0

குடும்பஅட்டைக்கு ….?

குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ…

image

1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான

சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.

2.வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம் சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையையும் கொடுத்து மனு தாக்கல் செய்யலாம்.

3.குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ, வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப அட்டையின் நகல்/எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்) மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.

4.புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால் போதும்.

5.குடும்ப அட்டையில் இருந்து இறந்தவர் பெயரை நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்துகொள்ளலாம்.

6.குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே. இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், http://www/consumer.tn.gov.in/contact.htm என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.

7.குடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில் ரேஷனில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பெற முடியும், வெள்ளை வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம். அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை நிற அட்டையே வழங்கப்படுகிறது.

8.ரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம், அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும் ஒப்படைத்துவிட்டால்… ஒரு மாதத்தில் ‘என் கார்டு’ என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை கிடைத்துவிடும்.

9.புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு, சமையல் அறை போன்றவற்றை மேற்பார்வையிடுவார் (தனியாக சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா போன்ற பரிசோதனைகள்). அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப் பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.

10.முகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை (வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம் கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன் இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

11.குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.

12.‘இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும். இரண்டு மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்

நன்றி: Jamialim. News

0

வீட்டுகுறிப்பு பூச்சிதொல்லையா….!

பல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!!

image

வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை தரும் பெரும்பாலான பூச்சிகளை அழித்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இவை உதவினாலும், நமது வீடுகளுக்குள் பல்லிகளைக் காண்பதை நாம் விரும்புவதில்லை.
நமக்கு இவை வேண்டாத விருந்தாளிகளே. கடைகளில் காணப்படும் பல்லி விரட்டி மருந்துகள் நச்சுத்தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கு வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் ஆபத்தானவை. எனவே யாருக்கும் ஆபத்தை உண்டாக்காத, சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் பல்லிகளை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகளைப் பின்வருமாறு காணலாம்.
காபித்தூள்
சிறிது காபித்தூளை மூக்குப்பொடியுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பல்குத்தும் குச்சிகளின் முனையில் இவ்வுருண்டைகளைக் குத்தி, பல்லிகள் நடமாடும் இடங்களில் அவற்றை வைக்கவும். இவற்றை உண்ணும் பல்லிகள் மடிந்துவிடும்.
நாப்தலின் உருண்டைகள்
நாப்தலின் உருண்டைகள் சிறந்த பூச்சிக்கொல்லிகள். உங்கள் வீட்டு அலமாரிகளிலும், சிங்க்குகளிலும், கேஸ் அடுப்புக்கு அடியிலும் போட்டு வையுங்கள். பல்லிகளை விரட்டும் சிறந்த முறை இது.
மயில் இறகுகள்
மயில் இறகுகளைப் பார்த்து பல்லிகள் பயப்படும். பல்லிகள் வசிக்கும் இடங்கள், நடமாடும் இடங்களுக்கு அருகிலுள்ள சுவர்களில் மயில் இறகை ஒட்டி வையுங்கள். பூச்சாடிகளில் மயிலிறகைப் போட்டு வையுங்கள். இதனால் உங்கள் வீட்டிலிருந்து பல்லிகள் ஓடிவிடும்.
மிளகுத் தூள்,
பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே மிளகுத் தூளை தண்ணீருடன் கலந்து கொண்டு ஒரு பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே தயாரியுங்கள். சமையலறையில் உள்ள அலமாரிகள், டியூப்லைட் இடுக்குகள், அடுப்புகளுக்கு அடிப்புறம் மற்றும் ஃப்ரிட்ஜ் அடிப்புறம் ஆகியவற்றில் இக்கலவையைத் தெளியுங்கள். இந்த வாசனையினால், எரிச்சலடைந்து பல்லிகள் ஓடிவிடும்.
குளிர்ந்த நீர்
ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சி செய்யப்பட்ட தண்ணீரை பல்லிகள் மீது தெளியுங்கள். இதன் மூலம் பல்லியின் உடல் வெப்பநிலை குறைந்து அவற்றால் அசைய முடியாத நிலை உண்டாகும். அப்போது ஒரு அட்டைப் பெட்டிக்குள் பிடித்து அடைத்து, வீட்டிற்கு வெளியே வீசி விடுங்கள்.
வெங்காயம்
வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டி சுவர்களில் தொங்கவிடுங்கள். பல்லிகளின் மறைவிடங்களில் போட்டு வையுங்கள். வெங்காயத்திலுள்ள கந்தக ஆவியானது பல்லிகளால் சகிக்கமுடியாத மணத்தை உண்டாக்கும். இதனால் பல்லிகள் அவ்விடத்தை விட்டு ஓடிவிடும்.
முட்டை ஓடுகள்
முடிந்த அளவுக்கு முழுதாகக் காட்சியளிக்கும் கோழி முட்டை ஓடுகளை பல்லிகள் நடமாடும் பகுதிகளில் போட்டு வையுங்கள். வீட்டுக்குள் வேறு ஒரு பெரிய உயிரினம் இருப்பதாகக் கருதி பல்லிகள் ஓடிவிடும். முட்டை ஓடுகளை 3-4 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்.
பூண்டு
ஸ்ப்ரே பாட்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெங்காயச் சாறு மற்றும் தண்ணீரைக் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பூண்டுச் சாற்றினைக் கலக்கவும். நன்றாகக் குலுக்கி, இதனை வீட்டு மூலைகளிலும், விரும்பும் வேறு இடங்களிலும், தெளியுங்கள் அல்லது பூண்டுப் பற்களைக் கூட வீட்டு மூலைகளில் வைத்து பல்லிகளை விரட்டலாம்.
————————————————————————————————-
வீட்டில் எறும்பு தொல்லை போக்க 10 பொருட்களைக் கொண்டே போக்கலாம்.
வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை டப்பாவை திறந்தால் எறும்புகளாக உள்ளதா? மேலும் வீட்டின் மூலைகளில் எறும்புகள் ஓட்டை போட்டு தங்கியுள்ளதா? இவற்ற அழிப்பதற்காக கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், இந்த சாக்பீஸ்களைப் பயன்படுத்த முடியாது.
ஆனால் இந்த எறும்புகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே போக்கலாம். மேலும் இந்த இயற்கைப் பொருட்கள் அனைத்தும் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாதவை. அது என்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இப்போது எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசமமாக கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எறும்புகள் மொய்க்கும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் அழிந்துவிடும்.
மசாலாப் பொருட்கள்
மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
வெள்ளரிக்காய்
எறும்புகளை கொல்வதற்கு உதவும் பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் தடுக்கலாம்.
புதினா
புதினாவை உலர்த்தி, அதனை பொடி செய்து, அவற்றை எறும்புகள் வரும் இடங்களான ஜன்னல் கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் உள்ள ஓட்டைகளில் தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை
பேக்கிங் சோடாவுடன் சரிசமமான அளவில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை எறும்புகள் வரும் இடத்தில் தூவினால், எறும்புகள் அவற்றை சாப்பிட்டு, இறந்துவிடும்.
டால்கம் பவுடர்
இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் பொருள். அதற்கு எறும்புகள் உள்ள இடத்தில் டால்கம் பவுடரை தூவி விட வேண்டும்.
கிராம்பு
கிராம்பு சர்க்கரை டப்பாவில் 1-2 கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் இருக்கும்.
பூண்டு
பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.
எலுமிச்சை சாறு
எறும்புகள் மொய்க்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், இனிமேல் எறும்புகள் வராமல் இருக்கும். அதிலும் வீட்டை மாப் கொண்டு துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
போராக்ஸ்
போராக்ஸ் பவுடரை எறும்புகள் உள்ள இடத்தில் தூவியோ அல்லது சர்க்கரை நீரில் கலந்தோ தெளித்தால், எறும்புகளின் தொல்லையில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.
————————————————————————————————-
எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!
வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் எலிப் பெட்டியைப் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதுள்ள எலிகளோ சாமர்த்தியமாக இருக்கிறது. எலிப் பெட்டியைக் கண்டாலே பயந்து ஓடும் எலிகள், தற்போது அதன் மேல் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனால் கடைகளில் விற்கப்படும் எலி பிஸ்கட்டுகளை வாங்கி வைக்கலாம் என்றால், வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பயமாக உள்ளது. எனவே அந்த எலிகளை இயற்கை முறையில் அழிப்பதற்கும், அதனை வராமல் செய்வதற்கும் ஒருசில வழிகள் உள்ளன. அந்த இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எலிகள் வருவதைத் தடுக்கலாம்.
பூனை
பூனைகளை வளர்த்து வாருங்கள் உங்களுக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும் என்றால், வீட்டில் பூனைகளை வளர்த்து வாருங்கள். வீட்டில் பூனை இருந்தால், எலி வீட்டிற்குள் வரவே வராது.
புதினா
எலிகளுக்கு புதினாவின் வாசனையே பிடிக்காது. மேலும் அந்த வாசனை இருந்தாலே அவை போய்விடும். எனவே எலி பொந்து உள்ள இடத்தில் ஒரு காட்டனில் புதினா எண்ணெயை நனைத்து பொந்தினுள் வைத்தால், அதன் வாசனையை நுகரும் எலியின் நுரையீரல் சுருங்கி இறந்துவிடும்.
மனிதனின் முடி
மனிதனின் முடி உள்ள இடத்திலேயே எலிகள் நிற்காது. இதற்கு முக்கிய காரணம், எலிகள் முடியை விழுங்கிவிடும். இப்படி அவை முடியை விழுங்கினால், அவை இறந்துவிடும்.
நாப்தலின் உருண்டை
நாப்தலின் உருண்டை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நிச்சயம் இது எலிகளுக்கும் ஆபத்தானது தான். எனவே இதனைப் பயன்படுத்தியும் எலிகளை அழிக்கலாம்.
அம்மோனியா
எலி பொந்துகளில் சிறிது அம்மோனியாவை தெளித்தால், அதன் நாற்றத்திலேயே எலிகள் இறந்துவிடும்.
மாட்டு சாணம்
எலிகளை இயற்கையாக அழிக்க வேண்டுமானால் மாட்டுச் சாணம் பயன்படுத்தலாம். அதற்கு மாட்டுச்சாணத்தினை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சீஸ் தடவி வைத்தால், அதனை எலிகள் சாப்பிட்டு, அதன் வயிற்றில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, இறந்துவிடும்.
ஆந்தை
கடைகளில் பிளாஸ்டிக்கில் விற்கப்படும் ஆந்தை பொம்மையை எலி வரும் இடத்தில் வைத்தால், எலிகள் பயந்து வராமல் இருக்கும்.
மிளகு
எலி வரும் இடத்தில் மிளகுத் தூளை தூவி விட்டால், அதனை நுகரும் போது, அதன் நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் இறந்துவிடும்.
பிரியாணி இலை
பிரியாணி இலையின் நாற்றம் எலிகளுக்கு பிடிக்காது. எனவே அந்த இலையை பொடி செய்து எலி வரும் இடத்தில் தூவி விட்டால், அதன் நாற்றத்திலேயே இறந்துவிடும்.
வெங்காயம்
எலிகளை அழிப்பதற்கு பயன்படும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, எலி தங்கும் பொந்தில் வைத்தால், அதனை உட்கொண்டு எலிகள் அழியும்.
பேபி பவுடர்
பேபி பவுடரை எலி தங்கும் மற்றும் வரும் இடத்தில் தூவினால், எலிகள் அந்த வாசனையால் இறக்கக்கூடும்.
நன்றி: Jamialim. News

0

தெரிந்ததும் தெரியாததும்….!

தெரிந்துகொள்வோம்

image

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?

1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.

14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

நன்றி: Jamialim. News

0

நீங்களும் மருத்துவர் ஆகலாம்.11

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!

பகுதி 11

image

நோயின் முதல் நிலை: களைப்பும் சோர்வும் ஏற்பட கல்லீரலே காரணம்..?
.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.
.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

நோயின் முதல் நிலை: களைப்பும் சோர்வும் ஏற்பட கல்லீரலே காரணம்..?

உணவில் கலந்துள்ள நச்சுக்கள், அஜீரணத்தின் காரணமாக இரத்தத்தில் கலக்கும் முன்பாகவே கல்லீரக்குள் கிரகிக்கப்படுகின்றன. அஜீரணத்தால் கிரகிக்கப்படும் ஒவ்வாத பொருள்களும், நச்சுக்களும் கல்லீரலில் ஜீரணிக்கப்படுகின்றன. அதாவது நச்சுப் பொருட்கள் கல்லீரலால் நீக்கப்படுகின்றன. குறிப்பிட்ட அளவுக்கு மேல் நச்சுப் பொருட்கள் சேரும்போது, கல்லீரலால் சோர்வடைந்து அதன் இயக்கம் குறைவுபடுகின்றது.
.

கல்லீரல்

கல்லீரல், உடல் உறுப்புக்களின் அனைத்துத் தசைகளுடனும், தசை நார்களுடனும் தொடர்பு கொண்டிருப்பதால் அதன் சோர்வும், களைப்பும் அனைத்து உடல் உறுப்புக்களின் தசை நார்களின் சோர்வுக்கும் காரணமாகிறது. உடல் உறுப்புக்களில் பலவீனமும் தோன்றுகிறது.
.

கல்லீரலும், வயிறும்

சாப்பிட்டதும், உற்சாகத்திற்கும், உடல் தெம்பிற்க்கும் பதிலாக, களைப்பும், தூக்கமும் ஏற்படுமானால், உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் உணவை ஜீரணிக்கும் வயிறும், கல்லீரலும் சோர்வடைந்துள்ளன. உணவின் அஜீரணத்தின் காரணமாக நச்சுப் பொருட்களாகவும், ஒவ்வாமைப் பொருளாகவும் மாற்றப்பட்ட உணவுச் சத்துக்கள் கல்லீரலால் நீக்கப்படவில்லை. எனவே உடல் தசை நார்களில் உடல் உறுப்புக்களில் அவை தேக்கம் கொண்டு விட்டன. இனி உடல் உறுப்புக்களின் தசைகள்தாம் அந்த நச்சுக்களையும், ஒவ்வாமையையும் ஜீரணிக்க வேண்டும். அதுவரையில் அந்தந்த உறுப்புக்களின் பலவீனம் தொடரும்.
.

கல்லீரல் சோர்வும் – தோல் வியாதிகளும்

இந்த நச்சுப் பொருட்கள் இரத்தத்தில் நச்சு சக்தியாக மாறி தோலில் பரவும் போது, தோல் செல் அணுக்களில் ஊடுருவி விஷத்தன்மை கொண்ட சக்தியாகத் தேங்குகிறது. இதன் விளைவாக அரிப்பு, திட்டுத்திட்டாக தோலில் சிவப்பு சிவப்பான தடிப்புகள், வீக்கங்கள், எரிச்சல், கொப்புளங்கள், சீழ் கோர்த்தல், வெடிப்புகள், புண்கள், வலிகள் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை ‘ஒவ்வாமை’ அல்லது ‘அலர்ஜி’ என்கிறோம்.
.

கல்லீரல் சோர்வு – உடல் முழுமையும் அலர்ஜி

இதே நச்சுச் சக்தியானது வயிறு, கணையம், மண்ணீரல், வாய், தொண்டை, உணவுக குழல், குடல்கள், பெருங்குடல், இருதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், இரத்த நாளங்கள், கண், காது, மூக்கு, எலும்புகள் என்று எங்கு வேண்டுமானாலும் ஊடுருவி அவற்றில் எங்கு தேக்கம் கொள்கிறதோ, அந்தந்த உறுப்புக்களில் நோய்கள் உருவாகின்றன. அதாவது தோலில் எந்தெந்த விளைவுகள் மேலே பார்த்தீர்களோ, அவற்றில் சில அல்லது முழுதுமாக ஏற்படலாம். இவற்றுக்குக் காரணம் ஒவ்வாமை எனும் அலர்ஜியே தவிர பாக்டீரியாக்களாலும், வைரஸ் கிருமிகளாலும் அல்ல. ஒவ்வொரு உறுப்பும் பலவீனமடையும்போது, அது தன் உறுதித் தன்மை குலைந்து சற்று வீக்கமடைந்து பெருத்தும் காணப்படும்.
.

இருதய வீக்கம்

கல்லீரல் சோர்வின் காரணமாக கல்லீரல் எந்த அளவுக்குக் களைப்புற்று, தளர்ந்து, பெருத்துக் காணப்படுகின்றதோ, அந்த அளவுக்கு, உடலின் எந்த உள்ளுறுப்பில் ஒவ்வாமை நச்சுக்கள் தேங்குகிறதோ அவ்வுறுப்புக்களும் தளர்ந்து பெருத்து, வீக்கமடைந்து காணப்படும்.

இருதயத் தசைகளில் நச்சுக்கள் தேங்குமானால், இருதய வீக்கம் காணப்படும். Cardiomegaly என்று டயக்னோஸிஸ் செய்வார்கள். காரணம் தெரியாத இருதய நோய் Idiopathic என்று கூறி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவார்கள். அலர்ஜி ஏற்பட்டால் எப்படி தோலில் நீர் கசியுமோ, அவ்வாறே இருதயத்தின் வெளிப்புறச் சுவர்களிலும் நீர் கசியும். (pericarditis, Pericardial effusion) இன்னும் தோலில் எவ்விதம் அரிப்பு, எரிச்சல், சிவப்புத் திட்டுக்களும், தடிப்புக்களும், கொப்புளங்களும், கட்டிகளும் உண்டாகுமோ, அவ்விதமே இருதயத் தசை நார்களிலும் இவற்றில் சிலதோ அல்லது அனைத்துமோ உருவாகலாம்.

இதற்காக மருத்துவம் பார்ப்பார்கள். இருதய இயக்கத்திற்கான (Digitalis) மாத்திரைகள், இருதயத்தில் கசியும் நீரைக் குறைப்பதற்காக சிறுநீர் பிரிய வைக்கும் மாத்திரைகள் (Frusemide), இருதய வலியைக் குறைப்பதற்காக இரத்த நாளங்களைப் பெரிதாக்கும் மாத்திரைகள் (Cardio vaso dialotors); அலர்ஜியை நீக்குவதற்காக (Cortisone) மாத்திரைகள், களைப்பை நீக்குவதற்காக (Vitamin) மாத்திரைகள், இவை ஒவ்வொன்றைப் பற்றியும் வரும் அத்தியாயங்களில் தெளிவாகப் பார்க்க இருக்கிறோம்.
.

வயிற்று நோய்கள்

தோலில் என்ன அலர்ஜி தொந்தரவுகள் ஏற்பட்டதோ, இருதயத்தில் நாம் என்ன பார்த்தோமா அதே குறைகள் வயிற்றில் பார்த்தோம். வயிற்றின் உள் பாகத்தில் சிவப்பு திட்டுக்களும், தடிப்புக்களும், எரிச்சலும், வலியும், வயிற்றின் உட்புறச் சுவர்களில் வெடிப்புக்களும், புண்களும் பொதுவாக வயிறும் வீக்கமடையும். கட்டிகளும், கொப்புளங்களும் ஏற்படலாம்.

இவை அனைத்துக்கும் காரணம் உணவின் நச்சுக்களும், கல்லீரல் அவற்றை நீக்காததால் உணவுப் பொருள்கள் அனைத்தும் பெரும்பாலும் ஒவ்வாமையாக மாறி விட்டதேயாகும். இந்த ஒவ்வாமை என்ற நச்சுப் பொருட்கள் வயிற்றின் தசை நார்களில் தேங்கும் போது, வயிற்றில் எந்த நிலையும் ஏற்படலாம்.

இந்த நிலையின்போது, ஏற்படும் தொந்தரவுகளுக்கான மருந்துகள் வயிற்று எரிச்சலுக்காக (Gelusil) மாத்திரைகள், வயிற்று வலிக்காக (caranazamepine) மாத்திரைகள், குமட்டல், வாந்திக்காக (Anti emetic) மாத்திரைகள்; வயிற்று வலிக்காக வயிற்றின் தசை நார்களை மேலும் ஊர்ஜிதமாக இழக்கச் செய்யும் (Atropine, Baralgan) போன்றவை பிரதான வைத்தியமாகும். ஒவ்வொன்றின் கேடுகளைப் பற்றியும் ஒவ்வொன்றாக அறிய இருக்கிறீர்கள்.
.

கணையம்

இந்த உறுப்பு பலவீனமடையும்போது, – நச்சுக்கள் இவ்வுறுப்பில் தங்கும்போது கணையத்தில் புண்களும், கொப்புளங்களும் ஏற்படலாம். நச்சுக்கள் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் ஒவ்வொரு வகையான அலர்ஜி இதுவாகும். இதற்காக (Antibiotic) மாத்திரைகள் வலிக்காக (Paracitamol, Atropin) மாத்திரைகள், இன்னும் அலர்ஜி என்னும் ஒவ்வாமைக்காக (Cortisone) போன்ற மாத்திரைகளும், வீக்கத்திற்காக (Ibuprofen, Brufen) மாத்திரைகளும் கொடுப்பார்கள்.
.

சிறுகுடலும், பெருங்குடலும்

குடல்கள் வலுவிழந்து பெருக்க ஆரம்பிக்கும். அதன் உட்சுவர்கள் பெரும்பாலும் சிகப்புத் திட்டுக்களும், நீர் வடிதலும், உட்புறத்தில் வெடிப்புக்களும், புண்களும், கட்டிகளும், வீக்கங்களும், கொப்புளங்களும், சீழ் கட்டிகளும் தோலில் ஏற்படும் அலர்ஜியை போன்றே உருவாகும்.

இவற்றின் காரணமாக வயிற்று வலி, அபரிமிதமான கெட்ட வாய்வு தொந்தரவுகள் (நச்சுப் பொருளிலிருந்து வெளியாகும் விஷ வாய்வுகள்) குடல் வால் நோய்கள், சாப்பிட்டதும் மலஜலம் ஏற்படுதல், பேதியும், சீதளமும், இரத்தமும் வெளியாதல்; அதிகப்படியான வாய்வு பிடித்தல், வயிறு அடைத்தாற் போன்றும், பெருத்தும் விடுதல் மூலம், எப்போதும் குடல்களில் வலி போன்றவை.

இதற்காக வைத்தியம் புதிதாக ஒன்றுமில்லை. மேலே சொன்ன வைத்தியம்தான். ஒவ்வொரு நோயின் குறிக்கும் அதற்கு எதிரான மாத்திரைகள் அலர்ஜியை அழிப்பதற்காக இந்த கார்டிஸோன் மாத்திரைகள் எந்த நோயாக இருந்தாலும் அதன் தீவிரத்தை அதிகரிக்கும்.
.

“அனைத்து நோய்களுக்கும் நிவாரணியாக கொடுக்கப்படும் இந்த கார்டிஸோன் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.”

மேலே சொல்லப்பட்டுள்ள உடல் உறுப்புக்கள், தசைகள், அவற்றின் தசை நார்களில் ஏற்படும் களைப்பும், சோர்வும், நோய்களும் கல்லீரலின் அதிகப்படியான இயக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பலவீனம்தான் என்பதை இன்று அறிந்திருக்கிறோம். கல்லீரல் அதிகப்படியாக இயக்கம் கொள்வதன் காரணம் உணவிலுள்ள நச்சுக்களாகும்.

உணவிலிருந்தே நச்சுக்கள் உருவாகிறதென்றால், நச்சுக்களையே பிரதானமாகக் கொண்ட மருந்துகள் எந்த அளவுக்கு கல்லீரலை பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும்போதே உங்கள் நெஞ்சங்கள் பயத்தால் உறைந்து போக வேண்டும். ஆம்! ஒவ்வொரு மருந்தும் கல்லீரலைக் கொலை செய்தே விடுகிறது.
.

உடல் வலி, ஜுரம்

களைப்பையும், சோர்வையும் தொடர்ந்து உடல் வலி ஏற்படுகிறது. அதாவது உடல் உறுப்புக்கள் – கை கால் உடம்பு தசைகளின்; உடல் உள் உறுப்புக்களான வயிறு, இருதயம், கல்லீரல், குடல்கள், சிறுநீரகங்கள், கர்ப்பப் பை, சினைப் பை, கண், காத்து, மூக்கு, வாய், எலும்புகள் ஆகியவற்றின் திசுக்களில் வலியையும், உளைச்சலையும் தோற்றுவிக்கிறது.

இந்த வலி நோயின் தன்மையாகும். இந்த நோயின் தன்மை வலி குறைக்கும் மருந்துகளால் ஏற்பட்டதாகும். எந்தவொரு வலி மாத்திரையும் உடல் வெப்பத்தையும், தணிக்கும் என்பதாகையால், நோய் எதிர்ப்பு சக்தியையும் வீணடிக்கிறது. இந்த நிலையில் கல்லீரல் அதன் இயங்கும் திறனில் மிக மோசமான பலவீனத்தை அடைகிறது. உடல் தசை நார்களையெல்லாம் உருக்குலைந்த நிலையில் பசியற்றுப் போய், அஜீரணத்தாலும் பாதிக்கப்பட்டு விடுகிறார். இந்த அஜீரணத்தின் விளைவாக உணவிலிருந்து வெளியாகும் க்ளுகோஸ், தரம் குறைந்ததாக உடல் திசுக்களால் ஜீரணிக்கப்பட முடியாத, விஷமாக மாறி ஒவ்வொரு உறுப்பையும் நோய்க்கு ஆளாக்குகிறது. இந்த வகையிலும் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல். இவ்வாறாக, ஒன்றுக்கொன்று மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நோய் சுற்றுத் தீவிரமடைகிறது.

எனவேதான் பெரும்பாலான மருந்துகளை உபயோகிக்கும் வைத்திய முறைகள் மோசமான உணவுக் கட்டுப்பாட்டை பத்தியம் என்ற பெயரில் கடைபிடிக்கச் சொல்கிறார்கள்.

இனி, இந்த உடல் வலி சுர மாத்திரைகள் இவற்றின் கேடுகள் என்ன என்பதை அனைத்து மாத்திரைகளையும் ஒட்டு மொத்தமாகக் கொண்டு பொதுவாகப் பார்ப்போம். ஜுரம் அல்லது வலி இவற்றுக்காக நீங்கள் எந்தவொரு மாத்திரையைச் சாப்பிட்டாலும் சரியே. அதனால விளையப்போகும் கொடுமைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கீழே தரப்போகும் எந்த ஒரு நோயிலிருந்தும் ஜுரம், வலிக்காக எந்தவொரு மாத்திரையை நீங்கள் சாபிட்டாலும் அவற்றிலிருந்து தப்ப முடியாது. ஒவ்வொரு நோயையும் நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும். இவற்றில் பெரும்பாலான நோய்கள் மறைமுகமாகவே உங்களை தாங்கிக் கொண்டிருக்கும். டெஸ்ட்டுகளுக்கோ, ஸ்கேன் போன்ற சாதனங்களுக்கோ நோய்கள் புலப்பட சாத்தியமில்லை.

“எனக்கு இங்கே வலிக்கிறது டாக்டர்! அங்கே வலிக்கிறது; எனக்கு கை, கால்களில் உளைச்சல் இருக்கிறது. பசி இல்லை; தலை வலிக்கிறது; வாய்வுத் தொல்லை தாங்க முடியவில்லை; கண் பார்வை மங்குகிறது; தோலில் அலர்ஜியும், அரிப்பும், கொப்புளங்களும், மூட்டு, முதுகு, கழுத்து வலி” என்று கூறிக் கொண்டே போக வேண்டியதுதான்.

டாக்டர்களும் டெஸ்ட்டுகள் எல்லாம் நார்மல் என்றே கூறுவார்கள். இருந்தாலும் ஜுரம், வலி மாத்திரைகளை தந்து விடுவார்கள். இது மேலும் வலிகளையும், நோய்களையும் முன்பைவிட பன்மடங்கு அதிகரிக்கும். இறுதியாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியெல்லாம் அழிந்து விடும்; (ஜுரம் மாத்திரைகளின்) வெப்பம் தணிக்கும் செயலின் காரணமாக.

வெப்பம் தணிக்கும் செயலின் காரணமாக அவ்வப்போது சாப்பிடும் ஜூர மாத்திரைகள் நாளடைவில், நோய் எதிர்ப்பு சக்தியை சிறிது சிறிதாக பலமிழக்கச் செய்து இறுதியில் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக அழிந்து விட்ட நிலையில் தோற்றுவிக்கிறது. இதுவே ‘ எய்ட்ஸ்’ நோயின் ஆரம்பம்.

இவை ஒவ்வொன்றின் சீர்கேடுகளைப் பற்றி வரும் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பார்க்க இருக்கிறோம்…

இத்துடன் ஜுரம் பகுதி நிறைவு பெறுகிறது…
.

தொடரும்…
.

இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
.

முந்தைய பகுதியை வாசிக்க

நன்றி: Jamialim. News

0

நீங்களும் மருத்துவர் ஆகலாம்,12

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!
பகுதி 12
வலி மாத்திரைகளை சாப்பிடுவோர் தப்பவே முடியாது!

image

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.
நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.
என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.
.
இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.
வலி மாத்திரைகளை சாப்பிடுவோர் தப்பவே முடியாது!
இந்த பகுதியில் நோய்களுக்கான காரணம் நாம் அன்றாடம் சிறு சிறு தொந்தரவுகளுக்காக மருந்துக் கடைகளிலோ அல்லது மருத்துவர்களிடமோ காண்பித்து சாப்பிடும் மாத்திரைகளே ஆகும் என்பதை உங்களுக்கு நினைவுறுத்த இருக்கிறோம்.
.
வலி மாத்திரைகள், நோய்களை அதிகரிக்கும்
சாதாரணமாக உடல் வலி, தசைப் பிடிப்புக்கள், தலைவலி போன்றவற்றால் தான் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கெனவே பெரும்பாலானவர்கள் வலி மாத்திரைகள் தங்கள் பொது வாழ்க்கைக்கு அவசியமானதாக ஆக்கிக் கொண்டவர்கள். இதன் விளைவுகள் என்ன ஆகும் என்பதை மட்டு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்குமானால் அந்த மாத்திரைகளின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.
எந்த வலி நிவாரணத்திற்காக மாத்திரைகளை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே நோய்களையே அந்த வலி மாத்திரைகள் இன்னும் அதிகமாக உங்களை அறியாமலேயே உருவாக்குகிறது. அது வளரும் வேகத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள். காரணம் வலி மாத்திரைகள் உங்களிடத்தே உணரக் கூடியத் தன்மையை மறத்துப் போகச் செய்து விட்டன. இதன் விளைவு என்ன? உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
.
வலிகள்: நோய் எதிர்ப்பு சக்திகளாகும்
உடலின் எந்த ஒரு பாகத்திலும் ஒரு வலி ஏற்படுகிறது என்றால் அந்த குறிப்பிட்ட பாகத்தில் நோயின் ஒரு விளைவு எதிர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பொருள். நோயின் விளைவை மட்டுமல்ல நோயின் அடிப்படைக் காரணத்தையும் அழித்துவிடும் மிக மேன்மையான செயல் நடந்து கொண்டிருக்கிறது என்பதுவும் ஆகும். உடலில் தோன்றும் வலிகள் தாம், “உடலில் மறைவாயுள்ள நோய்களை எதிர்த்துக் கொண்டு இருக்கின்றன” என்பதனுடைய பரிபூரணமான உண்மையாகும்.
.
கழுத்து வலி
உதாரணமாக கழுத்தின் பின் பகுதியும், அதனுடன் சேர்ந்து தோள்பட்டையின் ஒரு பகுதியும், இன்னும் அதைச் சார்ந்த முதுகின் நடுப்புறமும் வலி ஏற்படுகிறதென்றால், அதாவது, இதை சாதாரணமாக கழுத்துச் சுளுக்கு அல்லது கழுத்துப் பிடிப்பு; தலையணை சரியில்லை; படுத்த மாதிரி சரியில்லை; சரியாகப் போய்விடும்’ என்று கூறுவார்கள். இந்தக் கழுத்து சுளுக்கை வாழ்நாளில் முழுமையாக அனுபவிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.
.
கழுத்து வலிக்கு மருந்துகள் கிடையாது
இந்த கழுத்துச் சுளுக்கின் அனைத்து கஷ்டங்களும் நோயின் விளைவுகளை எதிர்த்து அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளின் தீவிரமான வேலையின் காரணமாக உருவாகுவதாகும். அது மட்டுமல்ல, உடலினுள் மறைவாகவுள்ள உறுப்புக்களில் ஏற்பட்டுள்ள ஒரு அசாதாரணமான குறைபாட்டை சீர் செய்வதுமாகும். இந்த இரண்டு மேன்மையான காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் வலி மாத்திரைகளை சாப்பிடும் பொழுது “என்ன நடக்கும்?” என்று சற்று யோசியுங்கள். ஆம். இது தொடர்பான உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அனைத்தும் அழிக்கப்படுகின்றன.
.
இனி உங்கள் கதி என்ன?
முதல் வலி மாத்திரை: இறக்கும் வரை துன்பம்
உங்களுக்கு நேரப்போகும் கஷ்ட காலங்கள் இப்போதுதான் ஆரம்பிக்கின்றன. முதன் முதலாக எந்தவொரு வலிக்காகவும் வலி நிவாரணிகளை சாப்பிடும் முதல் வேளை வாழ்நாள் முழுவதும் அந்த நோயால் பீடிக்கப்படக் கூடிய மிகப் பெரும் துன்ப வேளையாகும். கழுத்து, தோள்பட்டை, முதுகு ஆகிய பாகங்களில் தோன்றிய நோயின் விளைவுகள் அடிக்கடி தோன்றி பின்னர் நீண்ட நாட்கள் தேங்க ஆரம்பிக்கும். வலியின் பகுதிகள் பரவவும் ஆரம்பிக்கும். வலியின் தீவிரமும் அதிகமாகும். உடனேயே ஆங்கில மருத்துவர்கள் இதனை இந்த வலிகளை நாள்பட்ட நோய்கள் என்ற பட்டியலில் சேர்த்து விடுவார்கள். அத்துடன் உங்கள் கதை முடிந்து விட்டது.
.
வலி மாத்திரைகள் உங்களைக் குப்பைக் கூளங்களாக மாற்றிவிடும்
கழுத்து வலிகளுக்கு Chronic Spondylitis என்றும், முதுகு வலிக்கு C – 4c – 5 யில் (Lumber Spondy Litis) நாள் பட்ட முதுகு எலும்புத் தேய்வு ஏற்பட்டிருக்கிறதென்றும், நாள்பட்ட தோல்பட்டை வலிக்கு Frozen Shoulder என்ற வலி ஏற்பட்டிருப்பதாகவும் டயாக்னஸில் Diagnose செய்வார்கள். உங்களுக்கு இந்த பெயர்களையும் அறிவிப்பார்கள். உங்களுடைய எக்ஸ்ரேக்கள், ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் ஆகியவற்றை கொடுத்து பிரேம் போட்டு உங்கள் வீட்டில் மாட்டிக் கொள்ளச் சொல்வார்கள். பின்னர் வைத்தியத்தை அறிவிப்பார்கள்.
இன்னும் கொடூரமான வலி நிவாரணிகளைக் கொடுக்க ஆரம்பிப்பார்கள். முதுகுத் தண்டு எலும்புகளில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பார்கள். கழுத்துப் பட்டைகளை அணிந்து கொள்ளச் சொல்வார்கள். இடுப்பு வார்பட்டைகளை அணிந்து கொள்ளச் சொல்வார்கள். ஆக, மொத்தத்தில் உங்களை ஒரு குப்பை கூளங்களைப் போல் ஆக்கி விடுவார்கள்.
.
நோய் அல்ல; அதன் விளைவுகளைத்தான்
இது மட்டுமா? நோயின் விளைவுகளில் ஏற்படும் பகுதியைத்தான் நாம் இதுவரைப் பார்த்திருக்கிறோம். இதற்குக் காரணமான மறைவான உடல் உள் உறுப்புக்களில் நோயின் அடிப்படை அமைந்திருக்கின்றன என்பதை நாம் ஏற்கனெவே சொல்லியிருக்கிறோம். அந்த உறுப்புக்கள் யாவை? அதன் பாதிப்புக்கள் எப்படிப்பட்டவை? என்பதை இப்போது பார்ப்போம்.
.
கழுத்து வலி, சிறுநீர்ப் பை பாதிப்பை உணர்த்துகிறது
கழுத்தின் பின் பகுதியில் தசைகளில் வலி ஏற்படுகிறது என்றால், அதன் தொடர்பான, பாதிக்கப்பட்டுள்ள மறைவான உடல் உள் உறுப்பு சிறுநீர்ப் பைகள் ஆகும். கழுத்து வலி என்பது கழுத்தில் ஏற்பட்டுள்ள நோய் அல்ல. உண்மையான நோய் சிறுநீர்ப் பைகளில் குடிகொண்டிருக்கிறது. கழுத்து வலி அதிகமாகிறது என்றால் சிறுநீர்ப் பைகளில் நோயின் தீவிரம் அதிகமாகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். அங்கு நோயானது நிரந்தரமாகத் தங்கி விட்டது என்பதன் பேரிலும் உங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம். ஆங்கில மருத்துவத்துக்கு இந்தக் கல்வி ஞானம் சுத்தமாகத் தெரியாது. பூஜ்யம்.
.
முதுகு வலி: சிறுநீரகங்கள் பாதிப்பை உணர்த்துகிறது
இந்த நோயின் தீவிரம் சிறுநீர்ப் பைகளில் அதிகமாகும் போது அது தொடர்பான அதற்கு மிக நெருக்கமான உள்ளுறுப்பு சிறுநீரகங்கள் ஆகும். ஆகவே சிறுநீரக பாதிப்புக்களும் தொடங்கும். இதனுடைய விளைவுகள் தாம் LUMBAR SPONDYLITIS C – 4 –C – 5 பகுதிகளில் ஏற்படும் முதுகு பிடிப்புகளுக்கு காரணமாகும். இந்த முதுகு பிடிப்புகளுக்கு அடிப்படையான காரணத்தை அறியாத ஆங்கில மருத்துவம் இடுப்பில் வார் பட்டைகளை இறுக்கமாக அணிந்து கொள்ளக் கூடிய படு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வைத்தியத்தையும் கையாளும்.
.
இடுப்பு பெல்ட்டுகள்: அணியக் கூடாது
முதுகு வலிக்காக அணியச் செய்யும் இந்த இடுப்பு வார்ப பட்டைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும். சிறுநீரகங்களுக்கு செல்லும் சக்தி பாதைகள் மேலும் இறுக்கமடையும். இதன் எதிரொலியாக நாளடைவில் சிறுநீரகக் கோளாறுகள் தொடங்கி அதை பழுதடையும் தருணமும் நெருங்கி வரும். நிச்சயமாக இந்த விளைவுகளிலிருந்து, தொடர்ச்சியாக யார் வலி மாத்திரைகளை உண்டு வருகிறார்களோ அவர்கள் தப்பவே முடியாது.
.
வலிகளுக்கு நுரையீரல்களை உறுதிப்படுத்த வேண்டும்
அடுத்ததாக தோல்பட்டை வலிக்குக் காரணமான நோய் உடல் உள்ளுறுப்புக்களில் நுரையீரல்கள் என்ற பகுதியில் குடி கொண்டிருக்கிறது. இந்த உறுப்பில் நோய்கள் தீவிரமாகும். வலி மாத்திரைகளின் காரணமாக இந்த வலிகள் ஏற்படுவதற்கு முன்பாகவே சளி, அடிக்கடி தும்மல், ஜுரம, இருமல், உடல் வலி, கை கால்களில் வலி போன்றவை அடிக்கடி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். நுரையீரல்களுக்கு சக்தியை அளிப்பதன் மூலம் மட்டுமே தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு, முதுகுப் பிடிப்பு, முதுகுத் தசைகளில் வலி ஆகிவற்றுக்கான உரிய நிவாரணம் பெற சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவே தவிர வலி நிவாரணிகளில் இல்லை. மாறாக, இவ்வலி மாத்திரைகள் நிலைமைகளைப் படுமோசமாக்கும்….
.
தொடரும்…
.
இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நன்றி: Jamialim. News