நீங்களும் மருத்துவர் ஆகலாம்.11

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!

பகுதி 11

image

நோயின் முதல் நிலை: களைப்பும் சோர்வும் ஏற்பட கல்லீரலே காரணம்..?
.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.
.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

நோயின் முதல் நிலை: களைப்பும் சோர்வும் ஏற்பட கல்லீரலே காரணம்..?

உணவில் கலந்துள்ள நச்சுக்கள், அஜீரணத்தின் காரணமாக இரத்தத்தில் கலக்கும் முன்பாகவே கல்லீரக்குள் கிரகிக்கப்படுகின்றன. அஜீரணத்தால் கிரகிக்கப்படும் ஒவ்வாத பொருள்களும், நச்சுக்களும் கல்லீரலில் ஜீரணிக்கப்படுகின்றன. அதாவது நச்சுப் பொருட்கள் கல்லீரலால் நீக்கப்படுகின்றன. குறிப்பிட்ட அளவுக்கு மேல் நச்சுப் பொருட்கள் சேரும்போது, கல்லீரலால் சோர்வடைந்து அதன் இயக்கம் குறைவுபடுகின்றது.
.

கல்லீரல்

கல்லீரல், உடல் உறுப்புக்களின் அனைத்துத் தசைகளுடனும், தசை நார்களுடனும் தொடர்பு கொண்டிருப்பதால் அதன் சோர்வும், களைப்பும் அனைத்து உடல் உறுப்புக்களின் தசை நார்களின் சோர்வுக்கும் காரணமாகிறது. உடல் உறுப்புக்களில் பலவீனமும் தோன்றுகிறது.
.

கல்லீரலும், வயிறும்

சாப்பிட்டதும், உற்சாகத்திற்கும், உடல் தெம்பிற்க்கும் பதிலாக, களைப்பும், தூக்கமும் ஏற்படுமானால், உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் உணவை ஜீரணிக்கும் வயிறும், கல்லீரலும் சோர்வடைந்துள்ளன. உணவின் அஜீரணத்தின் காரணமாக நச்சுப் பொருட்களாகவும், ஒவ்வாமைப் பொருளாகவும் மாற்றப்பட்ட உணவுச் சத்துக்கள் கல்லீரலால் நீக்கப்படவில்லை. எனவே உடல் தசை நார்களில் உடல் உறுப்புக்களில் அவை தேக்கம் கொண்டு விட்டன. இனி உடல் உறுப்புக்களின் தசைகள்தாம் அந்த நச்சுக்களையும், ஒவ்வாமையையும் ஜீரணிக்க வேண்டும். அதுவரையில் அந்தந்த உறுப்புக்களின் பலவீனம் தொடரும்.
.

கல்லீரல் சோர்வும் – தோல் வியாதிகளும்

இந்த நச்சுப் பொருட்கள் இரத்தத்தில் நச்சு சக்தியாக மாறி தோலில் பரவும் போது, தோல் செல் அணுக்களில் ஊடுருவி விஷத்தன்மை கொண்ட சக்தியாகத் தேங்குகிறது. இதன் விளைவாக அரிப்பு, திட்டுத்திட்டாக தோலில் சிவப்பு சிவப்பான தடிப்புகள், வீக்கங்கள், எரிச்சல், கொப்புளங்கள், சீழ் கோர்த்தல், வெடிப்புகள், புண்கள், வலிகள் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை ‘ஒவ்வாமை’ அல்லது ‘அலர்ஜி’ என்கிறோம்.
.

கல்லீரல் சோர்வு – உடல் முழுமையும் அலர்ஜி

இதே நச்சுச் சக்தியானது வயிறு, கணையம், மண்ணீரல், வாய், தொண்டை, உணவுக குழல், குடல்கள், பெருங்குடல், இருதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், இரத்த நாளங்கள், கண், காது, மூக்கு, எலும்புகள் என்று எங்கு வேண்டுமானாலும் ஊடுருவி அவற்றில் எங்கு தேக்கம் கொள்கிறதோ, அந்தந்த உறுப்புக்களில் நோய்கள் உருவாகின்றன. அதாவது தோலில் எந்தெந்த விளைவுகள் மேலே பார்த்தீர்களோ, அவற்றில் சில அல்லது முழுதுமாக ஏற்படலாம். இவற்றுக்குக் காரணம் ஒவ்வாமை எனும் அலர்ஜியே தவிர பாக்டீரியாக்களாலும், வைரஸ் கிருமிகளாலும் அல்ல. ஒவ்வொரு உறுப்பும் பலவீனமடையும்போது, அது தன் உறுதித் தன்மை குலைந்து சற்று வீக்கமடைந்து பெருத்தும் காணப்படும்.
.

இருதய வீக்கம்

கல்லீரல் சோர்வின் காரணமாக கல்லீரல் எந்த அளவுக்குக் களைப்புற்று, தளர்ந்து, பெருத்துக் காணப்படுகின்றதோ, அந்த அளவுக்கு, உடலின் எந்த உள்ளுறுப்பில் ஒவ்வாமை நச்சுக்கள் தேங்குகிறதோ அவ்வுறுப்புக்களும் தளர்ந்து பெருத்து, வீக்கமடைந்து காணப்படும்.

இருதயத் தசைகளில் நச்சுக்கள் தேங்குமானால், இருதய வீக்கம் காணப்படும். Cardiomegaly என்று டயக்னோஸிஸ் செய்வார்கள். காரணம் தெரியாத இருதய நோய் Idiopathic என்று கூறி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவார்கள். அலர்ஜி ஏற்பட்டால் எப்படி தோலில் நீர் கசியுமோ, அவ்வாறே இருதயத்தின் வெளிப்புறச் சுவர்களிலும் நீர் கசியும். (pericarditis, Pericardial effusion) இன்னும் தோலில் எவ்விதம் அரிப்பு, எரிச்சல், சிவப்புத் திட்டுக்களும், தடிப்புக்களும், கொப்புளங்களும், கட்டிகளும் உண்டாகுமோ, அவ்விதமே இருதயத் தசை நார்களிலும் இவற்றில் சிலதோ அல்லது அனைத்துமோ உருவாகலாம்.

இதற்காக மருத்துவம் பார்ப்பார்கள். இருதய இயக்கத்திற்கான (Digitalis) மாத்திரைகள், இருதயத்தில் கசியும் நீரைக் குறைப்பதற்காக சிறுநீர் பிரிய வைக்கும் மாத்திரைகள் (Frusemide), இருதய வலியைக் குறைப்பதற்காக இரத்த நாளங்களைப் பெரிதாக்கும் மாத்திரைகள் (Cardio vaso dialotors); அலர்ஜியை நீக்குவதற்காக (Cortisone) மாத்திரைகள், களைப்பை நீக்குவதற்காக (Vitamin) மாத்திரைகள், இவை ஒவ்வொன்றைப் பற்றியும் வரும் அத்தியாயங்களில் தெளிவாகப் பார்க்க இருக்கிறோம்.
.

வயிற்று நோய்கள்

தோலில் என்ன அலர்ஜி தொந்தரவுகள் ஏற்பட்டதோ, இருதயத்தில் நாம் என்ன பார்த்தோமா அதே குறைகள் வயிற்றில் பார்த்தோம். வயிற்றின் உள் பாகத்தில் சிவப்பு திட்டுக்களும், தடிப்புக்களும், எரிச்சலும், வலியும், வயிற்றின் உட்புறச் சுவர்களில் வெடிப்புக்களும், புண்களும் பொதுவாக வயிறும் வீக்கமடையும். கட்டிகளும், கொப்புளங்களும் ஏற்படலாம்.

இவை அனைத்துக்கும் காரணம் உணவின் நச்சுக்களும், கல்லீரல் அவற்றை நீக்காததால் உணவுப் பொருள்கள் அனைத்தும் பெரும்பாலும் ஒவ்வாமையாக மாறி விட்டதேயாகும். இந்த ஒவ்வாமை என்ற நச்சுப் பொருட்கள் வயிற்றின் தசை நார்களில் தேங்கும் போது, வயிற்றில் எந்த நிலையும் ஏற்படலாம்.

இந்த நிலையின்போது, ஏற்படும் தொந்தரவுகளுக்கான மருந்துகள் வயிற்று எரிச்சலுக்காக (Gelusil) மாத்திரைகள், வயிற்று வலிக்காக (caranazamepine) மாத்திரைகள், குமட்டல், வாந்திக்காக (Anti emetic) மாத்திரைகள்; வயிற்று வலிக்காக வயிற்றின் தசை நார்களை மேலும் ஊர்ஜிதமாக இழக்கச் செய்யும் (Atropine, Baralgan) போன்றவை பிரதான வைத்தியமாகும். ஒவ்வொன்றின் கேடுகளைப் பற்றியும் ஒவ்வொன்றாக அறிய இருக்கிறீர்கள்.
.

கணையம்

இந்த உறுப்பு பலவீனமடையும்போது, – நச்சுக்கள் இவ்வுறுப்பில் தங்கும்போது கணையத்தில் புண்களும், கொப்புளங்களும் ஏற்படலாம். நச்சுக்கள் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் ஒவ்வொரு வகையான அலர்ஜி இதுவாகும். இதற்காக (Antibiotic) மாத்திரைகள் வலிக்காக (Paracitamol, Atropin) மாத்திரைகள், இன்னும் அலர்ஜி என்னும் ஒவ்வாமைக்காக (Cortisone) போன்ற மாத்திரைகளும், வீக்கத்திற்காக (Ibuprofen, Brufen) மாத்திரைகளும் கொடுப்பார்கள்.
.

சிறுகுடலும், பெருங்குடலும்

குடல்கள் வலுவிழந்து பெருக்க ஆரம்பிக்கும். அதன் உட்சுவர்கள் பெரும்பாலும் சிகப்புத் திட்டுக்களும், நீர் வடிதலும், உட்புறத்தில் வெடிப்புக்களும், புண்களும், கட்டிகளும், வீக்கங்களும், கொப்புளங்களும், சீழ் கட்டிகளும் தோலில் ஏற்படும் அலர்ஜியை போன்றே உருவாகும்.

இவற்றின் காரணமாக வயிற்று வலி, அபரிமிதமான கெட்ட வாய்வு தொந்தரவுகள் (நச்சுப் பொருளிலிருந்து வெளியாகும் விஷ வாய்வுகள்) குடல் வால் நோய்கள், சாப்பிட்டதும் மலஜலம் ஏற்படுதல், பேதியும், சீதளமும், இரத்தமும் வெளியாதல்; அதிகப்படியான வாய்வு பிடித்தல், வயிறு அடைத்தாற் போன்றும், பெருத்தும் விடுதல் மூலம், எப்போதும் குடல்களில் வலி போன்றவை.

இதற்காக வைத்தியம் புதிதாக ஒன்றுமில்லை. மேலே சொன்ன வைத்தியம்தான். ஒவ்வொரு நோயின் குறிக்கும் அதற்கு எதிரான மாத்திரைகள் அலர்ஜியை அழிப்பதற்காக இந்த கார்டிஸோன் மாத்திரைகள் எந்த நோயாக இருந்தாலும் அதன் தீவிரத்தை அதிகரிக்கும்.
.

“அனைத்து நோய்களுக்கும் நிவாரணியாக கொடுக்கப்படும் இந்த கார்டிஸோன் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.”

மேலே சொல்லப்பட்டுள்ள உடல் உறுப்புக்கள், தசைகள், அவற்றின் தசை நார்களில் ஏற்படும் களைப்பும், சோர்வும், நோய்களும் கல்லீரலின் அதிகப்படியான இயக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பலவீனம்தான் என்பதை இன்று அறிந்திருக்கிறோம். கல்லீரல் அதிகப்படியாக இயக்கம் கொள்வதன் காரணம் உணவிலுள்ள நச்சுக்களாகும்.

உணவிலிருந்தே நச்சுக்கள் உருவாகிறதென்றால், நச்சுக்களையே பிரதானமாகக் கொண்ட மருந்துகள் எந்த அளவுக்கு கல்லீரலை பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும்போதே உங்கள் நெஞ்சங்கள் பயத்தால் உறைந்து போக வேண்டும். ஆம்! ஒவ்வொரு மருந்தும் கல்லீரலைக் கொலை செய்தே விடுகிறது.
.

உடல் வலி, ஜுரம்

களைப்பையும், சோர்வையும் தொடர்ந்து உடல் வலி ஏற்படுகிறது. அதாவது உடல் உறுப்புக்கள் – கை கால் உடம்பு தசைகளின்; உடல் உள் உறுப்புக்களான வயிறு, இருதயம், கல்லீரல், குடல்கள், சிறுநீரகங்கள், கர்ப்பப் பை, சினைப் பை, கண், காத்து, மூக்கு, வாய், எலும்புகள் ஆகியவற்றின் திசுக்களில் வலியையும், உளைச்சலையும் தோற்றுவிக்கிறது.

இந்த வலி நோயின் தன்மையாகும். இந்த நோயின் தன்மை வலி குறைக்கும் மருந்துகளால் ஏற்பட்டதாகும். எந்தவொரு வலி மாத்திரையும் உடல் வெப்பத்தையும், தணிக்கும் என்பதாகையால், நோய் எதிர்ப்பு சக்தியையும் வீணடிக்கிறது. இந்த நிலையில் கல்லீரல் அதன் இயங்கும் திறனில் மிக மோசமான பலவீனத்தை அடைகிறது. உடல் தசை நார்களையெல்லாம் உருக்குலைந்த நிலையில் பசியற்றுப் போய், அஜீரணத்தாலும் பாதிக்கப்பட்டு விடுகிறார். இந்த அஜீரணத்தின் விளைவாக உணவிலிருந்து வெளியாகும் க்ளுகோஸ், தரம் குறைந்ததாக உடல் திசுக்களால் ஜீரணிக்கப்பட முடியாத, விஷமாக மாறி ஒவ்வொரு உறுப்பையும் நோய்க்கு ஆளாக்குகிறது. இந்த வகையிலும் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல். இவ்வாறாக, ஒன்றுக்கொன்று மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நோய் சுற்றுத் தீவிரமடைகிறது.

எனவேதான் பெரும்பாலான மருந்துகளை உபயோகிக்கும் வைத்திய முறைகள் மோசமான உணவுக் கட்டுப்பாட்டை பத்தியம் என்ற பெயரில் கடைபிடிக்கச் சொல்கிறார்கள்.

இனி, இந்த உடல் வலி சுர மாத்திரைகள் இவற்றின் கேடுகள் என்ன என்பதை அனைத்து மாத்திரைகளையும் ஒட்டு மொத்தமாகக் கொண்டு பொதுவாகப் பார்ப்போம். ஜுரம் அல்லது வலி இவற்றுக்காக நீங்கள் எந்தவொரு மாத்திரையைச் சாப்பிட்டாலும் சரியே. அதனால விளையப்போகும் கொடுமைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கீழே தரப்போகும் எந்த ஒரு நோயிலிருந்தும் ஜுரம், வலிக்காக எந்தவொரு மாத்திரையை நீங்கள் சாபிட்டாலும் அவற்றிலிருந்து தப்ப முடியாது. ஒவ்வொரு நோயையும் நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும். இவற்றில் பெரும்பாலான நோய்கள் மறைமுகமாகவே உங்களை தாங்கிக் கொண்டிருக்கும். டெஸ்ட்டுகளுக்கோ, ஸ்கேன் போன்ற சாதனங்களுக்கோ நோய்கள் புலப்பட சாத்தியமில்லை.

“எனக்கு இங்கே வலிக்கிறது டாக்டர்! அங்கே வலிக்கிறது; எனக்கு கை, கால்களில் உளைச்சல் இருக்கிறது. பசி இல்லை; தலை வலிக்கிறது; வாய்வுத் தொல்லை தாங்க முடியவில்லை; கண் பார்வை மங்குகிறது; தோலில் அலர்ஜியும், அரிப்பும், கொப்புளங்களும், மூட்டு, முதுகு, கழுத்து வலி” என்று கூறிக் கொண்டே போக வேண்டியதுதான்.

டாக்டர்களும் டெஸ்ட்டுகள் எல்லாம் நார்மல் என்றே கூறுவார்கள். இருந்தாலும் ஜுரம், வலி மாத்திரைகளை தந்து விடுவார்கள். இது மேலும் வலிகளையும், நோய்களையும் முன்பைவிட பன்மடங்கு அதிகரிக்கும். இறுதியாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியெல்லாம் அழிந்து விடும்; (ஜுரம் மாத்திரைகளின்) வெப்பம் தணிக்கும் செயலின் காரணமாக.

வெப்பம் தணிக்கும் செயலின் காரணமாக அவ்வப்போது சாப்பிடும் ஜூர மாத்திரைகள் நாளடைவில், நோய் எதிர்ப்பு சக்தியை சிறிது சிறிதாக பலமிழக்கச் செய்து இறுதியில் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக அழிந்து விட்ட நிலையில் தோற்றுவிக்கிறது. இதுவே ‘ எய்ட்ஸ்’ நோயின் ஆரம்பம்.

இவை ஒவ்வொன்றின் சீர்கேடுகளைப் பற்றி வரும் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பார்க்க இருக்கிறோம்…

இத்துடன் ஜுரம் பகுதி நிறைவு பெறுகிறது…
.

தொடரும்…
.

இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
.

முந்தைய பகுதியை வாசிக்க

நன்றி: Jamialim. News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s