என் இனிய இஸ்லாம்

ஜனாஸா தொழுகையில்
மரணித்தவர்களுக்காக
ஓதும் துஆ.
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟَﻪُ ﻭَﺍﺭْﺣَﻤْﻪُِ ﻭَﺍﻋْﻒُ ﻋَﻨْﻪُ وعافه
ﻭَﺃَﻛْﺮِﻡْ ﻧُﺰُﻟَﻪُ ﻭَﻭَﺳِّﻊْ ﻣُﺪْﺧَﻠَﻪُ ﻭَﺍﻏْﺴِﻠْﻪُ ﺑِﺎﻟْﻤَﺎﺀِ
ﻭَﺍﻟﺜَّﻠْﺞِ ﻭَﺍﻟْﺒَﺮَﺩِ ﻭَﻧَﻘِّﻪِ ﻣِﻦْ ﺍﻟْﺨَﻄَﺎﻳَﺎ ﻛَﻤَﺎ ينقََ
ﺍﻟﺜَّﻮْﺏَ ﺍﻷَﺑْﻴَﺾَ ﻣِﻦَ ﺍﻟﺪَّﻧَﺲِ ﻭَﺃَﺑْﺪِﻟْﻪُ ﺩَﺍﺭًﺍ ﺧَﻴْﺮًﺍ
ﻣِﻦْ ﺩَﺍﺭِﻩِ ﻭَﺃَﻫْﻼً ﺧَﻴْﺮًﺍ ﻣِﻦْ ﺃَﻫْﻠِﻪِ ﻭَﺯَﻭْﺟًﺎ ﺧَﻴْﺮًﺍ
ﻣِﻦْ ﺯَﻭْﺟِﻪِ وجيرانا خيرا من جيرانه
ﻭَﺃَﺩْﺧِﻠْﻪُ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﻭَﺃَﻋِﺬْﻩُ ﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ
ﺍﻟْﻘَﺒْﺮ ومن عذاب النارِ
“மய்யித் பெண்ணாக இருந்தால்
ஹு என்பதற்க்குப் பகரமாக ஹா என்று ஓத வேண்டும்.
உதாரணமாக
اللهم اغفر لها وارحمها و اعف عنها”
பொருள் : இறைவா! இவரை
மன்னிப்பாயாக! இவருக்கு அருள்
புரிவாயாக! இவரது தவறுகளை
அலட்சியப்படுத்துவாயாக! இவர்
தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக
ஆக்குவாயாக! இவர் நுழையும்
இடத்தை விசாலமாக்குவாயாக!
இவரைத் தண்ணீராலும், பனிக்
கட்டியாலும், ஆலங்கட்டியாலும்
கழுவுவாயாக! வெண்மையான
ஆடையை அழுக்கிலிருந்து
சுத்தம் செய்வதைப் போல் இவரை
குற்றத்திலிருந்து சுத்தம்
செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை
விடச் சிறந்த வீட்டையும்,
இங்கிருக்கும் குடும்பத்தை விடச்
சிறந்த குடும்பத்தையும்,
இங்கிருக்கும் பக்கத்து வீட்டை விட சிறந்த பக்கத்து வீட்டையும்,
இங்கிருந்த வாழ்க்கைத் துணையை
விட சிறந்த துணையையும்
இவருக்கு வழங்குவாயாக! இவரை
கப்ரின் வேதனையிலிருந்து
காப்பாயாக!
இவரை நரக நெருப்பிலிருந்து
பாதுகாப்பாயாக!
ஆதாரம்:( முஸ்லிம் 1756)

image

நன்றி:Jamialim.NEWs

Leave a comment