்கும் ‘அரண்’..!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது (ஜுரம் ஏற்ப்படுகிறது) என்றால் உடலில் எந்த நோயும் தங்காது. மாறாக, ஜுரம் ஏற்படவில்லையென்றால் நோய்களின் தன்மைகளும், அதனுடைய தீவிரங்களும், இன்னும் பலப்பல நோய்களும் உருவாகும் என்பதைத் தெளிவான சிந்தனையுடன் இனி நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
.

அதிக ஜுரம் – அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி ..!

எனவே ஜுரம் ஏற்ப்படுமேயானால், அது நோய் எதிர்ப்பு சக்தியின் தீவிரத்தைக் காட்டுகிறது. இது மிகவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயமாகும். ஏனெனில், இந்த ஜுரம் தான் நோயை மும்முரமாக எதிர்த்து அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.

இந்த உண்மையை அறியாத ஆங்கில மருத்துவம் ஜுரத்தைத் தணித்து, இந்த வெப்ப சக்தியை (நோய் எதிர்ப்பு சக்தி) வீணடித்து விரயமாக்கி விடுகிறது. இந்த ஆங்கில மருத்துவத்தின் அறியாமையின் உச்சகட்டம்தான் ஒவ்வொரு மனிதனின் அடுக்கடுக்கான நோய்களுக்கும், தீர்க்கவே பட முடியாத நாட்பட்ட நோய்களுக்கும் காரணமாக இன்று அமைந்து விட்டது.
.

ஜுரம் நோய் அல்ல, நோய் குணமாகிக் கொண்டிருக்கும் அறிகுறி..

குழந்தையைப் பார்க்கும் ஆங்கில மருத்துவர் ஜுரத்தை நோய் என்றே கருதுகிறார். அந்த ஜுரம் என்பது அந்தக் குழந்தையின் நோய்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி என்பதனை அந்த ஆங்கில மருத்துவர் அறிய மாட்டார். ஆகவே, ஜுரத்தை வீணடிக்கும் மாத்திரையை, மருந்தைக் கொடுக்கிறார். ஜுரமும் தணிந்து விடுகிறது. அதாவது, மிக நேர்த்தியான இயற்கையுடன் இணைந்து ஒன்று திரண்ட அந்த மாபெரும் நோய் எதிர்ப்பு சக்தி நிர்மூலமாக்கப்பட்டு விடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி (வெப்ப சக்தி) சிதைக்கப்பட்டு விட்ட நிலையில் ஜுரம் தணிந்து விடுகிறது.
.

மீண்டும், மீண்டும் ஜுரம்..?

இனி ஒரே ஒரு நோயாக அந்தக் குழந்தையின் இடத்தே உருவாகிய தொந்தரவு அந்த நோயின் தீவிரத்தால் அதிகமாக ஆரம்பிக்கிறது. மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து உடலின் பல உறுப்புக்களையும் தாக்குகிறது. மீண்டும் நோயை எதிர்க்கும் வெப்ப சக்தி உருவாகிறது. மீண்டும் ஜுரம் என்ற நிலை ஏற்ப்படுகிறது. மீண்டும் சுர மாத்திரைகள், மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தி அழிக்கப்படுகிறது.

ஜுரம் தணிக்கும் மாத்திரைகள் ஒவ்வொரு குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியையும் நிர்மூலமாக்கும். அதாவது என்று ஜுரத்தைத் தணிக்கும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டனவோ, அன்று முதலே தீர்க்க முடியாத பல நோய்களினால் தீண்டப்பட்டு விட்டனர்.
.

எனவே, வாசகர்களே!

எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் குழந்தைகளுக்கு ஜுரம் என்ற நோய் எதிர்ப்பு சக்தியை நிர்மூலமாக்கும் ஜுரம் தணிக்கும் மாத்திரைகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள். இது உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும் மேலான வாழ்க்கைக்கும் இன்றியமையாதது ஆகும்.
.

கை, கால் வலிப்பு வந்து விட்டால்…?

வாசகர்களே! ஜுரம் மாத்திரைகள் கொடுக்கவில்லையென்றால் கை, கால் வலிப்பு வந்து விடும் என்றா பயப்படுகிறீர்கள்?

இதைப் பற்றிய உண்மை என்ன?

எவ்வாறு?

மருந்து மாத்திரைகள் இல்லாமல் நோயுற்ற குழந்தையை சுகப்படுத்துவது என்பதை அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்….
.

தொடரும்…
.

இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

நன்றி: Jamialim. News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s