0

திருமணம் முடிக்க போகும் இளம் பெண்களுக்காக!! (ஆண்கள் படிக்க வேண்டாம்) – Indru Oru Thagaval No.1 Famous Tamil Thagaval l World News l etc.

[திருமணம் முடிக்க போகும் இளம் பெண்களுக்காக!! (ஆண்கள் படிக்க வேண்டாம்) – Indru Oru Thagaval No.1 Famous Tamil Thagaval l World News l etc.] is good,have a look at it! http://www.todayindias.info/2016/05/blog-post_265.html?m=1

நன்றி: Jamialim. News

0

பேஸ்புக் தர்மம் தெரியுமா….!

பேஸ் புக் தர்மம்..தெரியுமா உங்களுக்கு..?
நல்ல போஸ்ட் ஆக இருந்தால் like போடாம தூக்கிட்டு(share ) போகாதீங்க..!
உங்க முகத்தை யாருக்கும் காட்டாமல் commants ல போய் யாரையும் கழுவி கழுவி ஊத்தாதிங்க..!

image

எங்கயோ ஒரு மூலைல பாதுகாப்பாய் உக்கார்துட்டு…யாருடைய மதத்தையும் ஜாதியையும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வன்மம் தீர்க்க வேண்டாம்..!
பிறந்த மண்ணுல உக்கார்ந்துட்டு அதுக்கு எதிராக கொச்சை படுத்தும் வேலை ஈடுபாடாமல் இருங்க..!
facebook ல யாரிடமும் கடன் கேட்டு அவமான படாதிங்க..யாரும் சல்லி காசு நீட்டுவதில்லை.
உருகி உருகி பேசிட்டு ஒரே நாளில் ஒற்றை ஒரு கோபத்தால் அவர்கள் இயலாமையை எல்லாம் தெரிந்து கொண்டு பழி தீர்க்கும் முயற்ச்சியில் ஒரு போதும் ஈடுபடாதீங்க..!
பேஸ் புக் சண்டை ஒருபோதும் நிரந்தரம் இல்லை..நீங்கள் உண்மையாக நடந்து இருந்தால் மறுபடியும் சேர்வீர்கள்.
முகமே தெரியாதவர்கள் மேல் அதிகம் உரிமை எடுத்து மதிப்பு கொடுப்பதில் வரம்பு மீறாதீங்க ..!
எடுத்த எடுப்பிலே யாரிடமும் privazy வாழ்கையில் மூக்கை நுளைக்காதீங்க .தொடர்பு எண்களை கேட்பதும் தர்மசங்கடங்களை ஏற்படுத்தும்.
அடுத்தவர் புகைப்படங்களை தனதாக்கி காட்டுவதும் நடிகை ,நடிகர்களின் புகைப்படங்களை தனது முகமாக காட்டுவதும் அர்த்தம் இல்லாத கோழைகள் செய்யும் வேலையாகும்.இது ஒரு மனோவியாதியாகும்..பிரச்சனையை கையாள தெரியாதவர்கள் செய்யும் செயலாக கருதபடும்.கானல் நீர் போல அவர்களால் எதுவும் சாதித்து விட முடியாது.
மனதில் தோன்றும் வக்கிரங்களை பொதுவில் திணிப்பதும் . குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் பதிவுகளை அரங்கேற்றுவதும் ஒரு வித மனோவியாதியாக கருதப்படும்.
அறிமுகம் தெரியாத நபர்களை கையாளும்போது அவர்கள் பெருமைகள் பற்றி எதுவுமே தெரியாமல் நீங்களாகவே அவர் பற்றிய மதிப்பை கற்பனை செய்து தரம் தாழ்த்தி பேசுவது வேதனையான செயலாகும்..
செக்ஸ் மட்டுமே மையமாக கொண்டு பெண்களுக்கு நட்பு அழைப்புகளை கொடுப்பதும்…அந்த ரீதியில் பேசுவதும் மிக கேவலமான செயலாகும்.
முகநூல் முலம் வலைவிரிப்பது உங்கள் நேரத்தை வீண் அடிக்கும் செயல்..யாரும் கண்ணை மூடிக்கொண்டு வலையில் சிக்குவதில்லை . எச்சரிக்கை உணர்வு என்பது பெண்களுடன் சேர்ந்தே பிறந்த ஓன்று..!சில்லுவண்டு சிக்காது ,
எனது முகநூல்அனுபவபடி எனக்கு ஏற்பட்ட சில சிக்கலான வேலைகளை சொந்த பந்தங்கள் இரத்த சமந்தம் கூட உதவாத செயல்களை எங்கிருந்தோ ஒரு சில நேசகரங்கள் நீட்டி எனக்கு உதவிய அன்பு உள்ளங்கள் உண்டு.!
இந்த அற்புதமான facebook வலைத்தளம் நம்ம தலைமுறைக்கு கிடைத்த மிகச்சிறந்த வரப்பிரசாதம் அதில் கிடைத்த அருமையான சொந்தங்களை சேதபடுத்தாமல் பொக்கிஷமாக பாதுகாப்போம்.
” சேர்ந்து வாழ்வோம்–தோழமையுடன் பயணிப்போம் ”

நன்றி: Jamialim. News

0

சமையலில் சில யோசனைகள்..!

சமையல் கலாநிதிகளுக்கு சில அருமையான யோசனைகள்…!
*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
*சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
*சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

image

0

நிறங்களும் குணங்களும்….!

உளவியல் சொல்லும் நிறங்களும் அதன் குணங்களும்.?
உளவியலில்(Psycology) நிறங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.இந்த வண்ணங்கள் நமது எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை என்பதும்
ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்கள் குணத்தையும் கணிக்க இயலும் என்பதும் உளவியலாளர்களின் கருத்து.
உளவியலில், சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சளை அடிப்படை நிறங்கள் (Basic Colours) என்று சொல்லப்படுகிறது. நம் மீது தாக்கத்தை உண்டாக்கக்கூடிய நிறங்களாக அடிப்படை நிறங்களான மேற்கூறிய சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் இவற்றுடன் வெண்மை, கருமை, சாம்பல் நிறம்(Grey), ஆரஞ்சு, ஊதா(Violet), இளஞ்சிவப்பு (Pink) மற்றும் பழுப்பு(Brown) நிறங்கள் குறிப்பிடப்படுகின்றன.
பச்சை நிறமே பச்சை நிறமே:
பசுமை நிறம் பொதுவாக சமநிலையையும் சூழலில் அமைதி நிலவுவதையும் குறிக்கிறது. பச்சை நிறத்தினைப் பார்க்கும்பொழுது நமது மனம் புத்துணர்ச்சி அடைகிறது. கண்களில் உள்ள லென்ஸ் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிறத்தின் அலைவரிசைக்கும் ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்(Adjustment) கொள்ளுகிறது. ஆனால், பச்சை நிறத்திற்கு அப்படிப்பட்ட தகவமைப்பு ஏதும் தேவையில்லை. வான வில்லின் நடுவில் அமைந்துள்ள இந்நிறமானது சமநிலையைச் சுட்டுகிறது. ஓய்வு நிலையையும் செழிப்பையும் குறிக்கவும் பச்சை பயன்படுகிறது.
நீல நிறம் :

image

குளிர்ந்த நிறமாகக் கருதப்படும் நீலம், அறிவுத்திறனையும், நம்பிக்கையையும்,திறமையான தர்க்க ரீதியான செயல் பாட்டையும் குறிப்பிடுகிறது. நீல நிறம் மனதிற்கு இதமளிக்கக் கூடியதாகக் கருதப் படுகிறது. ஆழ்ந்த நீல நிறம், எண்ண ஓட்டங்களைச் சீராக்கி சிந்திக்கும் திறனை உயர்த்துகிறது. இள நீலமானது, மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்துகிறது. அதிக அலை நீளமுள்ள நிறமாதலால், தொலைவில் உள்ள நீல நிறப்பொருட்கள் நம் கண்ணில் படுவதில்லை. இதனால்தான் போக்குவரத்து விளக்குகள் நீல நிறத்தைப் பயன்படுத்துவதில்லை. அதே அதிக அலை நீளம்தான், வானத்தை நீல நிறமாகத் தோன்றச் செய்யவும் காரணம். உலக முழுவதும் அதிக அளவிலான மக்கள் நீல நிறத்தை விரும்புவதாக ஆய்வுகள் கணிக்கின்றன.
வலிமையின் நிறம் சிவப்பு:
வறுமையின் நிறம் சிவப்பா என்று நமக்குத் தெரியாது. ஆனால் வலிமையின் நிறம் சிவப்புதான். ஆம், சிவப்பு வலிமையையும் துணிச்சலையும் ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றையும் குறிக்கும் நிறமாகக் கருதப்படுகிறது. தூண்டுதலை உண்டாக்குகிறது. ஒரு அறையில் உள்ள பொருட்களில் சிவப்பு வண்ணப் பொருள்தான் நமது கவனத்தினை முதலில் ஈர்க்கிறது. எனவேதான் போக்குவரத்து சைகைகள், அபாய எச்சரிக்கைகள் முதலியவை சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றன. ‘செய் அல்லது செத்து மடி’ என்ற உணர்வை உண்டாக்குவதும், நேரம் வேகமாக ஓடுவது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதும் சிவப்பின் பிற தன்மைகள்.
மஞ்சள் மகிமை:
மஞ்சள் உணர்வு பூர்வமான நிறம். தன்னம்பிக்கை, ஆக்க பூர்வ சிந்தனைகள், நட்புணர்வு, நேர்மறைச் சிந்தனை ஆகியவற்றின் குறியீடாகக் கருதப்படுகிறது. சிவப்பு நிறம் போலவே வலிமையையும் உணர்வுகளின் தூண்டுதலையும் கூட்டுவது மஞ்சளின் தன்மை. உத்வேகத்தை அதிகரிப்பதோடு நேர்மறை உணர்வுகளை ஏற்படுத்த வல்லது. ஆனால் அளவுக்கதிகமான மஞ்சள் நிறம் அல்லது தவறான வண்ணங்களுடன் மஞ்சளின் இணைப்பு எதிரான பலனைத் தரக்கூடியது. அது நமது சுய மதிப்பைக் (Self Esteem) குறைக்கின்ற அல்லது பதட்டத்தையும் பயத்தையும் உண்டாக்கும் காரணியாகிவிடுகிறது.
நாளை மீதீ நிறங்களின் குணங்களை பற்றி பகிர்வேன்.

நன்றி: Jamialim. News

0

உடல் நோய்பற்றியும் மருந்துகள் பற்றி……!

உடல் நோய்களை வெகு சீக்கிரமாக குணமாக்கும் ஸ்டீராய்டு மருந்துகள்.! எத்தனை கேடுகள்.? பாகம் -1

image

டாக்டர்களின் கையெழுத்து மருந்துக் கடைக்காரருக்கு மட்டுமே புரிவது ஏன்?
“என் வசூல் முடிஞ்சிருச்சு. இப்ப உன் நேரம்” என்று டாக்டர், மருந்துக் கடைக்காரருக்கு உணர்த்துகிறாராம்.
வாட்ஸப்பில் வந்த இது, நகைச்சுவையாக இருந்தாலும், இன்றைய நிஜமும் இதுதான்.
சேவையாக நினைத்துச் செய்யப்பட வேண்டிய மருத்துவம், இன்று பணம் கொழிக்கிற பிசினஸ்.மக்களிடமிருந்து பணத்தைச் சுரண்ட, மருத்துவர்கள் கையாள்கிற டெக்னிக்குகள் சொல்லி மாளாதவை.
மக்களுக்கு வேண்டியதெல்லாம் நோய் உடனடியாக குணமாக வேண்டும். அப்படிக் குணப்படுத்துகிற டாக்டர் அவர்களைப் பொறுத்த வரை கைராசிக்காரர்.
ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் போதே நோய் குணமான உணர்வை உண்டாக்கும் மருத்துவர்கள் இன்று எக்கச்சக்கம். அதற்கு அவர்களது திறமையோ, அனுபவமோ காரணமில்லை.பின்னே.

image

அவர்கள் தரும் ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்!
அதென்ன ஸ்டீராய்டு?
ஸ்டீராய்டு என்பது நோயைக் குணமாக்கும் மருந்தல்ல. மறைக்கும் மருந்து. ஆஸ்துமா அதிகமாகி, திணறத் திணற ஆஸ்பத்திரிக்கு போகும் ஒரு நபர், ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சராசரி நிலைக்குத் திரும்புவார். அந்த நேரத்துக்கு அவரது ஆஸ்துமா தீவிரம் மறைக்கப்பட்டதே தவிர, குணமானதாக அர்த்தமில்லை. ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உண்டாகும் பயங்கரங்கள் ஏராளம்.
# அனாபாலிக் ஸ்டீராய்டு,
# கார்டிகோ ஸ்டீராய்டு
என ஸ்டீராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது அவர்களுக்கு உடனடியாக ஒரு தெம்பை, உற்சாகத்தை, தசைகளுக்கு வலுவைத் தரக் கூடியது.விளையாட்டு வீரர் பென் ஜான்சன், போட்டியின் போது போதை மருந்து உட்கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, சர்ச்சைக்குள்ளானது கூட இந்த வகை ஸ்டீராய்டு காரணமாகத்தான். இரண்டாவது வகை ஸ்டீராய்டு, மருத்துவத் துறையில் உபயோகிக்கப்படுவது. இதுவும் ஆபத்தே.
இந்தி நடிகர் அம்ஜத் கானை ஞாபகம் வைத்திருப்பவர்களுக்கு அவரது மாமிச மலை போன்ற உடல் கட்டாயம் நினைவை முட்டும். உடல் நலக் கோளாறு ஒன்றுக்கு அவர் நீண்ட நாட்களாக உட்கொண்ட ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்தான் அதற்குக் காரணம் என்பது பிறகு கண்டறியப்பட்டது. நம்மூரில் நடிகர் அஜீத், முதுகுவலிக்காக உட்கொண்ட மருந்துகள் கூட ஸ்டீராய்டு கலந்தவையாம். அதனால் தான் இடையில் சில நாட்களுக்கு அவரது உடல் எக்குத்தப்பாக பெருத்துப் போனதாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சுஉண்டு

image

இப்படி நிறைய உதாரணங்களைப் பட்டியலிடலாம் ஸ்டீராய்டு பாதிப்புகளுக்கு.‘‘ஸ்டீராய்டு மருந்துகள் நல்லதா, கெட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் ஸ்டீராய்டு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்’’ .
‘‘தைராய்டு, இன்சுலின் போல நம் உடலில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன்தான் ஸ்டீராய்டு (Steroid).

image

.
உடல் நலக் குறைவான அந்த நேரங்களில் ஸ்டீராய்டு ஹார்மோனின் அமைப்பில் உருவான மாத்திரைகளையோ, ஊசிகளையோ எடுத்துக் கொள்கிறோம் இவைதான் ஸ்டீராய்டு மருந்துகள்.
இந்த ஸ்டீராய்டு ஹார்மோன் நம் உடலில் வயிற்றுப் பகுதியில் சிறுநீரகங்களுக்கு மேல் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பியிலும், இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் விதைப்பை மற்றும் கருப்பைகளிலும் தயாராகிறது. அட்ரினல் சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனை கார்டிகோ ஸ்டீராய்டு (Cortico steroid) என்கிறோம். பொதுவாக நாம் ஸ்டீராய்டு என்று சொல்வது இந்த கார்டிகோஸ்டீராய்டு ஹார்மோனைதான். உடலில் சோடியம் அளவைப் பராமரிப்பதில் கார்டிகோ ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதில் உற்பத்தியாகும் இன்னொரு முக்கிய ஹார்மோனான கார்டிசோல் ஹார்மோன் மன அழுத்தத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய இடம் பெறுகிறது. பிட்யூட்டரியில் சுரக்கும் ஹார்மோனை Androgenic என்கிறோம். செக்ஸ் ஹார்மோன் என்று சொல்லப்படும் இந்த ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன் தான் பாலியல் சார்ந்த செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது’’ என்கிறார் சுப்ரமணியன் சுவாமிநாதன்.
.
ஸ்டீராய்டு மருந்துகள் பற்றித் பேசத் தொடங்குகிறார் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை சிறப்பு மருத்துவரான ஸ்ரீதரன்.
‘‘நாள்பட்ட ஆஸ்துமாவுக்கு ஸ்டீராய்டு மருந்தை இன்ஹேலராக, நெபுலைஸராக கொடுக்கும்போது ஆஸ்துமாவிற்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது. சோரியாசிஸ், ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் மற்றும் வலி, வேதனை, வீக்கம் போன்றவற்றை தற்காலிகமாக குறைக்க ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப் படுகிறது.
உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிறகு இது நம் உறுப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டு புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படும். அந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் வேகத்தைத் தணித்து ஒவ்வாமையைப் போக்கவும் ஸ்டீராய்டு மருந்துகள் நிச்சயம் தேவை.
(உறுப்பு மாற்று சிகிச்சைக்குப்பின் புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படும் என்பதை ஆங்கில மருத்துவர்களே ஒப்புக்கொள்கின்றனர். நமது உடலானது ஒருபோதும் அந்நிய பொருட்களையோ, உறுப்புக்களையோ ஏற்றுக்கொள்ளாது.)
சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கும், வலி, வீக்கத்தைக் குறைக்கவும் ஸ்டீராய்டு ஆயின்ட்மென்ட்டாக கொடுக்கப்படுகிறது. ரத்தப்புற்று நோய்கள், ரத்த தட்டணு குறைபாடு நோய்கள், குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், குடல் அழற்சி நோய்கள், மூளையில் ஏற்படும் கட்டி ஆகியவற்றுக்கும் அறுவைசிகிச்சைக்கு முன் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மூளையில் ஏற்படும் காசநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் ஸ்டீராய்டு கொடுக்கப்படுகிறது’’ என்பவர், ஸ்டீராய்டு மருந்துகள் எப்போது பிரச்னையாகிறது என்பதைத் தொடர்ந்து விளக்குகிறார்.
.
‘‘ஸ்டீராய்டு மருந்துகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஸ்டீராய்டை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்கு என்ன விளைவு ஏற்படுத்தும் என்பதை பகுதி -2 ல் நாளை பார்க்கலாம்.

நன்றி: Jamialim. News

0

சவூதிஅரபியாவில்வேலைசெய்பவர்களுக்கு…!

சவுதி:
PLEASE SHARE ALL….

image

சவூதியில் இருப்பவர்களுக்கு : உங்கள் இக்காமா எண்ணினல் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது என்பதை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்:
உங்களின் இக்காமா நம்பரில் எத்தணை சிம் வாங்கபட்டு உள்ளது?
எத்தனை சிம் கைரேகை பதிவு செய்யபட்டது என்பதை அறிய STC .நம்பர் 900 நபம்பருக்கு 9988. டைப் செய்து அனுப்பினால் உடனே பதில் கிடைக்கும் (படம் பார்க்கா) உங்கள் பெயரில் வேறுயாரவது சிம் கார்டு வாங்கிஉள்ளனரா என்று
தெரிந்து கோள்ளுங்கள்.
அப்படி வேறு யாரும் SIM CARD வாங்கயிருந்தால் சவுதி சட்டபடி குற்றமாகும்.
நீங்கள் உடனே Customer Care அழைத்து
உங்கள் புகாரை பதிவு செய்து விடுங்கள் இல்லையேல் நீஙகள் குற்றவாளியாகி விடுவீர்கள். எச்சரிக்கை கவணம்.

நன்றி Jamialim. news