நீங்களும் மருத்துவர் ஆகலாம்……3

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!

மூன்றாம் பகுதி

image

நோய்! குறிப்பிட்ட ஒரு உறுப்பைச் சார்ந்ததல்ல…
.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

நோய்! குறிப்பிட்ட ஒரு உறுப்பைச் சார்ந்ததல்ல…
.

மேற்சொன்னவை எந்த அளவுக்கு உண்மை என்பதன் அத்தாட்சியைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். மனம் அமைதியை இழந்து கவலையும், பதட்டமும். குழப்பமும் பீதியும் அடையும்போது.
வயிறு, மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல்கள் பாதிக்கப்படுகின்றன.

உடலில் ஒரு நோய் உருவாகும் போது அது உடல் முழுமையும் ஒரு சேர, ஒரே நேரத்தில் தன் பாதிப்பைத் தோற்றுவிக்கிறது. நோய், அதன் தாக்கத்தை ஏற்ப்படுத்தும் போது, அந்தத் தருணத்தில் எந்த உறுப்பு, அல்லது உடலின் எந்தப் பகுதி மிகவும் பலவீனமாக இருக்கிறதோ அந்த உருப்பில்தான் அல்லது உடலின் அந்தப் பகுதியில்தான் நோயுடைய அத்தனைத் தீவிரமும் நிலை கொள்கிறது.
.

வயிற்று வலி – வயிறு சம்பந்தப்பட்டதல்ல

எனவே வாசகர்களே! வயிற்றில் ஒரு நோய் அதாவது ஒரு வலி ஏற்ப்படுகிறதென்றால், அது உடல் மொத்தத்தையும் ஆக்கிரமித்துள்ள ஒரு நோயாகும். வயிற்றில் மட்டுமே தொற்றிக் கொண்டிருக்கும் ஒரு நோய் அல்ல. நோயின் தீவிரத்தை வயிறு தாங்கிக் கொள்ளக் கூடிய அளவுக்கு அது உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வயிற்று வலி உண்டாகாது. நோயும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. எப்பொழுது வயிறு பலவீனம் அடைகிறதோ, அப்போது அவ்வுருப்பில் வலி தோன்றுகிறது.
.

சிறுநீரக நோய் – சிறுநீரகம் சார்ந்ததல்ல

வயிற்றுக்குப் பதிலாக, உதாரணமாக சிறுநீரகங்கள் தாம் உடலிலேயே மிகவும் பலவீனமாக இருக்கிறதென்றால், வயிற்றைப் பாதித்திருந்த அதே நோய் சிறுநீரகங்கள் மூலமாகத்தான் தன் பாதிப்பை வெளிப்படுத்துகிறது. எனவே, நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவெனில், எந்த ஒரு நோயும் உடலின் எந்த ஒரு உறுப்பினுள் அதன் பாதிப்பு தெரிந்தாலும், அது உடலின் ஒட்டு மொத்தமான ஒரே நோய்தான். வயிற்றில் வலி வருவதால் வயிற்று நோயயல்ல; சிறுநீரக பாதிப்பு தெரிவதால் அது சிறுநீரகங்கள் சம்பந்தமான நோயுமல்ல.
.

உடலின் நோய் அது ஒன்றே ஒன்றுதான்!

அந்த நோய் குணமாக்கப்படாத போது அது வாழ்நாள் நோயாக மரணம் வரை தொடர்கிறது. வயது ஆக ஆக, பொதுவாக உடல் தளர்ச்சியடையும் போது, மற்ற உடல் உள் உறுப்புகளும் பலவீனமடைகின்றன. ஆகவே நோயானது பலவீனமடைந்து வரும் பிற உடல் உறுப்புகளிலும் ஒவ்வொன்றாக நோயை ஏற்படுத்துகிறது.

மறவாதீர்கள் வாசகர்களே! இவை மொத்தத்தில் ஒரே நோய்தான். இந்த நோயின் விளைவுகள்தாம் உடல் உறுப்புகள் காட்டும் பாதிப்புகள். ஆகவே தான் ஆங்கில மருத்துவம் நோயை, அது என்ன என்பதை அறியும் மேலான மருத்துவ ஞானத்தை இழந்து விட்டது. ஆங்கில மருத்துவம் நோயின் விளைவுகளை மட்டுமே நோயாகக் கருத்தில் கொண்டு முற்றிலுமாகத் தடம் புரண்டு விட்டது. இந்த ஆங்கில மருத்துவம் ஒரு ‘மருத்துவப் பூஜ்ஜியம்’ ஆங்கில மருத்துவம் நோயை விட்டுவிட்டு, நோய் என்பது என்னவென்றே தெரியாத நிலையில் நோயின் விளைவுகளை மட்டுமே தன் குருட்டுக் கண்களால், தன் அறிவைத் தொலைத்து விட்ட நிலையில், பார்த்துக் கொண்டும் ‘நோய் இதுதான்’ என்றும், ‘ இல்லை, இல்லை இதுதான் !’ என்றும் ஆராய்ச்சிகள் செய்கிறோம் என்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறது.
.

கொலைக்கு பெயர் ஆபரேஷன்

வயிறு, நுரையீரல்கள், இருதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், பித்தப்பை போன்ற எந்த உறுப்பின் பாதிப்பு ஆகட்டும், ஆங்கில மருத்துவம் இவற்றில் ஏற்படும் எந்த ஒரு நோயையும் குணப்படுத்தத் தகுதியற்றது; மருத்துவ அறிவற்றது என்பதை உணர்ந்துகொள்ள இன்று ஆங்கில மருத்துவத் துறையில் நிலவி வரும் அத்தாட்சிகளே போதுமானது. எந்த ஒரு நோயையும் தம் மருந்துகளால் குணப்படுத்தும் தகுதி ஆங்கில மருத்துவர்களுக்கோ, சுகப்படுத்தும் சக்தி அவர்களின் மருந்துகளுக்கோ கிடையாது. மருந்துகளைக் கொண்டு குணப்படுத்துவதுதான் மருத்துவம்.

எனவே ஆங்கிலேயர்களின் இந்த மருத்துவம், ஆரம்பத்தில் ஆங்கில மருத்துவம் என்ற பெயரில் வளர்ந்தது. இன்று ஒரு நோயும் ஆங்கில மருந்துகளால் குணப்படுத்தப்படுவதில்லை. மாறாக, ஒவ்வொரு நோயும் சுகப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட அந்த உறுப்பை மீண்டும் ஆரோக்கியமான நிலையில் இயங்கச் செய்யும் வழிவகை அறியாததால் தன்னிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒவ்வொரு உருப்பாகக் கொலை செய்வதற்குக் கத்தியைத் தூக்க ஆரம்பித்தார்கள். அந்தக் கொலைக்கு ‘ஆபரேஷன்’ என்று கவுரவமாக பெயரிட்டனர். உறுப்புக்களைக் கொலை செய்யும் இவர்களை ‘அறுவை சிகிச்சை நிபுணர்கள்’ என்ற அளவுக்கு விளம்பரப்படுத்தி விட்டனர்.
.

கர்ப்பப் பையில் நோய் இல்லை!

ஒரு பெண்ணுக்கு அதிக உதிரப்போக்கு காரணமாக மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணரிடம் செல்கிறார்கள். முதலில் ஆங்கில மருத்துவம் என்ற பெயரில் மருத்துவம் செய்கிறார்கள். அதாவது மருந்துகள் கொடுக்கிறார்கள். அதனால் உதிரப் போக்கு அதிகமாகிறதே தவிர வருடக் கணக்கானாலும் கர்ப்பப் பையில் ஏற்பட்ட அந்த நோயின் விளைவு அல்லது பாதிப்பு குனமாவதில்லை. ஏனெனில் இம் மருத்துவம் நோய் என்ன என்று அறியாத நிலையில் தன் குருட்டுக் கண்களைக் கொண்டு நோயின் விளைவு ஏற்பட்டிருக்கும் கர்ப்பப் பையில் தான் நோய் உருவாகியிருக்கிறது என்று அதனைக் களைய முற்படுவதால்தான், நோயின் விளைவுகள் மேலும் தீவிரமடைகின்றன.
.

மருத்துவம் பொய்ப்பிக்க – அடுத்து கொலைதான்!

அதிகமாக உதிரப் போக்கு, மருந்துகளுக்கு அதாவது ஆங்கில மருத்துவத்திற்குக் கட்டுப்படாமல் போகும் போது, அந்த உறுப்பை கர்ப்பப் பையை இனியும் விட்டு வைத்தால் தன் மருத்துவம் அழிந்து விடும் என்ற ஆத்திரத்தின் காரணமாக, ‘ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு’ என்ற பழமொழியை உறுதி செய்யும் பொருட்டு, ‘புத்தியைத் தீட்டத் தெரியாத இந்த ஆங்கில மருத்துவம் கத்தியைத் தான் தீட்டும்’ என்ற உண்மைக்குத் தகுந்த அத்தாட்சியையும் கொலை என்ற கொடிய செயலுக்கு ‘அறுவை சிகிச்சை’ என்ற பெயரிட்டு தன்னுடைய அக்கிரமமான போக்கை அதிகரித்துக் கொண்டுவிட்டது.

வாசகர்களே! கொலை வெறி கொண்ட இந்த அறுவை சிகிச்சை ஆங்கில மருத்துவம் கர்பப்பையில் உள்ள குறையை நீக்குவதற்கு பதிலாக, அதனை மீண்டும் ஆரோக்கியமான நிலையில் இயங்கச் செய்வதற்குப் பதிலாக, அதை – அந்த உறுப்பையே கொலை செய்து – வெட்டியெறிந்து விட்டு, ஆபரேஷன் சக்சஸ் – கொலையில் நாங்கள்- வெற்றியடைந்து விட்டோம் என்று கூறுகிறார்களே, இதை விட அநியாயம் என்ன? இனி அங்கே கர்ப்பப் பை என்ற உறுப்பே கிடையாது. எனவே கர்ப்பப் பை நோய் என்ற ஒன்றே கிடையாது.
.

கருணைக் கொலை; நாங்களே செய்வோம்

இந்த நிலையில் ஆங்கிலேய அறுவை சிகிச்சை மருத்துவம் எந்த அளவுக்குச் சென்று விட்டது என்றால், நோயின் விளைவுகளை உங்களால் தாங்க முடியவில்லை என்றால், நாங்களே உங்களைக் கருணையின் அடிப்படையில் கொலை செய்து விடுகிறோம் என்ற அரை கூவலை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆங்கில மருத்துவத்தின் இறுதியான நோக்கம் “ஒன்று எங்களை மருத்துவர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள்! அல்லது உங்களைக் கொலை செய்து விடும் அதிகாரத்தை நாங்களே எடுத்துக் கொள்வோம்!

உலக அரசாங்கங்களை எங்கள் வழியில் செயலாற்றச் செய்ய, எங்கள் மருத்துவத்தை உங்கள் மீது திணிக்க எங்களிக்குப் போதுமான பணபலம் உள்ளது!”

வாசகர்களே!, ஆங்கிலேயர்களின் மருத்துவத்தை குப்பையில் வீச வேண்டியதன் அவசியத்தை உங்களுக்குப் போதுமான அளவுக்கு விளக்கியிருக்கிறோம். இந்தக் கட்டுரையின் வாயிலாக உங்கள் மனம் இந்த துஷ்டத்தனமான மருத்துவத்தை வெறுக்குமானால், அடுத்த பாகத்திலிருந்து மருந்துகளின் செயல்பாடுகள் பற்றி மிகவும் சுலபமாக உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
.

தொடரும்…
.

இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நன்றி: Jamialim. News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s