நீங்களும் மருத்துவர் ஆகலாம்….4

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!

நான்காம் பகுதி

image

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கிருமிகளைக் கொல்லாது; உங்களைத்தான் கொல்லும்!!!
.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கிருமிகளைக் கொல்லாது; உங்களைத்தான் கொல்லும்!!!
.

வாசகர்களே, ஆங்கில மருத்துவம் மொத்தத்திலேயே 4 மருந்துகளைக் கொண்டிருக்கிறது. இந்த 4 மருந்துகளைகளையும் நீக்கிவிட்டால், ஆங்கில மருத்துவம் அடியோடு நொறுங்கிப் போகும். இந்த நான்கு வகை மருந்துகள் இவைதாம்.
.

1. ஜுரம் – குறைப்பதற்கான மாத்திரைகள்.

2. Antibiotics – நுண்ணுயிர்க் கொல்லி – ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள்.

3. Anti – inflammatory Drugs – வலி, வீக்கம், குறைப்பதற்கான மாத்திரைகள்

4. Alliergy Drugs – ‘அலர்ஜி’க்கான மாத்திரைகள்.
.

4 மாத்திரைகள் – மகா பாதகம்

இந்த 4 மாத்திரைகள்தாம் ‘அலோபதி’ எனும் ஆங்கில மருத்துவம். இந்த நான்கு மாத்திரைகளையும் எந்த நோயாளிக்கும், எக்காலத்திலும், எந்தக் காரணத்திற்க்காகவும் கொடுக்கக் கூடாது. அது மகா பாதகமாகும். எப்பொழுது இந்த மருந்துகளை முதன் முறையாக உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறோமோ, அன்று தொடங்கியதுதான், தொடர்வதுதான் இன்று மனித இனத்தையே அளித்து வரும் நாட்பட்ட நோய்கள். இந்த மருந்துகளின் காரணமாகத் தாமே குணமாகக் கூடிய நோய்கள் அனைத்தும் வாழ்நாள் முழுமையும் நீங்காத நோய்களாக மனித சமுதாயத் தினரிடையே நிலைபெற்றுவிட்டன. இவற்றை Chronic Diseases என்று பெயரிட்டிருக்கின்றனர்.
.

இப்படியும் ஒரு மருத்துவமா?

இவர்களுக்கு, இந்த ஆங்கிலேயர்களின் மருத்துவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு Chronic Diseases – நாட்பட்ட நோய்களுக்குக் காரணம் என்ன? என்பது இன்று வரை தெரியாதது தான் கொடுமையிலும் கொடுமை! இந்த ஆங்கிலேயர்கள் இவ்வளவு அறிவற்றவர்களா? ஆம். இப்படியும் இறைவன் படித்திருக்கிறான் என்பதுதான் உண்மை.

வாசகர்களே! நாங்கள் படிக்கும் காலத்திலிருந்தே ஏன் ஆங்கிலேயர்கள் இறக்குமதி செய்த உருப்படாத மருத்துவத்தை மனதளவில் எதிர்த்தோம்? என்பதைக் கீழ்வரும் கேள்வி – பதில் நிகழ்ச்சியைக் கவனமாகப் படிப்பதைக் கொண்டு அறியமுடியும்.

மருத்துவக் கல்லூரியில் STANLEY MEDICAL COLLEGE – ல் 3-ம் ஆண்டு படிப்பின் ஆரம்பம். மருந்துகள் சம்மந்தப்பட்ட பாடம் ஒன்று ஆரம்பமாகியது. அந்த ஆரம்பமே பிடிக்கவில்லை.

மூன்றாம் ஆண்டில்தான் எங்களை நோயாளிகள் வார்டுகளுக்குள் அனுமதிப்பார்கள். என்னுடைய வார்டு சீப் டாக்டர், ப்ரொஃபசர் டாக்டர். எம். பி. பிரபாகரன் அவர்கள். மருந்துகள் சம்மந்தப்பட்ட பாடம் Pharmacology ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, நோயாளிகளை எவ்விதம் அணுகுவது? வைத்தியமளிப்பது எவ்விதம்? எந்த எந்த மருந்துகளைக் கொடுப்பது போன்ற பாடம் மற்றொரு புறம். மருந்துகளைப் பற்றி என்ன கற்றுக் கொடுத்தார்களோ, அது ஒரு போதும் நோயாளிகளுக்கு நன்மையைத் தர முடியாது என்பதை மிகத் தெளிவாக உணர முடிந்தது.
.

டாக்டர். எம். பி. பிரபாகரன் அவர்கள் என்னிடம் சற்று பிரியமானவர் என்பதால் அவரிடம் ஒருமுறை என் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். நானும், ப்ரொஃபசர் அவர்களும் பரிமாறிக் கொண்ட கேள்விகளையும், பதில்களையும் படியுங்கள்.
.

நான்: சார், எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கிறது. கேட்கலாமா?

ப்ரொஃபசர்: 3-ம் ஆண்டுக்குள் நுழைந்து 3 மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் என்ன சந்தேகம்?
.

நான்: ஆரம்ப பாடத்திலேயே சந்தேகம் வந்து விட்டது. எனவே ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

ப்ரொஃபசர்: சரி. கேள்.
.

நான்: மருந்துகள் சம்பந்தமான Pharmacology – யில் முதல் பாடமே ஹிப்போக்ரேட்டஸ் என்பவரைப் பற்றியது.

ப்ரொ: ஆம். அவர் தாம் பா “நவீன மருத்துவத்தின் தந்தை” என்றழைக்கப்படுபவர். அவர் மட்டும் இல்லையென்றால் மருந்துகளே உருவாகியிருக்காது. அவரைப் பற்றி என்ன சந்தேகம்?
.

நான்: அவரைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. அந்தப் பாடத்தில் மருந்துகளைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
.

“ஒறு மருந்தை ஒறு நோயயாளியிடத்தே பிரயோகிக்கும்போது, அவர் நோய் குனமடையாவிட்டாலும் பரவாயில்லை; மருந்துகளின் காரணமாக அவர் வேறு நோய் தொந்தரவுகளுக்கு ஆளாகக் கூடாது. புது நோய்களும் உருவாகக்கூடாது. அவ்வாறு மருந்துகளுக்குப் பக்க விளைவுகளாக வேறு வேறு நோய்கள் தோன்றினால், அந்த மருந்துகளை உபயோக்கிக்கக் கூடாது. அது உடல் நலனுக்குக் கேடு. அது வைத்தியமும் இல்லை.”

சார், நவீன மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஹிப்போக்ரேட்டஸ் குறிப்பிடும், எச்சரிக்கும் இந்தக் கொள்கையை ஏன் நாம் கடைபிடிப்பதில்லை. நாம் நோயாளிகளுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு மருந்துக்கும் ஒன்றல்ல, இரண்டல்ல, எக்கச்சக்கமான பக்கா விளைவுகள். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
.

புரொ: உன்னுடைய கேள்வி சரிதான். நம்முடைய மருத்துவம் உண்மையான நியாயமான மருத்துவமில்லைதான். இதெல்லாம் பார்த்தால் ‘ப்ராக்டீஸ்’ பிழைப்பு நடத்தவே முடியாதே?

நான்: நோயாளிகளுக்குத் துரோகமான தொழில் என்று தெரிந்தும் நாம் செய்யும் இந்தப் பாதகம் எப்படி பிழைப்பு ஆகும்?
.

புரொ: நோயாளிகளும் நன்மை அடையத்தானே செய்கிறார்கள்? எத்தனை ஆயிரக்கணக்கான நோயாளிகள் நம்மைச் சுற்றி வருகிறார்கள் பார்! நம்மால் அவர்களுக்கு ஏதும் நன்மைகள் இல்லை என்றால் இவ்வளவு கூட்டம் வருமா?

நான்: நம் மருத்துவ அறிவின்படி நோயாளி துன்பத்துடன் தான் வருகிறார். மருந்துகள் கொடுக்கிறோம். பக்கா [பக்க] விளைவுகள் நிச்சயம். ஒவ்வொரு மருந்துக்கும் இருக்கிறது என்பதை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். ஒன்றோ, இரண்டோ பக்க விளைவுகள் இல்லை. எண்ணிக்கையில்லா பக்க விளைவுகள். பக்க விளைவுகள் ஒவ்வொன்றும் நோய்கள் தானே? ஒரு நோயாளிக்கு, பல நோய்களை நம் கொடுக்கும்போது அது எப்படி நோய்களைக் குணப்படுத்தும்?
.

புரொ: அவை பக்க விளைவுகள்தான். நோய்கள் அல்ல.

நான்: பக்க விளைவுகள் என்றால் என்ன? நோய்கள் என்றால் என்ன? வித்தியாசம் என்ன?
.

புரொ: நோய்கள், உடலில் தானே தோன்றுவது. பக்க விளைவுகள் மருந்துகளால் ஏற்படுவது. அது தானே சரியாகி விடும். மருந்தை நிறுத்தி விட்டால் போதும்.

நான்: நோய்கள், தானே சரியாகாதா?
.

புரொ: சரியகாமல்தானே நோயாளிகள் நம்மிடம் வருகிறார்கள்? தானே சரியாகியிருந்தால் ஏன் வரப் போகிறார்கள்?

நான்: நோய்கள் தானே சரியாகாது என்றால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்று ஒன்று இருக்கிறதே? அதன் வேலை என்ன?
.

புரொ: ஆம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கத்தான் செய்கிறது. அதன் வேலை நோயை எதிர்ப்பதாகும்.

நான்: ஒரு நோய் வந்து விட்டால், நோயை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தி எப்போது உருவாகிறது?
.

புரொ: நோய் ஏற்பட்ட பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. நோயின் வீரியம் ஒரு குறிப்பிட்ட அளவை அடைய வேண்டும். The disease force must reach an optimal level before defense force develops against the particular disease.

நான்: சார், தவறாக நினைக்காதீர்கள். அப்படியானால் நிச்சயமாக நோயை எதிர்த்து, நம் உடலிலேயே ஒவ்வொரு நோய்க்கும் எதிர்ப்பு சக்தி தோன்றி விடும். பின்னர் அந்த எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட வியாதியை நம் உடலில் மீண்டும் தோன்ற விடாது. அந்த நோயிலிருந்து நிரந்தரமாக Immunity விடுதலை கிடைக்கப்பெறுவார்கள். சரிதானே?
.

புரொ: சரிதான். ஆனால் வாழ்நாள் முழுதும் திரும்பவும் அந்த நோயே வராது என்று சொல்ல முடியாது.

நான்: சரி, அப்படியானால் குறைந்த பட்சம் அடிக்கடி வராமலாவது இருக்கும் இல்லையா?
.

புரொ: ஆம்.

நான்: நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாலும், குறிப்பிட்ட வியாதிக்கு எதிராக ஏற்கனவே Immunity, நோய் எதிர்ப்பு சக்தி தோன்றி விட்டதாலும், நோய் திரும்ப வந்தாலும், அந்த நோய் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்துவதர்க்கு முன்பாகவே அழிக்கப்பட்டு விடும் இல்லையா?
.

புரொ: சரிதான்.

நான்: ஒரு நோய் திரும்பவும் வரும்போது, அந்த நோயை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியம் இன்னும் உறுதியாகும் இல்லையா? இதன் விளைவாக எவ்வளவு தான் ஒரு நோய் திரும்ப திரும்ப வந்தாலும், ஒவ்வொரு முறையும் திரும்பவும் நம் உடலில் ஏற்படும் அந்த நோய் ஒரு முறைக்கு அடுத்த முறை பலவீனமடைந்து தானே இருக்கும்?
.

புரொ: ஆம்.

நான்: இந்த இயல்பு உடல் சுகத்திற்கு மாறாக, நம்மிடம் வரும் நோயாளிகள் ஒவ்வொருவரும், சில நாட்கள் அல்லது சில வாரங்கள் சுகத்திற்குப் பிறகு(?) மீண்டும் அந்த நோயால் முந்தியதை விட பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் அல்லவா வருகிறார்கள்? இது நமக்கு எதை உணர்த்துகிறது?
.

புரொ: நோய்களை உருவாக்குவதும், நோய்களை வளர்ப்பதும், நோயாளிகள் பெருக்கத்திற்கும், பின் நோயாளிகள் சாவதும் நம்மால் தான் என்றா சொல்ல வருகிறாய்.

நான்: தப்பாக நினைக்காதீர்கள். என் சந்தேகம் தான் அப்படிக் கேட்டேன். நீங்களும் அதே சந்தேகத்தில்தான் இருப்பதாகத் தோன்றுகிறது.
.

புரொ: நீ ஆபத்தானவன். இதற்கு மேல் உன்னிடம் பேசினால், ஆங்கில மருத்துவத்தையே காட்டிக் கொடுத்து விடுவாய் !

நான்: நான் எப்படி சார் கட்டிக் கொடுக்க முடியும்?! எனக்கு யாரும் காட்டித் தரவில்லையே? உண்மை தானாகவே வெளிவருகிறது.
.

புரொ: ஏம்ப்பா உயிரை எடுக்கறே? உங்கிட்டே இவ்வளவு நேரம் பேசியதே ஜாஸ்தி.

நான்: அது வீண் போகவில்லை சார்! உங்களால் தான் சார் என சந்தேகம் தெளிவடைந்தது. சந்தேகமே இல்லை. ‘நாம் தான் நோய்களை உருவாக்குகிறோம்; நோய்களை வளர்க்கிறோம்’ என்ற உண்மையை எவ்வித சந்தேகமுமின்றி உங்களால் தான் சார் உணர முடிந்தது. இன்னும் ஒரே ஒரு விளக்கம் வேணும் சார்.
.

புரொ: என்ன? (எரிச்சல் வந்துவிட்டது சாருக்கு)

நான்: ஆங்கில மருந்துகளைக் கொடுக்கும்போது புதிய வியாதிகளை நாம் நோயாளியின் உடலில் புகுத்துகிறோம்?
.

புரொ: ஏய் குழப்பாதே. அதுக்குப் பெயர் பக்க விளைவுகள். அதாவது Side Reactions. புதிய நோய்கள் என்று உளறாதே.

நான்: Side Reactions என்றே கூறுகிறேன் சார், இந்த பக்க விளைவுகளுக்குக் காரணம், உடல் எதிர்ப்பு சக்தி நாம் நோயாளிகளுக்குக் கொடுத்த மருந்துகளை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்த்து அழிப்பதால் ஏற்படுகிறதா?
.

புரொ: அதப்பத்தியெல்லாம் தெரியாது. நீ மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். தான் படிக்கிறாய். சொல்லிக் குடுக்கறதைப் படிச்சிட்டு பாஸ் பண்ற வழியைப் பார்.

நான்: படிச்சிட்டுத்தானே சார் சந்தேகம் கேட்கிறேன். எப்படிப் பாஸ் பண்ணாமல் போய் விடுவேன்?
.

புரொ: எங்கிட்டே கேள்வி கேட்கிற மாதிரி மத்த பேருங்ககிட்ட கேட்டுடாதே. ஜென்மத்துக்கும் நீ பாஸ் பண்ணமாட்டே!

நான்: சரி சார், அப்ப சந்தேகம்?
.

புரொ: யோவ்! போய்யா! (ப்ரொஃபசர் வேகமாக திரும்பிப் போயே போய் விட்டார்)….
.

தொடரும்…
.

இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

நன்றி: Jamialim. News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s