|பெண்களே உங்களுக்கு தெரியுமா….??

கன்னி பெண்களின் பெண்ணுறுப்பு எப்படி இருக்கும்? 18+

கன்னித் தன்மை, கற்பு… இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பழங்காலத்தில் அர்த்தமே வேறு. காலப் போக்கில்தான் ஒவ்வொரு சமூகமும் இந்த வார்த்தைகளுக்கு கலாசார முகமூடி அணிவித்து,
ஏராளமான பெண்களை இரக்கமில்லாமல் கொன்று போட்டிருக்கிறது. எந்த தப்பும் செய்யாத பெண்களைக்கூட சோரம் போனவர்களாக முத்திரை குத்தி, உறவினர்களை விட்டே கல்லால் அடித்து சாகடித்த இரத்த வரலாறு பல நாடுகளுக்குச் சொந்தம்.
ஒரு பெண் செக்ஸ் உறவை ஒருமுறைகூட அனுபவித்தது இல்லை என்றால், அவரது பிறப்பு உறுப்பின் பாதுகாப்பு கவசமான கன்னித் திரை கிழியாமல் இருக்கும், இப்படி கன்னித் திரை கிழியாமல் இருப்பவரே கன்னி, இதுதான் கன்னித் தன்மைக்கு இப்போது அர்த்தமாக சொல்லப்படுகிறது.
ஆனால், பழங்காலத்தில் எந்த ஓர் ஆணுடனும் திருமண உறவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ இணைந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண்தான் கன்னி எனப்பட்டாள். உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இதுதான் அர்த்தம்.
கன்னி என்பதற்கு ஆங்கிலத்தில் ‘வர்ஜின்’ (Vergin) என்று பெயர்.
கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் புழக்கத்தில் இருக்கும் வர்கோ என்ற வார்த்தையிலிருந்து வர்ஜின் வந்தது. யாரோடும் சேர்ந்திருக்காமல் சொந்தக் காலில் நிற்கும் சக்தி வாய்ந்த பெண் என்பதுதான் இந்த வார்த்தையின் அர்த்தம்.
ஆர்டெமிஸ், ஹெஸ்டியா ஆகிய இரண்டு கிரேக்கப் பெண் தெய்வங்கள் வர்ஜின்களாகக் கருதப்பட்டன. ஆர்டெமிஸ் வேட்டைக்கான தெய்வம். ஹெஸ்டியா உடல் நலத்தைக் காக்கும் தெய்வம்.
கொடிய மிருகங்களை வேட்டையாடவும், பயங்கர நோய்களிலிருந்து மக்களைக் காக்கவும் சக்தி தேவை. அந்த சக்தி இரண்டு பெண் தெய்வங்களிடமும் இருந்தது. அது மட்டுமில்லை… கிரேக்க ஆண் தெய்வங்களில் பலர் முரட்டுத்தனமானவர்கள். ஒரே ஆண் தெய்வம், பல பெண் தெய்வங்களை ஏமாற்றியோ மிரட்டியோ செக்ஸ் வைத்துக் கொண்டு, பிறகு மனைவியாக்கிக் கொண்டதாகப் புராணங்களில் இருக்கிறது. இத்தனை முரட்டு தெய்வங்களையும் சமாளித்து ஆர் டெமிஸ§ம், ஹெஸ்டியாவும் தனியாக இருந்தனர். இந்த சக்தியும், சுயேச்சையான தன்மையும்தான் வர்ஜின் என்பதன் அடையாளம்.
காலப்போக்கில் மத நம்பிக்கைகள் வர்ஜின் என்பதைக் கன்னித் தன்மையின் அடையாளமாக மாற்றி விட்டன. ஒரு பெண்ணுக்குக் கடவுள்தான் கன்னித் தன்மையை பரிசாகக் கொடுக்கிறார், அது ஒரு வகை வேலி, அந்தப் பரிசை அவள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், திருமண உறவின் மூலம் அவளை அடையும் கணவன் மட்டுமே அந்த வேலியைத் தாண்டும் உரிமை உள்ளவன் என மத நூல்கள் வரையறுத்தன.
ஒரு பெண் முதல் தடவையாக செக்ஸ் உறவில் ஈடுபடும்போது லேசான இரத்தக் கசிவு இருக்கும், இதற்குக் காரணம், அந்த உறுப்பின் மேலுறை மாதிரி இருக்கும் மெல்லிய ஒரு கவசம் கிழிவதுதான் என்பது அந்தக் கால மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு பிறகுதான் கட்டுப்பாடு வந்தது. திருமணத்துக்கு முன்பெண்கள் செக்ஸ் உறவில் ஈடுபடக் கூடாது, கணவனுடன் இணைந்து முதலிரவில்தான் அவள் முதல்முறையாக செக்ஸை அனுபவிக்க வேண்டும், அப்போதுதான் அவளது பிறப்பு உறுப்பின் கவசம் கிழிய வேண்டும் எனக் கட்டுப்பாடு கொண்டு வந்தார்கள்.
அந்த கவசம்தான் கன்னித்திரை! இதற்கு ஆங்கிலத்தில் ஹை மென் (Hymen) என்று பெயர். கிரேக்கர்களின் திருமணக் கடவுளான ஹைமெனியஸ் பெயரிலிருந்துதான் இந்த வார்த்தை வந்தது. ஒரு கையில் தீப்பந்தமும், இன்னொரு கையில் பூ மாலையும் ஏந்தியிருக்கும் ஹைமெனியஸ்தான் ஓர் ஆணையும், பெண்ணையும் திருமண பந்தத்தில் இணைத்து வைப்பதாக கிரேக்கர்கள் நம்பினார்கள். திருமண உறவின் மூலம் கிழிய வேண்டிய திரை என்பதால், திருமணக் கடவுளின் பெயரிலிருந்து ஹைமென் என்று இதற்கு நாம கரணம் ஆனது.
இப்படி கன்னித் திரை கிழிவதும், அதன் மூலம் இரத்தக் கசிவை ஏற்படுத்துவதும்தான் முதலிரவில் நிகழ வேண்டிய முக்கியமான சடங்கு என பல நாடுகளில் வழக்கமாகி விட்டது. பழங்குடிகள், நாகரிகம் அடைந்தவர்கள் என எந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
பழங்கால கிரீஸில் திருமணம் முடிந்ததும் பெண் வீட்டில்தான் முதலிரவு நடக்கும். முதலிரவுக்காகக் கட்டிலை அலங்கரிக்கும்போது தூய வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்பை அதில் போடுவார்கள். மறுநாள் காலை பெண்ணின் அம்மாவும், மணமகனின் அம்மாவும் ஒன்றாகச் சேர்ந்து அந்த அறைக்குள் போ வார்கள். பெண்ணின் கன்னித் திரை கிழிந்து, அந்த இரத்தக் கறை படிந்த படுக்கை விரிப்பை பத்திரமாக எடுத்து வருவார்கள். அதை ஏதோ காட்சிப் பொருள் மாதிரி வீட்டுப் பால்கனியில் அல்லது ஜன்னலில் கட்டித் தொங்க விடுவார்கள்.
ரோட்டில் போகிற வருகிற எல்லோரது பார்வையிலும் அது படும். நாங்கள் எங்கள் பெண்ணைப் பரிசுத்தமாக வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறோம் என அந்தக் குடும்பம் பெருமைப்பட்டுக் கொள்ள இது ஒரு வாய்ப்பு. எந்த வீட்டில் கல்யாணம் நடந்தாலும், கறை படிந்த படுக்கை விரிப்பு பால்கனியில் தொங்குகிறதா? என்று மறுநாள் ஊர்க் காரர்கள் எல்லோரும் வந்து பார்ப்பது பழக்கமாக இருந்தது.
ஊர்க்காரர்கள் என்றில்லை… பெண்ணின் உறவினர்கள், மாப்பிள்ளையின் உறவினர்கள் என எல்லோரும் திருமணத்துக்கு மறுநாள் அந்த வீட்டுக்கு வருவார்கள். எல்லோருக்கும் விருந்து சாப்பாடு உண்டு, படுக்கை விரிப்பில் கறை படிந்திருப்பதை உறுதி செய்து கொண்டு, விருந்தையும் சாப்பிட்ட பிறகு சந்தோஷமாக அவர்கள் கிளம்பிப் போவார்கள்.
இப்படி எல்லோரும் பார்த்து முடித்த பிறகு அந்த படுக்கை விரிப்பு பெண்ணின் சகோதரர் கையில் ஒப்படைக்கப்படும். அவர் அதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். பின்னால் என்றைக்காவது சண்டை வந்தால், பஞ்சாயத்தில் அதை அவர் ஒரு ஆவணமாக ஒப்படைக்க வேண்டும். ஒரு பரிசுத்தமான கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர் வாழ் நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்வது சிரமம்.
ஒருவேளை இரத்தக் கறை இல்லை என்றால்… திருமண உறவை முறித்துக் கொள்ளும் உரிமை மணமகனின் வீட்டாருக்கு உண்டு. அது மட்டுமில்லை… அந்தப் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைப்பார்கள்.
இந்த பழக்கம் அப்படியே ரஷ்யா, எகிப்து, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் என பல பகுதிகளுக்கும் பரவியது. ஒவ்வொரு இடத்திலும் புதுப்புது விஷயங்கள் சேர்க்கப்பட்டன.
அல்ஜீரியாவில் முதலிரவின்போது படுக்கை விரிப்பில் கறை படியவில்லை என்றால், பெண்ணை அவள து அப்பாவும், சகோதரர்களும் சேர்ந்து கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.
அமெரிக்காவில் செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த அகோமாவி பழங் குடிகள் மத்தியில் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. ஊரில் திருவிழா நடக்கும்போது கல்யாண வயசில் இருக்கும் பெண்களை அழைத்து நடனம் ஆடச் சொல்வார்கள். நடனம் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கும். யாராவது ஒரு பெண் களைப்பில் விழுந்து விட்டால் போச்சு… அவள் கல்யாணத்துக்கு முன்பே ஏதோ தப்பு செய்து விட்டாள்,அதனால்தான் கன்னிப் பெண்களுக்கான நடனத்தை அவளால் நீண்ட நேரம் ஆட முடியவில்லை என தீர்மானித்து அவளுக்கு நூறு கசையடி கொடுப்பார்கள். அடிக்கும், பழிச்சொல்லுக்கும் பயந்தே எல்லாப் பெண்களும் உயிரைக் கொடுத்து ஆடுவார்கள்.
எகிப்தில் கன்னித் திரையைக் கிழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. கணவனின் கிராமத்தில் பிரசவம் பார்க்கும் தொழிலைச் செய்து வரும் தாதிக்குதான் அந்த உரிமை. முதலிரவுக்கு முன்னால் பெண் இருக்கும் அறைக்கு இந்த தாதி போவார். ஒரு மெல்லிய பட்டுத் துணியை விரலில் சுற்றிக் கொண்டு கன்னித் திரையைக் கிழிப்பார். இரத்தக் கறை படிந்த அந்தப் பட்டுத் துணியை அவர் வெளியில் கொண்டு வந்து காட்டினால்தான் முதலிரவே நடக்கும். கறை இல்லாவிட்டால் அந்தத் திருமணம் செல்லாது என அறி விக்கப்படும். இந்தக் காலத்தில்கூட தொடரும் நடைமுறை இது! (இந்த சம்பிரதாயத்தை வைத்து பல தாதிகள் சம்பாதிக்கிறார்கள்.
ஒருவேளை, துணியில் கறைபடியா விட்டால் பெண்ணுடன் இரகசியமாகப் பேரம் பேசுவார் தாதி. பணமோ, நகையோ பரிசாக வாங்கிக் கொண்டு கறையை வரவழைப்பார். எப்படி? இடுப்பில் ஒரு சுருக்குப் பையில் இதற்காகத் தயாராகக் கண்ணாடித் தூள் வைத்திருப்பார். துணியில் அதைத் தூவி விட்டு பிறகு அதைக் கொண்டு கீறி இரத்தம் வரவழைப்பார். பெண்ணுக்கு வலியில் உயிர் போகும்தான்… ஆனால் வாழ்க்கையே போவதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை என தாங்கிக் கொள்வார்கள்!).
நவீன யுகத்தில்கூட பழைய சம்பிரதாயங்களைக் கைவிட பலர் மறுக்கிறார்கள். ஈராக் தலைநகர் பாக்தாத் போன்ற பெரிய நகரங்களில் ஆடம்பர ஹோட்டல்கள் ஏராளம். புதுமணத் தம்பதிகள் முதலிரவையும், தேனிலவையும் கொண்டாட அலங்கரிக்கப்பட்ட அறைகள் இங்கு உண்டு. இந்த அறைகளில் வந்து தங்கும் ஜோடிகள் அறையைக் காலி செய்த பிறகு, அறையை சோதித்தால் படுக்கை விரிப்பு மட்டும் காணாமல் போயிருக்கும். கறை படிந்த அதைக் கிழட்டு உறவினர்களிடம் கா ண்பிக்க தம்பதிகள் பத்திரமாக எடுத்துப் போயிருப்பார்கள்.
ஆனால், இப்படிப்பட்ட சடங்குகள் எவ்வளவு குருட்டுத்தனமானவை? என்பதைக் கன்னித் திரை பற்றிய அறிவியல் உண்மைகள் புரிய வைத்திருக்கின்றன.
ஆசியக் கண்டத்தில் பழமைவாத கொள்கைகளில் இன்றைக்கும் பிடிவாதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் திருமணமாகாத ஒரு பெண் பாதுகாக்க வேண்டிய முக்கியமான விஷயம் அவளது கன்னித்திரை! அதுதான் ஒரு கன்னிப் பெண்ணின் முகம். முகமில்லாதவர்கள் வாழ முடியாது. கன்னித்திரை இல்லாத பெண்ணுக்கும் வாழ்க்கை இல்லை.
ஆனால், உடலைப் பொறுத்த வரை கன்னித் திரைக்கு எந்த வேலையும் இல்லை. உடலில் தேவையில்லாத உறுப்புகள் நிறைய இருக்கின்றன. குடல் வால் என ஒரு பகுதி உடலில் இருக்கிறதே… அதற்கு உடலின் செயல் பாட்டில் எந்த பங்கும் இல்லை. ஏதோ அலங்காரப் பொருள் மாதிரி வீணாக அது உடலில் இருக்கிறது. அது இல்லாமலேகூட உடல் இயல்பாக இருக்கும். அது மாதிரி கன்னித் திரையும் தேவை இல்லாத ஓர் உறுப்புதான்!
அது கிழியாமல் இருந்தால், அந்தப் பெண் மட்டும் இதுவரை செக்ஸ் அனுபவிக்காத கன்னிப் பெண் என்றும் அர்த்தமில்லை. (அதிர்ஷ்டவசமாக ஆண்களுக்கு இப்படி எந்த திரையையும் சிருஷ்டியில் வைக்கவில்லை. அதனால் அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்!).
மருத்துவ ரீதியாக பார்த்தால் வெறும் நாற்பத்தி இரண்டு சதவிகிதம் பெண்களுக்கு மட்டும்தான் முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது கன்னித்திரை கிழிந்து இரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
நாற்பத்தேழு சதவிகிதம் பெண்களுக்கு இந்தக் கன்னித் திரை ஏதோ எலாஸ்டிக் மாதிரி நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது. உடலுறவு முடிந்ததும் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறது. அதனால் இவர்களுக்கு முதல் தடவை உறவின்போது இது கிழியவும் கிழியாது… இரத்தக் கசிவும் இருக்காது… வலியும் இருக்காது!தடய அறிவியல் நிபுணர்கள்தான் இதைக் கண்டு பிடித்தார்கள்.
விலைமாதர்கள் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவர்களில் பலரது கன்னித் திரை கிழியாமல் பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிபுணர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இத்தனைக்கும் ஆண்டுக் கணக்கில் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் அவர்கள். அதைப் பரிசோதித்த பிறகே இந்த எலாஸ்டிக் சமாச்சாரம் தெரிய வந்தது.
இந்த இரண்டு ரகம் தவிர, இன்னொரு பதினோரு சதவிகிதம் பெண்களுக்குக் கன்னித் திரை மிகவும் மெல்லியதாக இருப்பதால் சின்ன வயசிலேயே கிழி ந்து விடும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பைக்கில் காலைத் தூக்கிப்போட்டு உட்காரும்போதோ, சைக்கிள் ஓட்டும் போதோ இது சிம்பிளாகக் கிழிந்து விடும். இவர்களில் சிலர் கன்னித்திரை என்ற பாகமே இல்லாமல் பிறக்கிறார்கள் என்பதும் மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை. மொத்தத்தில் பார்த்தால், ஐம்பத்தெட்டு சதவிகிதம் பெண்களுக்கு கன்னித் திரை கிழியாது … இரத்தக் கசிவும் இருக்காது. அப்படியிருக்கும்போது… இவர்களை கெட்டுப் போனவர்கள் என முத்திரை குத்துவது எவ்வளவு பெரிய கொடுமை?!
பெண்களின் பிறப்பு உறுப்பின் உட்பக்கமாக ஒரு இஞ்ச் தூரத்தில் இந்தக் கன்னித்திரை இருக்கிறது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க மேல்ப க்கம் ஒரு ஃபாயில் பேப்பர் மாதிரி ஒட்டி வைக்கிறார்களே… அது மாதிரி மெல்லிய சவ்வு இது!
இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும். பொதுவாக பிறைநிலா மாதிரி பெரும் பாலானவர்களுக்கு இருக்கும். மாதவிடாயின்போது இரத்தம் வெளியேறுவதற்காக இந்த வடிவம். சில பெண்களுக்குக் கன்னித் திரை சுத்தமாக மூடியிருக்க, மாதவிடாயின்போது இரத்தம் வெளியில் வராமல் அப்படியே அடைத்துக் கொள்ளும். அவர்களுக்கு ஆபரேஷன் செய்து கன்னித் திரையை அகற்றுவார்கள். இல் லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். கன்னித் திரையை அகற்றப் போகிறோம் என சொல்லிவிட்டுத்தான் இந்த ஆபரேஷனை டாக்டர்கள் செய்வார்கள். பின்னால் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்ற அக்கறைதான் காரணம்!
வேடிக்கை என்னவென்றால், பிளாஸ்டிக் சர்ஜரி மகத்தான வளர்ச்சி கண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஏதோ கண்ணில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவது மாதிரி பெண்களுக்குக் கன்னித்திரையைக்கூட புதிதாகப் பொருத்துகிறார்கள்.
திருமணத்துக்கு முன்பாக இதை யார் வேண்டுமானாலும் ஆபரேஷன் மூலம் பொருத்திக் கொள்ளலாம். இந்த ஆபரேஷனில் பிறப்பு உறுப்பின் உட்புறச் சுவரையும் இறுக்கமாக்கி விடுகிறார்கள். இதன் பிறகு முதலிரவின்போது இரத்தக் கசிவும் இருக்கும்… தாங்க முடியாமல் வலியும் இருக்கும். செக்ஸ் பற்றி ஆத்திச்சூடிகூட தெரியாத பெண் நமக்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள் என கணவர் பெருமைப்பட்டுக் கொள்வார். இன்னமும் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பல பெண்கள் இப்படிப்பட்ட ஆபரேஷனுக்காகவே மேற்கத்திய நாடுகளுக்குப் போகிறார்கள்.
அமெரிக்கப் பணக்கார பெண்கள் மத்தியில் இது தான் லேட்டஸ்ட் ஃபேஷன்! இருபதாவது திருமண நாளுக்கு முன்னால் இதைச் செய்துகொண்டு குழந்தைகளோடு கிளம்பி ஹனிமூன் போகும் ஜோடிகள் அங்கே நிறைய!
இது ஒரு பக்கம் என்றால், விலைமாதர்களுக்கும் இது வசதியாகி விட்டது. எய்ட்ஸ் பயம் பீடித்திருக்கும் அமெரிக்காவில் புதிதாகத் தொழிலுக்கு வரும் விலைமாதர்களுக்கு மவுசு அதிகம். பணக்கார கஸ்டமர்கள் இலட்சக்கணக்கில் கொட்டிக் கொடுப்பார்கள். இதற்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட பெண்கள் இந்த ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். எந்தெந்த சமுதாயம் கற்புக்கும், கன்னித் தன்மைக்கும் மதிப்பு கொடுக்கிறதோ அங்கெல்லாம்தான் தவறுகள் அதிகம் நடக்கின்றன என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஒரே வித்தியாசம்… பெண்கள் நேரடியான செக்ஸ் உறவில் ஈடுபடுவதில்லை. சுய இன்பம், பிற வழி இன்பம் என மற்ற எல்லா விவகாரங்களையும் செய்கிறார்கள். திருமணத்துக்கு முன் ஆண்களுக்கு அதிக இடம் கொடுக்காமல் தவிர்த்துத் கன்னித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். டெக்னிக்கல் கன்னிப் பெண்கள் என இவர்களைச் சொல்லலாம்.
மகாராணி ஏமாற்றி விட்டு வேறு யாருடனோ செக்ஸ் உறவு வைத்திருப்பதாக சந்தேகிக்கும் ஒரு மன்னர் தினமும் ஒரு கன்னிப் பெண்ணை மணந்து, அவளோடு செக்ஸ் அனுபவித்து விட்டு, மறுநாள் அந்தப் பெண்ணைக் கொன்று விடுவார். காரணம்… அவளும் அவரை ஏமாற்றக் கூடாது என்பதுதான்! புகழ் பெற்ற செக்ஸ் புத்தகமான ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் கதை இது. இப்படி சந்தேக மன்னர்களாக ஆண்கள் இருந்தால், கன்னித் திரை பொருத்தும் ஆபரேஷன்கள் நம்முடைய குக்கிராமத்தில்கூட பாப்புலர் ஆகக் கூடும்.

நன்றி: Jamialim. News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s