0

நீங்களும் மருத்துவர் ஆகலாம்.11

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!

பகுதி 11

image

நோயின் முதல் நிலை: களைப்பும் சோர்வும் ஏற்பட கல்லீரலே காரணம்..?
.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.
.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

நோயின் முதல் நிலை: களைப்பும் சோர்வும் ஏற்பட கல்லீரலே காரணம்..?

உணவில் கலந்துள்ள நச்சுக்கள், அஜீரணத்தின் காரணமாக இரத்தத்தில் கலக்கும் முன்பாகவே கல்லீரக்குள் கிரகிக்கப்படுகின்றன. அஜீரணத்தால் கிரகிக்கப்படும் ஒவ்வாத பொருள்களும், நச்சுக்களும் கல்லீரலில் ஜீரணிக்கப்படுகின்றன. அதாவது நச்சுப் பொருட்கள் கல்லீரலால் நீக்கப்படுகின்றன. குறிப்பிட்ட அளவுக்கு மேல் நச்சுப் பொருட்கள் சேரும்போது, கல்லீரலால் சோர்வடைந்து அதன் இயக்கம் குறைவுபடுகின்றது.
.

கல்லீரல்

கல்லீரல், உடல் உறுப்புக்களின் அனைத்துத் தசைகளுடனும், தசை நார்களுடனும் தொடர்பு கொண்டிருப்பதால் அதன் சோர்வும், களைப்பும் அனைத்து உடல் உறுப்புக்களின் தசை நார்களின் சோர்வுக்கும் காரணமாகிறது. உடல் உறுப்புக்களில் பலவீனமும் தோன்றுகிறது.
.

கல்லீரலும், வயிறும்

சாப்பிட்டதும், உற்சாகத்திற்கும், உடல் தெம்பிற்க்கும் பதிலாக, களைப்பும், தூக்கமும் ஏற்படுமானால், உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் உணவை ஜீரணிக்கும் வயிறும், கல்லீரலும் சோர்வடைந்துள்ளன. உணவின் அஜீரணத்தின் காரணமாக நச்சுப் பொருட்களாகவும், ஒவ்வாமைப் பொருளாகவும் மாற்றப்பட்ட உணவுச் சத்துக்கள் கல்லீரலால் நீக்கப்படவில்லை. எனவே உடல் தசை நார்களில் உடல் உறுப்புக்களில் அவை தேக்கம் கொண்டு விட்டன. இனி உடல் உறுப்புக்களின் தசைகள்தாம் அந்த நச்சுக்களையும், ஒவ்வாமையையும் ஜீரணிக்க வேண்டும். அதுவரையில் அந்தந்த உறுப்புக்களின் பலவீனம் தொடரும்.
.

கல்லீரல் சோர்வும் – தோல் வியாதிகளும்

இந்த நச்சுப் பொருட்கள் இரத்தத்தில் நச்சு சக்தியாக மாறி தோலில் பரவும் போது, தோல் செல் அணுக்களில் ஊடுருவி விஷத்தன்மை கொண்ட சக்தியாகத் தேங்குகிறது. இதன் விளைவாக அரிப்பு, திட்டுத்திட்டாக தோலில் சிவப்பு சிவப்பான தடிப்புகள், வீக்கங்கள், எரிச்சல், கொப்புளங்கள், சீழ் கோர்த்தல், வெடிப்புகள், புண்கள், வலிகள் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை ‘ஒவ்வாமை’ அல்லது ‘அலர்ஜி’ என்கிறோம்.
.

கல்லீரல் சோர்வு – உடல் முழுமையும் அலர்ஜி

இதே நச்சுச் சக்தியானது வயிறு, கணையம், மண்ணீரல், வாய், தொண்டை, உணவுக குழல், குடல்கள், பெருங்குடல், இருதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், இரத்த நாளங்கள், கண், காது, மூக்கு, எலும்புகள் என்று எங்கு வேண்டுமானாலும் ஊடுருவி அவற்றில் எங்கு தேக்கம் கொள்கிறதோ, அந்தந்த உறுப்புக்களில் நோய்கள் உருவாகின்றன. அதாவது தோலில் எந்தெந்த விளைவுகள் மேலே பார்த்தீர்களோ, அவற்றில் சில அல்லது முழுதுமாக ஏற்படலாம். இவற்றுக்குக் காரணம் ஒவ்வாமை எனும் அலர்ஜியே தவிர பாக்டீரியாக்களாலும், வைரஸ் கிருமிகளாலும் அல்ல. ஒவ்வொரு உறுப்பும் பலவீனமடையும்போது, அது தன் உறுதித் தன்மை குலைந்து சற்று வீக்கமடைந்து பெருத்தும் காணப்படும்.
.

இருதய வீக்கம்

கல்லீரல் சோர்வின் காரணமாக கல்லீரல் எந்த அளவுக்குக் களைப்புற்று, தளர்ந்து, பெருத்துக் காணப்படுகின்றதோ, அந்த அளவுக்கு, உடலின் எந்த உள்ளுறுப்பில் ஒவ்வாமை நச்சுக்கள் தேங்குகிறதோ அவ்வுறுப்புக்களும் தளர்ந்து பெருத்து, வீக்கமடைந்து காணப்படும்.

இருதயத் தசைகளில் நச்சுக்கள் தேங்குமானால், இருதய வீக்கம் காணப்படும். Cardiomegaly என்று டயக்னோஸிஸ் செய்வார்கள். காரணம் தெரியாத இருதய நோய் Idiopathic என்று கூறி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவார்கள். அலர்ஜி ஏற்பட்டால் எப்படி தோலில் நீர் கசியுமோ, அவ்வாறே இருதயத்தின் வெளிப்புறச் சுவர்களிலும் நீர் கசியும். (pericarditis, Pericardial effusion) இன்னும் தோலில் எவ்விதம் அரிப்பு, எரிச்சல், சிவப்புத் திட்டுக்களும், தடிப்புக்களும், கொப்புளங்களும், கட்டிகளும் உண்டாகுமோ, அவ்விதமே இருதயத் தசை நார்களிலும் இவற்றில் சிலதோ அல்லது அனைத்துமோ உருவாகலாம்.

இதற்காக மருத்துவம் பார்ப்பார்கள். இருதய இயக்கத்திற்கான (Digitalis) மாத்திரைகள், இருதயத்தில் கசியும் நீரைக் குறைப்பதற்காக சிறுநீர் பிரிய வைக்கும் மாத்திரைகள் (Frusemide), இருதய வலியைக் குறைப்பதற்காக இரத்த நாளங்களைப் பெரிதாக்கும் மாத்திரைகள் (Cardio vaso dialotors); அலர்ஜியை நீக்குவதற்காக (Cortisone) மாத்திரைகள், களைப்பை நீக்குவதற்காக (Vitamin) மாத்திரைகள், இவை ஒவ்வொன்றைப் பற்றியும் வரும் அத்தியாயங்களில் தெளிவாகப் பார்க்க இருக்கிறோம்.
.

வயிற்று நோய்கள்

தோலில் என்ன அலர்ஜி தொந்தரவுகள் ஏற்பட்டதோ, இருதயத்தில் நாம் என்ன பார்த்தோமா அதே குறைகள் வயிற்றில் பார்த்தோம். வயிற்றின் உள் பாகத்தில் சிவப்பு திட்டுக்களும், தடிப்புக்களும், எரிச்சலும், வலியும், வயிற்றின் உட்புறச் சுவர்களில் வெடிப்புக்களும், புண்களும் பொதுவாக வயிறும் வீக்கமடையும். கட்டிகளும், கொப்புளங்களும் ஏற்படலாம்.

இவை அனைத்துக்கும் காரணம் உணவின் நச்சுக்களும், கல்லீரல் அவற்றை நீக்காததால் உணவுப் பொருள்கள் அனைத்தும் பெரும்பாலும் ஒவ்வாமையாக மாறி விட்டதேயாகும். இந்த ஒவ்வாமை என்ற நச்சுப் பொருட்கள் வயிற்றின் தசை நார்களில் தேங்கும் போது, வயிற்றில் எந்த நிலையும் ஏற்படலாம்.

இந்த நிலையின்போது, ஏற்படும் தொந்தரவுகளுக்கான மருந்துகள் வயிற்று எரிச்சலுக்காக (Gelusil) மாத்திரைகள், வயிற்று வலிக்காக (caranazamepine) மாத்திரைகள், குமட்டல், வாந்திக்காக (Anti emetic) மாத்திரைகள்; வயிற்று வலிக்காக வயிற்றின் தசை நார்களை மேலும் ஊர்ஜிதமாக இழக்கச் செய்யும் (Atropine, Baralgan) போன்றவை பிரதான வைத்தியமாகும். ஒவ்வொன்றின் கேடுகளைப் பற்றியும் ஒவ்வொன்றாக அறிய இருக்கிறீர்கள்.
.

கணையம்

இந்த உறுப்பு பலவீனமடையும்போது, – நச்சுக்கள் இவ்வுறுப்பில் தங்கும்போது கணையத்தில் புண்களும், கொப்புளங்களும் ஏற்படலாம். நச்சுக்கள் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் ஒவ்வொரு வகையான அலர்ஜி இதுவாகும். இதற்காக (Antibiotic) மாத்திரைகள் வலிக்காக (Paracitamol, Atropin) மாத்திரைகள், இன்னும் அலர்ஜி என்னும் ஒவ்வாமைக்காக (Cortisone) போன்ற மாத்திரைகளும், வீக்கத்திற்காக (Ibuprofen, Brufen) மாத்திரைகளும் கொடுப்பார்கள்.
.

சிறுகுடலும், பெருங்குடலும்

குடல்கள் வலுவிழந்து பெருக்க ஆரம்பிக்கும். அதன் உட்சுவர்கள் பெரும்பாலும் சிகப்புத் திட்டுக்களும், நீர் வடிதலும், உட்புறத்தில் வெடிப்புக்களும், புண்களும், கட்டிகளும், வீக்கங்களும், கொப்புளங்களும், சீழ் கட்டிகளும் தோலில் ஏற்படும் அலர்ஜியை போன்றே உருவாகும்.

இவற்றின் காரணமாக வயிற்று வலி, அபரிமிதமான கெட்ட வாய்வு தொந்தரவுகள் (நச்சுப் பொருளிலிருந்து வெளியாகும் விஷ வாய்வுகள்) குடல் வால் நோய்கள், சாப்பிட்டதும் மலஜலம் ஏற்படுதல், பேதியும், சீதளமும், இரத்தமும் வெளியாதல்; அதிகப்படியான வாய்வு பிடித்தல், வயிறு அடைத்தாற் போன்றும், பெருத்தும் விடுதல் மூலம், எப்போதும் குடல்களில் வலி போன்றவை.

இதற்காக வைத்தியம் புதிதாக ஒன்றுமில்லை. மேலே சொன்ன வைத்தியம்தான். ஒவ்வொரு நோயின் குறிக்கும் அதற்கு எதிரான மாத்திரைகள் அலர்ஜியை அழிப்பதற்காக இந்த கார்டிஸோன் மாத்திரைகள் எந்த நோயாக இருந்தாலும் அதன் தீவிரத்தை அதிகரிக்கும்.
.

“அனைத்து நோய்களுக்கும் நிவாரணியாக கொடுக்கப்படும் இந்த கார்டிஸோன் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.”

மேலே சொல்லப்பட்டுள்ள உடல் உறுப்புக்கள், தசைகள், அவற்றின் தசை நார்களில் ஏற்படும் களைப்பும், சோர்வும், நோய்களும் கல்லீரலின் அதிகப்படியான இயக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பலவீனம்தான் என்பதை இன்று அறிந்திருக்கிறோம். கல்லீரல் அதிகப்படியாக இயக்கம் கொள்வதன் காரணம் உணவிலுள்ள நச்சுக்களாகும்.

உணவிலிருந்தே நச்சுக்கள் உருவாகிறதென்றால், நச்சுக்களையே பிரதானமாகக் கொண்ட மருந்துகள் எந்த அளவுக்கு கல்லீரலை பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும்போதே உங்கள் நெஞ்சங்கள் பயத்தால் உறைந்து போக வேண்டும். ஆம்! ஒவ்வொரு மருந்தும் கல்லீரலைக் கொலை செய்தே விடுகிறது.
.

உடல் வலி, ஜுரம்

களைப்பையும், சோர்வையும் தொடர்ந்து உடல் வலி ஏற்படுகிறது. அதாவது உடல் உறுப்புக்கள் – கை கால் உடம்பு தசைகளின்; உடல் உள் உறுப்புக்களான வயிறு, இருதயம், கல்லீரல், குடல்கள், சிறுநீரகங்கள், கர்ப்பப் பை, சினைப் பை, கண், காத்து, மூக்கு, வாய், எலும்புகள் ஆகியவற்றின் திசுக்களில் வலியையும், உளைச்சலையும் தோற்றுவிக்கிறது.

இந்த வலி நோயின் தன்மையாகும். இந்த நோயின் தன்மை வலி குறைக்கும் மருந்துகளால் ஏற்பட்டதாகும். எந்தவொரு வலி மாத்திரையும் உடல் வெப்பத்தையும், தணிக்கும் என்பதாகையால், நோய் எதிர்ப்பு சக்தியையும் வீணடிக்கிறது. இந்த நிலையில் கல்லீரல் அதன் இயங்கும் திறனில் மிக மோசமான பலவீனத்தை அடைகிறது. உடல் தசை நார்களையெல்லாம் உருக்குலைந்த நிலையில் பசியற்றுப் போய், அஜீரணத்தாலும் பாதிக்கப்பட்டு விடுகிறார். இந்த அஜீரணத்தின் விளைவாக உணவிலிருந்து வெளியாகும் க்ளுகோஸ், தரம் குறைந்ததாக உடல் திசுக்களால் ஜீரணிக்கப்பட முடியாத, விஷமாக மாறி ஒவ்வொரு உறுப்பையும் நோய்க்கு ஆளாக்குகிறது. இந்த வகையிலும் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல். இவ்வாறாக, ஒன்றுக்கொன்று மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நோய் சுற்றுத் தீவிரமடைகிறது.

எனவேதான் பெரும்பாலான மருந்துகளை உபயோகிக்கும் வைத்திய முறைகள் மோசமான உணவுக் கட்டுப்பாட்டை பத்தியம் என்ற பெயரில் கடைபிடிக்கச் சொல்கிறார்கள்.

இனி, இந்த உடல் வலி சுர மாத்திரைகள் இவற்றின் கேடுகள் என்ன என்பதை அனைத்து மாத்திரைகளையும் ஒட்டு மொத்தமாகக் கொண்டு பொதுவாகப் பார்ப்போம். ஜுரம் அல்லது வலி இவற்றுக்காக நீங்கள் எந்தவொரு மாத்திரையைச் சாப்பிட்டாலும் சரியே. அதனால விளையப்போகும் கொடுமைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கீழே தரப்போகும் எந்த ஒரு நோயிலிருந்தும் ஜுரம், வலிக்காக எந்தவொரு மாத்திரையை நீங்கள் சாபிட்டாலும் அவற்றிலிருந்து தப்ப முடியாது. ஒவ்வொரு நோயையும் நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும். இவற்றில் பெரும்பாலான நோய்கள் மறைமுகமாகவே உங்களை தாங்கிக் கொண்டிருக்கும். டெஸ்ட்டுகளுக்கோ, ஸ்கேன் போன்ற சாதனங்களுக்கோ நோய்கள் புலப்பட சாத்தியமில்லை.

“எனக்கு இங்கே வலிக்கிறது டாக்டர்! அங்கே வலிக்கிறது; எனக்கு கை, கால்களில் உளைச்சல் இருக்கிறது. பசி இல்லை; தலை வலிக்கிறது; வாய்வுத் தொல்லை தாங்க முடியவில்லை; கண் பார்வை மங்குகிறது; தோலில் அலர்ஜியும், அரிப்பும், கொப்புளங்களும், மூட்டு, முதுகு, கழுத்து வலி” என்று கூறிக் கொண்டே போக வேண்டியதுதான்.

டாக்டர்களும் டெஸ்ட்டுகள் எல்லாம் நார்மல் என்றே கூறுவார்கள். இருந்தாலும் ஜுரம், வலி மாத்திரைகளை தந்து விடுவார்கள். இது மேலும் வலிகளையும், நோய்களையும் முன்பைவிட பன்மடங்கு அதிகரிக்கும். இறுதியாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியெல்லாம் அழிந்து விடும்; (ஜுரம் மாத்திரைகளின்) வெப்பம் தணிக்கும் செயலின் காரணமாக.

வெப்பம் தணிக்கும் செயலின் காரணமாக அவ்வப்போது சாப்பிடும் ஜூர மாத்திரைகள் நாளடைவில், நோய் எதிர்ப்பு சக்தியை சிறிது சிறிதாக பலமிழக்கச் செய்து இறுதியில் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக அழிந்து விட்ட நிலையில் தோற்றுவிக்கிறது. இதுவே ‘ எய்ட்ஸ்’ நோயின் ஆரம்பம்.

இவை ஒவ்வொன்றின் சீர்கேடுகளைப் பற்றி வரும் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பார்க்க இருக்கிறோம்…

இத்துடன் ஜுரம் பகுதி நிறைவு பெறுகிறது…
.

தொடரும்…
.

இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
.

முந்தைய பகுதியை வாசிக்க

நன்றி: Jamialim. News

0

நீங்களும் மருத்துவர் ஆகலாம்,12

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!
பகுதி 12
வலி மாத்திரைகளை சாப்பிடுவோர் தப்பவே முடியாது!

image

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.
நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.
என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.
.
இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.
வலி மாத்திரைகளை சாப்பிடுவோர் தப்பவே முடியாது!
இந்த பகுதியில் நோய்களுக்கான காரணம் நாம் அன்றாடம் சிறு சிறு தொந்தரவுகளுக்காக மருந்துக் கடைகளிலோ அல்லது மருத்துவர்களிடமோ காண்பித்து சாப்பிடும் மாத்திரைகளே ஆகும் என்பதை உங்களுக்கு நினைவுறுத்த இருக்கிறோம்.
.
வலி மாத்திரைகள், நோய்களை அதிகரிக்கும்
சாதாரணமாக உடல் வலி, தசைப் பிடிப்புக்கள், தலைவலி போன்றவற்றால் தான் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கெனவே பெரும்பாலானவர்கள் வலி மாத்திரைகள் தங்கள் பொது வாழ்க்கைக்கு அவசியமானதாக ஆக்கிக் கொண்டவர்கள். இதன் விளைவுகள் என்ன ஆகும் என்பதை மட்டு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்குமானால் அந்த மாத்திரைகளின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.
எந்த வலி நிவாரணத்திற்காக மாத்திரைகளை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே நோய்களையே அந்த வலி மாத்திரைகள் இன்னும் அதிகமாக உங்களை அறியாமலேயே உருவாக்குகிறது. அது வளரும் வேகத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள். காரணம் வலி மாத்திரைகள் உங்களிடத்தே உணரக் கூடியத் தன்மையை மறத்துப் போகச் செய்து விட்டன. இதன் விளைவு என்ன? உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
.
வலிகள்: நோய் எதிர்ப்பு சக்திகளாகும்
உடலின் எந்த ஒரு பாகத்திலும் ஒரு வலி ஏற்படுகிறது என்றால் அந்த குறிப்பிட்ட பாகத்தில் நோயின் ஒரு விளைவு எதிர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பொருள். நோயின் விளைவை மட்டுமல்ல நோயின் அடிப்படைக் காரணத்தையும் அழித்துவிடும் மிக மேன்மையான செயல் நடந்து கொண்டிருக்கிறது என்பதுவும் ஆகும். உடலில் தோன்றும் வலிகள் தாம், “உடலில் மறைவாயுள்ள நோய்களை எதிர்த்துக் கொண்டு இருக்கின்றன” என்பதனுடைய பரிபூரணமான உண்மையாகும்.
.
கழுத்து வலி
உதாரணமாக கழுத்தின் பின் பகுதியும், அதனுடன் சேர்ந்து தோள்பட்டையின் ஒரு பகுதியும், இன்னும் அதைச் சார்ந்த முதுகின் நடுப்புறமும் வலி ஏற்படுகிறதென்றால், அதாவது, இதை சாதாரணமாக கழுத்துச் சுளுக்கு அல்லது கழுத்துப் பிடிப்பு; தலையணை சரியில்லை; படுத்த மாதிரி சரியில்லை; சரியாகப் போய்விடும்’ என்று கூறுவார்கள். இந்தக் கழுத்து சுளுக்கை வாழ்நாளில் முழுமையாக அனுபவிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.
.
கழுத்து வலிக்கு மருந்துகள் கிடையாது
இந்த கழுத்துச் சுளுக்கின் அனைத்து கஷ்டங்களும் நோயின் விளைவுகளை எதிர்த்து அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளின் தீவிரமான வேலையின் காரணமாக உருவாகுவதாகும். அது மட்டுமல்ல, உடலினுள் மறைவாகவுள்ள உறுப்புக்களில் ஏற்பட்டுள்ள ஒரு அசாதாரணமான குறைபாட்டை சீர் செய்வதுமாகும். இந்த இரண்டு மேன்மையான காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் வலி மாத்திரைகளை சாப்பிடும் பொழுது “என்ன நடக்கும்?” என்று சற்று யோசியுங்கள். ஆம். இது தொடர்பான உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அனைத்தும் அழிக்கப்படுகின்றன.
.
இனி உங்கள் கதி என்ன?
முதல் வலி மாத்திரை: இறக்கும் வரை துன்பம்
உங்களுக்கு நேரப்போகும் கஷ்ட காலங்கள் இப்போதுதான் ஆரம்பிக்கின்றன. முதன் முதலாக எந்தவொரு வலிக்காகவும் வலி நிவாரணிகளை சாப்பிடும் முதல் வேளை வாழ்நாள் முழுவதும் அந்த நோயால் பீடிக்கப்படக் கூடிய மிகப் பெரும் துன்ப வேளையாகும். கழுத்து, தோள்பட்டை, முதுகு ஆகிய பாகங்களில் தோன்றிய நோயின் விளைவுகள் அடிக்கடி தோன்றி பின்னர் நீண்ட நாட்கள் தேங்க ஆரம்பிக்கும். வலியின் பகுதிகள் பரவவும் ஆரம்பிக்கும். வலியின் தீவிரமும் அதிகமாகும். உடனேயே ஆங்கில மருத்துவர்கள் இதனை இந்த வலிகளை நாள்பட்ட நோய்கள் என்ற பட்டியலில் சேர்த்து விடுவார்கள். அத்துடன் உங்கள் கதை முடிந்து விட்டது.
.
வலி மாத்திரைகள் உங்களைக் குப்பைக் கூளங்களாக மாற்றிவிடும்
கழுத்து வலிகளுக்கு Chronic Spondylitis என்றும், முதுகு வலிக்கு C – 4c – 5 யில் (Lumber Spondy Litis) நாள் பட்ட முதுகு எலும்புத் தேய்வு ஏற்பட்டிருக்கிறதென்றும், நாள்பட்ட தோல்பட்டை வலிக்கு Frozen Shoulder என்ற வலி ஏற்பட்டிருப்பதாகவும் டயாக்னஸில் Diagnose செய்வார்கள். உங்களுக்கு இந்த பெயர்களையும் அறிவிப்பார்கள். உங்களுடைய எக்ஸ்ரேக்கள், ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் ஆகியவற்றை கொடுத்து பிரேம் போட்டு உங்கள் வீட்டில் மாட்டிக் கொள்ளச் சொல்வார்கள். பின்னர் வைத்தியத்தை அறிவிப்பார்கள்.
இன்னும் கொடூரமான வலி நிவாரணிகளைக் கொடுக்க ஆரம்பிப்பார்கள். முதுகுத் தண்டு எலும்புகளில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பார்கள். கழுத்துப் பட்டைகளை அணிந்து கொள்ளச் சொல்வார்கள். இடுப்பு வார்பட்டைகளை அணிந்து கொள்ளச் சொல்வார்கள். ஆக, மொத்தத்தில் உங்களை ஒரு குப்பை கூளங்களைப் போல் ஆக்கி விடுவார்கள்.
.
நோய் அல்ல; அதன் விளைவுகளைத்தான்
இது மட்டுமா? நோயின் விளைவுகளில் ஏற்படும் பகுதியைத்தான் நாம் இதுவரைப் பார்த்திருக்கிறோம். இதற்குக் காரணமான மறைவான உடல் உள் உறுப்புக்களில் நோயின் அடிப்படை அமைந்திருக்கின்றன என்பதை நாம் ஏற்கனெவே சொல்லியிருக்கிறோம். அந்த உறுப்புக்கள் யாவை? அதன் பாதிப்புக்கள் எப்படிப்பட்டவை? என்பதை இப்போது பார்ப்போம்.
.
கழுத்து வலி, சிறுநீர்ப் பை பாதிப்பை உணர்த்துகிறது
கழுத்தின் பின் பகுதியில் தசைகளில் வலி ஏற்படுகிறது என்றால், அதன் தொடர்பான, பாதிக்கப்பட்டுள்ள மறைவான உடல் உள் உறுப்பு சிறுநீர்ப் பைகள் ஆகும். கழுத்து வலி என்பது கழுத்தில் ஏற்பட்டுள்ள நோய் அல்ல. உண்மையான நோய் சிறுநீர்ப் பைகளில் குடிகொண்டிருக்கிறது. கழுத்து வலி அதிகமாகிறது என்றால் சிறுநீர்ப் பைகளில் நோயின் தீவிரம் அதிகமாகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். அங்கு நோயானது நிரந்தரமாகத் தங்கி விட்டது என்பதன் பேரிலும் உங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம். ஆங்கில மருத்துவத்துக்கு இந்தக் கல்வி ஞானம் சுத்தமாகத் தெரியாது. பூஜ்யம்.
.
முதுகு வலி: சிறுநீரகங்கள் பாதிப்பை உணர்த்துகிறது
இந்த நோயின் தீவிரம் சிறுநீர்ப் பைகளில் அதிகமாகும் போது அது தொடர்பான அதற்கு மிக நெருக்கமான உள்ளுறுப்பு சிறுநீரகங்கள் ஆகும். ஆகவே சிறுநீரக பாதிப்புக்களும் தொடங்கும். இதனுடைய விளைவுகள் தாம் LUMBAR SPONDYLITIS C – 4 –C – 5 பகுதிகளில் ஏற்படும் முதுகு பிடிப்புகளுக்கு காரணமாகும். இந்த முதுகு பிடிப்புகளுக்கு அடிப்படையான காரணத்தை அறியாத ஆங்கில மருத்துவம் இடுப்பில் வார் பட்டைகளை இறுக்கமாக அணிந்து கொள்ளக் கூடிய படு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வைத்தியத்தையும் கையாளும்.
.
இடுப்பு பெல்ட்டுகள்: அணியக் கூடாது
முதுகு வலிக்காக அணியச் செய்யும் இந்த இடுப்பு வார்ப பட்டைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும். சிறுநீரகங்களுக்கு செல்லும் சக்தி பாதைகள் மேலும் இறுக்கமடையும். இதன் எதிரொலியாக நாளடைவில் சிறுநீரகக் கோளாறுகள் தொடங்கி அதை பழுதடையும் தருணமும் நெருங்கி வரும். நிச்சயமாக இந்த விளைவுகளிலிருந்து, தொடர்ச்சியாக யார் வலி மாத்திரைகளை உண்டு வருகிறார்களோ அவர்கள் தப்பவே முடியாது.
.
வலிகளுக்கு நுரையீரல்களை உறுதிப்படுத்த வேண்டும்
அடுத்ததாக தோல்பட்டை வலிக்குக் காரணமான நோய் உடல் உள்ளுறுப்புக்களில் நுரையீரல்கள் என்ற பகுதியில் குடி கொண்டிருக்கிறது. இந்த உறுப்பில் நோய்கள் தீவிரமாகும். வலி மாத்திரைகளின் காரணமாக இந்த வலிகள் ஏற்படுவதற்கு முன்பாகவே சளி, அடிக்கடி தும்மல், ஜுரம, இருமல், உடல் வலி, கை கால்களில் வலி போன்றவை அடிக்கடி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். நுரையீரல்களுக்கு சக்தியை அளிப்பதன் மூலம் மட்டுமே தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு, முதுகுப் பிடிப்பு, முதுகுத் தசைகளில் வலி ஆகிவற்றுக்கான உரிய நிவாரணம் பெற சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவே தவிர வலி நிவாரணிகளில் இல்லை. மாறாக, இவ்வலி மாத்திரைகள் நிலைமைகளைப் படுமோசமாக்கும்….
.
தொடரும்…
.
இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நன்றி: Jamialim. News

0

உடல் அழகாக…!

உடல் அழகு பெற,
சில வித்தியாசமான டிப்ஸ்கள்
=============================

image


கண்கள் அழகாக இருக்க வேண்டுமா?
சுற்றியுள்ளோரின் நல்லவற்றை மட்டுமே
காணப் பழகுங்கள்.

முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?
புன்னகையோடு மனிதர்களுக்கு தினமும்
முகமன் கூறிப் பாருங்கள்.

மெல்லிய உடல் வேண்டுமா?
உங்களது உணவை, பசித்த ஏழைகளுடன்
பகிர்ந்துண்டு பாருங்கள்.

உடை அலங்காரம் பெற வேண்டுமா?
அரை நிர்வாணிகளுக்கும் உடை உடுத்த
உதவி செய்து பாருங்கள்.

அழகான கூந்தல் வேண்டுமா?
அனாதைக் குழந்தைகளின் தலையை
இரக்கமுடன் தடவிப் பாருங்கள்.

கைகள் அழகு பெற வேண்டுமா?
இல்லாத எளிய மக்களுக்கு ஈந்துதவி
செய்து பாருங்கள்.

கால்கள் உறுதி பெற வேண்டுமா?
ஐவேளையும் தொழுவதற்காக அன்றாடம்
நடந்து பழகிப் பாருங்கள்.
● வெறும் ஒப்பனைகளால் உங்கள் முகம் மட்டுமே அழகு பெறும். ஆனால், இவற்றைக் கடை பிடித்துப் பாருங்கள். உங்கள் அகமும் அழகு பெறும்.
● படைத்த இறைவன் நமக்கு இரண்டு கைகளை வழங்கியுள்ளான். அதில் ஒன்று, நமக்கு. இன்னொன்று, இன்னொருவருக்கு உதவுவதற்கு என்பதை மறந்து விட வேண்டாம்.

நன்றி: Jamialim. News

0

பெண்குழந்தைகளை எப்படி நடத்துகிறீர்கள்….!

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்.

image

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. இரண்டு முதல் மூன்று வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றும், வருங்காலத்தில் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ குறிப்பிடுவது, மனதில் பதிய வைப்பது தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
8. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
9. மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
10. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.
11. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

நன்றி: Jamialim. News

0

எந்த ஊரில்என்ன வாங்கலாம்…!?

நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்…

image

சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்….
👍🏽ஆரணி&களம்பூர் உலகதரம் வாய்ந்த அரிசி (திமலை மாவட்டம்)
👌🏽கோயமுத்தூர் – மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்
👌🏽திருநெல்வேலி – அல்வா
👌🏽ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா
👌🏽கோவில்பட்டி – கடலைமிட்டாய்
👌🏽பண்ருட்டி – பலாப்பழம்
👌🏽மார்த்தாண்டம் – தேன்
👌🏽பவானி – ஜமுக்காளம்
உசிலம்பட்டி – ரொட்டி
👌🏽நாச்சியார் கோவில் – விளக்கு, வெண்கலப் பொருட்கள்
👌🏽பொள்ளாச்சி – தேங்காய்
👌🏽ஐதராபாத் – முத்து, வளையல், கழுத்து மணிகள்
👌🏽வேதாரண்யம் – உப்பு
👌🏽சேலம் – எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
👌🏽சாத்தூர் – காராசேவு, மிளகாய்
மதுரை – மல்லிகை, மரிக்கொழுந்து
👌🏽திருப்பதி – லட்டு
👌🏽மாயவரம் – கருவாடு
👌🏽திருப்பூர் – பனியன், ஜட்டி
👌🏽உறையூர் – சுருட்டு
👌🏽கும்பகோணம் – வெற்றிலை, சீவல்
👌🏽தர்மபுரி – புளி, தர்பூசணி
👌🏽ராஜபாளையம் – நாய்
👌🏽தூத்துக்குடி – உப்பு
👌🏽ஈரோடு – மஞ்சள், துணி
👌🏽தஞ்சாவூர் – கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
👌🏽பெல்லாரி – வெங்காயம்
👌🏽நீலகிரி – தைலம்
👌🏽மங்களூர் – பஜ்ஜி
👌🏽கொல்கத்தா – ரசகுல்லா
👌🏽ஊட்டி – உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
👌🏽கல்லிடைக்குறிச்சி – அப்பளம்
👌🏽காரைக்குடி – ஓலைக்கூடை
👌🏽செட்டிநாடு – பலகாரம்
👌🏽திருபுவனம் – பட்டு
👌🏽குடியாத்தம் – நுங்கு
👌🏽கொள்ளிடம் – பிரம்பு பொருட்கள்
👌🏽ஆலங்குடி – நிலக்கடலை
👌🏽கரூர் – கொசுவலை
👌🏽திருப்பாச்சி – அரிவாள்
👌🏽காஞ்சிபுரம் – பட்டு, இட்லி
👌🏽மைசூர் – சில்க், பத்தி, சந்தனம்
👌🏽நாகப்பட்டினம் – கோலா மீன்
👌🏽திண்டுக்கல் – பூட்டு, மலைப்பழம்
👌🏽பத்தமடை – பாய்
👌🏽பழனி – பஞ்சாமிர்தம், விபூதி
👌🏽மணப்பாறை – முறுக்கு, மாடு
👌🏽உடன்குடி – கருப்பட்டி
👌🏽கவுந்தாம்பட்டி – வெல்லம்
👌🏽ஊத்துக்குளி – வெண்ணெய்
👌🏽கொடைக்கானல் – பேரிக்காய்
👌🏽குற்றாலம் – நெல்லிக்காய்
👌🏽செங்கோட்டை பிரானூர் – புரோட்டா, கோழி குருமா
👌🏽சங்கரன் கோவில் – பிரியாணி
👌🏽அரியலூர் – கொத்தமல்லி
👌🏽சிவகாசி – வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
👌🏽கன்னியாகுமரி – முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
திருச்செந்தூர் – 👌🏽கருப்பட்டி
குளித்தலை – வாழைப்பழம்
👌🏽காஷ்மீர் – குங்குமப்பூ
👌🏽ஆம்பூர் – பிரியாணி
👌🏽ஒட்டன்சத்திரம் – முருங்கைக்காய், தக்காளி
👌🏽ஓசூர் – ரோஜா
👌🏽நாமக்கல் – முட்டை
👌🏽பல்லடம் – கோழி
👌🏽உடுப்பி – பொங்கல்
👌🏽குன்னூர் – கேரட்
👌🏽பாலக்காடு – பலாப்பழம்…
👌🏽 ஆற்காடு – மக்கன்பீடா
👌🏽 வாணியம்பாடி – தேனீர். 👌 லப்பைகுடிக்காடு _பந்தி சாப்பாடு&சால்னா. (பெரம்பலூர் மாவட்டம்)
நன்றி: Jamialim.news

0

நீங்கள் இஸ்லாமியராக இருப்பினும் 5 நிமிடம் மட்டும் ஒதுக்கி இதனை படியுங்கள் (முழுமையாக) படித்து மற்றவருக்கும் தெளிவுபடுத்துங்கள்.

நீங்கள் இஸ்லாமியராக இருப்பினும் 5 நிமிடம் மட்டும் ஒதுக்கி இதனை படியுங்கள் (முழுமையாக) படித்து மற்றவருக்கும் தெளிவுபடுத்துங்கள்.

image

(சைத்தான் உங்கள் சிந்தனையை திசை திருப்பும் முன் இதனை படித்துவிடுங்களேன்)

1) முதல் மனிதர் ஆதம் அவரது மனைவி ஹவ்வா அவர்கள் பூமியில் இறக்கபட்ட இடம் மக்காவாகும்.

2) தங்கள் இறைவனை வணங்க தாங்கள் வாழ்ந்த இடத்தில் எழுப்பிய முதல் இறையில்லம் கஃபா இருக்குமிடமாகும்.

3) அவர்கள் அந்த பூமியில் வெறும் 40 வருடமே வசித்ததாகவும் பின் அல்லாஹ்வின் அருளை தேடி வேறு இடம் சென்றதாக ஹதீஸ் உள்ளது.

4) அதற்க்கு பின் அவர்கள் மூலம் மக்கள் பெருகினர். உலகம் முழுவதும் பல திசைகளில் பரவினர். ஆனால் இந்த மக்கா மனிதர்கள் வசிக்க அடிபடை தேவையற்ற பாலைவனமாகவே ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது.

5) நூஹ் நபி காலத்தில் உலகம் முழுதும் ஏற்பட்ட வெள்ளத்தில் மண்ணுள் புதைந்தும் போனது.

6) ஆதம் அவர்களுக்கு பலாயிரம் ஆண்டுகளுக்கு பின் தோண்றிய இப்றாகிம் நபி மூலம் இறைவன் இந்த மக்காவை முஸ்லிம்களின் தலமையகமாக ஆக்க நாடுகிறான்.

7) இப்றாகிம் நபியுடைய மனைவி ஹாஜர் அவர்களையும் அவர்களது மகன் கைகுழந்தையாக இருந்த இஸ்மாயில் அவர்களையும் இறைவன் மக்காவில் விட்டுவிட்டு சென்றுவிடுமாறு கட்டளையிடுகிறான்.

8) ஆள் நடமாட்டம் இன்றி இருக்கும் மக்கா பாலைவனத்தில் இறைவனின் கட்டளைகினங்கி மனைவி, பிள்ளையை விட்டுவிட்டு செல்கிறார் மனைவியும் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து ஒத்துழைக்கிறார்.

9) இபுறாகிம் நபி கொடுத்து சென்ற உணவும் தீர்ந்து தொண்டை வரண்டு கைக்குழந்தை இஸ்மாயில் கதறி அழ தண்ணீர் தேடி அருகில் இருந்த இரு குன்றுகளுக்கிடையே மாறி மாறி ஓடுகிறார் அவரது தாய் ஹாஜர் அவர்கள்.

10) உதவிகிட்டவில்லை, குழந்தையின் அழுகுறளும் அடங்கியது பதறிய திரும்பிய தாய்க்கு அங்கு இறைவனின் அற்புத அதிசயம் காட்சி அளித்தது.. குழந்தைக்கு அருகில் நீரூற்று உருவாகி குழந்தையின் வாயை தொட்டுருந்தது.

11) தண்ணீரையும், அங்கு கிடைத்த பேரீச்சைகளையும் கொண்டு போதுமாக்கி கொண்டனர் அந்த தாயும், மகனும்.

12) அப்பொழுது அவ்வழியாக வந்த அரபி மொழி பேசும் நாடோடி கூட்டம் தண்ணீர் இருப்பதை அறிந்து அங்கயே இருப்பிடம் அமைக்க அந்த தாயிடம் அனுமதி கேட்கிறது.

13) அண்ணை ஹாஜர் அவர்களும் சில நிபந்தனை அளிக்க அவர்கள் ஏற்று கட்டுபட்டு அங்கு இருப்பிடங்களை அமைத்து அது இறைவன் நாட்டபடி ஊராகிறது…( ‪#‎அல்லாஹ்_அக்பர்‬)

14) பின் இறைவன் முதல் மனிதரால் கட்டபட்ட முதல் இறையில்லம் இருந்த இடத்தில் அந்த ஆலயத்தை மீண்டும் எழுப்ப நாடிகிறான்.

15) இப்றாகிம் நபிக்கு கட்டளையிட அவர் மீண்டும் மக்கா திரும்பி தன் மகன் இஸ்மாயில் அவர்களுடன் இணைந்து அல்லாஹ் அறிவித்த இடத்தில் பழைய ஆலயத்தை அதன் அடிதளத்தில் இருந்து மீண்டும் எழுப்பிகிறார்கள்.

16) இப்றாகிம் நபிக்கு இறைவன் சோதனையாக தன் மகனை அறுத்து பலியிட கனவை கொடுக்க, அதுவே இறை ஆணை என்று தன் மகனை அறுத்து பழியிட முனைகிறார் மகனும் உடன்படுகிறார். (‪#‎சுப்ஹானல்லாஹ்‬)

மகனை அறுக்க கத்தியுடன் செல்லும் தந்தையை திசை திருப்ப சைத்தான் நாடுகிறான் அவரது மனசை மாற்ற முயற்ச்சிகிறான் ஆனால் அந்த இடத்தில் கல்லை எறிந்து தன் மனசை ஒரு நிலைபடுத்தி மகனை அறுக்க ஆயத்தமாகிவிட்டார்.

ஆனால் நர பலி விரும்பாத கருனை இறைவன் அதை சோதனை என தெளிவுபடுத்தி தனக்காக ஆட்டை அறுத்து இறைவழியில் செலவிட கட்டளையிடுகிறான்.

17) தந்தைக்கு பின் மகனும் இறைவனின் தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கபட்டு அங்கே இஸ்லாம் நிலைநாட்டபட்டது.

18) அவர்களது காலத்துக்கு பின் அங்குள்ள மக்கள் அவர்களது போதனையின் படி அங்கு இஸ்லாத்துடன் வாழ்ந்தனர்.

19) பல நூற்றாண்டுகள் கடந்தன பல நபிமார்கள் கடந்தனர். மக்காவில் மனித இனம் பல்கி பெறுகியது கூடவே குழப்பமும், பெருகியது.

20) அங்கு அறியாமை காலத்து பழக்கம் மெல்ல மெல்ல நூதனமாக நுழைய தொடங்கியது.

21) சிலை வணக்கம் ஆரம்பமானது, விபச்சாரம், குடி, கொலை அநாகரீகமான செயல் பல்கி பெறுகியது.

22) உலகில் முதல் மனிதர், முதல் இறை தூதர், ஆதம் அவர்கள் ஆரமித்த பிரச்சாரம் அதே இடத்தில் இறுதி தூதரை கொண்டு இறைவன் இஸ்லாத்தை நிறைவாக்க நாடிகிறான். ஆம் முகமது நபி(ஸல்) பிறக்கிறார்கள்.

23) அவரது 40 வது வயதில் இறைவன் தனது தூதராக தேர்ந்தெடுகிறான்.

24) 63 ஆம் வயதில் மரணித்த முகமது நபி (ஸல்) இறைவன் நாடிய மிகப்பெரிய வேலைகளை செய்ந்து முடிக்க எடுத்து கொண்ட காலம் வெறும் 23 ஆண்டுகள். அதிலும் 10 ஆண்டுகள் ஒடுக்கபட்டே கழி்ந்தது. மீதம் உள்ள 13 ஆண்டுகள் போதிய தூக்கம், ஒய்வு, உணவு, இன்றி ஓயாது உழைத்து இறைவன் கொடுத்த வேலைகளை செவ்வனே செய்ந்து முடித்தார்கள்… ஆம் உலகம் முழுவதும் இஸ்லாத்தை எத்தி வைத்தார்கள்.

25) இஸ்லாம் ஆரம்பம் ஆன இடத்திலயே முற்று பெற்றது. ஆம் மக்காவில் ஆரம்பம் ஆகி அங்கயே முற்றும் பெற்றது. அங்கு இப்றாகிம் நபி போதனைக்கு பிறகு தோண்றிய சிலை வணக்கம், தீய பழக்கவழக்கம் ‪#‎முகமது‬ நபி ஸல் அவர்களால் அழித்து இஸ்லாம் இறுதியாக மறுசீரமைக்கபட்டது.

26) இப்றாகிம் நபியின் தியாகங்கள் இறைவனால் ஹஜ் கிரிகளாக்கபட்டது. அங்கு இறைவனின் மன்னிப்பையும், நன் மரணத்தையும் மட்டுமே நாடி வெள்ளை உடையணிந்து வருபவர்களுக்கு பெரும் நன்மாரயம் இறைவனால் கிடைக்க பெறுகிறது.

27) அங்கு இப்றாகிம் நபியின் மனைவி அண்ணை ஹாஜர் அவர்கள் இரு குன்றுகளுக்கிடையே ஓடியது போன்று அந்த கஷ்டத்தை நினைவு கூற அதே குன்றுகளுகிடைய ஓட ஹாஜிகளுக்கு கடமையாக்கப்பட்டது. தன் மகனையும் இறைவனுக்காக பலி கொடுக்க நாடிய மாபெரும் இறை விசுவாசத்தை நினைவு கூறும் பொருட்டு குர்பானி கடமையாக்கபட்டது.

சைத்தானின் எண்ணங்களை கற்களை கொண்டு எறிந்து மனசை கட்டுபடுத்திய அந்த கனத்த இதயத்தை நினைவு கூற கல் எறிந்த அதே இடத்தில் கல் எறிய முஸ்லிம்களுக்கு கடமையாக்கபட்டுள்ளது. சுப்ஹானல்லாஹ்.

28) மக்கா உலகம் அழியும் வரை இறைவனால் பாதுகாக்கபடும் நகரமாக இறைவனாலயே அறிவிக்கபட்ட இடம். அங்கு நன்மை செய்ந்தாலும் கூலி பன் மடங்கு, தீமை புரிந்தால் அதற்க்கு கேடான கூலியும் பன்மடங்காகும்.

29) மேலும் உலக முடிவு நாளின் அடையாளமாக வர இருக்கும் கொடியவன் தஜ்ஜால் மக்காவினுல் நுழைய சக்தி பெறமாட்டான் என்பது இறைவனின் வாக்கு.

30) உலகின் முதல் ஆலயம் மக்கா ஹரம். இரண்டாவது ஆலயம் பாலஸ்தீனில் உள்ள மஸ்ஜித் அக்ஸாவாகும். இவையே மக்காவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விசயங்களாகும

image

நன்றி: Jamialim. News

0

திருமணம் முடிக்க போகும் இளம் பெண்களுக்காக!! (ஆண்கள் படிக்க வேண்டாம்) – Indru Oru Thagaval No.1 Famous Tamil Thagaval l World News l etc.

[திருமணம் முடிக்க போகும் இளம் பெண்களுக்காக!! (ஆண்கள் படிக்க வேண்டாம்) – Indru Oru Thagaval No.1 Famous Tamil Thagaval l World News l etc.] is good,have a look at it! http://www.todayindias.info/2016/05/blog-post_265.html?m=1

நன்றி: Jamialim. News