0

​நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு கலீபா யார்? – தமிழ் ஷீஆ

[​நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு கலீபா யார்? – தமிழ் ஷீஆ] is good,have a look at it! http://www.tamilsheeya.com/2999300829502965302129652995300729853021-29802965299729943021296529953021/55

நன்றி: Jamialim. News

0

மக்காவும் மதினாவும்….!

மக்காவும் மதினாவும் இப் பூமியின் ஒளிமிகு நகரங்கள்: அதிசயித்த விண்வெளி வீரர்கள்!
ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள் ‘இளவரசர் சல்மான் அறிவியல் ஆய்வகத்துக்கு’ வருகை புரிந்திருந்தனர். விண்வெளி வீரர்களுக்கான அமைப்பாக செயல்படும் (ASE) என்ற அமைப்பின் 25 ஆவது அமர்வுக்கு இந்த விண்வெளி வீரர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் பெயர்கள் முறையே அனடோலி இவானிஷின் (Anatoly Ivanishin), Andrey Borisenko, Alexander Samokutyaev, Anton Shkaplerov, Boris Meshcherykov (உச்சரிப்புக்கு சற்று சிரமப்பட வேண்டியிருக்கும் :-))
அனடோலி இவானிஷின்(Anatoly Ivanishin) என்ற ரஷ்ய விண்வெளி வீரர் அங்குள்ள மாணவர்களோடு பேசும் போது ‘நாங்கள் விண்வெளியில் பயணிக்கும் போது கால நிலை சிறப்பாக இருக்கும் நேரங்களில் பூமியை படம் பிடிப்பது உண்டு. அவ்வாறு நாங்கள் படம் பிடிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பாவின் சில இடங்களையும் படம் பிடிக்க முயற்ச்சித்தோம். லென்ஸ் அந்த அளவு பவர் இல்லாததால் எங்களால் துல்லியமாக எடுக்க முடியவில்லை.
image

சில மணிகளுக்கு பிறகு வளைகுடாவின் பக்கம் எங்கள் பார்வையை செலுத்தினோம். ஆச்சரியமாக அப்போது இரண்டு இடங்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இது எனக்கு அதிசயமாகவும் தெரிந்தது. அந்த இரண்டு இடங்களையும் வைத்து மேலும் பல புகைப்படங்களையும் எடுத்தோம்.
அதன் பிறகு பல ஆய்வுகளுக்கு பிறகு அந்த இரண்டு இடங்கள் மக்கா, மற்றும் மதினா என்ற இடங்கள் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். உலகின் மற்ற பாகங்களில் இந்த மாற்றத்தை நாங்கள் காணக் கூடியதாக இல்லை. இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.
PSSO என்ற அமைப்பானது சவுதி அரசால் லாப நோக்கமற்று நடத்தப்படும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் மக்களுக்கு அறிவியலின் முக்கியத்துவத்தையும், விண்வெளியின் பல புதிர்களை விடுவித்து மக்களுக்கு அதன் அறிவை சேர்ப்பிக்கும் ஒரு அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இளவரசர் சுல்தான் பின் சல்மான் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மதினா நகரத்து மேயர் பேசும் போது ‘நீங்கள் ரஷ்ய தேசத்தவராக இருக்கலாம். ஆனால் உலக மக்களுக்கு விண்வெளி வீரர்களான நீங்கள் பொதுவானவர்கள். அது போல் நானும் சவுதிக்கு மட்டும் சொந்தமானவல்ல. உலக மக்களுக்கு பொதுவானவன். நாம் அனைவரும் இந்த உலக மக்களுக்கு சேவையாற்ற படைக்கப்பட்டுள்ளோம்.
700 மில்லியன் உலக மக்களில் உங்களைப் போன்ற ஒரு சில விண்வெளி வீரர்களுக்கே விண்வெளிப் பயணம் சாத்தியமானது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
இளவரசர் சுல்தான் இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட மிகவும் உதவிகரமாக இருக்கிறார். இந்த அமைப்பு ஆரம்பித்த போதும் இந்த வீரர்கள் சவுதி வந்திருந்தனர். தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் வந்துள்ளனர். இவர்களின் தொடர்பானது சவுதி இளைஞர்களின் விண்வெளி ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
மதினா நகரத்தின் தோற்றத்தை நீங்கள் எனக்கு விளக்கிய போது மெய் சிலிர்த்து போனேன். நீங்கள் உங்கள் கண்களால் மட்டுமே பார்க்கிறீர்கள். நான் அதோடு எனது இதயத்திலும் அந்த நிகழ்வை உள் வாங்கிக் கொண்டேன். மனித வாழ்வின் பல அரிய தத்துவங்களை நீங்கள் அனைவரும் மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
தொலை தொடர்பு சாதனங்களை இதற்கு அதிகம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் உள்ள எத்தனையோ நகரங்கள் இதை விட அதிக ஒளி வெள்ளத்தில் மதிக்கிறது. ஆனால் குர்ஆனில் இறைவன் இந்த இரண்டு நகரங்களையும் புனித நகரங்களாக அறிவிக்கிறான். அத்தகைய புனித நகரங்கள் ஒளி வெள்ளத்தில் இந்த விண்வெளி வீரர்களுக்கு காட்சியளித்தது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. அதே போன்ற குர்ஆனின் உண்மை ஒளியை இந்த வீரர்களுக்கும், உலகின் பல கோடி மக்களுக்கும் அவர்களின் இதயத்தில் வல்ல இறைவன் ஏற்றுவானாக!’ என்ற பிரார்த்தனையோடு முடித்தார்.
தகவல் உதவி: அரப் நியூஸ், 18-05-20
நன்றி: Jamialim. News

0

தேன் கடைகளில்,காத்திருக்கும் ஆபத்து….!

கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து..!!!

image

அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி-பகிர்ந்து தடுப்போம் முடிந்தால் விழிப்புணர்வு கொடுப்போம்

இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை… இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல… நம்மை ஆளும் மத்திய அரசுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா ? அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான் பெரிய ஆபத்தே இருக்கு.

டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையம் சமீபத்தில் நமது நாட்டில் விற்கப்படும்
ஆய்வு
12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு செய்தது. அது என்னென்ன நிறுவனங்கள் என்று முதலில் பார்ப்போம்.
டாபர் (Dabur),
பைதியான்ந் (Baidyanth),
பதஞ்சலி ஆயுர்வேதா (Patanjali Ayurveda),
காதி(Khadi) மற்றும்
ஹிமாலாயா (Himalaya) உள்ளிட்ட நிறுவனங்கள்தான்.
அதிர்ச்சி_முடிவுகள்
இந்த நிறுவனங்கள் சார்பில் விற்கப்படும் தேன் பாட்டீல்களில் தடை செய்யப்பட்ட ஆன்டி பயாடிக் எனப்படும் குளோரோபெனிகல், சிப்ரோ பிளாக்சின் மற்றும் எரித்ரோமைசின் போன்றவற்றின் குண நலன்கள் அதிகளவில் காணப்படுகின்றன என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை ஆன்டி பயாடிக்கினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர் சத்யா அச்சத்துடன் எச்சரிக்கிறார்.

வெளிநாடுகளில்_தடை
இதனால்தான் இந்திய வகை தேன்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை உள்ளதாகவும், சர்வதேச தரத்திற்கு இந்திய நிறுவனங்களின் தேன்கள் இல்லை என்றும் அறிவியல் மற்றும் சுற்றுபுறத்துறை மையத்தின் துணை இயக்குனர் சந்திர பூஷன் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 2 நிறுவனங்களின் தேனிலும் இதுபோன்று மனித உடலை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும், அதனை அந்நாட்டு அரசே தடை செய்துள்ளது என்றும், ஆனால் அவை சர்வசாதரணமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் அவர் கவலையுடன் கூறுகிறார்.

இப்பிரச்சினை குறித்து மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிடம் எடுத்து கூறியபோது, நாங்கள் தேனை தயாரிப்பதில்லை என்றும், அதனை வெளி மார்க்கெட்டில் வாங்கி எங்களது நிறுவனங்களின் ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி விற்பனை செய்வதாக அந்நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களிடம் அலட்சியமாக தெரிவிக்கின்றனர் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குனர் சுனிதா நரேன் கூறினார்.

இந்த தகவல் எல்லாம் மத்திய அரசுக்கு தெரியும் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். இதனால்தான் மேலே கூறியபடி இந்திய உயிர்களை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை என்று நாம் ஆணித்தரமாக கூறினோம். சரி இவர் எப்படி ஆணித்தரமாக மத்திய அரசுக்கு தெரியும் என்று கூறுகிறார் என பார்ப்போம்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய தேன்கள் சர்வதேச தரத்திற்கு இல்லை என ஏற்றுமதி நிறுவன ஆய்வில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆனால் அதனை பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்றும் சுனிதா நரேன் தெரிவித்துள்ளார். ஆனால் இவைகளை உள்ளூர் சந்தையில் விற்க மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என அவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

இந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் உள்ள 27 நாடுகளும் இந்திய வகை தேன்களுக்கு தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில்…? எதை நம்பி வாங்குவது எதை சாப்பிடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு பதில் அளிக்குமா மத்திய அரசு ? பொறுத்திருந்து பார்ப்போம்.

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்தே இத்தகைய பொருட்களை தடைசெய்யாமல் விற்க மத்திய,மாநில அரசுகள் அனுமதிப்பது ஏன்
மக்களாட்சி நடக்கும் நாட்டில் மக்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் இருப்பதேன்

நாம் சற்றே விழிப்புணர்வோடு இருந்து கொள்ள வேண்டியது நம் கடமை பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்
இதுபோல் கடைகளில் கிடைக்கும் தேன் பாட்டில்களை வாங்காமல் முடிந்தளவு இயற்கை முறையில் கிடைக்கும் தேனை பயன்படுத்த முயற்சிசெய்வோம்
நன்றி: Jamialim. news