0

நோன்பின் சட்டவிதிகள்…!

நோன்பின் சட்டங்கள் PDF நூல்
*********************************************
நோன்பு சம்பந்தமான அனைத்து சட்டதிட்டங்களையும், சந்தேகங்களையும் வாசித்து தெளிவு பெறுங்கள். இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.
http://www.mailofislam.com/uploads/Nonbin_Sattangal.pdf
.
மேலும் இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து நன்மையை பெற்றுகொள்ளுங்கள்.
*************************************************************

image

நன்றி: Jamialim. New

image

S

0

100,யூனிட் இலவசம் எப்படி….!

100 யூனிட் மின்சாரம் இலவசம்: கணக்கீடு எவ்விதம்? மின்சார வாரியம் அறிவிப்பு.

image

வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு சப்-மீட்டர் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.வாடகை வீடுகளில் இருப்பவர்கள் – தனியாக EB CARD எடுத்து இரண்டு மாதத்துக்கு ஒரு குறை கட்டணத்தை செலுத்தி – இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கொள்ளலாம்.
அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட்டுகள் ‌வரை மின் கட்டணம் இலவசம் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு இன்று முதலமைச்சர் ஜெயலலிதா செயல் வடிவம் கொடுத்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கையெழுத்திட்ட முதல் 5 உத்தரவுகளில் ஒன்‌றாக 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சார‌ம், கட்டணம் ஏதும் இல்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற கோப்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக அரசு ‌ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கப்படும். இந்த சலுகை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்‌மூலம் கிட்டதட்ட 78 லட்சம் வீடுகள் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணக்கீட்டு முறை: மின்சார வாரியம் 0 – 200, 201 – 500, 501 – 1100 வரை என்று மூன்று பிரிவுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கிறது. புதிய சலுகையின்படி இரண்டு மாதங்களில் 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
0 – 200 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 120 யூனிட் பயன்படுத்தினால், அவருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம். மீதம் உள்ள 20 யூனிட்டுக்கு ரூ 1.50 வீதம் ரூ. 30, நிரந்தரக் கட்டணம் ரூ. 20 சேர்த்து ரூ. 50 செலுத்த வேண்டும். இதே போன்று 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்டை கழித்தது போக மீதி உள்ள யூனிட்டுக்கு ரூ. 1.50 கட்டணத்தில், நிரந்தரக் கட்டணம் ரூ 20 சேர்த்து வசூலிக்கப்படும்.
201 – 500 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். அடுத்த 101 – 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட் ரூ. 2 என்ற அடிப்படையில் ரூ. 200, 201 – 500 யூனிட் வரை, ஒரு யூனிட் ரூ.3 என்ற அடிப்படையில் ரூ. 900, அதனுடன் நிரந்தக் கட்டணம் ரூ. 30 சேர்த்து, மொத்தம் ரூ. 1130 வசூலிக்கப்படும்.
501 – 1,100 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 1,100 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். 101 – 200 யூனிட் வரை, ஒரு யூனிட் ரூ. 3.50 என்ற அடிப்படையில் ரூ. 350, 201 – 500 யூனிட் வரை, ஒரு யூனிட் ரூ.4.60 என்ற அடிப்படையில் ரூ. 1,380, 501 – 1,100 வரை ஒரு யூனிட் ரூ. 6.60 என்ற அடிப்படையில் ரூ. 3,960, நிரந்தரக் கட்டணம் சேர்த்து ரூ. 50 சேர்த்து, மொத்தம் ரூ. 5,740 வசூலிக்கப்படும். CHECK THIS LINK FOR CALCULATING YOUR ELECTRICITY CHARGES IMMEDIATELY ONLINE – http://tneb.tnebnet.org/tariff_new.html
100 யூனிட் மின்சார சலுகை அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோர்களுக்கும் கிடைக்கும்.
கணக்கிடப்பட்ட மின்கட்டண விவரம்
யூனிட் -மின்கட்டணம்
(ரூபாயில்)
120 – 50
160 – 110
200 – 170
250 – 380
300 – 530
450 – 980
500 – 1,130
650 – 2,770
800 – 3,760
950 – 4,750
1,100 – 5,740
அரசு எவ்வாறு இந்த இலவச மின்சாரத்தினால் ஆகும் பொருள் இழப்பை – ஈடு கட்ட தீர்மானித்து உள்ளது.
1. டாஸ்மாக்
2. கூடுதல் ஆக உபயோகப்படுத்தும் யூனிட்டுகளுக்கு அதிக மதிப்பீடு (ADDITIONAL CHARGES ).
நன்றி: Jamialim. News

0

கடனா திருப்பிசெலுத்தி விடுங்கள்..!

கடனை திருப்பி செலுத்துங்கள் !!!

image

எவ்வளவு சம்பாதித்தாலும், அதற்கேற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. தேவைகளை நிறைவேற்றுவதற்கு கடன் வாங்கத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, கடன் வாங்குவது தவிர்க்க முடியாத விஷயம். அப்படி கடன் வாங்கியிருந்தால், அதை உரிய காலத்தில் திருப்பிக் கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், கடன்காரன் திட்டத்தான் செய்வான். நபிகள் நாயகத்தின் வாழ்விலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. நாயகம் ஒரு வணிகரிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. ஒருநாள் தன் தோழர் உமருடன் அவர் தெருவில் நடந்து கொண்டிருந்த போது, அந்த வணிகர் அவரைப் பார்த்து விட்டார்.
“”நீர் வாங்கிய கடன் என்னாயிற்று? ஏன் திருப்பித் தரவில்லை?” எனக்கேட்டு நபிகள் நாயகத்தை காரசாரமாக திட்ட ஆரம்பித்து விட்டார். அவரது திட்டுதலை நாயகம் அமைதியாக கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது நண்பர் உமருக்கு கடுங்கோபம் வந்து விட்டது. ஒரு கட்டத்தில் அவர் வணிகரை அடிக்கவே பாய்ந்து விட்டார். அப்போது நாயகம் அவரைத் தடுத்தார். அவர் உமரிடம், “”தோழரே! தாங்கள் செய்வது சரியல்ல! கொடுத்த கடனை அவர் திருப்பிக் கேட்கிறார். நான் அவருக்கு கொடுக்காமல் இருந்ததற்காக என்னைத்தான் நீர் கண்டித்திருக்க வேண்டும்,” என்றார். அவரது பதிலைக்கேட்ட உமர் அமைதியாக நின்றார். நபிகள் நாயகத்தின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத வணிகர், தான் அவரை திட்டியதற்கு வருந்தினார். அண்ணலாரிடம் மன்னிப்பும் கேட்டார். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தி விட வேண்டும் என்பதில் நபிகள் நாயகம் உறுதியைக் கடைபிடித்தார். கடன் வாங்கியவர்கள் அதனை வாங்கும்போது இருந்த அக்கறையை விட, அதøனை திருப்பி செலுத்துவதில் அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் வாழ்வில் நடந்த இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
ஜூம்ஆ தொழுகை
“ஜூம்ஆ’ என்றால் வெள்ளிக்கிழமை. இந்த நாள் ஒரு இனியநாள். ஏனெனில், அன்று அல்லாஹ் நரகத்தில் வசிக்கும் ஆறுலட்சம் பேரை விடுதலை செய்கின்றான். ஆகவே, அன்றைய தொழுகைமிகவும் முக்கியமானதாகிறது. யார் ஒருவர், மூன்று வெள்ளிக்கிழமைகளில் காரணமின்றி தொழாமல் இருந்து விடுகிறாரோ, அவரை முனாபிக் (நயவஞ்சகன்) என்கிறார் நபிகள் நாயகம். ஒவ்வொரு நாளும் வானத்தின் மத்தியில் சூரியன் வரும்போது, நரகம் எரிக்கப்படுகின்றது. அந்நேரத்தில் எந்த தொழுகையையும் தொழக்கூடாது. ஆனால், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நரகம் எரிக்கப்படுவதில்லை. எனவே, அந்நாளில் மதியம் தொழுகை செய்யலாம். வெள்ளிக்கிழமை தொழுகையை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.
கடமைக்காக தொழலாமா?
நபிகள்நாயகம் மூதேவிகளுக்கு ஐந்து அடையாளங்கள் இருப்பதாகச் சொல்கிறார். அவை,
1. ஆலிம் உலமாக்களை (மார்க்க பேரறிஞர்கள்) விட்டு விலகியிருப்பவர்கள்.
2. மார்க்கத்திற்கு விரோதமாக தங்கள் பலத்தை செலவிடுபவர்கள்.
3. கடமைக்காக தொழுபவர்கள்.
4. பேச்சில் பொய்யை நிறைப்பவர்கள்
5. பொருள் சேகரிக்கும் ஆசையைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்கள்.
இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றை கைவிட்டு, மூதேவியிடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

நன்றி: Jamialim. News

0

மனித உறவுகள் பற்றி தெரியுமா…!???

மனித உறவுகள் சீராக இருக்க….. A to Z !!!
A – Appreciation

image

மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
B – Behaviour
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
C – Compromise
அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதிர்கள்; நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
D – Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.
E – Ego
மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள்.
F – Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
G – Genuineness
எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விடயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.
H – Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
I – Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
J – Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம் அது கொண்டவனையே அழிக்கும்.
K – Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
L – Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
M – Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
N – Neutral
எப்போதும் எந்த விடயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.
O – Over Expectation
அளவுக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
P – Patience
சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்.
Q – Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாததைப் பேசுவது தான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.
R – Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
S – Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
T – Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.
U – Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
V – Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திரமால் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள். பின்பு, அதற்கு பதில் கொடுங்கள்.
W – Wound
எந்தப் பேச்சும், செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
X – Xero
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
Y – Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
Z – Zero
இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

நன்றி: Jamialim. News

0

குடும்பஅட்டைக்கு ….?

குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ…

image

1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான

சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.

2.வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம் சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையையும் கொடுத்து மனு தாக்கல் செய்யலாம்.

3.குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ, வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப அட்டையின் நகல்/எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்) மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.

4.புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால் போதும்.

5.குடும்ப அட்டையில் இருந்து இறந்தவர் பெயரை நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்துகொள்ளலாம்.

6.குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே. இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், http://www/consumer.tn.gov.in/contact.htm என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.

7.குடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில் ரேஷனில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பெற முடியும், வெள்ளை வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம். அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை நிற அட்டையே வழங்கப்படுகிறது.

8.ரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம், அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும் ஒப்படைத்துவிட்டால்… ஒரு மாதத்தில் ‘என் கார்டு’ என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை கிடைத்துவிடும்.

9.புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு, சமையல் அறை போன்றவற்றை மேற்பார்வையிடுவார் (தனியாக சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா போன்ற பரிசோதனைகள்). அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப் பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.

10.முகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை (வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம் கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன் இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

11.குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.

12.‘இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும். இரண்டு மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்

நன்றி: Jamialim. News

0

வீட்டுகுறிப்பு பூச்சிதொல்லையா….!

பல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!!

image

வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை தரும் பெரும்பாலான பூச்சிகளை அழித்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இவை உதவினாலும், நமது வீடுகளுக்குள் பல்லிகளைக் காண்பதை நாம் விரும்புவதில்லை.
நமக்கு இவை வேண்டாத விருந்தாளிகளே. கடைகளில் காணப்படும் பல்லி விரட்டி மருந்துகள் நச்சுத்தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கு வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் ஆபத்தானவை. எனவே யாருக்கும் ஆபத்தை உண்டாக்காத, சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் பல்லிகளை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகளைப் பின்வருமாறு காணலாம்.
காபித்தூள்
சிறிது காபித்தூளை மூக்குப்பொடியுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பல்குத்தும் குச்சிகளின் முனையில் இவ்வுருண்டைகளைக் குத்தி, பல்லிகள் நடமாடும் இடங்களில் அவற்றை வைக்கவும். இவற்றை உண்ணும் பல்லிகள் மடிந்துவிடும்.
நாப்தலின் உருண்டைகள்
நாப்தலின் உருண்டைகள் சிறந்த பூச்சிக்கொல்லிகள். உங்கள் வீட்டு அலமாரிகளிலும், சிங்க்குகளிலும், கேஸ் அடுப்புக்கு அடியிலும் போட்டு வையுங்கள். பல்லிகளை விரட்டும் சிறந்த முறை இது.
மயில் இறகுகள்
மயில் இறகுகளைப் பார்த்து பல்லிகள் பயப்படும். பல்லிகள் வசிக்கும் இடங்கள், நடமாடும் இடங்களுக்கு அருகிலுள்ள சுவர்களில் மயில் இறகை ஒட்டி வையுங்கள். பூச்சாடிகளில் மயிலிறகைப் போட்டு வையுங்கள். இதனால் உங்கள் வீட்டிலிருந்து பல்லிகள் ஓடிவிடும்.
மிளகுத் தூள்,
பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே மிளகுத் தூளை தண்ணீருடன் கலந்து கொண்டு ஒரு பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே தயாரியுங்கள். சமையலறையில் உள்ள அலமாரிகள், டியூப்லைட் இடுக்குகள், அடுப்புகளுக்கு அடிப்புறம் மற்றும் ஃப்ரிட்ஜ் அடிப்புறம் ஆகியவற்றில் இக்கலவையைத் தெளியுங்கள். இந்த வாசனையினால், எரிச்சலடைந்து பல்லிகள் ஓடிவிடும்.
குளிர்ந்த நீர்
ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சி செய்யப்பட்ட தண்ணீரை பல்லிகள் மீது தெளியுங்கள். இதன் மூலம் பல்லியின் உடல் வெப்பநிலை குறைந்து அவற்றால் அசைய முடியாத நிலை உண்டாகும். அப்போது ஒரு அட்டைப் பெட்டிக்குள் பிடித்து அடைத்து, வீட்டிற்கு வெளியே வீசி விடுங்கள்.
வெங்காயம்
வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டி சுவர்களில் தொங்கவிடுங்கள். பல்லிகளின் மறைவிடங்களில் போட்டு வையுங்கள். வெங்காயத்திலுள்ள கந்தக ஆவியானது பல்லிகளால் சகிக்கமுடியாத மணத்தை உண்டாக்கும். இதனால் பல்லிகள் அவ்விடத்தை விட்டு ஓடிவிடும்.
முட்டை ஓடுகள்
முடிந்த அளவுக்கு முழுதாகக் காட்சியளிக்கும் கோழி முட்டை ஓடுகளை பல்லிகள் நடமாடும் பகுதிகளில் போட்டு வையுங்கள். வீட்டுக்குள் வேறு ஒரு பெரிய உயிரினம் இருப்பதாகக் கருதி பல்லிகள் ஓடிவிடும். முட்டை ஓடுகளை 3-4 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்.
பூண்டு
ஸ்ப்ரே பாட்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெங்காயச் சாறு மற்றும் தண்ணீரைக் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பூண்டுச் சாற்றினைக் கலக்கவும். நன்றாகக் குலுக்கி, இதனை வீட்டு மூலைகளிலும், விரும்பும் வேறு இடங்களிலும், தெளியுங்கள் அல்லது பூண்டுப் பற்களைக் கூட வீட்டு மூலைகளில் வைத்து பல்லிகளை விரட்டலாம்.
————————————————————————————————-
வீட்டில் எறும்பு தொல்லை போக்க 10 பொருட்களைக் கொண்டே போக்கலாம்.
வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை டப்பாவை திறந்தால் எறும்புகளாக உள்ளதா? மேலும் வீட்டின் மூலைகளில் எறும்புகள் ஓட்டை போட்டு தங்கியுள்ளதா? இவற்ற அழிப்பதற்காக கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், இந்த சாக்பீஸ்களைப் பயன்படுத்த முடியாது.
ஆனால் இந்த எறும்புகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே போக்கலாம். மேலும் இந்த இயற்கைப் பொருட்கள் அனைத்தும் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாதவை. அது என்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இப்போது எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசமமாக கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எறும்புகள் மொய்க்கும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் அழிந்துவிடும்.
மசாலாப் பொருட்கள்
மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
வெள்ளரிக்காய்
எறும்புகளை கொல்வதற்கு உதவும் பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் தடுக்கலாம்.
புதினா
புதினாவை உலர்த்தி, அதனை பொடி செய்து, அவற்றை எறும்புகள் வரும் இடங்களான ஜன்னல் கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் உள்ள ஓட்டைகளில் தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை
பேக்கிங் சோடாவுடன் சரிசமமான அளவில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை எறும்புகள் வரும் இடத்தில் தூவினால், எறும்புகள் அவற்றை சாப்பிட்டு, இறந்துவிடும்.
டால்கம் பவுடர்
இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் பொருள். அதற்கு எறும்புகள் உள்ள இடத்தில் டால்கம் பவுடரை தூவி விட வேண்டும்.
கிராம்பு
கிராம்பு சர்க்கரை டப்பாவில் 1-2 கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் இருக்கும்.
பூண்டு
பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.
எலுமிச்சை சாறு
எறும்புகள் மொய்க்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், இனிமேல் எறும்புகள் வராமல் இருக்கும். அதிலும் வீட்டை மாப் கொண்டு துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
போராக்ஸ்
போராக்ஸ் பவுடரை எறும்புகள் உள்ள இடத்தில் தூவியோ அல்லது சர்க்கரை நீரில் கலந்தோ தெளித்தால், எறும்புகளின் தொல்லையில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.
————————————————————————————————-
எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!
வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் எலிப் பெட்டியைப் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதுள்ள எலிகளோ சாமர்த்தியமாக இருக்கிறது. எலிப் பெட்டியைக் கண்டாலே பயந்து ஓடும் எலிகள், தற்போது அதன் மேல் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனால் கடைகளில் விற்கப்படும் எலி பிஸ்கட்டுகளை வாங்கி வைக்கலாம் என்றால், வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பயமாக உள்ளது. எனவே அந்த எலிகளை இயற்கை முறையில் அழிப்பதற்கும், அதனை வராமல் செய்வதற்கும் ஒருசில வழிகள் உள்ளன. அந்த இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எலிகள் வருவதைத் தடுக்கலாம்.
பூனை
பூனைகளை வளர்த்து வாருங்கள் உங்களுக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும் என்றால், வீட்டில் பூனைகளை வளர்த்து வாருங்கள். வீட்டில் பூனை இருந்தால், எலி வீட்டிற்குள் வரவே வராது.
புதினா
எலிகளுக்கு புதினாவின் வாசனையே பிடிக்காது. மேலும் அந்த வாசனை இருந்தாலே அவை போய்விடும். எனவே எலி பொந்து உள்ள இடத்தில் ஒரு காட்டனில் புதினா எண்ணெயை நனைத்து பொந்தினுள் வைத்தால், அதன் வாசனையை நுகரும் எலியின் நுரையீரல் சுருங்கி இறந்துவிடும்.
மனிதனின் முடி
மனிதனின் முடி உள்ள இடத்திலேயே எலிகள் நிற்காது. இதற்கு முக்கிய காரணம், எலிகள் முடியை விழுங்கிவிடும். இப்படி அவை முடியை விழுங்கினால், அவை இறந்துவிடும்.
நாப்தலின் உருண்டை
நாப்தலின் உருண்டை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நிச்சயம் இது எலிகளுக்கும் ஆபத்தானது தான். எனவே இதனைப் பயன்படுத்தியும் எலிகளை அழிக்கலாம்.
அம்மோனியா
எலி பொந்துகளில் சிறிது அம்மோனியாவை தெளித்தால், அதன் நாற்றத்திலேயே எலிகள் இறந்துவிடும்.
மாட்டு சாணம்
எலிகளை இயற்கையாக அழிக்க வேண்டுமானால் மாட்டுச் சாணம் பயன்படுத்தலாம். அதற்கு மாட்டுச்சாணத்தினை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சீஸ் தடவி வைத்தால், அதனை எலிகள் சாப்பிட்டு, அதன் வயிற்றில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, இறந்துவிடும்.
ஆந்தை
கடைகளில் பிளாஸ்டிக்கில் விற்கப்படும் ஆந்தை பொம்மையை எலி வரும் இடத்தில் வைத்தால், எலிகள் பயந்து வராமல் இருக்கும்.
மிளகு
எலி வரும் இடத்தில் மிளகுத் தூளை தூவி விட்டால், அதனை நுகரும் போது, அதன் நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் இறந்துவிடும்.
பிரியாணி இலை
பிரியாணி இலையின் நாற்றம் எலிகளுக்கு பிடிக்காது. எனவே அந்த இலையை பொடி செய்து எலி வரும் இடத்தில் தூவி விட்டால், அதன் நாற்றத்திலேயே இறந்துவிடும்.
வெங்காயம்
எலிகளை அழிப்பதற்கு பயன்படும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, எலி தங்கும் பொந்தில் வைத்தால், அதனை உட்கொண்டு எலிகள் அழியும்.
பேபி பவுடர்
பேபி பவுடரை எலி தங்கும் மற்றும் வரும் இடத்தில் தூவினால், எலிகள் அந்த வாசனையால் இறக்கக்கூடும்.
நன்றி: Jamialim. News