0

ஏழைகளுக்குமட்டும் எளியகாப்பீடு…!

One more thing is it possible to get her Tamil Nadu Government free medical insurance.

http://www.cmchistn.com/eligibility_ta.php
Chief Minister’s Comprehensive Health Insurance Scheme
இக்காப்பிட்டுத்திட்டம் ஏழை எளிய குடும்பங்களுக்கு ஆண்டு வருவாய் 72,000/க்கு கீழ் உள்ளவர்கள் பயன் பெரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வருமானத்திற்கு உரிய வருமானச் சான்று அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உரிய பரிசீலனைக்குப்பிறகு பெற்றுக்கொள்ளலாம் இந்தத் திட்டத்தின்கீழ் தரமான அறுவை மற்…
cmchistn.com

நன்றி: Jamialim. News

image

0

அல் ரஹ்மான்….99வசனம்…!

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் ..

image

1. அல்-ரஹ்மான் = அளவற்ற அருளாளன்.
2. அல்-ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்.
3. அல் மலிக் = மன்னன்.
4. அல் குத்தூஸ் = பரிசுத்தமானவன்.
5. அஸ்ஸலாம் = அமைதி அளிப்பவன்.
6. அல் முஃமின் = அபயம் அளிப்பவன்.
7. அல் முஹய்மின் = பாதுகாவலன்.
8. அல் அஜீஸ் = யாவையும் மிகைத்தவன்.
9. அல் ஜப்பார் = சமநிலையாக்குவோன்.
10. அல் முத்தகப்பீர் = பெருமையுள்ளவன்.
11. அல் காலிக் = படைப்பவன்.
12. அல் பாரி = ஆத்மாவை அமைப்போன்.
13. அல் முஸ்வ்விர் = உருவமைப்போன்.
14. அல் கஃப்ஃபார் = பிழை பொறுப்பவன்.
15. அல் கஹ்ஹார் = அடக்கி ஆள்பவன்.
16. அல் வஹ்ஹாப் = பெருங்கொடையாளன்.
17. அல் ரஸ்ஸாக் = அன்னபானாதி அளிப்பவன்.
18. அல் ஃபத்தாஹ் = வெற்றி அளிப்பவன்.
19. அல் அலீம் = யாவும் அறிந்தவன்.
20. அல் காபில் = கைவசப்படுத்துவோன்.
21. அல் பாஸித் = தாராளமாகக் கொடுப்பவன்.
22. அல் ஹாபில் = தாழச் செய்பவன்.
23. அல் ராஃபிக் = உயர்த்துவோன்.
24. அல் முஇஸ் = மேன்மை அடையச் செய்வோன்.
25. அல் முதில் = இழிவடையச் செய்பவன்.
26. அல் ஸமீஃ = யாவையும் கேட்பவன்.
27. அல் பஸீர் = யாவையும் பார்ப்பவன்.
28. அல் ஹகம் = தீர்ப்புச் செய்வோன்.
29. அல் அதல் = நீதி செய்வோன்.
30. அல் லத்தீப் = பட்சமுள்ளவன்.
31. அல் க(Kh)பீர் = உணர்ந்தவன்.
32. அல் ஹலீம் = அமைதியானவன்.
33. அல் அழீம் = மகத்துவமுள்ளவன்.
34. அல் கபூர் = பாவம் தீர்ப்பவன்.
35. அல் ஷக்கூர் = நன்றி பாராட்டுபவன்.
36. அல் அலிய் = உன்னதமானவன்.
37. அல் ஹஃபீழ் = பேணிக் காப்பவன்.
38. அல் க(K)பீர் = பெரியவன்.
39. அல் முகீத் = பழிப்பவன்.
40. அல் ஹஸீப் = கணக்கு கேட்பவன்.
41. அல் ஜலீல் = மாண்புமிக்கவன்.
42. அல் கரீம் = கொடை கொடுப்போன்.
43. அல் ரகீப் = கண்காணிப்பவன்.
44. அல் முஜீப் = முறையீட்டை ஏற்பவன்.
45. அல் வாஸிஃ = எங்கும் நிலவுகிறவன்.
46. அல ஹகீம் = நுண்ணறிவுடையவன்.
47. அல் வதூத் = உள்ளன்பு மிக்கவன்.
48. அல் மஜீத் = தலைமை தாங்குபவன்.
49. அல் பாஇத் = தட்டி எழுப்புகிறவன்.
50. அல் ஷஹீத் = சாட்சியுடையோன்.
51. அல் ஹக் = சத்தியமானவன்.
52. அல் வகீல் = பொறுப்பு ஏற்பவன்.
53. அல் கவீ = வல்லமை மிக்கவன்.
54. அல் மத்தீன் = உறுதியானவன்.
55. அல் வலீ = கிருபை செய்பவன்.
56. அல் ஹமீத் = புகழுக்கு உரியவன்.
57. அல முஹஸீ = தீர்க்கமாகத் தெரிந்தவன்.
58. அல் முஈத் = இறுதியில் மீட்டுக் கொள்பவன்.
59. அல் முஹ்யீ = உயிர்ப்பிப்பவன்.
60. அல் முப்திஃ = ஆதியில் வெளியிடுபவன்.
61. அல் முயீத் = மரணிக்கச் செய்பவன்.
62. அல் ஹை = நித்திய ஜீவியானவன்.
63. அல் கையூம் = என்றும் நிலைத்தவன்.
64. அல் வாஜீத் = கண்டுபிடிப்பவன்.
65. அல் மாஜித் = தலைமை வகிப்பவன்.
66. அல் வாஹித் = தனித்தவன்.
67. அல் ஆஹத் = ஒருமைக்கு உரியவன்.
68. அல் ஸமத் = தேவையற்றவன்.
69. அல் காதிர் = ஆற்றல் உள்ளவன்.
70. அல் முக்ததிர் = ஆற்றல் பெற்ச் செய்பவன்.
71. அல் முகத்திம் = முன்னேறச் செய்பவன்.
72. அல் முஅக்கிர் = பின் தங்கச் செய்பவன்.
73. அல் அவ்வல் = ஆரம்பமானவன்.
74. அல் ஆகிர் = இறுதியானவன்.
75. அல் ஸாஹிர் = பகிரங்கமானவன்.
76. அல் பாதின் = அந்தரங்கமானவன்.
77. அல் வாலி = அதிகாரப் பொறுப்புள்ளவன்.
78. அல் முத்த ஆலி = உயர் பதவியுள்ளவன்.
79. அல் பர் = நன்றி அளிப்பவன்.
80. அல் தவ்வாப் = பட்சாத்தாபிகளை மீட்பவன்.
81. அல் முன் தகீம் = பழி வாங்குபவன்.
82. அல் அஃபூ = சகிப்பவன்.
83. அல் ரவூஃப் = இரக்கச் சிந்தனையுள்ளவன்.
84. அல் மலிகுல் முல்க் = அரசாட்சிக்கு உரியவன்.
85. அல் ஜலால் வல் இக்ராம் = கீர்த்தியும், சிறப்பும் உள்ளவன்.
86. அல் முக்ஸித் = நியாயம் செய்வோன்.
87. அல் ஜாமிஃ = சகலமும் பொதிந்தவன்.
88. அல் கனீ = தேவையற்றவன்.
89. அல் முக்னீ = தேவையற்றவனாக ஆக்குவோன்.
90. அல் மானிஃ = துன்பம் தடுப்பவன்.
91. அல் ளார் = துன்பம் அடையச் செய்பவன்.
92. அல் நாஃபிஃ = பயன் அளிப்பவன்.
93. அல் நூர் = ஒளி தருபவன்.
94. அல் ஹா தீ = நேர்வழி செலுத்துவோன்.
95. அல் பதீஃ = புதுமை செய்வோன்.
96. அல் பாகீ = நிலையாக இருப்பவன்.
97. அல் வாரித் = உரிமையாளன்.
98. அல் ரஷீத் = நேர்வழியில் இருப்பவன்.
99. அல் ஸபூர் = பொறுமையாளன்.

0

முகம்மது நபிகளாரின் இறுதி பேருரை….!

💠முஹம்மது நபியின் இறுதி பேருரை!💠

✨✨✨✨✨✨✨
மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்…..!!!!!!
இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது…..!!!!!!
(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
.
.
‪#‎பிறப்பால்_உயர்வு_தாழ்வு_காட்டாதீர்‬!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
.
.
‪#‎தலைமைக்குக்_கீழ்ப்படிவீர்‬!
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
.
.
‪#‎அராஜகம்_செய்யாதீர்கள்‬!
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹுல் புகாரி 4403)
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)
.
.
‪#‎பணியாளர்களைப்_பேணுவீர்‬!
மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)
.
.
‪#‎அநீதம்_அழிப்பீர்‬!
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
.
.
‪#‎முறைதவறி_நடக்காதீர்‬!
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [1]
.
.
‪#‎உரிமைகளை_மீறாதீர்‬!
மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.
(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)
.
.
‪#‎பெண்களை_மதிப்பீர்‬!
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களளுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)
.
.
‪#‎இரண்டைப்_பின்பற்றுவீர்‬!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
.
.
‪#‎எச்சரிக்கையாக_இருப்பீர்‬!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)
இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.
(ஸஹீஹ்ல் புகாரி 4402)
.
.
‪#‎சொர்க்கம்_செல்ல_வழி‬!
மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)
.
.
‪#‎குற்றவாளியே_தண்டிக்கபடுவார்‬
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
.
.
‪#‎இஸ்லாம்_முழுமையாகி_விட்டது‬!
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை.
( ளிலாலுஸ் ஜன்னா 1061)
இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “”நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி “”இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)
.
.
‪#‎இறுதி_இறை_வசனம்‬.
இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:
“”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) ‪#‎அல்குர்அன்‬ 5:38
ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸு
சிறிது காலத்திற்கு பிறகு முஹம்மது நபியவர்கள் படைத்தவனிடம் சென்றுவிட்டார்கள்…
💤 சிந்தியுங்கள்!!
செயல்படுங்கள் ..

image

நன்றி: Jamialim. News

0

நீங்கள் உங்கள் குழந்தைகளை எப்படி நடத்துகிறீர்கள்…!

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.

அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.

குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் .
அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது…

ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து “நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்” என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.

ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை

அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. “நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது” என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.
ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.

ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.
அதற்காக “நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட” என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.

இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது மிகவும் அவசியமே.
தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். ஆனால் ‘எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது’ என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே…
அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான்.
அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.
சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம்.
ஆனால் …
கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல.
வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல.
அது சாத்தியமும் அல்ல.
கஷ்டம் காணாத மனிதர்கள் சாதித்ததாக வரலாறும் இல்லை.

கஷ்டம் அனுபவிக்காத பிள்ளைகள் தந்தைக்கு பின் நிற்கதியில் நிற்பதை நாம் நம் வாழ்வில் அன்றாடம் கண்டு கொண்டே இருக்கிறோம்.

நம்ம பிள்ளைகளுக்கு நாம் நல்லது செய்யணும்னா?!
நீந்த கற்று கொடுப்போம்…
நீந்துவது அவர்கள் கடமை…

image

நன்றி: Jamialim. News

0

அல்லாஹு வின் அழகிய பெயர்கள்…!

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் ..

image

1. அல்-ரஹ்மான் = அளவற்ற அருளாளன்.
2. அல்-ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்.
3. அல் மலிக் = மன்னன்.
4. அல் குத்தூஸ் = பரிசுத்தமானவன்.
5. அஸ்ஸலாம் = அமைதி அளிப்பவன்.
6. அல் முஃமின் = அபயம் அளிப்பவன்.
7. அல் முஹய்மின் = பாதுகாவலன்.
8. அல் அஜீஸ் = யாவையும் மிகைத்தவன்.
9. அல் ஜப்பார் = சமநிலையாக்குவோன்.
10. அல் முத்தகப்பீர் = பெருமையுள்ளவன்.
11. அல் காலிக் = படைப்பவன்.
12. அல் பாரி = ஆத்மாவை அமைப்போன்.
13. அல் முஸ்வ்விர் = உருவமைப்போன்.
14. அல் கஃப்ஃபார் = பிழை பொறுப்பவன்.
15. அல் கஹ்ஹார் = அடக்கி ஆள்பவன்.
16. அல் வஹ்ஹாப் = பெருங்கொடையாளன்.
17. அல் ரஸ்ஸாக் = அன்னபானாதி அளிப்பவன்.
18. அல் ஃபத்தாஹ் = வெற்றி அளிப்பவன்.
19. அல் அலீம் = யாவும் அறிந்தவன்.
20. அல் காபில் = கைவசப்படுத்துவோன்.
21. அல் பாஸித் = தாராளமாகக் கொடுப்பவன்.
22. அல் ஹாபில் = தாழச் செய்பவன்.
23. அல் ராஃபிக் = உயர்த்துவோன்.
24. அல் முஇஸ் = மேன்மை அடையச் செய்வோன்.
25. அல் முதில் = இழிவடையச் செய்பவன்.
26. அல் ஸமீஃ = யாவையும் கேட்பவன்.
27. அல் பஸீர் = யாவையும் பார்ப்பவன்.
28. அல் ஹகம் = தீர்ப்புச் செய்வோன்.
29. அல் அதல் = நீதி செய்வோன்.
30. அல் லத்தீப் = பட்சமுள்ளவன்.
31. அல் க(Kh)பீர் = உணர்ந்தவன்.
32. அல் ஹலீம் = அமைதியானவன்.
33. அல் அழீம் = மகத்துவமுள்ளவன்.
34. அல் கபூர் = பாவம் தீர்ப்பவன்.
35. அல் ஷக்கூர் = நன்றி பாராட்டுபவன்.
36. அல் அலிய் = உன்னதமானவன்.
37. அல் ஹஃபீழ் = பேணிக் காப்பவன்.
38. அல் க(K)பீர் = பெரியவன்.
39. அல் முகீத் = பழிப்பவன்.
40. அல் ஹஸீப் = கணக்கு கேட்பவன்.
41. அல் ஜலீல் = மாண்புமிக்கவன்.
42. அல் கரீம் = கொடை கொடுப்போன்.
43. அல் ரகீப் = கண்காணிப்பவன்.
44. அல் முஜீப் = முறையீட்டை ஏற்பவன்.
45. அல் வாஸிஃ = எங்கும் நிலவுகிறவன்.
46. அல ஹகீம் = நுண்ணறிவுடையவன்.
47. அல் வதூத் = உள்ளன்பு மிக்கவன்.
48. அல் மஜீத் = தலைமை தாங்குபவன்.
49. அல் பாஇத் = தட்டி எழுப்புகிறவன்.
50. அல் ஷஹீத் = சாட்சியுடையோன்.
51. அல் ஹக் = சத்தியமானவன்.
52. அல் வகீல் = பொறுப்பு ஏற்பவன்.
53. அல் கவீ = வல்லமை மிக்கவன்.
54. அல் மத்தீன் = உறுதியானவன்.
55. அல் வலீ = கிருபை செய்பவன்.
56. அல் ஹமீத் = புகழுக்கு உரியவன்.
57. அல முஹஸீ = தீர்க்கமாகத் தெரிந்தவன்.
58. அல் முஈத் = இறுதியில் மீட்டுக் கொள்பவன்.
59. அல் முஹ்யீ = உயிர்ப்பிப்பவன்.
60. அல் முப்திஃ = ஆதியில் வெளியிடுபவன்.
61. அல் முயீத் = மரணிக்கச் செய்பவன்.
62. அல் ஹை = நித்திய ஜீவியானவன்.
63. அல் கையூம் = என்றும் நிலைத்தவன்.
64. அல் வாஜீத் = கண்டுபிடிப்பவன்.
65. அல் மாஜித் = தலைமை வகிப்பவன்.
66. அல் வாஹித் = தனித்தவன்.
67. அல் ஆஹத் = ஒருமைக்கு உரியவன்.
68. அல் ஸமத் = தேவையற்றவன்.
69. அல் காதிர் = ஆற்றல் உள்ளவன்.
70. அல் முக்ததிர் = ஆற்றல் பெற்ச் செய்பவன்.
71. அல் முகத்திம் = முன்னேறச் செய்பவன்.
72. அல் முஅக்கிர் = பின் தங்கச் செய்பவன்.
73. அல் அவ்வல் = ஆரம்பமானவன்.
74. அல் ஆகிர் = இறுதியானவன்.
75. அல் ஸாஹிர் = பகிரங்கமானவன்.
76. அல் பாதின் = அந்தரங்கமானவன்.
77. அல் வாலி = அதிகாரப் பொறுப்புள்ளவன்.
78. அல் முத்த ஆலி = உயர் பதவியுள்ளவன்.
79. அல் பர் = நன்றி அளிப்பவன்.
80. அல் தவ்வாப் = பட்சாத்தாபிகளை மீட்பவன்.
81. அல் முன் தகீம் = பழி வாங்குபவன்.
82. அல் அஃபூ = சகிப்பவன்.
83. அல் ரவூஃப் = இரக்கச் சிந்தனையுள்ளவன்.
84. அல் மலிகுல் முல்க் = அரசாட்சிக்கு உரியவன்.
85. அல் ஜலால் வல் இக்ராம் = கீர்த்தியும், சிறப்பும் உள்ளவன்.
86. அல் முக்ஸித் = நியாயம் செய்வோன்.
87. அல் ஜாமிஃ = சகலமும் பொதிந்தவன்.
88. அல் கனீ = தேவையற்றவன்.
89. அல் முக்னீ = தேவையற்றவனாக ஆக்குவோன்.
90. அல் மானிஃ = துன்பம் தடுப்பவன்.
91. அல் ளார் = துன்பம் அடையச் செய்பவன்.
92. அல் நாஃபிஃ = பயன் அளிப்பவன்.
93. அல் நூர் = ஒளி தருபவன்.
94. அல் ஹா தீ = நேர்வழி செலுத்துவோன்.
95. அல் பதீஃ = புதுமை செய்வோன்.
96. அல் பாகீ = நிலையாக இருப்பவன்.
97. அல் வாரித் = உரிமையாளன்.
98. அல் ரஷீத் = நேர்வழியில் இருப்பவன்.
99. அல் ஸபூர் = பொறுமையாளன்.
நன்றி: Jamialim. News